Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swamy Vivekanandar
Swamy Vivekanandar
Swamy Vivekanandar
Ebook233 pages1 hour

Swamy Vivekanandar

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எனது பெயர் ரஞ்சனி நாராயணன். திருமணத்திற்கு முன் ஒரு ஸ்டெனோ-டைப்பிஸ்ட். திருமணம் ஆன பின் முழு நேர இல்லத்தரசி. பல வருடங்கள் கழித்து ஆங்கிலம் பேசச்சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஏற்று செம்மையாக செய்தேன். திறந்தவெளிப் பல்கலைகழகத்தில் படித்த சமூகவியல் முதுகலைப் பட்டதாரி நான்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து திருமணம் ஆகி, இப்போது இருப்பது பெங்களூரில். முதலில் இல்லத்தரசி என்று சொல்லிக் கொள்வதை விரும்பினாலும் எழுத்தாளர் என்ற அடையாளம் என்னை ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பல வருடங்களாக பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தாலும் இணையத்தில் சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருக்கிறேன். இணையத்தில் எனக்கென ஒரு இடம் பிடித்திருப்பது சந்தோஷமான விஷயம். இணையத்தில் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு தங்கள் தளத்தில் எழுதும்படி சில இணைய இதழ்கள் கேட்டுக்கொண்டதும் நான் எழுத்தினை தீவிரமாகத் தொடரக் காரணம்.

புத்தகங்கள் வாசிப்பது எனது அம்மாவிடமிருந்து நான் (நாங்கள்) கற்றது. 89 வயதிலும் அம்மா இன்னமும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாள். நாங்கள் பள்ளிப்புத்தகமும் கையுமாக இருந்த காலத்தில் அம்மாவும் எங்களுடன் புத்தகமும் கையுமாக அமர்ந்திருப்பாள். படிப்பதுடன் கோர்வையாக எழுதுவதும் அம்மாவிற்கு கைவந்த கலை. எனது எழுத்து, வாசிப்பு இரண்டிற்கும் நான் என் அம்மாவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தக் காரணங்களாலேயே எனது முதல் புத்தகத்தை (விவேகானந்தர்) என் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

‘சுவாமி விவேகானந்தர்’ என்ற இந்தப் புத்தகம் எளிமையான முறையில் தமிழ் வாசகர்களுக்கு சுவாமிஜியை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். ஒரு மகானைப் பற்றிய புத்தகத்துடன் எனது அச்சுப்புத்தகப் பயணம் தொடங்கி இருப்பதில் மன நிறைவு கொள்ளுகிறேன்.

டிஜிட்டல் வடிவிலும் இந்தப் புத்தகத்தைப் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து உங்கள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்

என் எழுத்தைப் படித்துப் பாராட்டும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109801251
Swamy Vivekanandar

Read more from Ranjani Narayanan

Related to Swamy Vivekanandar

Related ebooks

Reviews for Swamy Vivekanandar

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swamy Vivekanandar - Ranjani Narayanan

    http://www.pustaka.co.in

    சுவாமி விவேகானந்தர்

    Swamy Vivekanandar

    Author:

    ரஞ்சனி நாராயணன்

    Ranjani Narayanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ranjani-narayanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.
    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    1. விளையும் பயிர்

    செல்லப் பிள்ளை

    குழந்தைப் பருவம்

    கல்வி கற்றல்

    விளையாட்டுக்களிலும், கலைகளிலும் ஆர்வம்

    தாயிடமிருந்து கற்றது

    தந்தையின் வழிகாட்டல்

    அகத்தேடல்

    இயற்கை உணர்வு அனுபவம்

    வாலிப நரேன்

    அன்றைய சமுதாயம்

    பிரம்ம சமாஜம்

    திருப்பு முனை

    2. சிஷ்யன் தயாராதல் – குரு தோன்றுதல்

    அறுதிப் பொருளைக் கண்டார்

    சனாதன மதத்தின் அன்றைய நிலை

    ஸ்ரீராமகிருஷ்ணரின் தேடல்

    முதல் சந்திப்பு: ‘கடவுளைப் பார்த்திருக்கிறேன்’

    இரண்டாவது சந்திப்பு : ஒரு அற்புத அனுபவம்

    மூன்றாம் சந்திப்பு: சிஷ்யனை ஏற்றுக் கொள்ளுதல்

    ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நம்பிக்கை

    கருத்து வேறுபாடுகள்

    அத்வைத மறுப்பு

    சிஷ்யனைத் தயார் செய்தார்

    தந்தையின் மரணம்

    காளியை ஏற்றுக்கொள்ளுதல்

    சங்கம் மலர்ந்தது

    வராகநகர் மடம்

    3. இந்தியாவில் சுற்றுப்பயணம்

    காசியில் சுவாமிஜி

    ராதை அனுபவங்கள்

    முதல் சீடன்

    கர்மயோகம்

    இந்தியாவிற்கு வேண்டிய சீர்திருத்தங்கள்

    மேலைநாடுகளுக்கு முதல் அழைப்பு

    இமையமலையை நோக்கி ஒரு பயணம்

    சகோதரியின் மரணம்

    வினோத மகான்களைச் சந்தித்தல்

    இந்தியர்களே இந்திய வரலாற்றை எழுத வேண்டும்

    சுயமுயற்சி

    விஞ்ஞான விவசாயம்

    நடன மாது கற்றுத் தந்த பாடம்

    போர்பந்தரில்

    திலகருடன்

    புதுமைத் துறவி

    புறவுலகம் நமது பிரதிபிம்பம்

    கொள்கைவெறி பற்றிய சுவாமிஜியின் கதை

    4. தென்னிந்தியாவில்

    கேரளத்தில்

    உண்மையான தேச பக்தி : சுவாமிஜியின் வார்த்தைகளில்

    கன்னியாகுமரி பயணம்

    மன்னர்களின் நிலை

    மக்களின் நிலை

    சென்னையில்

    ஐதராபாத் செல்லுதல்

    5. உலக அரங்கில்

    அமெரிக்காவின் நிலை

    கிறிஸ்தவ மதத்தின் நிலை

    சர்வமத சபை கூடியது ஏன்?

    சிகாகோவில் சுவாமிஜி

    ரமாபாய் வட்டங்கள்

    சுவாமிஜி பற்றி மிசஸ் ரைட்டின் குறிப்புகள்

    சிகாகோவின் கலை கழகக் கட்டிடம்

    மேடை அமைப்பு

    பிரதிநிதிகள் வருகை

    சுவாமிஜியின் தோற்றம்

    முதல் நாள் நிகழ்ச்சிகள்

    ‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே’

    6. சிகாகோவில் சுவாமிஜியின் சொற்பொழிவு

    மேலை நாடுகளுக்கு சுவாமிஜியின் சில அற்புதச் செய்திகள்

    மனிதனைப் பற்றிய புதிய கண்ணோட்டம்

    இந்து மதத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம்

    சமய சமரசம்

    விஞ்ஞானம் – மதம் இரண்டிற்குமிடையில் சமரசம்

    செயல்முறை உணர்வே மதம்

    மதம் இந்தியாவின் அவசரத் தேவையில்லை

    இந்து மதத்தின் நிறைவே புத்தமதம்

    நிறைவுநாள் சொற்பொழிவு

    இந்து மதத்தின் காவலர்

    சர்வமத மகாசபையில் சுவாமிஜியின் பங்களிப்பு

    அமெரிக்கப் பணிகள்

    அமெரிக்கப் பணியின் இரண்டாம் கட்டம்

    சீடர்களை உருவாக்குதல்

    அமெரிக்க அறிஞர்களுடன் சந்திப்பு

    மரணமிலா நிலை

    ராக்பெல்லர்

    மகனாக, சகோதரனாக

    சுவாமிஜி சந்தித்த எதிர்ப்புகள்

    இங்கிலாந்தில் சுவாமிஜியின் பணிகள்

    சுவாமிஜியின் நூல்கள்

    இரண்டாம் முறையாக இங்கிலாந்துப் பயணம்

    ஐரோப்பாவில் சுவாமிஜி

    7. தாயகம் அழைக்கிறது

    கடிதங்கள் மூலம் இந்தியாவை எழுப்புதல்

    ஸ்ரீ ராமகிருஷ்ண வழிபாடு ஏன்?

    பிரம்மவாதின் பத்திரிகை

    தாய் நாட்டை நோக்கி

    திரும்பவும் தமிழகத்தில்

    கல்கத்தாவில்

    குருதேவரின் பாதையிலிருந்து விலகுகிறாரா?

    தாயின் மடியில்

    சுவாமிஜியின் உடல்நலம் குன்றுதல்

    சேவை என்னும் தாரக மந்திரம்

    ராமகிருஷ்ண மிஷன்

    சங்க ஜனனி

    அல்மோரா

    நீலாம்பர் மடம்

    மீண்டும் வட இந்தியாவில்

    மூன்று இழப்புகள்

    அமர்நாத் யாத்திரை

    காளியை சரண் அடைந்தார்

    பெண்கல்வி

    பேலூர் மடம்

    ராமகிருஷ்ண துறவியர் பரம்பரை

    ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில்

    8. மேலைநாடுகள் – இரண்டாம் பயணம்

    தமிழ் மொழிபெயர்ப்பு – ஞான திரட்டு

    இரு விருப்பங்கள்

    அளசிங்கரின் மேல் சுவாமிஜியின் அன்பு

    சுவாமிஜியின் துயரங்கள்

    அமெரிக்காவில் சுவாமிஜியின் பணிகள்

    சுவாமிஜியைப் பற்றிய நாடகம்

    சொற்பொழிவுகள்

    மீட் சகோதரிகள்

    தியான நிலையில் சுவாமிஜியின் தோற்றம்

    சொற்பொழிவில் வெடிகுண்டு

    சூறாவளி துறவி

    நிதிநிலைமை

    ராமகிருஷ்ண மடத்தின் சின்னம்

    மேலைநாட்டுப் பணிகள்

    அமெரிக்காவில்

    இங்கிலாந்தில்

    மேலைநாட்டு சீடர்கள்

    ஜோசையா ஜான் குட்வின்

    ஹேல் குடும்பம்

    மிஸ் ஜோசபைன் மெக்லவுட்

    மிசஸ் சாரா புல்

    சிஸ்டர் கிறிஸ்டைன்

    மிஸ் சாரா எலன் வால்டோ

    சேவியர் தம்பதிகள்

    9. எழுச்சி மந்திரம்

    மாயாவதிப் பயணம்

    மாணவர்களுக்கு

    இயக்க ரீதியாக பேலூர் மடம்

    கிழக்கு வங்காளம், அசாம் பயணம்

    மேலைநாட்டுப் பணியும், இந்தியப்பணியும்

    சுவாமிஜியின் எழுச்சி மந்திரம்

    சுவாமிஜியின் தேசபக்தி

    சுதந்திரப் போராட்டத்தில் சுவாமிஜியின் பங்கு

    மனிதர்களை உருவாக்கும் கல்வி

    மதம்

    ஏழைகள் முன்னேற வேண்டும்

    பொதுவாழ்க்கைக்கு முடிவு

    தியானத்தின் சிறப்பு

    தூய்மை என்பது தெய்வீகத்திற்கு முதல் படி

    துர்கா பூஜை

    ஜப்பான் நாட்டிற்கு வருமாறு அழைப்பு

    10. தன்னிகரற்ற குரு

    சுவாமி விவேகானந்தர்

    அத்தியாயம் ஒன்று : விளையும் பயிர்

    ‘கண்ணபிரான் கீதை உபதேசம் புரிந்து சகலவித மனுஷ்ய சம்சயங்களையும் அறுத்து வேத ஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பின்பு, ஹிந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் தெளிவாக சர்வ ஜனங்களுக்கும் புலப்படும்படி வெளியிட்டுரைத்த ஞானி விவேகானந்தரே ஆவாரென்று தோன்றுகிறது’ – பாரதியார்

    நல்ல கல்வி, ஆரோக்கியமான உடல், வளமான வாழ்க்கைத்தரம் இவற்றை குழந்தைகளுக்கு அளித்தால் அவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று உறுதியாக நம்பிய விசுவநாத தத்தருக்கும், ஆழ்ந்த அறிவும், மதி நுட்பமும் படைத்த புவனேசுவரி தேவிக்கும், 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 6 மணி, 33 நிமிடம் 33 வினாடியில் மகர சங்கராந்தி தினத்தன்று நரேன் என்னும் நரேந்திரநாத் பிறந்தார். காசி வீரேசுவர பெருமானின் அருளால் பிறந்ததால் தாயார் அவருக்கு வீரேசுவரன் என்ற பெயரிட்டார். செல்லப் பெயர் ‘பிலே’.

    விசுவநாதர்-புவனேசுவரி தம்பதியருக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தை வெகு நாட்கள் இப்பூவுலகில் இருக்கவில்லை. தொடர்ந்து நான்கு பெண் குழந்தைகள். அதனால் தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று சோமவார விரதம் இருந்து, காசி வீரகேசுவர ஸ்வாமிக்கு திங்கட்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் செய்து வந்தார் புவனேசுவரி. அவரது இந்தத் தவத்தின் பலனாகப் பிறந்தவரே நரேன்.

    செல்லப் பிள்ளை

    பல நாட்கள் தவம் செய்து பெற்ற பிள்ளையாதலால் பெற்றோருக்குச் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். தனது அழகாலும், துறுதுறுப்பாலும், துடுக்குத்தனத்தாலும் எல்லோரையும் கவர்ந்தான் குழந்தை நரேன். ‘சிவபெருமானே பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டேன். அவரோ தன் பூதகணங்களில் ஒன்றை அனுப்பி வைத்துவிட்டார்’ என்று புவனேசுவரி தேவி அலுத்துக்கொள்ளும் அளவிற்கு எப்போதும் பரபரப்பும், படபடப்புமாக இருப்பான். அவனைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமான காரியம்

    குழந்தைப் பருவம்

    ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு தாய் பாலுடன் நல்ல பண்புகளையும், நல்ல லட்சியங்களையும் ஊட்டவேண்டும். புவனேசுவரி தேவியும் இந்தியக் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களையும் கதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் நல்ல பண்புகளையும், நல்ல லட்சியங்களையும் நரேனுக்குச் சொல்லிக் கொடுத்தார். தனது பாட்டியிடமிருந்தும் பல்வேறு பாகவதக் கதைகளை கேட்டபடி வளர்ந்தான் நரேன்.

    ‘வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் நான் என் தாய்க்குக் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்கிறார் சுவாமிஜி பின்னாட்களில்.

    அந்தநாட்களில் தெருப்பாடகர்கள் என்று ஒரு பிரிவினர் வாழ்ந்துவந்தனர். தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக பிச்சை எடுத்தாலும், வரலாற்று உண்மைகளையும், வீரக் கதைகளையும் பாடல்களாகப் பாடி வருவார்கள். இந்தப் பாடல்கள் சிறுவர் சிறுமியருக்கும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்தன. பல வேடங்களில் வரும் இவர்களைக் கூப்பிட்டு நரேனுக்காகவே பாடச் சொல்வார் புவனேசுவரி. வீட்டிலும் தினமும் பிற்பகலில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் வாசிப்பார்கள். இந்த நிகழ்வுகளின் போதெல்லாம் நரேன் ஆடாது அசங்காது உட்கார்ந்திருப்பான். அது மட்டுமல்ல; தான் கேட்ட கதைகளை அலுக்காமல் சலிக்காமல் தன் தம்பி தங்கையருக்கு கூறி ஆனந்திப்பான். நரேனுக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டு எரியும் விளக்கின் முன்னே கைகளை வைத்துக்கொண்டு விதவிதமான உருவங்களை சுவரில் நிழல் பிம்பங்களாக விழ வைப்பது.

    கல்வி கற்றல்:

    ஆறாம் வயதில் முதன்முதலாக ஒரு திண்ணைப் பள்ளிக்கு அனுப்பினார்கள். புதிய வேஷ்டியை கட்டிக்கொண்டு, எழுதுவதற்கான மெல்லிய மூங்கில் பேனா நீண்ட கயிற்றில் இடுப்பில் தொங்க, உட்காருவதற்கான சிறிய பாய் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு, வெகு கம்பீரமாக பள்ளிக்குச் சென்றான் நரேன். ஓரிருநாட்கள் தான். பிறகு நரேனுக்கும், வீட்டிலுள்ள மற்ற சிறுவர்களுக்குமாக ஒரு ஆசிரியரை வீட்டிற்கே வருமாறு செய்தார் நரேனின் தந்தை.

    நரேனின் ஞாபக சக்தி ஆசிரியர்களை வியக்க வைத்தது. ஒருமுறை கேட்டால் அப்படியே கிரகித்துக் கொள்வான். இவனது புத்திக்கூர்மை, நினைவாற்றல் இவைகளைக் கண்ட உறவினர் ஒருவர் அவனுக்கு, சம்ஸ்க்ருத இலக்கணம், துதிபாடல்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார். நரேன் கற்கும் விதமே அலாதி. இரவு வேளைகளில் தூங்குவதற்காகப் படுத்திருப்பான். அப்போது இந்த உறவினர் அவன் அருகில் அமர்ந்து சம்ஸ்க்ருத அகராதி ‘அமரகோசம்’ படிப்பார். அப்படியே அது அவன் நெஞ்சில் படிந்துவிடும். நரேனுக்கு சம்ஸ்க்ருத மொழியில் தணியாத ஆர்வம் ஏற்பட இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியது.

    நரேனுக்கு எட்டு வயதாகும்போது மெட்ரோபாலிடன் பள்ளியில் சேர்த்தனர். ஈசுவர சந்திர வித்யாசாகரால் நடத்தப்பட்டு வந்த அந்தப் பிரபலமான பள்ளியிலேதான் நரேனின் குடும்பத்தினர் பலரும் படித்து வந்தனர்.

    ஆங்கில எழுத்துக்களையும், ஆரம்பப் பாடங்களையும் தாயே அவனுக்குக் கற்பித்தார். ஆனாலும் ஆரம்பத்தில் ஆங்கிலக் கல்வி அவனைக் கவரவில்லை. தாய்மொழி இருக்கும்போது ஏன் அந்நியமொழியை கற்க வேண்டும் என்ற நரேன், சிறிது காலத்திற்குப் பின் ஆர்வத்துடன் அந்த மொழியை கற்க ஆரம்பித்தான். பின்னாட்களில் இந்த மொழியில் பேசி உலக மக்களைக் கவர வேண்டும் என்றிருந்ததே!

    விளையாட்டுக்களிலும், கலைகளிலும் ஆர்வம்

    ஓட்டம், கபடி, கண்ணாமூச்சி, உயரம் தாண்டுதல் குத்து சண்டை போன்ற விளையாட்டுக்களிலும் தீவிரமான ஆர்வம் இருந்தது நரேனுக்கு. சிலம்பாட்ட வித்தையை முகமதிய நிபுணர்களிடம் கற்று அதிலும் வல்லவன் ஆக இருந்தான். குழந்தையாய் இருந்தபோது விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடிய நரேன் வளர வளர தானாகவே விஞ்ஞானபூர்வமான கருவிகளை செய்து பார்க்க ஆர்வம் கொண்டான்.

    சிறுவயதிலேயே தன் நண்பர்களுடன் நாடகக்குழு ஒன்றை அமைத்து பல நாடகங்களை அரங்கேற்றினான். தாத்தாவிற்கு இது பிடிக்காமல் போகவே நாடகக்குழுவைக் கலைத்துவிட்டு உடற்பயிற்சிக் குழு ஒன்றை ஆரம்பித்தான். உறவுக்கார சிறுவன் ஒருவனின் கை உடைந்து போகவே இந்தக்குழுவும் காணாமல் போயிற்று. நவகோபால் மித்ரர் என்கிறவரின் உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபட்டான்.

    எத்தனை புத்தகங்கள் படித்தாலும் ஒரு குழந்தை தன் பெற்றோரிடம் கற்கும் கல்வியே அவனது வாழ்க்கையை வளப்படுத்தும். நரேனும் தன் பெற்றோரிடமிருந்து வாழ்க்கையின் அடிப்படை பாடங்களை கற்றான்

    தாயிடமிருந்து கற்றது

    ‘எப்போதும் தூயவனாக இரு. உன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதுடன், பிறரது சுயமரியாதையையும் மதிக்கக் கற்றுக்கொள். சமநிலை தவறாதவனாகவும், எந்த சூழ்நிலையிலும் உன் சமநிலை குலையாமலும் பார்த்துக்கொள். மென்மையானவனாக, அதேசமயம் தேவைப்பட்டால் உன் இதயத்தை இரும்பாக மாற்றிக் கொள்ளவும் தயங்காதே. உன் செயல்கள் நியாயமாக இருக்குமானால் நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நியாயமானதை செய்ய தயங்காதே.’ தாயின் இந்த வார்த்தைகள் பல இக்கட்டான சமயங்களில் நரேனுக்கு சரியான முடிவு எடுக்க வழி காட்டியிருக்கின்றன. நல்லொழுக்கம், விடாமுயற்சி, இறை நம்பிக்கை போன்றவற்றை தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டான், நரேன்.

    தந்தையின் வழிகாட்டல்

    குழந்தைகளுக்கு பணம் காசு சேர்த்து வைப்பதைவிட, வாழ்க்கையை எதிர்கொள்ள தெரிந்தவர்களாக அவர்களை வளர்க்க வேண்டும் என்ற கொள்கையை உடைய நரேனின் தந்தையும் அவனிடத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தந்தை அதிகமாக செலவழிப்பதைக் கண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1