Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajapudhana Ilavarasi
Rajapudhana Ilavarasi
Rajapudhana Ilavarasi
Ebook258 pages2 hours

Rajapudhana Ilavarasi

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Gauthama Neelambaran was born on 14th-June 1948, and left this world on 14'th September 2015 is an Eminent Journalist & Novelist rendering unprecedented service for more than forty years in Tamil literary world. His contributions to Tamil Literature starts with his first work “Buddharin Punnagai” - a Tamil short story. This story was published in “Swadesamitran” – Tamil daily newspaper during the year 1970. He had penned over 200 short stories on history and social genre, poems, articles and 65 Historical Novels and Dramas. Many of his historical plays has been broadcasted in “All India Radio” and telecasted in Chennai Doordharsan TV Channel. He had also penned down over 10 Spiritual books on Hindu Religion & Philosophy. He had worked in various famous & Prestigious Tamil Journals like Deepam, Idhayam Pesugiradhu, Gnana Bhoomi, Mayan, Maniyan Matha Ithazh, Ananda Vikatan, Kungumam, Muththaram and Kunguma Chimizh for over 40 years and retired from his journalist job in October 2014. Some of his significant works in Historical Novels includes, Sethu Banthanam, Chozha Vengai, Raja Ganganam(Ezhavendhan Sangili), Mohini Kottai, Vijaya Nandhini, Masidoniya Maaveeran, Nila Mutram, Kalinga Mohini, Nayana Dheepangal, Maruthanayagam, Sanakiyarin Kadhal, Vetri Thilagam, Vengai Vijayam, Kochadayan, Suthanthira Vengai ( History of King Poolithevan, a foremost freedom fighter in South India). Driven by his interest toward “Gautama Buddha” he had penned down the detailed Life History of Buddha which was published in “Mutharam Tamil Weekly” as weekly episodes for nearly 3 ½ years. This work was later compiled & published as a book “BuddharPiran”. He was survived by his wife, K Akila and his son Vijaya Sankar.K who works in an IT organization.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580102001013
Rajapudhana Ilavarasi

Read more from Gauthama Neelambaran

Related to Rajapudhana Ilavarasi

Related ebooks

Related categories

Reviews for Rajapudhana Ilavarasi

Rating: 3.4 out of 5 stars
3.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajapudhana Ilavarasi - Gauthama Neelambaran

    http://www.pustaka.co.in

    ரஜபுதன இளவரசி

    Rajapudhana Ilavarasi

    Author:

    கௌதம நீலாம்பரன்

    Gowthama Neelambaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    முன்னுரை

    என்ன காரணம் என்று தெரியவில்லை. என்ன எழுதுவது என்று அடியும் புரியவில்லை. நுனியும் தெரியவில்லை. என்றாலும், இதை ஆராய வேண்டிய தேவை ஏற்படவில்லை. பேசுவதற்கு விஷயங்கள் இருக்கின்றன. பகிர்வதற்கு அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சிலாகிப்பதற்கு ரத்தமும் சதையுமாக திரு. கௌதம நீலாம்பரனே இருக்கிறார். எனவே, சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல் கூச்சமாக இருந்தாலும், இந்த அறிமுகம் அல்லது முன்னுரையை தொடங்கிவிட வேண்டியதுதான்.

    ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசிப்பதற்கு முன்பே ‘நயன தீபங்கள்’ நாவல், ‘உள்ளேன் அய்யா’ என்று கண் முன்னால் அமர்ந்து விட்டது. ‘குண்டூசி’ இதழில் வெளியான அந்த நாவலை எதேச்சையாக நூலகத்தில் பார்த்தேன். படிக்கத் தொடங்கினேன். திரு. கௌதம நீலம்பரனின் பெயர் அறிமுகமானது அந்த விநாடியில்தான். மேலோட்டமாக படிக்க ஆரம்பித்தவன், அதன் பிறகு முழுமையாக அதனுள் மூழ்கிப் போனேன். அந்தளவுக்கு அந்த நாவலின் கதாநாயகன் என்னைக் கவர்ந்து விட்டான். காதலைவிட, தனது இலட்சியத்திற்கு அவன் முன்னுரிமை வழங்கியது என் புருவத்தை உயர்த்தியது. தாய்நாட்டுக்காக தன்னையே அவன் ஒப்படைத்தபோது இனம் புரியாத ஓர் எழுச்சி அலை அலையாக மனதில் எழுந்தது. இதுதான் திரு. கௌதம நீலம்பரனின் பலம்.

    இந்த உணர்வுகளை அவரது எந்தப் படைப்பை எடுத்து வாசிக்கும் போதும் அனுபவிக்கலாம். சரித்திரப் புதினங்கள் ஆகட்டும் அல்லது சமூக நாவல்கள் ஆகட்டும்... அனைத்திலுமே ஒரு தெளிவு இருக்கும். வாழ்க்கை குறித்த ஓர் அறம் ஊடுருவியிருக்கும். அனைத்து கதை மாந்தர்களுமே தங்கள் இலட்சியத்தை நோக்கிய பயணத்தை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்காக குறுக்கு வழியை நாடாமல் நேர் வழியிலேயே அனைத்து இடையூறுகளையும் சந்தித்து முன்னேறுவார்கள். ஆன்மீகவாதிகளாக இருப்பார்கள். ஆனால், மூட நம்பிக்கையை எதிர்ப்பார்கள்.

    நேரில் பரிச்சயம் ஆன பிறகுதான் இவை அனைத்துமே திரு. கௌதம நீலம்பரனின் குணநலன்கள் என்று புரிந்தது. தன்னைத்தான், தனது குறிக்கோளைத்தான், தனது ஒட்டுமொத்த வாழ்க்கையைத்தான் ஒவ்வொரு கதாபாத்திரம் மீதும் பரவ விடுகிறார். அதன்மூலம் வாசகர்களின் எண்ணங்களைப் பட்டை தீட்டுகிறார்.

    பத்திரிகையாளராகத்தான் தன் வாழ்க்கையை திரு. கௌதம நீலம்பரன் தொடங்கினார். ஆனால், எழுத்தாளாராகத்தான் கொண்டாடப்படுகிறார். ஒரு பத்திரிகையாளனாக அவர் புரிந்த சாதனைகள் மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு விட்டன. இதற்கு ஒரு சோறு பதமாக ‘ஞான பூமி’ ஆன்மீக இதழில், மடாதிபதிகளுடன் இவர் நிகழ்த்திய நேர்காணல்கள், கேட்ட கேள்விகள், கரையான்களால் அரிக்கப்பட்டு, தொகுக்கப்படாமலேயே மறைந்து விட்டதைக் குறிப்பிடலாம்.

    ‘தீபம்’, ‘இதயம் பேசுகிறது’, ‘ஆனந்த விகடன்’, ‘குங்குமம்’, ‘குங்குமச் சிமிழ்’ என திரு. கௌதம நீலம்பரன் பணிபுரிந்த பத்திரிகைகள் ஏராளம். ஆனால், ‘இதயம் பேசுகிறது’ இதழில் எழுதிய ‘நிலா முற்றம்’ மற்றும் ‘குங்குமச் சிமிழில்’ இரு சரித்திர குறு நாவல்கள் ஆகியவை மட்டுமே தான் பணிபுரிந்த இதழில், அதுவும் வேலை பார்த்த நாடகளில் இவர் எழுதியவை. மற்ற படைப்புகள் அனைத்துமே அவை வெளியான காலக்கட்டத்தில், அந்தந்த பத்திரிகைகளில் இவர் பணிபுரியாதபோது எழுதியவைதான்.

    இதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், வாய்ப்புகள் இருந்தும், நிர்வாகம் தடை செய்யாதபோதும் தனது படைப்பை, தான் பணிபுரிந்த பத்திரிகைகளில் இவர் எழுதியதில்லை. பதிலாக, மற்ற எழுத்தாளர்களுக்குத்தான் மேடை அமைத்துக் கொடுத்தார். அவர்களது படைப்புகள் அச்சில் வருவதற்காகத்தான் நிர்வாகத்துடன் போராடினார்.

    இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் இவர் வலுவாக இல்லை. கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது என்று சொல்வதுகூட உண்மையாக இருக்காது. ஆயினும் துணையாசிரியராக – ஆசிரியராகத்தான் பணிபுரிந்த பத்திரிகைகளில் தனது தொடர்கதை வெளியாக வேண்டும் என விரும்பியதுமில்லை. அதன் மூலம் கூடுதலாக சன்மானம் கிடைக்கும் என கணக்குப் போட்டதுமில்லை.

    ஒரே மகனின் கல்லூரிப் படிப்புக்காக தனது எழுத்தைத்தான் பணயம் வைத்தார். பெரியப் பெரிய அரசியல்வாதிகளிடம் பழக்கம் இருந்தும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் அறிமுகம் இருந்தும், கையேந்தி நின்றதும் இல்லை. நன்கொடை வசூலித்ததும் இல்லை. இவரது மகன் கல்லூரியில் படித்த கால கட்டம் ஒரு வகையில் தமிழ் புனைவுலகின் பொற்காலம். எத்தனை சரித்திர நாவல்களையும், சிறுவர் பார்க்கும் போது மலைப்பே ஏற்படுகிறது. அனைத்துமே தரத்தில் சோடை போகாதது என்பதுதான் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்.

    சின்னப் பத்திரிகை – பெரிய பத்திரிகை என்று எப்படி பார்க்காமல் எழுதுகிறாரோ, அப்படித்தான் அதிகளவு சரித்திர சிறுகதைகளை தமிழில் எழுதியவர் என்ற முத்திரையையும் பதித்திருந்தார். பாளையக்காரர்களை அகழ்ந்து எடுத்து. எழுத்தில் கொண்டு வந்தவர் சாட்சாத் திரு. கௌதம நீலம்பரன்தான். மருதநாயகம் என்னும் கான்சாகிப்பை முதலில் சிறுகதை வழியே இன்றைய கதாபாத்திரத்தை பலரும் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தார்கள். அது குறித்து திரு. கௌதம நீலம்பரன் அலட்டிக் கொள்வேயில்லை.

    அதுபோலவே இவரது ‘மன்னன் மாடத்து நிலவு’ குறுநாவலை அடியொற்றி மோகம் சிந்தும் மலராக இன்னொரு எழுத்தாளர். நூறு அத்தியாயங்களுக்கு மேல் ஒரு தொடர்கதை எழுதியபோதும் கண்டுகொள்ளவில்லை. பொன்விழா கொண்டாடிய இதழ் ஒன்று. சரித்திர நாவல் போட்டி நடத்தியபோது, கலந்து கொண்டார். சிபாரிசின் காரணமாக பரிசு இன்னொருவருக்குச் சென்றது. அவரை ஓடிச் சென்று பாராட்டினாரே தவிர, புறம் கூறிப் பேசவேயில்லை.

    இதுதான் திரு. கௌதம நீலம்பரனின் வாழ்வு. இதுதான் இவரது எழுத்தின் மகத்துவம். ஜூலை கறுப்பு தினத்துக்குப் பின், ஈழம் கொழுந்துவிட்டு எரிந்தபோது, இவரது எழுத்தில் உதித்த கதையை திரைப்படமாக எடுத்து, அதில் நடிக்க அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முன்வந்தார். ஆனால் சில காரணங்களால், அந்த முயற்சி ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. அதற்காகத் துவண்டுபோய் இவர் அமர்ந்துவிடவும் இல்லை. சினிமா கனவு தகர்ந்ததே என போதையை நாடியதும் இல்லை. இவரளவுக்கு பெரிய பெரிய பத்திரிகைகளில் வேலை கிடைத்தவர்களுமில்லை. சின்னச்சின்ன சமரசங்கள்கூட செய்து கொள்ளாமல் அந்த வேலையைத் தூக்கி எறிந்தவர்களுமில்லை.

    தனது அத்தனை உணர்வுகளையும் எழுத்தில்தான் பிழிந்து கொடுத்தார்; கொடுத்தும் வருகிறார். ஒட்டுமொத்த பத்திரிகையுலக வாழ்வில் இவர் அடைந்தது சொற்பம்தான். ஆனால், அந்த சொற்பமும் தலை நிமிர்ந்து இவர் வாழ்வதற்கான அடையாளம் என்பதுதான் கோபுரத்தின் கலசமாக அனைவரையும் திரும்பிப் பார்க்கவும், வணங்கவும் வைக்கிறது.

    இப்படித்தான் ஒரு பத்திரிகையாளன் வாழ வேண்டும் என்பதைத் தன் வாழ்க்கையின் வழியே உணர்த்துகிறார். அதனாலேயே இப்படித்தான் ஒரு சரித்திர எழுத்தாளரின் எழுத்து இருக்க வேண்டும் என்ற பதிவு, அகராதியில் ஏறி அமர்ந்திருக்கிறது.

    இயற்கைக்கும், மனிதனுக்குமான முரண்பாடுதான் பிரபஞ்சத்தின் இரகசியம். அதனாலேயே உலகின் உயர்ந்த மலையான இமயத்தில் ஈசன் குடிகொண்டிருக்கும் கைலாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

    மனதில் உறுதி, விடா முயற்சி, துணிவு, இலக்கை நோக்கி மட்டுமே 24 மணி நேரமும் சிந்தித்தல், வாழ்க்கையே பணயம் வைத்தல், ஒவ்வொரு நொடியும் கரணம் தப்பித்தால் மரணம் என்ற போராட்டம்... இவையனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வதைதால் தான் எவரெஸ்ட் சிகரத்தை மட்டுமல்ல, சொர்க்கத்தைவிட மேலானதாக கருதப்பட்டும் கைலாசத்தையும் அடைய முடியும்.

    அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த கைலாசம், இமயமலையில் மட்டுமல்ல; சென்னை வேளச்சேரி, சாய்சரோவரிலும் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

    வணங்குகிறேன் திரு. கௌதம நீலம்பரன்...

    தோழமையுடன்,

    -கே. என். சிவராமன்

    என்னுரை

    ‘ரஜபுதன இளவரசி’ என்னும் இந்த நவீனத்தை ராஜஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணியில் வைத்து, முற்றிலும் கற்பனையாகப் புனைந்துள்ளேன். நூறு சதவீதக் கற்பனை என்றாலும், தமிழகத்தின் அபூர்வ சிற்பிகளின் அசாத்தியமான கைத் திறனுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சம்பவங்களை அமைத்துள்ளேன். ‘சிற்பியின் மகன்’ என்னும் தலைப்புகூட இதற்கு மிகப் பொருத்தமானது என்பது என் எண்ணம்.

    கோச்சடையான், கோச்செங்கணான், நரசிம்ம பல்லவன், இலங்கை மன்னன் சங்கிலி, நெடுஞ்சடைய பராந்தக பாண்டியன் என எத்தனையோ நிஜ அரசர்களின் கதைகளை நான் நிறையவே எழுதியிருப்பினும், இந்தக் கற்பனைப் புதின நாயகன் ஜிட்டுவும், நாயகி நந்தினியும் என் மனப் பேழையில் அபூர்வ இரத்தினங்களாக ஒளிர்கின்றனர். ‘பிரேமபிங்கலம்’ என இதில் ஒரு காவியம் பேசப்படுகிறது. உண்மையில் இந்த நவீனமே ஓர் ஒப்பற்ற காதல் காவியம் தான் என்பது என் எண்ணம். வாசிக்கும் நீங்களும் இதை நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள் என்பது என் நம்பிக்கை.

    இதற்கு நட்பின் பெருமை பேசும் அரிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கும் இனிய எழுத்தாள நண்பர் கே.என்.சிவராமன் அவர்களுக்கும், நூலை வெளியிடும் அன்புச் சகோதரர் எஸ். ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கும் என் இதய நன்றிகள்.

    வாசிங்கள், தமிழை நேசியுங்கள்

    1

    ராஜபுதனம் என்றாலே வீரம் விளைகின்ற பூமி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ராஜஸ்தான் மாநிலம் இருக்கிறதல்லவா? இதைத்தான் அந்தக் காலத்தில் ராஜபுதனம் என்றும் அழைத்தனர். ரஜபுத்திர வீரர்களின் சரித்திரம் மிகவும் அற்புதமானது.

    மாபெரும் வீரர்களெல்லாம் தோன்றியிருக்கின்றனர் இந்த ராஜ புதனத்தில்.

    ராஜஸ்தான் என்றவுடனே உங்களுக்கு கண்ணுக்கு எட்டிய மட்டும் வெறும் மணலாக விரிந்து கிடக்கும் பாலைவனமும் - அதில் வரிசை வரிசையாகச் செல்லும் ஒட்டகங்களும் நினைவில் எழும், இல்லையா?

    இந்த ராஜபுதனத்தில் ஹராவளி மலைத்தொடர் என்று ஒரு நெடிய மலைக்குன்றுகளின் வரிசை இருக்கிறது. இதை ‘ஆரவல்லிக் குன்றுகள்’ என்றும் கூறுவர். இந்த மலையடிவாரத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமம், ராம்பூர் என்பது அதன் பெயர். அங்கேதான் ஜிட்டு வசித்து வந்தான்.

    ஜிட்டு யார் என்கிறீர்களா –

    அவன்தான் இந்தக் கதையின் நாயகன். ஜிட்டு பெரிய வீரன். இல்லையில்லை, பெரிய வீரனாக வரவேண்டுமென்ற ஆவலுடன் இருப்பவன். சாதிக்க வேண்டும். வெற்றிச் சிகரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும். எப்பாடுபட்டாவது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்திட வேண்டும்... இது அவன் கனவு.

    ஆசைப்படுவது மனித இயல்பு. யாருக்கு வேண்டுமானாலும் ஆசைகள் வரலாம். ஆனால் அதை அடைய முயற்சி வேண்டும் - கடின உழைப்பு வேண்டும்... இல்லையா?

    அதனால்தான் ஜிட்டு வாள்வீச்சு, சிலம்பம், புரவியேற்றம் எல்லாம் பழகியிருந்தான். எங்கே இளைஞர்கள் விளையாட்டுச் சண்டைகளின் போட்டிகள் நிகழ்த்தினாலும் அங்கே நீங்கள் ஜிட்டுவைப் பார்க்கலாம். மல்யுத்தம், குத்துச்சண்டைகள் அடிக்கடி சந்தைவெளிகளில் நடத்துவார்கள். ராம்பூரைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலிருந்தெல்லாம் வீர இளைஞர்கள் வந்து அதில் கலந்து கொள்வார்கள். அங்கேயெல்லாம் இறுதியில் வெற்றி பெறுகிறவன் ஜிட்டுவாகத்தான் இருப்பான்.

    இத்தனைக்கும் ஜிட்டுவின் சொந்தத் தொழில் என்ன தெரியுமா?

    முடிதிருத்தும் வேலைதான். அதைப் பலரும் ஏளனம் செய்வார்கள். ஆனால், அவன் சிறிதும் கவலைப்பட்டதில்லை. செய்யும் தொழில் எதுவானால் என்ன? அதற்கு உரிய முக்கியத்துவம் எப்படி இல்லாமல் போய்விடும்?

    எந்தத் தொழிலைச் செய்பவனும் அதைச் சிறப்பாகவும்,ஈடுபாட்டுடனும் செய்தால் முன்னுக்கு வந்துவிடலாம். கிடைத்த நேரத்தில் வேறு கலைகளையும் பயின்று, அவற்றில் திறமை வளர்த்தும் முன்னேற்றம் அடைந்துவிடலாம். மனமிருந்தால் மலையைக்கூட புரட்டிவிடலாம். வறுமையைத் தானா விரட்ட முடியாது?

    இதுதான் ஜிட்டுவின் கொள்கை. அவனுடைய கனவு பெரிய வீரனாக வருவதல்லவா? அதற்காக ராஜா மான்சிங், தோடர்மால், ரதன் சந்தாவத் சலும்பரா, ஜயசிம்மன், ரஞ்சித்சிங், துர்க்காதாஸ் போன்ற ராஜபுதனத்தின் எண்ணற்ற சரித்திர வீரபுருஷர்களின் கதைகளை ஆர்வமாகக் கேட்டறிந்தான். அந்த ஊரிலுள்ள வயதான பெரியவர்களுக்கு எப்போதுமே ஜிட்டுவைக் கண்டால் கொள்ளைப் பிரியம். இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டு கதை கதையாகச் சொல்வார்கள்.

    அவர்களுக்கும் பொழுது போகும். ஜிட்டுவுக்கும் ஆர்வம் வளரும்.

    ‘சரி, ஜிட்டுவின் தந்தை இதையெல்லாம் ஒன்றும் கண்டுகொள்ள மாட்டாரா... மகன் இஷ்டம்போல் சுற்றித் திரிய விடுவாரா?’ என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள்?

    வீர சிவாஜியின் அன்னை எப்படித் தன் மகனுக்குச் சிறு வயதிலேயே அர்ஜூணன், பீமன் போன்ற இதிகாச காலத்து வீரபுருஷர்களைப் பற்றிச் சொல்லி, வீர உணர்வை வளர்த்தாளோ அப்படி, ஜிட்டுவின் தந்தை கிருஷ்ண குப்தாவும் தன் மகனை மனத்தினுள்ளே வீரக் கனவுகளை விதைத்து வைத்த முதல் மனிதராகத் திகழ்ந்தார்.

    கிருஷ்ண குப்தாவுக்கு தன் மகனை யாராவது குறை சொன்னால் பிடிக்கவே பிடிக்காது. சண்டைக்குப் போய்விடுவார். ‘என் மகனை என்னவென்று நினைத்தாய்? கடவுள் அருள் மட்டும் இருந்தால், அவன் பெரிய ராஜகுமாரனாகவே ஆனாலும் ஆகிவிடுவான். வாளைப் பிடித்து எதிரிகளோடு போரிட்டு, வெற்றிகளைக் குவிக்க வேண்டிய அவன், என்ன காரணத்தாலோ என் வீட்டில் வளர்ந்து யார் யாருக்கோ முடிவெட்டிக் கொண்டிருக்கிறான்’ என்று அங்கலாய்க்கவும் செய்வார்.

    ஜிட்டுவின் முழுப்பெயர் என்ன தெரியுமா உங்களுக்கு? இந்திரஜித். அதைச் சுருக்கி ‘ஜித்’ என்று எல்லோரும் குறிப்பிட்டனர். கிருஷ்ணகுப்தாவுக்கு ‘ஜித்’ என்று கூப்பிட வரவில்லை. அவர் வாயில் ஜிட்டு என்றே வந்தது. அந்தப் பெயரும் அழகாக இருந்ததால், இப்போது எல்லோருமே அவனை ஜிட்டு என்றுதான் அழைக்கிறார்கள்.

    உங்களுக்கும் பிடித்திருக்கிறதல்லவா? அப்படியானால் நாமும் இந்திரஜித்தை ‘ஜிட்டு’ என்றே குறிப்பிடுவோம்.

    அதோ ஜிட்டு, தன்னுடைய செல்வப் புரவி சுவேதாவைத் தட்டிக் கொடுத்தபடி வந்து நிற்கிறான் பாருங்கள். அந்தப் புரவிகூட அவனுக்கு ஒரு வீர விளையாட்டில் பரிசாகக் கிடைத்ததுதான்.

    அப்பா... அப்பா... என்ற அழைத்தபடியே வந்து நின்ற அவனை அம்மா முக்தாபாய்தான் வரவேற்றாள். படபடப்பான வார்த்தைகளோடு...

    ஏம்பா ஜிட்டு, உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? இன்னிக்குக் காலைல தேசாய்க்கு முடிவெட்டப் போகணும்னு உங்கிட்ட அப்பா சொல்லியிருந்தாராமே... நீ பாட்டுக்கு புரவி பயிற்சிக்கு அவருகிட்ட சொல்லாமகூட மலையடிவாரம் வரை போயிட்டு இப்படி மௌளமா வந்து நிக்கறியே, இது உனக்கே நல்லா இருக்கா...?

    ஜிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டு, தலையில் தட்டிக் கொண்டான். பிறகு,

    பயிற்சி ஆர்வத்துல மறந்துட்டேம்மா. இதோ இப்போதே கிளம்பறேன். தேசாய் வீட்டுக்கு... என்று திரும்பவும் புரவி மீது தாவியேறினான் ஜிட்டு.

    இருப்பா, இம்மாம் நேரம் வேலை காத்திருக்குமா...? அங்கேதான் உங்க அப்பா அப்பவே புறப்பட்டுப் போயிட்டாரே.

    தெரியும்... அப்பா யாருக்காகவும் காத்திராமல் தன் வேலையைச் செய்யப் போவது வழக்கம்தானே? தேசாய் வீடு நம் ஊரின் மேற்குக் கோடியில்,சற்று தொலைவில் அல்லவா இருக்கிறது... நான் போய் அவரை என் புரவியில் ஏற்றி அழைத்து வருகிறேன். நீ அதற்குள் காலை உணைவைத் தயார் செய்து வை... என்று சொல்லிவிட்டு, ஜிட்டு புரவியின் அடிவயிற்றில் கால்களால் தட்டினான். அது சிட்டாய் பறந்தது.

    தேசாய் - ஊரில் பெரிய மனிதர். அரண்மனையில் நிதி நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர். அங்கே அவர் தலைமைக் கணக்காரகவே, நிதியமைச்சராகவோ இருப்பதாக எல்லாரும் பேசிக் கொள்வர்.

    படாடோபம், முரட்டுத் தோற்றம், திமிர் பேச்சு... இதுதான் தேசாய்.

    ஜிட்டு போய் தேசாயின்

    Enjoying the preview?
    Page 1 of 1