Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Undhan Poomalai
Naan Undhan Poomalai
Naan Undhan Poomalai
Ebook151 pages1 hour

Naan Undhan Poomalai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Lakshmi Praba has written close to 100 novels till now. She has written in different genres like family, love/romance, spiritual etc. She writes regularly in monthly novels and she is very famous among ladies readers.
LanguageUnknown
Release dateMay 30, 2016
Naan Undhan Poomalai

Reviews for Naan Undhan Poomalai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Undhan Poomalai - Lakshmi Prabha

    http://www.pustaka.co.in

    நான் உந்தன் பூமாலை

    Naan Undhan Poomalai

    Author:

    லட்சுமி பிரபா

    Lakshmi Praba

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நான் உந்தன் பூமாலை

    -லட்சுமி பிரபா

    தோட்டத்துப் பறவைகளின் கலகலத்வனியைக் கேட்டதும் சட்டென்று எழுந்தாள் மிதிலா மாதவி.

    தினமும் அதி காலை நான்கு ம ணிக் கெல் லாம் அவளுக்கு விழிப்பு தட்டிவிடும். கலைந்த கூந்தலைக் கோதி கொண்டையிட்டபடியே எதிர்ச் சுவரில் இருந்த அம்மா மரகதத்தின் படத்தை ஏறிட்டாள்.

    தலைமாட்டிலிருந்த கையடக்க சிறு வீரடி சாயி பாபாவின் படத்தைத் தொட்டு வணங்கினாள்.

    "இன்னிக்குப் பொழுது நல்லபடியாக இருக்கணும் பாபா !

    அத்தை கிட்டேயும், மாயா கிட்டேயும் திட்டு வாங்கி வாங்கி மனசு மரத்துப் போச்சு.

    தினப்படி கட்டாயம் எனக்கு மண்டகப்படிதான் கிடைக்குது.

    என்னதான் நான் நல்லபடியா நடந்துக்கிட்டாலும் குத்தம் குறை கண்டுபிடிச்சு திட்டறதே அவங்க வேலையா போயிடுச்சு.

    அவங்க வழக்கம் போல திட்டி அவமானப்படுத்தட்டும். எனக்கு எல்லாத்தையும் தாங்கிக்கிற சக்தியையும் சகிப்புத் தன்மையையும் கொடு பகவானே !

    என்னைப் போன்ற அனாதைக்கு. உங்களை விட்டாயாரு கதி ஐயனே ?"

    அனுதினமும் அவள் மானசீகமாய் இஷ்ட தெய்வத்திடம் இதுபோல் வேண்டிக் கொள்வாள்.

    கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். பக்கத்து ஏசி அறையில் மாயா உறங்கிக் கொண்டிருந்தாள்.

    எதிர் அறை அத்தை அம்புஜத்திற்கு உரியது. மாமா லோகநாதன் ஊரில் இல்லை. அவர் பெரிய வியாபாரி, வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்குப் போய் விடுவார்.

    தேனியில் அவர் ஒரு பெரும்புள்ளி என்பதால், அந்த மாவட்டத்தில் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. கண்டமனூரிலும் அவருக்கு சொந்தமாய் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் இருந்தன.

    அங்கும் ஒரு பங்களா இருப்பதால் தேனியிலும், கண்டமனூரிலுமாய் மாறி மாறி அவர்கள் தங்குவது உண்டு.

    மாயாவுக்கு படிப்பு அவ்வளவாய் மண்டையில் ஏறவில்லை.

    அதனால் நினைத்த மாத்திரத்தில், அவர்களால் கண்டமனூருக்கு கிளம்ப முடிந்தது. திக்கித் திணறி மாயா பிளஸ் டு வரை எப்படியோ படித்து விட்டாள்...

    பிளஸ் டு படிக்கும் சமயத்தில் கூட வெள்ளிக்கிழமை சாயந்தரம் கண்டனுரருக்கு கிளம்பி வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்கில் அறை மனதுடன் தேனிக்கு திரும்புவார்கள்.

    பிளஸ் டு தேர்வில் மாயா தோல்வியைத்தான் தழுவினாள். மிதிலா மாதவி எட்டாம் வகுப்பு படித்து முடித்த போது அவளது அப்பா திடீரென மாரடைப்பில் மாண்டு போனார்.

    மரகதம், கணவரை இழந்ததும் நிலை குலைந்து போய்விட்டாள் !

    படிப்பறிவு இல்லாதவள், ஒற்றைப் பெண் குழந்தை மிதிலா மாதவி திகுதிகுவென்று. உயரமாய் ராஜகளையுடன் அம்சமாய் இருந்தாள். வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக் கொண்டு எப்படிக் காலம் தள்ளுவது ? என்று மரகதம் விழி பிதுங்கித்தான் போனாள்.

    சாவுக்கு வந்த உற்றார் உறவினர்கள் மெ ல் ல கழன்று கொண்டனர். அம்மாவும் பெண்ணுமாய் நம் வீட்டிற்கு பாரமாய் வந்துவிட்டால் ? என்ற கவலை அவர்களுக்கு!

    அந்த சமயத்தில் லோகநாதன் தான் உதவிக்கரம் நீட்டினார். "மாணிக்கம் என்னோட பால்ய கால நண்பன், நான் வியாபாரம் ஆரம்பிக்கிறதுக்கு அவன்தான் பணம் கொடுத்து உதவினான்.

    மாணிக்கத்தோட கை ராசியானது. அவன் கையால குடுத்த பணத்தை வச்சுத்தான் முதலீடு பண்ணி மளமளன்னு நான் முன்னுக்கு வந்தேன். அந்த நன்றியை நான் காலத்துக்கும் மறக்க மாட்டேன். மரகதம் ! நீ என் தங்கச்சி மாதிரிதான்.

    மாதவிக்கு தாய் மாமனா இருந்து எல்லா கடமைகளையும் நான் செய்யணும். அந்தக் கடமை எனக்கு இருக்கு.. பேசாம நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கே வந்துடுங்க,"

    லோகநாதன் மரகதத்திடம் கெஞ்சி மன்றாடினார்.

    இல்லைன்னா. தன் கையே தனக்கு உதவின்னு சொல்வாங்க... எனக்கு படிப்பு இல்லாட்டியும் சமைக்க நல்லா வருமே ? சமையல் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். இன்னொருத்தர் வீட்டுக்கு வந்து பாரமா இருக்க என் மனசு ஒப்பாது அண்ணா!

    பிடிவாதமாய் வர மறுத்தாள் மரகதம். எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.

    மாதவியைப் பாரு மரகதம்! இளவரசி மாதிரி பார்க்க எவ்ளோ லட்சணமா இருக்கா ? வயசுப் பொண்ணை வச்சிருக்கே? உங்க ரெண்டு பேத்துக்கும் சமுதாயத்துல என்ன, பாதுகாப்பு இருக்கும்னு நெனக்கிறே? காலம் ரொம்பவே கெட்டுக் கிடக்கும்மா

    என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து. தயவுசெஞ்சு என் கூடப் புறப்பட்டு" வா மரகதம்...!

    நெகிழ்ந்து பேசி கெஞ்சியதும் மரகதத்தின் மனம் இளகியது. சரிங்க அண்ணா! நாங்க வரோம், நாங்க உங்க வீட்டுக்கு வந்தா. சமையல் வேலையை நான்தான் பார்த்துக் கொள்வேன்.

    உழைக்காம உட்கார்ந்து சாப்பிட எனக்கு மனசு வராது அண்ணா..! இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா நாங்க கிளம்பி வர்றோம்.

    "உன் இஷ்டம் மரகதம்! இந்த மட்டும் நீ ஒப்புக்கிட்டதே பெரிய விஷயம் நான் சம்மதிக்கிறேன்

    லோகநாதன் சம்மதித்து அவர்களை தன் பங்களாவுக்கு அழைத்துப் போனார். தன் மகள் மாயா படிக்கும் பள்ளியிலேயே மாதவியை சேர்த்து விட்டார் லோகநாதன்.

    அவர் வீட்டில் இல்லாத தருணங்களில் அம்புஜம், அவர்களை வசைபாடி அவமதித்து ஆட்டிப் படைத்தாள். மரகதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகம்! இந்த விஷயத்தைப் பற்றி அவள் லோக நாத னிடம் முறை யி ட் டதே இல்லை

    தனிமையில் அழுது தனக்குள் மருகி மாடாய் உழைத்து சோர்ந்த மரகதம் இரண்டே வருடங்களில் மாரடைப்பில் காலமாகி விட்டாள். அநாதையாகிப் போன மிதிலா மாதவி மாயாவின் புத்தகப் பையையும் சுமந்து கொண்டு பள்ளிக்குப் போனாள்.

    பாட்டு கிளாஸிக்கு மாயா போகும் போது கூடவே வீணையைத் துரக்கிப் போனாள். சமையல் வேலை, வீட்டு வேலை அத்தனையையும் மிதிலாவின் தலையிலேயே கட்டினாள் அம்புஜம்.

    சிறு வயதிலிருந்தே வயதுக்கு மீறின. பொறுப்புணர்ச்சி, சகிப்புத் தன்மை, சுறுசுறுப்பு, அயராத உழைப்பில் நாட்டம் இருந்ததால் மிதிலா மாதவியால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிந்தது.

    பிளஸ் டு விலும் நிறைய மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாய் தேர்ச்சி பெற்றிருந்தாள். மாயா இரு பாடங்களில் பெயிலாகி விட்டிருந்தாள்.

    அம்புஜத்திற்கும், மாயாவிற்கும் பொறாமை தாளவில்லை. மிதிலா மாதவியைத் திட்டித் தீர்த்தார்கள். எம் பொண்ணே இனி படிக்கப் போகலை, உன்னோட படிப்புக்கு முழுக்கு போட்டுட்டு வீட்டுல முடங்கிக்கிட நான் சொல்லிட்டேன்.

    இதைப் பத்தி அவருகிட்டே நீ ஏதாச்சும் வத்தி வச்சு கண்ணைக் கசக்கினா. நான் பொல்லாதவளாயிடுவேன். ஜாக்கிரதை!

    அம்புஜம் மிதிலா மாதவியை மிரட்டி வைத்திருந்தாள். நண்பன் மாணிக்கத்தின் மகள் மீது மிகுந்த பிரியத்தை வைத்திருந்தர்ர் லோகநாதன். மாதவி ! உன் மார்க்வீட்டை கொண்டா பார்ப்போம். நீ கண்டிப்பா நல்ல மார்க் எடுத் திருப்பியே, சீக் கிரம் வா, ! என்று அவர் உத்தரவிட்டபோது,

    வேறு வழியின்றி கொண்டு வந்து காண்பித்தாள். குட்...! வாழ்த்துக்கள் மாதவி மேற்கொண்டு என்ன படிக்கப் போறே? நீ எடுத்திருக்கிற மார்க்குக்கு சீட் ரொம்ப சுலபமா கிடைச்சுடுமே ? சொல்லுடா"

    எனக்கு மேலே படிக்க இஷ்டமில்லை மாமா...

    எ.. என்னம்மா இப்படி சொல்றே நல்லா படிக்கிற பொண்ணு நீ ஏன் ? யாராச்சும் உன்னை மிரட்டி வச்சாங்களா..? வெளிப்படையா பேசுடா. நான் இருக்கேன்.

    மனைவியையும் மகளையும் வெறுப்புடன் உற்றுப் பார்த்தார். சேச்சே! அப்படி எதுவுமில்ல மாமா !"

    இதை நான் நம்பணுமாக்கும் அதெல்லாம் தெரியாது நீ மேற்கொண்டு படிக்கணும்.

    என்னை தர்ம சங்கடப்படுத்தாதீங்க மாமா !

    நிஜமாகவே எனக்கு காலேஜுக்குப் போய் படிக்க விருப்பம் இல்லை.

    சரி! காலேஜுக்குப் போக வேண்டாம். வீட்டுலேர்ந்தே கரஸ்லே படிச்சுக்கலாம் இல்ல..?

    லோகநாதனின் வற்புறுத்தலுக்கு வேறு வழியின்றி இணங்கி.. தபால் வழி மூலம் மேற்படிப்பைத் தொடர்ந்தாள். மூன்று வருடப் படிப்பை.. எப்படியோ முடித்து டிஸ்டிங்ஷனில் தேறியிருந்தாள்.

    நேற்றுதான் யுனிவர்சிட்டிக்குச் சென்று சர்ட்டிபிகேட்டை வாங்கி வந்திருந்தாள். வயிற்றெரிச்சல் தாளாமல் அம்புஜமும், மாயாவும் அவளைத் தாளித்துக் கொட்டினார்கள்.

    அம்மா மரகதத்திடம் இருந்த சகிப்புச் தன்மை அப்படியே இவளுக்கு வந்திருந்தது. தனிமையில் இஷ்ட தெய்வத்திடமும், அம்மாவிடமும் மானசீகமாய் பேசி அழுது.. அவர்கள் மீது பாரத்தைப் போட்டு விட்டு நடப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தாள்.

    மளமளவென்று குளித்து மாற்று டை அணிந்து வெளிப்பட்டவள். பூஜை அறையில் விளக்கேற்றினாள். தேனி பங்களாவில் இருந்தால், கால எட்டரை மணிக்கு தான் அம்மாவுக்கும், மகளுக்கும் விழிப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1