Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mounathal Pesathey
Mounathal Pesathey
Mounathal Pesathey
Ebook219 pages1 hour

Mounathal Pesathey

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பட்டு இழைகளால் கற்பனையில் பின்னி உருவானவள் மேகா.

அவளது துடிப்புகளும், உணர்வுகளும்தான் இந்தக் கதை!

என்ன அதிசயமான மன ஆற்றல் அவளுக்கு!

டிப்ரஷன் கொண்ட எந்த இதயமும் அவளைப் படித்தால் துளிர்த்துவிடும்.

அவளது புதுமையான, நடைமுறைக்கு உகந்த தீர்மானங்கள், நம்மைக் கதையின் சம்பவங்களில் சரசர என்று இழுத்துச் செல்கின்றன. எங்கேயும் தங்கி நாம் நிற்பதில்லை.

தற்கால உலகில் இப்படித்தான் வாழ முடியும், இதுதான் நமக்கு நிலையான நிம்மதி தரும் என்று முடிவுக்கு வந்து, அதை அவள் காந்தனிடம் தெரிவிக்கும் போது...

காந்தன் மட்டுமல்ல, நாமே பிரமித்து அவளைப் பார்க்கிறோம்.

ஒரு உன்னத காரக்டரின் உன்னதப் படைப்பு.

இவளுக்கு அனுசரனையாக காந்தனின் மென்மையான ஈடுபாடு நம்மை வசீகரப்படுத்துகிறது.

மாறும் சமுதாயத்திற்கு ஏற்ப அவரும் தம்மை மெள்ள மெள்ள மாற்றிக் கொண்டு போகிறார்.

வாழ்க்கையின் எல்லாக் கோணங்களையும் அறிந்த மாமேதை போன்று அவர் காட்சி தருகிறார்.

மேகா காந்தன் இவர்கள் இரண்டு பேர் மூலமும் உணர்ச்சிக் கூடுகளை கட்டிக் கொண்டு நாவல் ஓடுகிறது.

இந்த ஓட்டம், வெறும் சம்பவங்கள் துணையால் மட்டும் ஒடும் ஒட்டமல்ல...

ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகரின் தமிழ் நடையாலும், அதன் நளினத்தாலும் பரவச சிலிர்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஓடும் ஒடை.

உயரே ஊஞ்சலாக ஆடும் ஒரு பட்டம் போல ஆகாயத்தில் நம்மை மிதக்க விடுகிறார் ஆசிரியர்.

- மௌனத்தால் பேசாதே நாவலைப் பற்றி புஷ்பா தங்கதுரை

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545399
Mounathal Pesathey

Read more from Pattukottai Prabakar

Related to Mounathal Pesathey

Related ebooks

Reviews for Mounathal Pesathey

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mounathal Pesathey - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    மௌனத்தால் பேசாதே

    Mounathal Pesathey

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    முன்னுரை

    ன்புள்ள உங்களுக்கு....

    வணக்கம்.

    ‘மௌனத்தால் பேசாதே’ - பாக்யா வார இதழில் தொடராக வெளிவந்த நாவல் இது.

    பொதுவாக புத்தக முன்னுரைகளில் உள்ளே இடம் பெற்றுள்ள நாவல் எதைப் பற்றியது, கரு எப்படி கிடைத்தது என்றெல்லாம் நான் குறிப்பிடுவதில்லை. படைப்போடு நேரடியாக பெறும் அனுபவத் தொடர்பை வடிவமைக்க விரும்பாததால் இங்கும் கதை பற்றி ஏதும் சொல்ல விரும்பவில்லை.

    ஆனால் ‘எனக்குப் பிடித்த பல கதைப் பாத்திரங்களில் இந்த கதையில் இடம் பெறும் ‘காந்தன்’ பாத்திரமும் ஒன்று’ என்று மட்டும் குறிப்பிட ஆசை.

    அனுபவமிக்க சாதனை எழுத்தாளர் திரு. புஷ்பா தங்கதுரை இந்த நாவலுக்கு முன்னுரை எழுதித் தந்திருப்பதில் எனக்கு அதிகமான மகிழ்ச்சி.

    அவருடைய எவ்வளவோ படைப்புகள் என்னை புருவமுயர்ததச் செய்திருந்தாலும் இதயம் நனைக்கச் செய்த ‘நீநான்நிலா’ நாவல் இன்றும் மனதில் இனிக்கும். அவருக்கு என் இதய நன்றி.

    பூம்புகார் பதிப்பகத்திற்கு மீண்டும் நன்றி.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்.

    1

    டற்கரையை ஒட்டின சாலையில் விடிவதற்கு முன்பே அத்தனை கார்கள்! அத்தனை மோட்டார் சைக்கிள்கள்! அழகான நடைபாதையில் ஆரோக்ய விரும்பிகள் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தார்கள்.

    கடலுக்கு அப்பால் வானம் மெதுவாக சலவை செய்யப்பட்டுக் கொண்டிருக்க... மீனவப் படகுகள் தத்தளித்துத் திரும்பிக் கொண்டிருந்தன. பனித் திரையினூடே நங்கூரமிடப்பட்ட கப்பல்கள் சித்திரங்களாக நின்றன. லட்சம் பாத முத்திரைகளுடன் மணல்வெளி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

    கான்வாஸ் ஷு கட்டின கால்கள் எதிரெதிர் திசைகளில் விசுக்விசுக்கென்று விரைந்தன.

    காந்தன் தன் காருக்கு இடம் தேடினார். வழக்கமாக அவர் நிறுத்துமிடத்தில் வேறு கார் நின்றிருந்தது.

    இடம் கிடைத்து நிறுத்தினார். பித்தான் அழுத்த கதவுகளின் கண்ணாடிகள் ஓசையின்றி மேலேறின. இறங்கினார், சாவியை ஷர்ட்டின் உள்பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

    ஒரு ஷுவில் லேஸ் பிரிந்திருக்க, குனிந்து முடிச்சிட்டுக் கொண்டார். மணல்வெளிக்கு வந்து நின்று கடலைப் பார்த்தபடி கைகளை தனித்தனியாக சுழற்றினார். கால்களை உதறினார். சிறிய பயிற்சிகள் செய்து முடித்ததும் நடைபாதைக்கு வந்து அஷ்டலட்சுமி கோவில் திசையில் கைவீசி நடக்கத் துவங்கினார்.

    காந்தனை சற்று விசாலமாக அறிமுகப்படுத்தியாக வேண்டும்.

    காந்தனுக்கு நேற்றுதான் அமெரிக்காவிலிருந்து ஈ-மெயிலில் விஷால் வாழ்த்து சொல்லியிருந்தான். அதன் தமிழாக்கம்:

    ஹாய் அப்பா!

    50வது பிறந்த தின வாழ்த்துக்கள்! அரை நூற்றாண்டு! ஆனால் தலையில் இன்னும் முதல் நரை இல்லை! ஆச்சரியம்! ஒருவேளை திருட்டுத்தனமாக டை போடுகிறீர்களா? சும்மா... விளையாட்டிற்காக!

    அப்பா, நீங்கள்தான் எனக்கு எல்லாம்! தினம் கம்ப்யூட்டரில் அரட்டை அடிக்கிறோம் என்றாலும் பிரிந்திருக்கிறோமே, வேலை மும்முரத்தில் மறந்தாலும் ஓய்வில் மீண்டும் வந்து மொய்க்கின்றனவே நினைவுகள்!

    ஒருவன் வாழ்வில் உயர ஒரு நல்ல அப்பா அமைய வேண்டும். எனக்கு அமைந்தது.

    பத்து வயதிலேயே தினம் ஒரு திருக்குறள் சொல்லித் தந்தீர்கள். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த போது அந்தப் பால்காரியின் மேல் மோதி பால் பாக்கெட்டுகள் எல்லாம் சிதறிப் போக... மன்னிப்பு கேட்டபடி நீங்கள் பொறுக்கித் தந்து, பணமும் கொடுத்தீர்கள். அப்போது ஜாவா மோட்டார் பைக் வைத்திருந்தீர்கள். அதில் என்னை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு வருவீர்கள்.

    நீங்கள் அணியும் அதே டிசைனில் குட்டி சைஸ் டி ஷர்ட் வாங்கி எனக்கு அணிவிப்பீர்கள். அதே மாதிரி ஷார்ட்ஸ்! ஷு! கைவீசி நடக்கையில் கம்பீரமாக இருக்கும்.

    மணல்வெளியில் நிறுத்தி நீங்கள் கற்றுத் தந்த உடற்பயிற்சிகளை இன்றுவரை செய்து கொண்டிருக்கிறேன்.

    வாரா வாரம் நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று நீங்களே கோச்சாகி கற்றுத் தந்தாலும், தினம் அரைமணி நேரம் என்னோடு செஸ் விளையாடி அதன் நுணுக்கங்கள் சொல்லித் தந்தாலும், நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது.

    வாக்கிங் போகும்போது பார்த்து ஆசைப்பட்டுக் கேட்டேன் என்று மறுநாளே குட்டி நாய் வாங்கி வந்தீர்கள். நாய் வளர்ப்பது எப்படி என்கிற புத்தகமும் தந்தீர்கள்.

    ஏன் டாடி, கிறிஸ்துமஸ் கிறிஸ்ட்டியன்ஸ் மட்டும்தான் கொண்டாணுமா? எனக்கு ஆசையா இருக்கு டாடி... என்றேன் ஒருநாள்.

    "கொண்டாடறதுக்கு காரணமே தேவையில்லை விஷால், வொய் நாட் வி செலிபரேட் கிறிஸ்துமஸ்? என்றீர்கள்.

    சொன்னது மட்டுமில்லை, நிஜமாகவே வீட்டில் ஒரு கிருஸ்த்மஸ் மரம் அலங்கரித்து, புது உடைகள் எடுத்து, ஸ்டார் தொங்கவிட்டு, பட்டாசு வெடித்து, சர்ச்சுக்கு நள்ளிரவு பிரேயருக்குப் போய் வந்து, கேக் சாப்பிட்டு நாம் கொண்டாடினோம்.

    போனவாரம் எங்கள் அலுவலகத்தில் டீ இடைவேளையில் ஒரு அரட்டையில் யாருக்க யார் ‘ரோல் மாடல்’ என்று பேசிக் கொண்டிருந்தோம்.

    சிலர் அரசியல் தலைவர்களைச் சொன்னார்கள். சிலர் மதத் தலைவர்களைச் சொன்னார்கள் சிலர் நடிகர்களைக் கூடச் சொன்னர்கள்.

    நான் சொன்னேன் என் அப்பாதான் என் லட்சிய மனிதன்

    எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். உங்களுக்கும் எனக்கும் நடுவில் உள்ள நட்பைச் சொன்னபோது பிரமித்தார்கள்.

    இந்தப் பிறந்த நாளில் நினைவு கூர்ந்து எழுத எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.

    இந்த நாளில் நான் உங்கள் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும் அப்பா, சரியாக நள்ளிரவு பனிரெண்டு ஒன்றுக்கு உங்களை எழுப்பி பூங்கொத்து வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும், உங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றிருக்க வேண்டும்.

    இதையெல்லாம் செய்யாமல் இங்கே உட்கார்ந்து கொண்டு ரூமெயிலில் கடிதம் எழுதிக் கொண்டிருப்பது பெரிய அநியாயம்!

    என்ன செய்வது? லௌஹீக வாழ்க்கையின் சுழலும் பல்சக்கரங்களுக்கிடையில் பல சமயம் மனிதன் உணர்வுகள் சிக்கிப் போய்விடுகின்றன.

    என்னைப் புரிந்து கொள்வீர்கள்தானே அப்பா?

    சரி, இந்த ஐம்பதாவது பிறந்த நாளில் நீங்கள் நல்ல மனநிலையில் இருக்கும் போது நான் ஒரு வரம் கேட்கட்டுமா?

    ஆம், வரம்தான், விண்ணப்பம் என்றால் நிராகரித்து விடுவீர்கள். விருப்பம் என்றால் அலட்சியப் படுத்திவிடுவீர்கள், எனவே, வரம்!

    நான் என் அப்பாவோடு இருக்க வேண்டும்! - வாழ்நாள் முழுவதும்!

    அதற்கு இரண்டே வழிகள்தான்.

    நானும், கேத்ரினும், ஷீபாவும் இந்தியாவுக்கு வந்து உங்களோடு இருந்து ஏதாவது தொழில் பார்ப்பது ஒரு வழி.

    நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இங்கே வந்து எங்களோடு தங்குவது இன்னொரு வழி.

    இதில் எது சுலபமான சாத்தியம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். கேத்ரின் இங்கேயே பிறந்து வளர்ந்தவள். ஒரு வாரம் இந்தியா வந்ததே அவள் உடலுக்கு சேரவில்லை. ஷீபாவுக்கு இங்கே இருக்கிற கல்வி வாய்ப்புகள் அங்கே கிடைக்குமா?

    நீங்கள் இங்கே வருவதில் என்னப்பா பிரச்சினை?

    கேத்ரின் ரொம்ப நல்லவள் அப்பா, எங்கள் காதலை உங்களுக்குத் தெரிவித்த அடுத்த விநாடியே ‘எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு. நீ தப்பான முடிவுகள் எடுக்கமாட்டே, கோ அஹெட்!’ என்று சம்மதம் சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை. உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறாள். உங்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்வாள்.

    சொந்த வீடு. மூன்று அறைகள், அதில் ஒரு அறையை உங்கள் ரசனைக்கேற்ப வடிவமைத்துத் தருகிறேன். உங்களுக்கென்று தனியாக டிரைவருடன் ஒரு கார் ஒதுக்கிவிடுகிறேன். நீங்கள் இங்கே எதாவது வேலைக்குப் போக வேண்டும் என்றாலும் ஏற்பாடு செய்கிறேன்.

    இன்னும் என்ன பிரச்சினை?

    என்னோடு நீங்கள் தங்குவதாக நினைக்க வேண்டாம்!

    உங்களோடு நாங்கள் சேர்ந்து வாழ வாய்ப்பளிப்பதாக நினையுங்கள்!

    அங்கே உங்களுக்கு இன்னும் என்ன கடமைகள் பாக்கி இருக்கின்றன? சாரதாவை கல்யாணம் செய்துக் கொடுத்து அவளும் குழந்தை பெற்றுவிட்டாள்.

    வாக்கிங் போய்க்கொண்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு, நாய் வளர்த்துக் கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு இப்படியே தனிமையிலேயே வாழ்ககையை ஓட்டிவிடப் போகிறீர்களா?

    ஐம்பது என்பது ஒரு எண்ணிக்கைதான்! நீங்கள் வயதாகி விட்டதாக நினைக்கிற ரகமில்லை என்பது எனக்குத் தெரியும். உங்கள் மனதிற்கு எப்போதுமே வயது இருப்பத்தைந்துதான் என்பதும் தெரியும்.

    உங்களுக்கு நான்கு தினங்கள் அவகாசம் கொடுக்கிறேன்.

    நன்றாக யோசித்து எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்கள்.

    நீங்கள் அமெரிக்காவுக்கு வருகிற முடிவுதான் எனக்கு நல்ல பதில். அந்த முடிவுக்கு நீங்கள் ஏன் வரவேண்டும் என்பதற்கான எல்லாக் காரணங்களையும் நான் தெரிவித்துவிட்டேன்.

    ஒருவேளை நீங்கள் இதை மறுப்பதாக இருந்தால், சரியான காரணகாரியங்களை அடுக்கியாக வேண்டும். சும்மா மழுப்பக் கூடாது.

    புரிந்ததா நண்பரே!

    சரி, பிறந்த நாள் சலுகையாக இன்று மட்டும் ஒரு பெக் அதிகமாக குடிக்க அனுமதிக்கிறேன். மீண்டும் எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!

    இப்படிக்கு,

    உங்கள் மகனும்

    நண்பனுமான

    விஷால்!

    காந்தன் வாக்கிங் சென்று காருக்குத் திரும்பினார்.

    டவல் எடுத்து கழுத்தில் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

    காரில் அமர்ந்து கேசட் போட்டு பாலமுரளி கிருஷ்ணா கேட்டபடி கையோடு கொண்டு வந்திருந்த ஆங்கில நாளிதழை விரித்துப் படிக்கத் துவங்கினார்.

    நான்காவது பக்கத்தில் புகைப் படத்துடன் தோற்றம் மறைவு தேதிகள் போட்டு ஒரு பெண்ணின் மரணச் செய்தி வெளியாகியிருந்ததைப் பார்த்ததும் மெதுவாக அதிர்ந்தார்.

    திருமதி பரணி ராஜசேகரன்!

    டேஷ்போர்டில் வைத்திருநத அவரின் செல்போன் சிணுங்கியது.

    காந்தன் எடுத்து, ஹலோ என்றார்.

    டாடி, நான் சாரதா பேசுறேன்

    சொல்லும்மா

    இன்னிக்கு பேப்பர் பார்த்துட்டிங்களா?

    பார்த்தேன் சாரதா

    என்ன செய்யப் போறீங்க?

    காந்தன் அமைதியாக பேப்பரில் அந்தச் செய்தியைப் படித்தார்.

    சொல்லுங்க டாடி. நீங்க போகப் போறிங்களா?

    போகணும் சாரதா

    நோ! நீங்க போகக்கூடாது. விஷாலை வேணும்னா கேளுங்க. அவனும் நீங்க போகக் கூடாதுன்னுதான் சொல்வான்.

    அதெப்படிம்மா போகாம இருக்கிறது?

    போக வேணாம்ப்பா! உங்களுக்குன்னு ஒரு தன்மானம் இல்லையா?

    அதைத்தாண்டி மனசுன்னு ஒண்ணு இருக்கேம்மா

    எல்லாத்தையும் மறந்துட்டீங்களா?

    இல்லைம்மா. அதுக்காக போகாம இருக்கிறது சரியில்லை. என்ன இருந்தாலும் அவ என்னோட முன்னாள் மனைவிம்மா என்றார் காந்தன்.

    2

    "அ

    ப்பா!" என்றாள் சாரதா போனில் எரிச்சலுடன்.

    செய்தித்தாளை மடக்கிப் போட்டுவிட்டு காரை விட்டு இறங்கி நின்று, சொல்லும்மா என்றார் காந்தன்.

    எனக்குப் பிடிக்கலை

    இனிமே பிடிக்கிறது. பிடிக்காததுக்கெல்லாம் அர்த்தம் இல்லை சாரதா. அவரைக் கூட்டிக்கிட்டு நீயும் போய் மரியாதை பண்றதுல தப்பில்லேன்னு எனக்குப் படுதும்மா

    நீங்களே போகக் கூடாதுன்னு சொல்றேன். இதில் என்னை வேற போகச் சொல்றீங்களேப்பா..

    "வீம்பா இருந்து என்ன சாதிக்கப்

    Enjoying the preview?
    Page 1 of 1