Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manidhan
Manidhan
Manidhan
Ebook103 pages54 minutes

Manidhan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400173
Manidhan

Read more from Rajesh Kumar

Related to Manidhan

Related ebooks

Reviews for Manidhan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manidhan - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மனிதன்

    Manidhan

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ரிசப்ஷன் அமர்க்களமாய் - ஆர்க்கெஸ்ட்ரா முழக்கத்தோடு உற்சாகமாய் இருந்தது. ‘நெலா அது வானத்து மேலே, பலானது ஓடத்து மேலே’– என்று சுரேந்தர் உருண்டை மைக்கை கையில் வைத்துக் கொண்டு பாடிக் கொண்டிருக்க, ராஜகணேசன் எழுந்து டையை இறுக்கிக் கொண்டு எழுந்தார்.

    என்ன… புறப்பட்டுட்டீங்க…? இருந்து நைட் டின்னர் சாப்பிட்டுப் போலாமே…? கல்யாண வீட்டைச் சேர்ந்த ஒரு நபர் ராஜகணேசனின் கையைப் பிடித்துக் கொள்ள,ஸாரி… நான் அவசரமா திருச்சி போகணும்… இவ்வளவு நேரம் இருந்தது பெரிசு… வீட்ல வேற ஒய்ப் காத்திட்டிருப்பா… சொல்லிக் கொண்டே கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே வந்தார் ராஜகணேசன். மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தார். எட்டு மணி. இருட்டறை ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் கார்களும் ஸ்கூட்டர்களும் அடைசலாய் நின்றிருக்க – ஐம்பதடி தள்ளி இருட்டில் நின்றிருந்த தன் காரை தேடிக் கொண்டு போனார்.

    காரை நெருங்கியவர் –

    ஆச்சர்யப்பட்டார்.

    நிலா தவறியிருந்த வானம்.

    நேரம் 10.45

    தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை போகும் மாநில நெடுஞ்சாலை. சுற்றிலும் பரவியிருந்த கார்பன் பேப்பர் இருட்டில் - முப்பத்தியிரண்டாம் நெம்பர் புளிய மரத்தின் கீழ் நின்றிருந்தது அந்த லாரி. அதன் முதுகு பூராவும் அம்பாரமாய் குவிக்கப்பட்ட கருங்கற்கள். ஒவ்வொன்றும் செம – கனம் - எம கனம். முகப்பு விளக்குகளை அணைத்து விட்டு – லாரியின் கேபினுக்குள் ஸ்டீரியங்கைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த ஹீராவின் உதடுகளினின்றும் - கெட்டியாய் பீடிப்புகை வழிந்து கொண்டிருக்க – அவனுடைய பார்வை தீர்க்கமாய் - நெடுஞ்சாலையின் கோடி வரைக்கும் விழுந்திருந்தது.

    இந்த முப்பது வயது ஹீராவைப் பற்றி உங்களுக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும். சாராயக்கடையைப் பார்த்த இடத்திலேயே – லாரியை நிறுத்தி விட்டு முன்னூறு மில்லி போட்டுக் கொள்ளாத ஒரு டிரைவர் உண்டென்றால் அது ஹீராதான். நெடுஞ்சாலையின் புளிய மரங்களுக்குப் பின்னால் நின்று – மல்லிகை மணத்தோடு ‘பலான’ வேலைக்கு கூப்பிடும் பெண்கள் கண்டு கொள்ளாத ஒரு டிரைவர் உண்டென்றால் அது ஹீராதான். ரோட்டோர புரோட்டா கடைகளில் - மற்ற டிரைவர்கள் கொத்துக் கறியும் சிக்கன் ரோஸ்ட்டும் - புரோட்டாவும் தொட்டுக் கொள்ள ஆர்டர் செய்யும் போது – வெஜிடபிள் குருமாவுக்கு ஆர்டர் பண்ணும் ஒரு டிரைவர் உண்டென்றால் அது ஹீராதான்.

    அந்த உத்தமமான டிரைவர் ஹீரா - இன்னும் அரை மணி நேரத்தில் செய்யப் போகிற ஒரு வேலையைக் கேட்டால் - உங்கள் புருவங்கள் ஆச்சர்யத்தால் மேலேறும். அவரவர் தாய் பாஷைகளில் - கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவீர்கள். ஹீரா பண்ணப் போகிற அந்த வேலை?

    ஒரு கொலை.

    கையில் இருந்த கடைசி சென்டி மீட்டர் சின்ன பாரதிக் கொடியை பீடியை வீசிவிட்டு – லாரியின் கேபினிலிருந்து கீழே இறங்கி நின்றான், ஹீரா. ஆறடி உயர உடம்பு. மேலுதட்டை மறைக்கிற அளவுக்கு ஆரோக்கியமான மீசை. முரட்டுத்தனமான காக்கி பேண்ட். காக்கி சர்ட். வலது கை மணிக்கட்டில் ஒரு செம்பு வளையம்.

    ஹீராவின் பார்வை நெடுஞ்சாலையின் இருட்டை துளைத்த அதே நேரம் - கொஞ்சம் தொலைவில் -

    வித்தியாசமான ஹார்ன் சத்தத்தோடு – ஒரு பைக் ஹெட்லைட் வெளிச்சத்தோடு பிரசவமாகி பீறிட்டுக் கொண்டு வந்தது.

    ‘த்தட் த்தட்’ என்று சில விநாடி நேரத்தில் அவனை நெருங்கியது. நின்று புகைவிட்டது. பைக்கின் மேல் ஆரோகணித்திருந்தவன் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றிக் கொண்டான்.

    ஹீரா கேட்டான்:

    என்ன ரஹ்மான்… பார்ட்டி புறப்பட்டாச்சா…?

    புறப்படற நேரம்… சரியா அஞ்சு நிமிஷம் கழிச்சு லாரியை ஸ்டார்ட் பண்ணிக்க… மெதுவா ஓட்டிகிட்டு போ… ஹவுஸிங் யூனிட்டையும், டான்டெக்ஸ் பனியன் கம்பெனியையும் தாண்டி – ரோட்டோரமா மாமரத்துக்குக் கீழே லாரியை நிப்பாட்டிக்க… ராஜ்தூத் பைக். பைக்கோட முகப்புல – ரெண்டு சைடுல நீல நிற லைட். சைலன்ஸர் கொஞ்சம் அதிகமா சத்தம் போடும். இந்த அடையாளம் போதுமா? இன்னும் ஏதாவது வேணுமா?

    "பைக்ல வர்றது

    Enjoying the preview?
    Page 1 of 1