Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatraai Varuven
Kaatraai Varuven
Kaatraai Varuven
Ebook245 pages2 hours

Kaatraai Varuven

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சினிமாப்படம் பார்க்கும் விறுவிறுப்பைத் தன்னுடைய 'காற்றாய் வருவேன்' நாவலில் 27 அத்தியாயங்களில் அற்புதமாக், சுவைபடக் கொடுத்துள்ளார்.

இந்நாவலிலும் செய்தி மிகவும் அழுத்தமாகவும், நிறைவாகவும், திருப்திகரமாகவும் அமைந்துள்ளது மிகச் சிறப்பாகும்.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100700022
Kaatraai Varuven

Read more from Indira Soundarajan

Related to Kaatraai Varuven

Related ebooks

Reviews for Kaatraai Varuven

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaatraai Varuven - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    காற்றாய் வருவேன்

    Kaatraai Varuven

    Author :

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    ‘வி

    யூஃபைண்டர் வழியாக புலிக்குக் குறி வைக்க ஆரம்பிக்கிறான். ஜுமரை அட்ஜஸ்ட் செய்கிறான். உருவம் கிலேஸ் ஆகி ஒருவழியாக நச்சென்று பிடிபடும். அதேசமயம் பின்புலத்தில் புகை போல ஒரு வடிவமும் சேர்ந்து தோன்ற – யார் அது?’

    மணி ஒன்பது.

    கிளம்பினால் சரியாக இருக்கும்.

    பத்து மணிக்குத்தான் வரச் சொல்லியிருந்தார் ரங்கசாமி இருந்தாலும் இப்பொழுதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.

    ‘காமிரா, ஃப்ளாஷ்லைட், பேட்டரி பாக்ஸ்’ என்று புதைந்து கிடக்கும் ஹோல்டால் பேக்கை இடது தோளுக்கு ஏற்றிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான் பாபு. ‘டெனிம் ஜுன்ஸ், ஸ்டோன் வாஷ் காக்கி ஷர்ட், போலீஸ் கிராப்’ என்கிற இருபத்தி ஏழு வயது வாலிபத்தோடும்;….

    நான்கு நாட்களாக அந்த அகல்யா அபார்ட்மென்டில் லிஃப்ட் ரிப்பேர். அதனால் மூன்றாவது ஃப்ளாட்டில் இருந்து கிட்டத்தட்ட தொண்ணூறு படி இறங்க வேண்டும். இறங்க ஆரம்பிக்கிறான்.

    எங்க பாபு இன்னிக்கு ஜோலி? – அந்த நிலைக்கால் பெண் இணக்கமாய்க் கேட்கிறாள். முன்பெல்லாம் எப்ப கல்யாணம்? என்று கேட்பாள். இன்று கேள்வி மாறியிருக்கிறது…

    நவரத்னா பேலஸ்ல…! – அவன் சொன்ன மறுநொடி அவள் முகத்தில் ஆச்சரியத்தின் அதிகபட்ச விரிவு.

    நிஜமாவா… அவ்வளவு பெரிய போட்டோகிராபர் ஆயிட்டியா நீ?

    பாபு அவளைச் சற்று பிராண்டுகிற மாதிரி பார்க்கிறான்.

    என்ன பாக்கறே… ரொம்ப சந்தோஷம் பாபு. ஜமாய்…

    எதைக் கொண்டு ஜமாய்ப்பது? சலிப்புடன் ஸ்கூட்டரை உதைக்கிறான் பாபு. பொறுமலும் புகையுமாய் அந்தப் பகுதியே உதறல் எடுக்க கிளம்ப ஆரம்பிக்கிறது அந்த வாகனம். சப்தம் நிறையப் பேரை எட்டிப் பார்க்கச் செய்திருக்கிறது. வண்டி, கேமரா எல்லாமே அறதப் பழசாகிவிட்டது. எல்லாவற்றையுமே மாற்ற வேண்டும். காமிராவுக்குப் பேர் வெத்தலைப் பெட்டி என்றால் ஸ்கூட்டருக்குப் பேர் ரோட்ரோலர்.

    எல்லாம் வாண்டுகள் வைத்தது தான். கோபமாக வந்தாலும் பொருத்தமான பெயர்தான் என்கிற உணர்ச்சி சற்று சிரிக்கவும் வைக்கிறது.

    சிரிக்கிறான்.

    ரங்கசாமி அவனைத் தேடி நுங்கம்பாக்கத்திலுள்ள அவனது ஸ்டுடியோவிற்கு வந்தபோதும் இப்படித்தான் சிரித்தான்.

    ஒரு வளைகாப்பு சடங்கு இருக்கு - வந்து எடுப்பியா? என்று கேட்டார்.

    எடுக்கிறேன் சார்… இடத்தை சொல்லுங்க…

    உம்ம்… நவரத்னா பேலஸ்!

    -பெயரைக் கேட்ட மறு விநாடி அண்ட சராசரமே ஓர் ஆட்டம் ஆடின மாதிரி ஓர் உணர்ச்சி அவனிடம்.

    அவங்களுக்கு சொந்தமா ஒரு சினிமா ஸ்டுடியோவே இருக்கு. அதுல ஆயிரம் காமிராமேனுங்க இருக்காங்க. அப்படி இருக்கைல… நம்ப முடியலை சார்… விளையாடாதீங்க.

    நீ வேற… நான் சின்ன வயசுலயே விளையாடினதில்ல. இப்பதானா விளையாடப் போறேன். போகட்டும்….. நீதானே உளுந்தூர்பேட்டை லோகநாதன் மகன் பாபு….

    ஆமாம்… உங்களுக்கெப்படி…..?

    நானும் உளுந்தூர்பேட்டைக்காரன்தான். இன்னும் சொல்லப்போனா உங்கப்பாவோட பள்ளிக்கூட ஸ்நேகிதன்!

    உக்காருங்க சார்… நின்னுகிட்டே பேசறிங்களே… அப்பொழுதுதான் அவரை உட்காரச் சொல்லவே தோன்றிற்று.

    உன் அப்பனை போன வாரம் பார்த்தேன். நீ இங்க இப்படி ஓர் எலி வளைக்குள்ள ஸ்டியோ வெச்சிருக்கறத சொன்னான். அதான் வளைகாப்புன்னு தனசேகர பாண்டி சொல்லவும் உன் ஞாபகம் வந்து இங்க வந்துருக்கேன்.

    நீங்க அங்க… தடுமாறியபடி கேட்டும் விட்டான்.

    நானா….. நான்தான் அங்க எல்லாம் என்றார்.

    ‘எல்லாம்னா?’ – கேட்க நினைத்தான். ஆனால் அடக்கிக் கொண்டுவிட்டான். போனால் தெரிந்து விட்டுப் போகிறது.

    ஸ்கூட்டர் ஒரு விமான உறுமலோடு அங்கிருந்து கிளம்புகிறது

    கடிகாரம் 9-45ஐக் காட்டுகிறது. 15 நிமிடத்தில் மாங்காட்டுச் சாலையில் ராமாவரம் தோட்டத்தை அடுத்துள்ள பசுஞ்சோலை நடுவில் உள்ள நவரத்னா பேலசுக்குப் போய் விட முடியுமா?

    நவரத்னா பேலஸ்!

    சென்னையின் அழுக்குக் காற்றுபடாதபடி மரக் கூட்டம் நடுவே கிண்ணென்று தெரிகிறது. ரிப்பன் மாளிகை கணக்காய் உஜாலா வெளுப்பு. ஜெர்மன் புல் முளைத்த அகண்டவெளி. வட்டம் கட்டி வளர்க்கப்பட்டிருக்கும் விசிறி வாழைக் கூட்டம், சில்லிட்டுத்தெறிக்கும் ஃபௌண்டன் ஊற்று… ஒரு பணக்கார விஷயத்திற்கும் குறைவில்லை.

    டொர்ர்… டொர்ர் என்ற சத்தத்தோடு வாசலில் நுழையும் போது தோட்டக்காரன், வேலைக்காரன் என்று ஒரு கூட்டமே திரும்பிப் பார்க்கிறது.

    ஏய் யாருப்பாது? ஒரு மண்வெட்டி – மனிதன் முன் வந்து கேட்க போட்டோகிராபர் – என்று பாபு சொல்ல வழி கிடைக்கிறது.

    மாளிகை முன் போர்டிகோ. போர்டிகோவில் எக்ஸெல், சீயெலோ, சுமோ என்கிற ஜாதிக் கார்களின் கூட்டணி, கடந்து கடப்பைக் கல் படிகளில் ஏற சில்லிடும் காரிடார் பரப்பில் உயர்ந்த ரக தேன் வண்ண மார்பிள்களின் பதிப்பு.

    நிலைக்காலில் அந்தமான் தேக்கின் அசுர பரிமாணம்.

    கேள்விப்பட்டிருக்கிறான் நவரத்னா பேலஸ் பற்றி…

    இப்பொழுது நேரிலேயே கண்ணில் விரிந்து கொண்டிருக்கிறது. அவனையுமறியாமல் சொறித்தனமான அவனது ஃப்ளாட் ஒரு சஷணம் சினிமா தியேட்டர் ஸ்லைட் போல விழுந்து மறைகிறது.

    வாய்யா… குரல் கேட்கிறது. குரலுடன் முன் வந்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி.

    கரெக்ட் டயத்துக்கு வந்துட்டியே… நெருங்குவதற்குள் பாராட்டியும் முடிக்கிறார். அவன் ஒரு வகை தேடலுடன் சுற்றுப்புறத்தைப் பார்க்கிறான்.

    என்ன பார்க்கறே… வளைகாப்பு விசேஷம்னேனே யாரையும் காணோம்னுதானே?

    பாபு ஆமோதிக்கிறான்.

    உள்ள வா முதல்ல…. அழைத்துக்கொண்டு நடக்கிறார் ரங்கசாமி. அத்தர் வாசம் மூக்கைத் தூக்குகிறது. அங்கங்கே பாடம் செய்து மாட்டப்பட்டிருக்கும் எருமை, மான், கரடி என்கிற மிருகத் தலைகள் சின்ன மிரட்டல் மிரட்டுகின்றன.

    அவர் ஓர் அறைக்குள் ஙழைகிறார் பாபுவையும் உள் அழைக்கிறார். மரத்தைக் கொண்டு இப்படிக்கூட வளைத்து நாற்காலி செய்ய முடியுமா என்ன? அதில் ஒன்றில் அமர்ந்து கொண்டு பாபுவையும் அமரச் சொல்கிறார்.

    இருக்கட்டும்ங்க.

    பரவால்ல உட்கார்…. கொஞ்ச நேரத்துல ஐயர் வந்துடுவார். ஒரு சாந்தி பரிகார ஹோமம் இருக்கு. பின்னால தனசேகர பாண்டி குடும்பம் கௌரிபாய்க்கு வளைகாப்பு செய்ய இருக்காங்க. வெளில யாருக்கும் தெரியாது. தெரிய வேண்டாம்னு தனசேகர பாண்டியும் நினைக்கிறான். அதனாலதான் வழக்கமான போட்டோகிராபர், வீடியோ கிராபர்னு யாருக்கும் சொல்லலை.

    எதுக்காக இவ்வளவு சிம்ப்பிளா?

    கரெக்டா புரிஞ்சுகிட்டே… சிம்ப்பிளாதான்! இந்தக் குடும்பத்து மேல ஆனாலும் கண்ணு ஜாஸ்தியா இருக்கு. பாவம் கௌரிபாய், இதுக்கு முந்தி இரண்டு தடவை கர்ப்பமாகி அபார்ஷனாயிட்டா. அதான் இந்தத் தடவை சர்வ ஜாக்ரதையா கண்ணு பட்டுடாதபடி விசேஷங்களை நடத்தறோம். நீயும் இதுபத்தி வெளில மூச்சு விடக்கூடாது என்ன?

    பாபு பலமாகத் தலையாட்டுகிறான்.

    ஆமா, எந்தக் கேமராவுல படம் எடுக்கப்போறே?

    அவர் கேள்விமுன் தயக்கத்தோடு தன் பழுப்பு தட்டிப்போன யாஷிகாவை வெளியே எடுக்கிறான்.

    இதுலயா… ரொம்ப பழசாச்சே… நல்லா விழுமா?

    அவர் கேட்கும் விதமே சரியில்லை.

    விழும் சார்… இதுலதான் போன வாரம் ரஜினியையே எடுத்தேன்.

    ரஜினியையா?

    ஆமாம் சார்… கலாரஞ்சனி பத்திரிக்கைக்கும் நான் போட்டோகிராபர். பேட்டின்னா கூட்டிகிட்டு போவாங்க.

    பரவால்லியே… போனது போகட்டும் நான் இப்ப ஒரு புது கேமரா தரேன். அதுல எடு.

    -ரங்கசாமி சொன்ன வேகத்தில் எழுந்து சென்று ஒரு தோல் கூடு நீக்கிய தேஜோமயமான கேமரா ஒன்றுடன் வருகிறார்.

    இதான் இருக்கிறதுலயே லேட்டஸ்ட் அப்பச்சர் ஸ்பீட்ல இருந்து ஜூமர் வரை சகலத்துலயும் சூப்பர் அட்வான்ஸ் கேமரா. தனசேகர பாண்டி போன வாரம் ஜப்பான் போனப்ப வாங்கிட்டு வந்து எனக்கு தந்தான். இதுல எடுத்துப் பாரேன்.

    ரங்கசாமி பாபு எதிரில் நீட்டுகிறார். ஆவலாக வாங்கிப் பார்க்கிறான். தொழில் புத்தி சர்வ பாகத்தையும் எக்ஸ்ரேதனமாக நோட்டமிட வைக்கிறது. ஒன்றுக்கு இரண்டாக ஃப்ளாஷ் பல்புகள். மைக்ரான் டிகிரி சுத்தமாகத் திருக முடிந்த ஜூமர்.

    பிரமாதமா இருக்கு சார்… ரிசல்ட் ரொம்ப நல்லா வரும்னு நினைக்கிறேன்.- சொல்லிக் கொண்டே வாங்கி வியூ ஃபைண்டர் வழியாகப் பார்க்க ஆரம்பிக்கிறான்.

    நவரத்னா பேலஸே அந்த சின்ன சதுரத்தில் அடைபட்டு, பளிச்சென்று தெரிகிறது.

    ஜூம் அட்ஜஸ்ட்மெண்டில் தொலைதூர சுவரிலுள்ள படம் ஒன்று கண்முன் வந்து ஹலோ சொல்கிறது.

    கண்களை ஃபைண்டரை விட்டு அகற்றாதபடி வைத்துக்கொண்டே கேட்கிறான்.

    அட்டகாசம் சார்… எவ்வளவு சார் விலை?

    அது உனக்கெதுக்கு. நல்லா இருக்குல்ல?

    சூப்பர் சார். உள்ள ஃபிலிம் இருக்குல்ல?

    உம்…. இப்பதான் போட்டேன்.

    அப்படியே நில்லுங்க. முதல்ல உங்களையே ஒரு ஸ்டில் எடுத்துட்றேன்.

    ஏய்ய்…. என்னை விட்று! கௌரிய எடு. பிரமாதமா வரணும் என்ன?

    ஜமாய்ச்சுட்றேன் சார்… சொல்லிக் கொண்டே அவரை ஒரு வெளிச்சக் கட்டத்தை உருவாக்கி ஓர் அள்ளு அள்ள ரங்கசாமி கூச்சத்துடன் ஓடுகிறார்.

    அந்த ஓடும் அழகையும் ஒரு பஞ்ச்சில் சுருட்டி முடிக்கிறான்.

    சட்டென்று மெலிதான நாதஸ்வர ஒலி அங்கங்கே பதுங்கியிருக்கும் ஸ்டீரியோக்களில் இருந்து கசிய ஆரம்பிக்கிறது.

    சென்ட்ரலைஸ்டு ஏ.சி.யின் ஜில்லென்ற தாக்கம் உடம்பு, மனது இரண்டிலும் புத்துணர்ச்சியைப் பாய்ச்சி நிரப்புகிறது.

    எத்தனை பெரிய மாளிகை…

    எத்தனை அரிதான கேமரா…

    கண்கள் வண்டாகச் சுழன்று மாளிகையை அளக்க ஆரம்பிக்கின்றன. தனசேகர பாண்டியன் ஒரு புகைப்படத்தில் யானையைக் கொன்று அதன்மேல் நின்றபடி போஸ் தந்து கொண்டிருக்கிறார்.

    இந்தியாவின் பிரபல நவரத்தினக் கல் வியாபாரி அவர் என்று தெரியும். இப்படி ஒரு வேட்டைக்காரர் கூடவா? பக்கத்திலேயே அழகிய சிங்க பாண்டி என்கிற தனசேகர பாண்டியனின் தந்தை படம். பார்க்கிறான் பாபு. பிரமிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறான். மாளிகைப் பூனை போல அங்குல அங்குலமாக ரசித்தபடி நடக்கிறான். சில இடங்களில் சில கோணங்களில் கட்டிட வாகு கதை சொல்கிறது. ஃப்ளாஷ் இல்லாமலே சுருட்ட முடிகிறது. சாளரம் வழியாக சூரியன் உள் அனுப்பும் கதிர்களில், அதன் போக்கில் எல்லாம் கலையழகு தெரிகிறது.

    சுருட்டு… கண்ணா சுருட்டு….

    அவனது ஆர்வத்தை படம் பிடிக்கும் வேகத்தை சில பணியாளர்கள் ஒரு சின்ன முறைப்போடு பார்த்தபடி நகர கார்ப்பெட் விரித்த மாடிப்படி வருகிறது.

    ‘ஏறிச் சென்று பார்க்கலாமா?’ – மனதின் கேள்வியை ஆசை இழுத்துப் பொசுக்கி அவனைப் படி ஏறச் செய்கிறது. ஏறி சாளரம் போன்ற மேல்தளத்தை அடைகிறான். மிரட்டும் புலிப் பொம்மை வரவேற்கிறது. அது நின்று முறைக்க ஒரு கருந்தேக்கு மேஜை வேறு. அச்சு அசல் உயிருள்ள புலியாகவே தெரிகிறது.

    இதையும் ஒரு ஸ்டில் எடுத்தால் என்ன?

    வியூஃபைன்டரில் புலிக்குக் குறிவைக்க ஆரம்பிக்கிறான். ஜூமரை அட்ஜெஸ்ட் செய்கிறான். உருவம் கிலேஸ் ஆகி ஒருவழியாக நச்சென்று பிடிபடும் அதேசமயம் பின்புலத்தில் புகைபோல ஒரு வடிவமும் சேர்ந்து தோன்ற, ‘யார் அது?’

    காமிராவை விலக்கி நேரே பார்த்தபோது திரைச்சீலை ஒன்று ஆடியபடி தெரிந்தது.

    ‘ச்சை!’ கிட்டே சென்று அதைச் சுருட்டிக் கட்டிவிட்டு வந்து திரும்பவும் புலிக்குக் குறிவைத்த போது மறுபடியும் அந்தப் புகை உருவம்!

    பாபுவுக்கு சஷணத்தில் வியர்க்க ஆரம்பித்தது!

    2

    "வா

    யைப் பிளக்காதே! தங்கத்தை உருக்கி இழை செய்து நிஜமாவே அடிச்சு நெய்து அசல் வைரங்களால பூவேலை செய்து, நவரத்னங்களால குஞ்சம் கட்டி உருவாக்கின ஐநூறு வருஷத்துக்கு முந்தின சேலை அது." நிறையவே வியர்த்துவிட்டது பாபுவுக்கு…. சாதாரணமாக இந்த மாதிரி தருணங்களில் மனுஷ மனதுக்கு காண்பது கனவா இல்லை நனவா என்கிற சந்தேகங்கள் வரும். அதைத் தீர்த்துக்கொள்ள புத்தி எல்லா முயற்சிகளும் செய்யும்.

    பாபுவும் செய்கிறான். காமிராவைச் சுமந்தபடி அந்த பாடம் செய்த புலியின் அருகே செல்கிறான். கரங்களால் அதை வருடித் தருகிறான். அப்படியே பார்வை வட்ட மடிக்கிறான். எங்கிருந்தோ வரும் காற்றின் வருடலில் திரைச் சீலைகளின் சின்ன அசைவைத் தவிர வேறு எந்த சலனமும் இல்லை.

    தான் பார்த்த உருவம் எங்கே போனது? ஒரு மெலிந்த புகைக் கோளமாய்த் தெரிந்ததே… பல சினிமாக்களில் பார்த்திருக்கிறான். அதுதான் மன முகட்டில் கசிந்து பாச்சா காட்டுகிறதா?

    பாபுவிடம் உற்சாகம் விலகி பயம் பரவி கேள்வியும் பதிலும் கண்ணாமூச்சி ஆடிடும் போது ஒரு குரல்.

    போட்டோகிராபர் சார்…

    திரும்பிப் பார்க்கிறான்.

    சாமி உங்களைத் தேடிகிட்டு இருக்காரு.

    சாமியா?

    ரங்கசாமி சாமி….

    ஓ… அவருக்கு இங்கே அப்படி ஒரு பெயரா? நினைத்தபடி நடக்க ஆரம்பிக்கிறான். நடக்க நடக்கத்தான் தெரிகிறது, தன்னை மறந்து நெடுந்தூரம் வந்துவிட்டது.

    ஏய்… எங்கப்பா போய்ட்டே? கேட்டுக் கொண்டே எதிரில் வருகிறார் ரங்கசாமி.

    சும்மா… சும்மா ஒரு ரவுண்ட்.

    எப்படி இருக்கு பேலஸ்?

    அதுக்கென்ன சார்…. அட்டகாசமா இருக்கு.

    பின்னால பொறுமையா சுத்திப் பார்க்கலாம். இப்ப வா, ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கு. அதைப் போட்டோ பிடி…

    வாஞ்சையாகப் பேசி அழைத்துச் செல்லத் தொடங்குகிறார்.

    கிட்டத்தட்ட நூறு மீட்டர் நீளமுள்ள வராண்டா. ஒருபுறமாய் வரிசையாய் அறைகள். மறுபுறமாய் உருண்ட தந்தம் போன்ற தூண்கள். நூல் பிடித்ததுபோல் ஒரே சீராக நின்று அசத்துகிறது.

    வராண்டாவின் துவக்கத்தில் ரங்கசாமி கால் செருப்பைக் கழற்றி ஓர் ஓரமாக விடுகிறார். பாபுவும் யோசிக்காமல் அவ்வாறே செய்கிறான்.

    நாம போகப்போறது ஒரு புனிதமான இடத்துக்கு…. அதான். செருப்பைக் கழட்டி விட்டதற்கு

    Enjoying the preview?
    Page 1 of 1