Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Naaneythaan
Naan Naaneythaan
Naan Naaneythaan
Ebook89 pages43 minutes

Naan Naaneythaan

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100400119
Naan Naaneythaan

Read more from Rajesh Kumar

Related to Naan Naaneythaan

Related ebooks

Reviews for Naan Naaneythaan

Rating: 4.428571428571429 out of 5 stars
4.5/5

7 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Naaneythaan - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    நான் நானேதான்

    Naan Naanethaan

    Author :

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    அமர்க்களம்– என்றாள் லீலா. கையில் தங்க நிறத்தில் டாலடித்த கல்யாணப் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டே கண்களை விரித்தாள்.

    கணவர் செண்பகராமனின் கன்னத்தை மெதுவாய் தட்டினாள். டாக்டர் தொழில் பார்த்தாலும்… உங்களுக்கு கூட இதிலெல்லாம் ரசனை இருக்கே…?

    செண்பகராமன் சிரித்தார். என்னை… என்னதான் நினைச்சுட்டே…? டாக்டர் தொழில் பார்த்தா எல்லாமே வறண்டுடுமா என்ன? பத்து பதினைஞ்சு கடையேறிநானே செலக்ட் பண்ணின டிசைன் இது…! உனக்கும் எனக்கும் இந்த டிசைன் பிடிச்சிருக்கு. ஓ…கே…! ஆனா, இது வாஹினுக்குப் பிடிக்கணுமே?

    அவளுக்கு இது நிச்சயமா பிடிக்கும்?

    எப்படி சொல்றே…?

    அவ என்னோட தங்கச்சியாச்சே… என்னோட டேஸ்ட்தானே அவளுக்கும் இருக்கும்…

    ஹாஸ்டலுக்கு போய் காட்டிட்டு வரலாமா?

    நினைச்ச நேரத்துக்கு ஹாஸ்டலுக்குப் போயிட முடியுமா…? போன் பண்ணி வார்டன்கிட்டே டைம் ஃபிக்ஸ் பண்ணுங்க…

    நீதான் போன் பண்ணேன்…

    நீங்க வரவர மகா சோம்பேறியாயிட்டிங்க…

    சலித்துக் கொண்டே லீலா - ஹால் சுவரோரமாய் இருந்த டெலிபோனைத் தொட்டு – ரீஸீவரை எடுத்துக் கொண்டு டயலைச் சுழற்றி விட்டு பேசினாள்.

    கஸ்தூரிபாய் டீச்சர்ஸ் ட்ரெய்னிங் காலேஜ் ஹாஸ்டல்?

    ஆமா…

    நீங்க யாரு…?

    நான் அவளோட சிஸ்டர்…

    டாக்டர் செண்பகராமனின் ஒய்ஃப்… மிஸஸ் லீலாவா?

    ஆமா…

    வாஹினி கிளாஸில் இருக்கா… ! அவசர விஷயம் எதாவது இருக்கா…?

    நோ… நோ… பார்த்து கொஞ்ச நேரம் பேசணும். இன்னிக்கு ஈவினிங் ஒரு மணி நேரம் பர்மிஷன் கிடைக்குமா…?

    விஸ்ட்டர்ஸ் டே சண்டேதான். மத்த நாட்கள்ல நாங்க யாரையும் அலவ் பண்றதில்லை.

    மேடம்! வாஹினிக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கோம். கல்யாண ஏற்பாடுகளைப் பத்தி – அவகிட்ட பேசணும்.

    மறுமுனையில் வார்டன் ஆச்சர்யப்பட்டாள்.

    வாஹினிக்கு கல்யாணமா…?

    ஆமா… மேடம்… வர்ற மாசம் இருபத்தியேழாம் தேதி முகூர்த்தம் வெச்சிருக்கோம்.

    மாப்பிள்ளை யாரு…?

    என் கணவரோட ஃபிரண்ட். பேரு கைலாஷ்குமார். அவரும் ஒரு டாக்டர்தான்.

    வாஹினி பி.எட். கோர்ஸ் இன்னும் அஞ்சு மாசம் இருக்கே. அதுக்குள்ளே ஏன் கல்யாணத்தை முடிக்கறீங்க…?

    மாப்பிள்ளையோட ஜாதகப்படி… வர்ற மாசக் கடைசிக்குள்ளே கல்யாணம் முடியணுமாம்…

    அப்படீன்னா வாஹினியோட பி.எட். கோர்ஸ்?

    கல்யாணத்துக்கப்புறமும் தொடரும்…

    சந்தோஷம்… ஆனா… அவ காலேஜ் ரூல்ஸ்படி ஹாஸ்டலில் தங்கியிருந்துதான் படிக்கணும்.

    கல்யாணமானாலும்… அவ ஹாஸ்டலில் தங்கித்தான் படிப்பா.

    சரி… சாய்ந்திரம் அஞ்சு மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளே ஹாஸ்டலுக்கு வாங்க. வாஹினியோடு பேசிட்டுப் போலாம்.

    தாங்க்யூ… மேடம்…

    லீலா ரிஸீவரை வைத்துவிட்டு – சேலைத் தலைப்பால் நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டாள். அந்த வார்டன் அம்மாவுக்கு ஹாஸ்டல் கட்டடம் பெரிய ராஷ்ட்ரபதிபவன்-ன்னு நினைப்பு. ரொம்பவுந்தான் பிகு பண்ணிக்கிறா…

    அந்த அம்மா அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்கிறதுனால தான் காலேஜ்க்கும் ஹாஸ்டலுக்கும் தமிழ்நாடு பூராவும் நல்ல மதிப்பு. வாஹினிக்கு அந்த காலேஜில் சீட் வாங்கறதுக்குள்ளே… என்ன பாடு பட்டுட்டேன்.

    வாஹினிக்கு அந்த டீச்சர் வேலையில் அப்படி என்ன தான் ஒரு இண்ட்ரஸ்ட்டோ?

    Enjoying the preview?
    Page 1 of 1