Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal
Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal
Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal
Ebook193 pages1 hour

Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

This book is a collection of speeches by world leaders like John Abraham Lincoln, Swami Vivekanandha and many more.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109701250
Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal

Read more from Umapathi K

Related to Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal

Related ebooks

Related categories

Reviews for Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sindhikka Thoondum Ulaga Thalaivargalin Uraikal - Umapathi K

    http://www.pustaka.co.in

    சிந்திக்கத் தூண்டும்

    உலகத்தலைவர்களின் உரைகள்

    Sindhikka Thoondum

    Ulagathalaivargalin Uraigal

    Author:

    கே. உமாபதி

    K. Umapathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/k-umapathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிந்திக்கத் தூண்டும் உலகத்தலைவர்களின் உரைகள்

    கே. உமாபதி

    பொருளடக்கம்

    1.சாக்ரடீஸ்

    2.பேட்ரிக் ஹென்ட்ரி

    3 ஆபிரகாம் லிங்கன்

    4. ஜான் எஃப். கென்னடி

    5. சர்வின்ஸ்டன் சர்ச்சில்

    6. ரொனால்ட் ரீகன்

    7. மார்டின் லூதர் கிங்

    8. மகாத்மா காந்தி

    9 சுவாமி விவேகானந்தர்

    10. ஜோசப் ஸ்டாலின்

    1.சாக்ரடீஸ்

    கிரேக்க நாட்டைச் சேர்ந்த தத்துவ ஞானி சாக்ரடீஸ் கி.மு. 470-ம் ஆண்டு பிறந்தவர். மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். சோப்ரானிஸ்கஸ் என்ற கற்கள் பாலீஷ் செய்யும் வர்த்தகரின் மகனாகப் பிறந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இவரது தாயார் பெயர் பாயெனெரெட். இவர் ஒரு மருத்துவச்சி ஆவார். இந்த தகவல்கள் எல்லாமே சாக்ரடீசின் சீடர்களான பிளேட்டோ மற்றும் எக்ஸ்னோப்ஹான் ஆகியோரின் எழுத்துக்கள் மூலம் தெரியவருகின்றன. இதுதவிர கிரேக்க அறிஞர்களான எரிக் ஹேவ்லாக் மற்றும் வால்டர் ஓன்ஞ்ச் ஆகியோரின் படைப்புகளிலும் சாக்ரடீஸ் பற்றிய தகவல்கள் தெரியவருகின்றன. சாக்ரடீஸ் தன்னை விட இளையவரான எக்சான்திப்பி என்பவரை மணந்தார். சாக்ரடீசுக்கும் இவருக்கும் லாம்ரோசெல்ஸ், சோப்ரானிஸ்கஸ், மெனக்ஸ்ஏனஸ் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். சாக்ரடீஸ் இறக்கும் போது லாம்ரோசெல்ஸ் இளைஞராக இருந்தார். மற்ற இருவரும் குழந்தைகளாக இருந்தனர். கிரேக்க மரபுப்படி தாத்தாவின் பெயரை பேரனுக்கும் சூட்டும் மரபுப் படி சாக்ரடீசின் தந்தை சோப்ரானிஸ்கஸ் பெயர் சாக்ரடீசின் மகன்களில் ஒருவருக்கு வைக்கப்பட்டது. இதே நடைமுறை நம் ஊரிலும் இருக்கிறது.

    சாக்ரடீஸ் பெரும்பாலும் எந்த ஒரு வேலைக்கும் செல்லவில்லை. தனது நண்பர் சாய்ரெபோன் என்பவருடன் இணைந்து தத்துவப்பள்ளி ஒன்றை நடத்தி வந்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில் தனது தந்தையின் தொழிலையும் கற்றுத் தேர்ந்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இன்னொரு புறம் சாக்ரடீஸ் தனது சீடர் பிளாட்டோவிடம், தான் ஏதெனிய ராணுவத்தில் பணியாற்றியதாக கூறியிருக்கிறார்.

    சாக்ரடீசிய முறை அல்லது எலன்க்கோசு (மீறீமீஸீநீலீஷீs) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீஸ், அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.

    ஏதென்ஸ் அரசரின் கீழ் செயல்பட்ட அரசு மற்றும் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஸ்பார்டா கூட்டணிக்கு இடையே பெலபோனிசம் போரின் போது சாக்ரடீஸ் வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் ஏதெனியர்கள் ஸ்பார்டா கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டனர். எனவே அவமானகரமான தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்று ஏதெனியர்கள் கருதினர். ஜனநாயகப்பூர்வமான ஆட்சியானது வலுமிக்கதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏதெனியர்களுக்கு இருந்தது. அப்போது ஜனநாயக ஆட்சியின் விமர்சகர்களில் ஒருவராக சாக்ரடீஸ் திகழ்ந்தார். இத்தகைய அரசியல் சூழலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஸ்பார்டா கூட்டணியை சாக்ரடீஸ் புகழ்ந்தார். கிரேக்கத்தின் இத்தகைய அரசியல் சூழலும் அவரை மரணத்தை நோக்கி இட்டுச் சென்றது. எனினும், அவரது சமூக மற்றும் ஒழுக்க விமர்சகர் என்ற அவரது நிலைதான் சாக்ரடீஸ் குற்றவாளி என தீர்மானிப்பதற்கான ஆதாரங்களாகத் திகழ்ந்ததாக துல்லியமான வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏதெனியர்கள் நல்லொழுக்க வாதிகளாக திகழ வேண்டும் என்ற அவரது விருப்பமே அவர் மரணதண்டனை பெறுவதற்கான மூல காரணமாக அமைந்தது.

    சாக்ரடீஸ் மீது குற்றஞ்சாட்டியவர்கள்;

    1. அனிட்டஸ்; ஏதெனியப் பிரமுகரான அன்திமியான் என்பவரது மகன். சாக்ரடீசும், ஏதென்ஸ் நகரத்து மெனோ என்பவரும் ஒருநாள் தங்கள் தத்துவ ஈடுபாடுகள் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது நல்லொழுக்கம் குறித்தும் அவர்கள் தங்களுக்குள் விவாதித்து வந்தனர். அப்போது அங்கு எதிர்பாராத விதமாக நுழைந்த அனிட்டஸ் நல்லொழுக்கத்தை ஒருபோதும் கற்றுத்தர முடியாது என்று கூறினான். அப்போது சாக்ரடீஸ், பெரும்பாலான ஏதெனிய நல்லொழுக்கவாதிகள் தங்களை விட ஒழுக்கத்தில் குறைந்த மகன்களையே பெற்றெடுத்திருக்கின்றனர் என்று ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார். அப்போது அனிட்டஸ் சாக்ரடீசை எச்சரித்தான். ஒரு நாள் அதற்கான தண்டனையைப் பெற வேண்டும் என்று கூறினான். சாக்ரடீஸ் இளைஞர்களை முறைகேடு செய்வதாக இவன் குற்றஞ்சாட்டினான். சாக்ரடீசின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற கைவினைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சார்பாக இவன் சாக்ரடீசை குற்றஞ்சாட்டினான்.

    2. மெலட்டஸ்; சாக்ரடீஸ் மீது குற்றஞ்சாட்டியவர்களில் மிகவும் இளம் வயதினன் இவன் மட்டுமே. சாக்ரடீஸ் நாத்திகவாதி என்றும், கடவுள் தன்மை கொண்டவர்களை நம்புவதாகவும் குற்றஞ்சாட்டினார். சாக்ரடீசால் பாதிக்கப்பட்ட கவிஞர்கள் சார்பாக மெலட்டஸ் குற்றஞ்சாட்டினான்.

    3.லிகான்; சொல்லாட்சி மிக்க உரையாற்றுபவர். சொல்லாட்சியர்களின் சார்பாக சாக்ரடீஸ் மீது குற்றஞ்சாட்டினார். இவரோடு சேர்ந்து டெப்ரா நெய்ல்ஸ் என்பவரும் சாக்ரடீஸ் மீது குற்றஞ்சாட்டியவர்களில் ஒருவராவார்.

    ஏதன்ஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்த நீதிமன்றத்தில் இந்த மூன்று குற்றச் சாட்டாளர்களும், சாக்ரடீசுக்கு எதிராக முதல் மூன்று மணிநேரம் ஏற்கனவே தாங்கள் தயாரித்து வைத்திருந்த குற்றசாட்டுகளைப் படித்தனர்.

    சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது நீதிமன்ற உரையாடல்களை அவரது சீடர்களில் ஒருவரான பிளாட்டோ எழுதி வைத்திருந்தார் என வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுதான் த அப்பாலஜி(மன்னிப்பு) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது. அதன் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த உரையாடல். சாக்ரடீஸ் வழக்கை எத்தனை நீதிபதிகள் விசாரித்தனர் என்ற தகவல்கள் பிளாட்டோவின் புத்தகத்தில் இல்லை. எனினும் பின்னர் வந்த வரலாற்றுக்குறிப்புகள்படி அவரது வழக்கை 220 முதல் 281 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான நீதிபதிகள் சாக்ரடீசுக்கு மரணதண்டனை வழங்குவது எனத் தீர்ப்பளித்தனர். எத்தனை நீதிபதிகள் என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை.

    நகரத்தின் சிந்தனாவாதி சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில், சாகும் தருணத்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாககாமல் தனது நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததாக ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது நிக்ஷீமீணீ‘t ஞிவீணீறீஷீரீuமீs’ புத்தகத்தில் உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார்.

    விஷம் அருந்தும் சற்று நேரத்துக்கு முன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதால், தன் கால்களை தேய்த்துவிட்டுக் கொண்டு சற்று சவுகரியமாக மேடையில் அமர்ந்து கொண்டு ‘ஆன்மாவுககு மரணமுண்டா, மறு பிறவி இருககிறதா?’ என்று தத்துவ விசாரணைகளில் தனது சீடர்களுடன் ஈடுபட்டாராம். இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனர்.

    சாகும் முன்பு கூட சீரிய பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம் நாம் பார்கக முடிகிறது. அவரின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, ‘என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைககுள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது! வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுக்கு கோபம் ஏதும் இல்லையே?’ என்று குரல் உடைந்து அழ,

    எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ், "எனக்கு விஷம் தயாராக இருக்கிறதா? உடனே அதனைக் கொடுங்கள் என்று கேட்டார்''

    விஷத்தை அருந்திய சாக்ரடீஸ்,’அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார். பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடந்தார். அப்போது அவரது சீடர்கள் ஓவென்று கதற,’ 'என்ன இது? மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகு' என்றார். அவரது மரணத்தை சாதாரணமாக சொல்லாமல் சிந்தனையாளர் சாக்ரடீஸ் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவரது சீடர்கள் அறிவித்தனர். சாக்ரடீஸ் மரணம் அடைந்த தினத்தன்று கிரேக்க தலைநகர் ஏதென்ஸ் நகரம் களையிழந்து காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    நீதிமன்றத்தில் சாக்ரடீஸ்

    'ஏதன்ஸ் நகர மக்களே என் மீது குற்றம் சாட்டியவர்கள் பேசியதை இப்போது நீங்கள் கேட்டீர்கள். அதில் இருந்து நீங்கள் என்ன உணர்ந்து கொண்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பேசியதைப் பற்றி நான் இங்கு சொல்லப்போவதில்லை. அவர்களின் பேச்சு சொல்வன்மையுடன் கூடியதாக இருந்தது. அவர்களின் அலங்காரமிக்க பேச்சுக்கள் காரணமாக நான் யார் என்பதை நீங்கள் மறந்திருப்பீர்கள். இது எனக்குத் தெரியும். இது போன்ற சொல் வன்மையுள்ள பேச்சுக்கள் அவர்களின் சொத்தாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உண்மையான வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும். பெரும்பாலும் தவறானவர்களுக்கு மத்தியில் ஒரு சிலர் என்னைக் கவர்ந்திருக்கின்றனர். உங்களின் மேலான பாதுகாவலர்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கின்றனர்.

    உண்மையின் நிர்பந்தம்

    அவர்கள் இப்படிச் சொன்னதற்காக வெட்கப்பட வேண்டும். ஆகையால், நான் என் உதடுகளை திறந்து என்னுடைய பற்றாக்குறையை வெளிப்படுத்தும்போது விரைவில் அவர்கள் உறுதியாக கண்டறியப்படுவர். அவர்கள் நிச்சயமாக இங்கு தோன்றி மேலும் அதே வார்த்தைகளை சொல்வன்மையின் நிர்பந்தத்தின் விளைவாகச் சொல்லாதவரை அவர்கள் உண்மையின் நிர்பந்தமாகக் கருதப்படுவர். அப்போது சொல்வன்மை உள்ளவன் என்று நானும் நிஜமாக ஏற்றுக்கொள்வேன். ஆனால் அவர்களில் இருந்து எவ்வளவு தூரத்துக்கு வித்தியாசப்படுகிறேன் என்றால், அவர்கள் அபூர்வமாக ஒரு வார்த்தை சொல்லக்கூடும் அல்லது ஒரு வார்த்தைக்கு மேலாக உண்மை சொல்வது அரிதாகும். அவர்கள் தங்கள் உரையை வெளிப்படுத்திய முறையில் அந்த வார்த்தைகளில் மற்றும் சொற்றொடரில் உள்ள அலங்காரம் போன்று என் சொற்பொழிவு இல்லை. எனினும் என்னிடம் இருந்து நீங்கள் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். நிஜமாக இல்லை எனினும் அந்த நேரத்திய நிகழ்வில் அந்த வார்த்தைகள் மற்றும் வாதங்களை உபயோகித்தேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் அந்த நேரத்தில் நான் உங்கள் முன்நான் தோன்றியிருக்கக்கூடாது. எனக்கு நிச்சயமாக அது சரியாகப் படுகிறது.

    ஏதென்ஸ் நகர மக்களே இளைஞருக்கு உரிய நாவன்மையை இந்த கதாப்பாத்திரத்தில் என்னிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம். ஒன்று மட்டும் எனக்காகச் செய்யுங்கள் என்று உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய தரப்பின் நியாயத்தை அதே வார்த்தைகளை உபயோகித்து சொல்லப்படுவதை நீங்கள் கேட்க்கும் பட்சத்தில், அந்த வார்த்தைகளை உபயோகிக்கும் பழக்கம் உள்ளவனாவேன். இதில் பெரும்பாலானவற்றை அகோரா கூட்டத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம், தவிர பணமாற்றாளர்கள் அல்லது வேறு எங்காவது கேட்டிருக்கலாம். இது

    Enjoying the preview?
    Page 1 of 1