Mazhai Vidum Neram
5/5
()
About this ebook
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Read more from Pattukottai Prabakar
Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsBharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Yaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5
Related to Mazhai Vidum Neram
Related ebooks
Antha 69 Naatkal! Rating: 5 out of 5 stars5/5Kathi Mel Payanam Rating: 0 out of 5 stars0 ratingsL Board Murder Rating: 0 out of 5 stars0 ratingsEnna Satham Indha Neram? Rating: 4 out of 5 stars4/5Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsPushpa Rating: 5 out of 5 stars5/5Anamikavuku Anjali Rating: 5 out of 5 stars5/5Neela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsThoda Mudiyatha Thoduvanam Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Thittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Samaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5Vellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsPavala Pallathakku Rating: 5 out of 5 stars5/5Yuttha Boomi Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Sorgam Rating: 5 out of 5 stars5/5Mugamatra Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThattungal Thirakkathu! Rating: 0 out of 5 stars0 ratingsAayul Aare Naal Rating: 5 out of 5 stars5/5Pagal Nera Minnal Rating: 5 out of 5 stars5/5Asha - 60 Naal Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Paathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratings50kg Tajmahal Rating: 4 out of 5 stars4/5Un Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/5Edu Aayutham Rating: 5 out of 5 stars5/5
Reviews for Mazhai Vidum Neram
1 rating0 reviews
Book preview
Mazhai Vidum Neram - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
மழை விடும் நேரம்
Mazhai Vidum Neram
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அன்புள்ள உங்களுக்கு,
வணக்கம்
குடியாத்தம் தாழை பிரபு, ஈரோடு சித்ராதேவி, அரூர் மதிவாணன், கிருஷ்ணகிரி பூபாலன், பரங்கிப்பேட்டை ரெய்னா, ஆதனூர் பாண்டியன், குடியாத்தம் மணியன், திண்டிவனம் தவமணி கோவிந்தசாமி, மாங்காடு நெடுஞ்சேரலாதன், செம்பியம் சக்தி வடிவேல், ஆம்பூர் ரோஸி, அயன்புரம் சத்திய நாராயணன், சென்னை-13 சங்கர், சீர்காழி ராஜ், திருச்சூர் மணி, தேரெழுந்தூர் சுப்பு, முருங்கப்பேட்டை ராஜேந்திரன், ஈரோடு வீரலட்சுமி நந்தகோபால், கோவை உமா, சென்னை-17 ரமேஷ், கொழுமம் அறிவழகன், கோவை ரகூத்தமன், மதுரை இதயா, தஞ்சை கரிகாலன், ஒரத்தநாடு சங்கர், பெல்காம் சம்பத், ஈரோடு ரஞ்சனிப்பிரியன், கும்பகோணம் ஆனந்தி, மேட்டூர் பிரபாகர்பிரியன், சுப்பிரமணியபுரம் சிவாஜி, கொல்லம் ராஜா முகம்மது, மயிலை கோபி, தருமபுரி கமலஹாசப்பிரியன்
-போன்ற வாசகர்களின் பாராட்டுதல்களையும்
வேட்டைக்காரன் புதூர் முருகானந்தம், பொள்ளாச்சி வரதராஜ், காரைக்குடி அகிலா, காரைக்குடி பூங்கொடி, சென்னை-57 இரணியல் கலை, சைதை முரளி, திட்டச்சேரி குத்புதீன், ஆலம்பட்டி பாஷா, சென்னை-32 இஸ்மாயில் நாகை கல்யாணசுந்தரம், திருமருகல் லேனாப்பிரியன், திவான்சாபுதூர் முத்துசாமி, கொந்தகை கமலபிரியன், பாப்பாக்குடி செல்வமணி, வியாசர்பாடி கோவிந்தராஜ், மதுரை டாக்டர் சுந்தரேசன்
-போன்ற வாசகர்களின் கண்டனங்களையும்,
பெற்ற இந்த ‘மழை விடும் நேரம்’ நாவலை தொடராக வெளியிட்ட கல்கண்டு இதழுக்கும், புத்தகமாக வெளியிட்டிருக்கும் இமயப் பதிப்பகத்திற்கும் எனது... ஆஸ் யூஷுவல் நன்றி.
பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்.
1
பி
ன்னிரவு மழை விளைவாக, சூரியனுக்குச் சோம்பல் காரணமாக தாமதமான விடியல். காற்றில் குளிர், மரங்களின் மண்டையில் ஈரம். மக்களில் நால்வரில் ஒருவருக்குத் தும்மல். மருந்துக் கடைகள் சீக்கிரம் திறக்க... தினசரிகளைக் கர்ப்பம் சுமந்த சைக்கிள்கள் பவனி. அசிங்கமான மூஞ்சியுடன் குறுக்கே டீசல் புகை துப்பிச் சீறும் எவர் அர்ஜெண்ட் லாரிகள். பைப்புக்குப் பைப் பொருளாதாரத்தைத் தரம் பிரித்துக் காட்டும் விதவிதமான தண்ணீர்க் குட வரிசைகள். காத்திருக்கும் போது கொஞ்சம் ரேவதி, கொஞ்சம் எம்.ஜி.ஆர். கொஞ்சம் புதுப்புடவை, கொஞ்சம் பக்கத்து வீட்டுப் பார்வதியின் அழிச்சாட்டியப் புராணம். காப்பி, போர்ன்விடா, டீ எல்லாம் மாட்டின் மடியையும், கறப்பவர்களின் விரலையும் நம்பியிருக்க... காய்கறிக் கடையில் புதிய தக்காளியைக் கொட்டி, மேலே பரவலாக நேற்றையத் தக்காளி, கோயில்களில் சாமிக்குக் குளியல். கமலாவுக்கு டைப்ரைட்டிங் கிளாசில் பதினாலு நிமிஷத்தில் ஸ்பீட் அடிக்க வேண்டும். வெங்டேசனுக்குக் கண்ணகி சிலை வரை ஓடி வியர்க்க வேண்டும். ஈஸ்வரிக்கு இன்றைக்குத் தலைக்குக் குளிக்க... அசோகனுக்கு உடற்பயிற்சி.
இப்படியாகத்தானே சென்னையில் ஒரு தினம் துவங்கியிருக்க... ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தைத் தொட்டதும், மனோகர் தன் பிரஷ், பேஸ்டுடன் நடந்து வாஷ்பேசின் முன் நின்று பல் தேய்க்க ஆரம்பித்தான்.
முகம் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து தன் பெட்டியைக் கீழே இறக்கிவைத்துத் திறந்தான். ராத்திரிக் கழற்றி வைத்த பாண்ட்டை எடுத்து, லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு, அணிந்து கொண்டான்.
சீப்பெடுத்து மேலாகச் சீவிக் கொண்டு, வெளியே வைத்திருந்த ஆங்கில நாவலை உள்ளே வைத்தான். உள்ளே வைத்திருந்த சிகரெட் பெட்டியை வெளியே எடுத்தான்.
ஜன்னல் ஓரமாக நகர்ந்து அமர்ந்து கொண்டு, எதிரே அமர்ந்திருந்த பெரியவரின் கைக்கெடிகாரத்தின் நேரத்தைத் தன்னுடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான்.
மாம்பலத்தில் ஆங்கிலத் தினசரி வாங்கிக் கொண்டான். தமிழகச் செய்திகளை முதலில் படித்தான். வார்த்தை வராமல், வாவ்!
என்றான் உதட்டில், கண்களில் பிரகாசம். ஆஷைத் தட்டிவிட்டுப் புகையை ஆழமாக இழுத்துக்கொண்டு குறிப்பிட்ட செய்தியை மும்முரமாகப் படித்தான்.
பேப்பரை மடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். முகத்தில் மகிழ்ச்சி ரேகை. எதையோ யாரிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டுமென்கின்ற தவிப்பு இருந்தது இப்போது அவனிடம்.
சார், ஜெயச்சந்திரன் எம்.எல்.ஏ தெரியுமா?
என்றான் எதிரே.
எக்மோருக்கு இன்னும் பத்து நிமிஷத்திலே போயிடும் தம்பி,
என்றார் அவர்.
முகம் சுளித்தான். அருகே பார்த்தான். அந்தத் தாடி இளைஞன் சாய்ந்த நிலையில் இன்னும் உறக்கத்தில் இருந்தான்.
மனோகர் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு எழுந்து கம்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்று கதவைத் திறந்து வைத்துக்கொள்ள... தலையைக் கலைத்து, முகத்தில் அடித்தது ஈரம் தடவின காற்று.
இவனுக்கு அருகே நான்கைந்து அட்டைப் பெட்டிகள் வைத்துக் கொண்டு போர்ட்டரிடம் செய்யப் போகும் பேரக் கவலையில் இருந்தவனிடம் மறுபடி கேட்டான்.
எம்.எல்.ஏ. ஜெயச்சந்திரன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?
ஆமாம். ஆளுங்கட்சி.
நேத்து அவரு தன் பதவியை ராஜினாமா செஞ்சிட்டாருங்க.
அப்படியா?
எப்படி ராஜினாமாப் பண்ணாரு தெரியுமா?
பேப்பர்லே எழுதிக் கையெழுத்துப் போட்டு கவர்னர் கைல கொடுத்திருப்பார்.
அதைச் சொல்லலைங்க. அவர் ஏன் ராஜினாமா செஞ்சாரு தெரியுமா?
நமக்கு அரசியல் அவ்வளவு தெரியாதுங்க.
ஒரு கொலை வழக்கிலே அவர் சம்மந்தப்பட்டிருக்காருன்னு சரியான ஆதாரங்களோட ஒரு பத்திரிகையிலே ஒரு கட்டுரை வந்திச்சி. அதைப் பத்திச் சட்டசபையிலே காரசாரமா விவாதம் நடந்திருக்கு. அதன் விளைவா அவர் ராஜினாமா செஞ்சிருக்கார்.
ஓகோ. கொஞ்சம் தள்ளிக்கிறிங்களா, இந்தப் பெட்டியை வாசலுக்குப் பக்கத்திலே வச்சிக்கிட்டா இறங்கறதுக்கு சௌகரியமா இருக்கும்.
அவனுக்கு இதில் இதற்குமேல் அக்கறை இல்லை என்பதில் எரிச்சல் அடைந்தான் மனோகர்.
அந்தக் கட்டுரையை எழுதினது யார் தெரியுமா?
யாரா இருந்தா நமக்கென்ன சார், இந்த நாலு பெட்டியையும் கீழே இறக்கி வைக்க என்ன கேப்பான்னு நினைக்கிறிங்க?
பதில் சொல்லாமல், ரயில் எக்மோர் ஸ்டேஷனில் ஷெட்டுக்குள் வேகம் குறைந்து நுழைவதைக் கண்ட மனோகர், தன் சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டான்.
வண்டி நிற்பதற்கு முன்பே பிளாட்பாரத்தில் பிரசன்னாவைப் பார்த்து விட்டான். கையசைத்தான். உற்சாகமாக.
இவன் இறங்கியதும் பிரசன்னா ஓடி வந்து கையைப் பற்றி, கங்கிராஜுலேஷன்ஸ் மனோ! பேப்பர் பார்த்தியா? நீ சாதிச்சுட்டேடா! கமான்! வீட்ல உனக்காக அசோசியேஷன் தலைவர், செகரெட்ரி, மெம்பர்சுன்னு பத்துப் பேருக்கு மேலே காத்துக்கிட்டிருக்காங்க.
போகலாம். அதுக்கு முன்னாடி எடிட்டருக்கிட்டே மட்டும் போன்ல பேசிடலாம்.
இருவரும் வெளியே வந்து பொதுத் தொலைபேசிக்கு வந்தார்கள்.
ஹலோ சார், குட்மார்னிங், நான் மனோகர் பேசறேன்.
மனோகர், உன் தொப்பியிலே இன்னொரு இறகு சேர்த்திருக்கே மேன். சபாஷ்! உன் கட்டுரை சர்ச்சையைக் கிளப்பும்னு எதிர்பார்த்தேன். ஆனா இப்படி வேரோட வெட்டி சாய்க்கும்னு எதிர்பார்க்கலை. வெரிகுட்! மாயவரத்திலே போன வேலை முடிஞ்சுதா?
இன்னும் இல்லை சார். இந்தக் கேஸை எடுத்திருக்கிற இன்ஸ்பெக்டர் ஒரு வாரம் லீவு போட்டுட்டு வெளியூர் போயிட்டார். அவர் என்ன நடவடிக்கை எடுத்தாரு, அவரோட கருத்து என்னங்கிறதை எல்லாம் சேர்க்கலைன்னா கட்டுரை குறையாத் தெரியும். மறுபடி அடுத்த வாரம் போகணும்.
சரி, அப்புறம்... மற்ற பத்திரிகைகள் எதுக்கும் பேட்டி மாதிரி எதுவும் கொடுத்துடாதே அவசரப்பட்டு.
"இல்லை சார். செய்யமாட்டேன்.
இப்போ எல்லாரும் உன்னைப் பாராட்டுவாங்க. ஆனா அனுபத்தினாலே நான் ஓர் அட்வைஸ் பண்றேன். இப்போ கொஞ்சம் பாதுகாப்பு வேணும் உனக்கு. ஜாக்கிரதையா இரு. உன்னைப் பயமுறுத்துறது என் நோக்கம் இல்லை. புரியுதா?
புரியுது சார். லைசென்ஸ்டு பிஸ்டல் வச்சிருக்கேன் சார். அதை விடவா பாதுகாப்பு வேணும்?
துணிச்சலான ஆளுப்பா நீ. ஓ.கே. ஆபீசுக்கு வா, பேசிக்கலாம்.
வைத்துவிட்டுத் திரும்பி, எதிலே வந்தே பிரச்சன்னா?
என்றான் மனோகர்.
கார்லதான். உன் எடிட்டர் என்ன சொன்னார்ங்கிறதை என்னால யூகிக்க முடியுது. மனோ, அவர் சொல்றது நியாயம். கட்சித் தொண்டர்கள் இப்போ உன் மேலே ஆத்திரமா இருப்பாங்க. அதனால...
அதனால?
என்று முறைத்த மனோகரை சரி. வா, வா, போய்க்கிட்டே பேசலாம்.
என்று தன் அம்பாஸிடருக்கு அழைத்து வந்து, ஏறிக் கொண்டு புறப்பட்டதும்...
மனோ, உன் மேல அக்கறை கொண்ட ஓர் உண்மையான நண்பன்ங்கிற முறையிலே சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம்.
என்ன சொல்றே பிரசன்னா?
"இரு. நிதானமாகக் கேளு. சீறாதே. இங்கே சம்மர் ரொம்ப சூடா இருக்கிறதாலே நீயும் உன் மிஸசும் ஒரு வாரம் ஊட்டி போயிட்டு வரலாமே?|
என்னை என்னடா பயந்தாங்குளின்னு நினைச்சிக்கிட்டிருக்கியா? யாருக்கு பயந்து என்னை இப்படி ஓடச் சொல்றே?
சமூக விரோத சக்திகள் நிறைய இருக்கு மனோ.
"இதுக்கெல்லாம் பயந்திருந்தா நான் இன்வெஸ்டிகேடிங் ஜர்னலிசத்திலே இறங்கியிருக்கவே மாட்டேன். என் முதுகிலே உள்ள தழும்புகளை உன்கிட்டே காமிச்சிருக்கேனில்லே. அந்த அடிக்கு இன்னொருத்தனா இருந்தா ஊரை விட்டே ஓடியிருப்பான். எனக்குள்ளே ஏற்பட்ட விளைவு மாறி அமைஞ்சிடுச்சு. அந்தச் சம்பவத்துக்கப்புறம்தான் என் தீவிரமே அதிகமாச்சி. இதிலே ஒரு தில் இருக்கு, திரில் இருக்கு, திமிரும் இருக்கு. எது வந்தாலும் சந்திக்கிற தைரியமும் இருக்கு. இல்லேன்னா எல்லாரையும்