Nee Mattum Nizhalodu
5/5
()
About this ebook
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்.
83 ஆம் வருடம் சாவி இதழில் தொடர்கதையாக எழுதிய நாவல் இது. (83 என் திருமண் வருடம் என்பது உங்களுக்கு உபரி தகவல்) அந்த சமயத்தில் கல்லூரிப்படிப்பு படித்து முடித்து விட்டு வேலைக்காக் எனது நெருங்கிய நண்பர்கள் சிலர் வண்ணக் கனவுகளுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தயாராக சொந்த வியாபாரம் இருந்தால் அதுவரையில் வேலை இல்லாப் பிரச்சினைகள் பற்றி சினிமாவில் பார்த்த அறிவு மட்டுமே இருந்தது.
அந்த நண்பர்களின் முயற்சிகள், தோல்விகள், குடும்பத்தில் அவர்களின் பிரச்சைனைகள் என்று தினம் தினம் உணர்ந்தேன். ஆறுதல் சொல்லிக் கொண்டு, நம்பிக்கை வள்ர்த்துக் கொண்டு இருந்தேன். அதேப் பிரச்சினையின் பின்னணியில் எழுதப்பட்ட கதைதான் இது.
இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள் உண்மைச் சம்பவங்கள். பலர் வாழ்வில் நடந்தவற்றை குமரேஷ் என்கிற கதாநாகனின் வாழ்வில் வைத்தேன்.
கதை நிகழும் ஊர் தஞ்சை மாவட்டத்தில் எனது பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரத்தநாடு என்கிற கிராமமுமல்லாத, நகரமும் அல்லாத ஊர், எனது மாமா ஒருவர் அங்கே இருந்தார். சில முறை அவர் வீட்டுக்கு சென்றுள்ளேன். மற்றபடி எனது ஊரிலிருந்து தஞ்சை செல்லும்போதும், திரும்பும்போதுமாக கடக்கையில் இந்த ஊர் ஏதோ ஒரு வகையில் என்னை வசீகரிக்கும்.
பட்டுக்கோட்டைபிரபாகர்
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsSeptember, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Nee Mattum Nizhalodu
Related ebooks
Jarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Karaium Neram Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Indhu... Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsCrime Sooravali Rating: 5 out of 5 stars5/5En Irantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsVetri Allathu Vetri Rating: 0 out of 5 stars0 ratingsSodukkinal Sorgam Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Anjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Rathathil Ezhuthiyathu Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Kadaisi Athiyaayam Rating: 0 out of 5 stars0 ratingsEn Peyar Dhayalan Rating: 0 out of 5 stars0 ratingsMelathaalam... Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Nimidangalil... Rating: 5 out of 5 stars5/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsYerkanave Sonnapadi Rating: 0 out of 5 stars0 ratingsPuthir Thottam Rating: 5 out of 5 stars5/5Aarambaththil Appadiththaan Rating: 5 out of 5 stars5/5Kaadhalikku Kalyanam Rating: 5 out of 5 stars5/5Naalaya Aagayam Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Manmathan Vanthaanadi Rating: 5 out of 5 stars5/5Oru Koodai Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsAyiram Muthangaludan Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalan Oru Kaadhali Rating: 5 out of 5 stars5/5Thoda Mudiyatha Uyarangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nee Mattum Nizhalodu
1 rating0 reviews
Book preview
Nee Mattum Nizhalodu - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
கனவு கரையும் நேரம்
Kanavu Karaium Neram
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
ப
சித்த சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருந்தன அலைகள். ஆயிரம் பொத்தல்களுடன் கூடிய சர்க்கஸ் கூடாரத் துணியாக கறுப்பு வானம். வாழ்க்கையின் பிரச்சனைகளை ஒத்திப் போட்டுக் கொள்வதற்காக ஏராளமான குடும்பஸ்தர்கள் கடற்கரைக்கு வந்து சோளக் கதிரும், சுண்டலும், மிளகாய் பஜ்ஜியும் தின்று கொண்டிருந்தனர்.
வாழ்க்கையின் பிரச்சினைகளை ஆரம்பித்துக் கொள்வதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் வந்திருந்தார்கள். இருட்டுவதற்கு முன்பாக அவர்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளிகள் இப்போது நசுங்கிப் போயிருந்தன. பல ஜோடிகள் கருமமே கண்ணாக கருமம் செய்து கொண்டிருக்க, சில ஜோடிகள் டீஸண்ட்டாக கவர்ன்மெண்ட் ஆபீஸ் கிளார்க்குகள் போல பட்டும் படாமலும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க…
தேவா
என்றாள் பிரதீபா.
தேவா தன் இரண்டு கைகளையும் பின்புறமாக மணலில் ஊன்றி ஈஸிசேர் போல் சில்ஹவுட்டில் அமர்ந்திருக்க, அவன் தலைமுடிகளை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஆபீசரைப் போல கலைத்துக் கொண்டிருந்தது காற்று.
இன்னும் ஒரு நூறு வருடத்திற்குக்கூட ஃபாஷன் போட்டியில் ஜொலித்துக் கொண்டே இருக்கப் போகிற ஜீன்ஸ் அணிந்து, பதினைந்து ரூபாய் பிளாட்பார பனியனை இன் செய்திருந்தான். இந்த மாதிரி உடைகளில் ஒரு பெருத்த சௌகரியம் என்னவென்றால்… பார்த்த மாத்திரத்தில் அவன் பணக்காரனா ஏழையா என்று சொல்லிவிட முடியாது. பொறுமையாகக் காத்திருந்து அவன் பிரிமியர் பத்மினியில் ஏறுகிறானா இல்லை பல்லவனில் தொங்குகிறானா என்று பார்க்க வேண்டும்.
நம் தேவா பல்லவ நண்பன்தான்.
ஆனால் அவன் ஒன்பது நாட்களாகத் துவைக்காத பாண்ட்டுகள். மடியில் படுத்துக் கொண்டு அவனது ட்ரிம் செய்யப்பட வேண்டிய தாடியைத் தடவிக் கொண்டிருக்கும் பிரதீபா மண்டே மாருதி, ட்யூஸ்டே டொயாட்டோ ரகம். அதென்னமோ இப்படி எக்ஸ்ட்ரீம் முரண்பாடுகளுக்கு நடுவில்தான் மன்மதன் பாணம் எய்துவிட்டு இனி அவர்கள் பாடு என்று டீ குடிக்கப் போய் விடுகிறான்.
தோவாவும், பிரதீபாவும் ரெஃப்ரிஜிரேட்டரை விட்டு வெளியில் எடுத்து வைத்த ஐஸ்க்ரீமைப் போல உருகி, உருகி காதலிக்கிறார்கள். ஏழு மாதங்களாக.
இன்னும் பேச என்னதான் மிச்சம் இருக்குமோ?
ஆனால் நிதமும் சந்தித்ததாக வேண்டும். பினாத்திக் கொண்டாக வேண்டும்.
தேவா.
ம்?
ஐ லவ் யூ ஸோ மச்.
மீ டூ பிரதீபா.
உன்னை விட்டுப் பிரிஞ்சதுமே ஒவ்வொரு நிமிஷமும் நான் உன்னை மிஸ் பண்றேன் தேவா.
நான் கூட உன்னைப் பார்க்காத ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மிஸ்டர் பண்றேன் பிரதீபா.
நீ இப்படி ச்சீ சொல்றதுக்காகவே இந்த கடலை பேத்து உன் காலடியில வைக்கலாம் மாதிரி இருக்கு.
அபத்தமா உளறாதே!
இல்லை பிரதீபா, இப்ப நான் சொன்னது புதுக் கவிதை.
அப்படின்னா சரி.
பிரதீபா.
ம்?
பசிக்காமல், தூங்காம இப்படியே இருக்கலாம் போல இல்லை? யுகம் யுகமா?
பத்து மணிக்கு மேல போலீஸ்காரங்க வந்து எழுப்பி விட்டுடுவாங்க தேவா, இல்லைன்னாலும் காலையில சூரியன் வந்ததும் வேர்க்கும்.
நாட்டி!
அவளின் ஒரு கை விரல்களைப் பொத்திக் கொண்டு ஒவ்வொன்றாக ஏதோ தொல் பொருள் போல ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான் தேவா.
ஒரு நாளைக்கு நீ தூங்கறப்ப உன் விரலை பிளேடு வச்சிக் கீறிப் பார்த்துடணும்னு இருக்கேன்.
அய்யோ! ஏன்?
உள்ளேர்ந்து ரத்தத்துக்கு பதிலா ரோஜா இதழ்களாதான் உதிரும்ங்கிறது என்னோட யூகம் அவ்வளவு மெத்துன்னு இருக்கு.
இதுவும் புதுக் கவிதையா?
இல்லை, சும்மா அபத்தமா உளறினேன்.
தேவா, இன்னும் எத்தனை நாளைக்கு?
எது?
இப்படி கடற்கரையிலேயும், பார்க்லயும், ஹோட்டலயும் மீட் பண்றது.
நாளையிலேர்ந்து சென்ட்ரல் ஸ்டேஷன்லையும், எக்மோர் ஸ்டேஷன்லயும் மீட் பண்ணிக்கலாமா? மத்தவங்களோட கம்ப்பேர் பண்ணிப் பார்த்து நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு சொல்ல வசதியா இருக்கும்.
விளையாடாதே தேவா.
சேச்சே இன்னும் ஆரம்பிக்கவே இல்லைம்மா.
சின்னச் சின்ன விளையாட்டுக்கள் போதுமா தேவா?
இதெல்லாம் டெஸ்ட் மேட்ச்சுக்கு முன்னாடி நெட் பிராக்டிஸ் மாதிரிதான். டெஸ்ட் மேட்ச் ஆட வேணாம்னு நானா சொல்றேன். சரின்னு சொல்லு நாளைக்கே ஒரு ரூம் புக் பண்ணிடறேன். சாமி பேர்ல இதுக்குள்ளே எத்தனை லாட்ஜ் இருக்கு தெரியுமா? என்ன? சுவரெல்லாம் மூட்டைப் பூச்சி நசுக்கி நசுக்கி ரத்தமா இருக்கும்.
ஏய்! எப்படி தெரியும் உனக்கு?
அமெரிக்கால சுதந்திர தேவி சிலை இருக்கு. உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். போய்ப் பார்த்தமா என்ன? நாலெட்ஜ் பிரதீபா நாலெட்ஜ்!
பேசியே மடக்கிடறேப்பா.
எங்கே? இன்னும் நீ யெஸ் சொல்லலையே.
"நெஜமா சொல்லு. நெஞ்சைத் தொட்டுச் சொல்லு. ஏய்!