Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilaa... Kuthirai... Aval
Nilaa... Kuthirai... Aval
Nilaa... Kuthirai... Aval
Ebook94 pages47 minutes

Nilaa... Kuthirai... Aval

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545382
Nilaa... Kuthirai... Aval

Read more from Pattukottai Prabakar

Related to Nilaa... Kuthirai... Aval

Related ebooks

Reviews for Nilaa... Kuthirai... Aval

Rating: 3.6666666666666665 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilaa... Kuthirai... Aval - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நிலா – குதிரை – அவள்

    Nilaa – Kuthirai - Aval

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ‘டி

    யர் ரஞ்சனி,

    இந்தக் கடிதம் உன் அழகான புருவங்களை உயர்த்த வைக்கலாம் உன் பளிங்கு நெற்றியில் சுருக்கக் கோடுகளை உருவாக்கலாம். இனி வருகிற வரிகள் உன் பட்டு மேனியெங்கும் வியர்வைப் புள்ளிகளை வித்திடலாம். உன் இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கலாம்.

    ‘தமிழே, இங்கே வா’ என்றேன். வந்தது, ‘என் இதயத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகளைப் பார்’ என்றேன். பார்த்தது. ‘அத்தனையையும் வார்த்தையாக்கித் தா!’ என்றேன். தலை குனிந்தது. ‘என் கையிருப்பிலிருந்து பொறுக்கித் தருகிறேன். ஒரு சதவிகித அளவிலாவது உன் உணர்ச்சிகளை மொழியாக்க முயல்கிறேன்’ என்றது.

    அந்த முயற்சியே இந்தக் கடிதம்.

    ரஞ்சனி, எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ என்ன அலங்காரத்தில் இருக்கிறாய் என்றாலும் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருக்க… நீ என்ன பேசுகிறாய் என்றாலும் உன் பேச்சைக் கேட்டுக் கொண்டேயிருக்க… நீ கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் உன்னிடம் பேசிக் கொண்டேயிருக்க… இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

    பேனா கிடைத்தால் உன் பெயரைத்தான் எழுதிப் பார்க்கிறேன். கத்தி கிடைத்தால் உன் பெயரைத்தான் செதுக்கிப் பார்க்கிறேன். உதிரிப் பூக்கள் கை போன போக்கில் அடுக்கும் போது உன் பெயர்தான் வந்து நிற்கிறது.

    உன் நினைவுகளால் அமைந்த ஒரு ஹாட்டீன் வளையத்தை விட்டு அந்தப் பக்கம், இந்த பக்கம் நகர முடியாமல் சிக்கித் தவிக்கிறது என் மனம். இந்தத் தவிப்பு சுகத் தவிப்பு.

    காலண்டரில் ஐஸ்வர்யா ராய் தெரிவதில்லை. நீதான் தெரிகிறாய். புத்தக அட்டையில் சுஷ்மிதா சென் தெரிவதில்லை. நீதான் தெரிகிறாய். திரைப்படம் போனால் மாதுரிதீட்சித் தெரியவில்லை. நீதான் தெரிகிறாய். போஸ்ட்டர்களில் நக்மாவோ, ரவீனாவோ, ரேவதியோ, ரஞ்சிதாவோ, சுகன்யாவோ யாரும்… யாரும் தெரிவதில்லை. நீதான் நீ மட்டும் தான்.

    ரஞ்சனி, எனக்கு எங்கேயோ ஏதோ ஒன்று கழன்று விட்டது என்று நினைத்துக் கொள்கிறாயா? பரவாயில்லை. இன்றைய என் கிறுக்குப் பிடித்த நிலையை அதற்குக் காரணமான உன்னிடம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

    உன்னை சந்தித்துப் பிரிந்த தினங்களில் எல்லாம் என் அறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்று வந்து சேர்ந்த பிறகு என்னையே ஆச்சரியமாகக் கேட்டுக் கொள்வேன் ரஞ்சனி. என் பைக்கை நான் ஸடார்ட் செய்தேனா? சாலையில் ஒழுங்காக விதிகளை மதித்து ஓட்டினேனா? வழி மறக்காமல் திரும்பினேனா? எல்லாம் அனிச்சை செயல்களாகத்தான் நடந்திருக்கும்.

    படுக்கையில் சாய்ந்து கொண்டு சிகரெட் புகைத்தபடி. மீண்டும் ஒருமுறை நம் அன்றைய சந்திப்பை அசை போட்டாக வேண்டும் எனக்கு நான் பைக்கை நிறுத்திவிட்டு வந்த போது என் பார்வையில் பட்ட போது நீ என்ன போஸில் இருந்தாயோ, அதில் துவங்கி, நம் சந்திப்பு முழுவதிலும் உன் முகத்தில் ஏற்பட்ட நுணுக்கமான மாற்றங்களையும், புருவ உயர்த்தல்களையும், சிரித்த விழிகளையும், அசைந்த காதணிகளையும், நிமிர்ந்து தாழ்ந்த கழுத்து நரம்புகளையும், உதடுகளின் மெல்லிய துடிப்புகளையும், படபடப்பாய் பேசும்போது சன்னமாக அதிரும் உன் தேகத்தையும்… தோன்றி மறையும் இளமையின் பூரிப்பு காட்டும் மார்புகளையும், பளீரிட்டு ஒளியும் குழைந்த இடுப்பையும்… அத்தனையும் மனதிற்குள் மறுபடி கொண்டு வருவேன்.

    இது மெனக்கெட்டு செய்யும் காரியமில்லை ரஞ்சனி. தானே நிகழ்வது நான் புறப்பட்டு நீ கண்ணிலிருந்து மறைவது வரை ‘ஆக்ஷன் ரிப்ளே’ நடந்து முடிந்தாலும்… மீண்டும் நான் பைக்கை நிறுத்திவிட்டு வந்த போது என் பார்வையில் பட்ட போது நீ என்ன போஸில் இருந்தாயோ, அதில் துவங்கி…

    என்ன செய்ய, என் கட்டுப்பாட்டில் இல்லையே என் மனம்?

    என் விரல்களில் சாம்பல் சுமந்து நிற்கும் சிகரெட்டைப் பிடுங்கி, காசை வேஸ்ட் பண்ணாதே! கண்ல ஒளி தெரியுதே! என்ன, செட் போட்டு டூயட் பாடிட்டிருக்கியா? என்பான் அறை நண்பன் வெங்கட். என் நெற்றியில் தொட்டுப் பார்த்து. அய்யோ! காதல் ஜீரம் அனலாகக் கொதிக்குதே! என்பான்.

    என் சட்டையை முகர்ந்து பார்த்து, "என்னடா மல்லிகைப் பூ வாசனையைக் காணோமே, இன்னும்

    Enjoying the preview?
    Page 1 of 1