Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aal Kadathal
Aal Kadathal
Aal Kadathal
Ebook203 pages1 hour

Aal Kadathal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580103700502
Aal Kadathal

Read more from Sivan

Related to Aal Kadathal

Related ebooks

Reviews for Aal Kadathal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aal Kadathal - Sivan

    http://www.pustaka.co.in

    ஆள் கடத்தல்…

    Aal Kadathal…

    Author:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    ஓர் அறிமுகம்

    நாவலாசிரியர், கட்டுரையாளர், கவிஞர் - என்ற மூன்று நிலைகளிலும் ஆங்கில இலக்கியத்தில் புகழ்பெற்ற ராபர்ட் லூயி ஸ்டீவன்சனுக்கு ஸ்காட்லாந்தின் எழுத்தாளர்கள் வரிசையில் எப்போதும் முதலிடம் உண்டு!இன்ஜினீயராக விருப்பமில்லாததால் சட்டம் பயின்றார். பின்பு வழக்குரைஞராக விருப்பமில்லாததால் எழுத்தாளராக மாறியவர் ஸ்டீவன்சன். ‘டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடு’ என்ற விசித்திரமான கதை மூலம் உலக இலக்கியத்தில் சாகாவரம் பெற்றவர். அந்தக் கதையில் இடம் பெற்ற ஜெக்கிலும் ஹைடும் ஆங்கிலத்தில் ஒரு பாணியாகவே பரிணாமம் பெற்றுள்ளனர். ஒரு மனிதனுக்குள் நன்மை-தீமைகளின் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமிக்ஞைகளாகி விட்டிருக்கின்றன அவை.

    வாழ்நாள் முழுவதும் நோயுடன் நிரந்தரமாகப் போராடிக் கொண்டிருப்பதே ஸ்டீவன்சனின் இயல்பாக இருந்தது. எனவே, உடல் நலனுக்கு உகந்த பருவ காலத்தைத் தேடி பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் அமைதிக்கடலான பசிபிக் கடலிலுள்ள தீவுகளுக்கும் அவர் அடிக்கடி பயணம் செய்ய நேர்ந்தது. இப்படிப்பட்ட துயரங்களுக்கும் சாகசப் பயணயங்களுக்கும் நடுவே நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயண நூல்கள், கவிதைகள் போன்றவற்றை எழுத அவர் நேரம் எடுத்துக் கொண்டார். இரண்டு குழந்தைகளின் தாயான ஓர் அமெரிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்தது உட்பட, ஸ்டீவன்சனின் வாழ்க்கை முழுவதுமே சாகசச் சம்பவங்கள் நிறைந்ததுதான். நாற்பத்துநான்காவது வயதில் அவர் இந்த உலகிலிருந்து விடை பெறவும் செய்தார்.

    ‘ஆர். எல். எஸ். ’, என்ற மூன்று எழுத்துகளால் மிகுந்த மரியாதையுடன் புகழப்படும் ராபர்ட் லூயி ஸ்டீவன்சனின் உண்மையான பெயர், ‘ராபர்ட் லெவில் பால்ஃபர் ஸ்டீவன்சன்’ என்பது. தனது பதினெட்டாவது வயதில் பால்ஃபர் என்ற குடும்பப் பெயரை அவர் ஒதுக்கி வைத்தார். லெவிஸ் என்பதை லூயி என்றும் மாற்றிக் கொண்டார். 1850-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13- ஆம் தேதி இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் பிறந்தவர் ஸ்டீவன்சன். சிவில் இன்ஜினீயராகப் பணி புரிந்த தாமஸ் ஸ்டீவன்சன்-மார்கரெட் இசபெல்லா பால்ஃபர் தம்பதியின் ஒரே மகன்தான் ராபர்ட்.

    குழந்தைப் பருவத்திலேயே அவரை நோய் பீடித்தது. இந்த உடல் நலக் கோளாறு அவரது பள்ளிப் படிப்புக்கு ஊறு விளைவித்தது. இருப்பினும் எடின்பர்க் அகாதமி மற்றும் வெவ்வேறு கல்விக் கூடங்களிலுமாகக் கல்வி கற்று 17-வது வயதில் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ராபர்ட், ஒரு இன்ஜினீயராக வேண்டுமென்று அவர் அப்பா விரும்பினார். ஆனால், மகனுக்கு அதில் ஆர்வமில்லை. கடைசியில் ஒரு மாற்று ஏற்பாடாக அவர் சட்டப் படிப்பு படிக்க ஒப்புக்கொண்டார். அதில் தேர்ந்து, பட்டம் பெறவும் செய்தார். எனினும் ஒரு வழக்குரைஞராவதற்கு உரிய தகுதி பெற்றும் அவர் வழக்குரைஞராகத் தொழில் புரியவில்லை!

    ஆறாவது வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் காட்டியவர் ராபர்ட். ஸ்காட்லாந்தின் சமூகம் மற்றும் மத ரீதியிலான சுதந்திரத்தை நிலைநாட்ட விரும்பிய ‘கவனண்டர்ஸ்’ இயக்கத்தில் ஓர் இளைஞனுக்கே உரிய உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பங்கு கொண்ட ஸ்டீவன்சன் இளைஞனான முதல் கட்டத்திலேயே தனது முதல் நூலை வெளியிட்டார். நூலின் பெயர், ‘பென்ட்லாண்டு ரைடிங்’ என்பது. அவர் கல்லூரி மாணவராக இருந்தபோதே வழக்கமான மத ஆசார அனுஷ்டானங்களை எதிர்த்தார். பூர்ஷ்வாத்தனமான மரியாதைகளின் பின்னணியிலுள்ள குரூரங்களையும் மோசடிகளையும் கடுமையாக விமர்சித்தார். இவை, அவர் தன் அப்பாவுடன் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்படக் காரணமாயின.

    கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே, சுவாசம் தொடர்பான நோய் அவரைப் பீடித்தது. எனவே, அதிலிருந்து உடல் நலம் பெறுவதற்காக அவர் அடிக்கடி பிரான்ஸ் நாட்டில் உள்ள சுகவாச மையங்களை நாட நேர்ந்தது. அவர் இப்படி மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில் ‘இன்லேண்ட் வோயேஜ்’, ‘டிராவல்ஸ் வித் எ டாங்கி’ என்ற இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டார். 1875-80 காலகட்டத்தில் ஸ்டீவன்சன் வெளியிட்ட ஆழ்ந்த சிந்தனைக்கு உரிய கட்டுரைகள்தான் முதன் முதலாக ஓர் எழுத்தாளர் என்ற நிலையில் மக்களின் கவனத்தை அவர் பக்கமாகத் திருப்பியது எனலாம்.

    1876- ஆம் ஆண்டில் பிரான்ஸில் ஆஸ்பான் என்ற அமெரிக்கப் பெண்மணியைச் சந்தித்தார். இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகு கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர் அவர். ஸ்டீவன்சனும், அந்தப் பெண்மணியும் காதலில் கட்டுண்டனர். திருமணமான ஒரு பெண்ணுடன் தன் மகன் காதல் வயப்பட்டிருப்பது, ஸ்டீவன்சனின் பெற்றோருக்குக் கோபமூட்டியது. 1878 –ல் ஆஸ்பான் என்ற ஃபானிகலிஇஃபோர்னியாவுக்குத் திரும்பிச் சென்றாள். அத்துடன் அந்த உறவு முறிந்து விட்டதாக ஸ்டீவன்சனின் பெற்றோர் நினைத்தனர். ஆனால், விரைவிலேயே அப்பாவுடன் சண்டையிட்டு ஸ்டீவன்சனும் அமெரிக்காவுக்குக் கிளம்பினார். உடல் நலமில்லாமல், கையில் பணமும் இல்லாமல் அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் மிகவும் துயரத்துக்கு உரியதாக இருந்தது. அவர் மரணத்தைக் கண் முன்பாகக் கண்ட சந்தர்ப்பங்களும், சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்த நாட்களும் அந்தப் பயணத்தில் உண்டு.

    ‘அமெச்சூர் எமிகிரண்ட்’, எ கிராஸ் தி பிளெய்ன் டே’ என்ற இரண்டு நூல்களில் அந்தப் பயண அனுபவங்களை ஸ்டீவன்சன் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

    அந்த சாகசப் பயணம் மற்றும் துயரங்களின் முடிவில் அவர் ஃபானி ஆஸ்பானை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது தவறை உணர்ந்த ஸ்டீவன்சனின் தந்தை, மகனுக்குத் தேவையான பணத்தை அனுப்பிக் கொடுத்ததுடன் உடனே திரும்பி வருமாறு தந்தியடிக்கவும் செய்தார்.

    எனவே, ஸ்டீவன்சன் தன் மனைவியுடன் ஸ்காட்லாந்துக்கு வந்து சேர்ந்தார். ஆனால், விரைவிலேயே உடல் நலத்தின் பொருட்டு அவர்கள் சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டனர். அங்குதான் அவர் ‘டிரஷர் ஐலண்ட்’(புதையல் தீவு) நாவலை எழுதினார். தேர்ந்த கட்டமைப்புடன், அருமையான கதாபாத்திரங்களும், நுட்பமான சூழ்நிலை விவரிப்பும் கொண்ட ஒரு சாகசக் கதை டிரஷர் ஐலண்ட். விரைவிலேயே அவர் ஸ்காட்லாந்துக்குத் திரும்பி வந்தாலும் அவ்வப்போது தெற்கு பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உடல்நலத்தின் பொருட்டுப் பயணப்பட நேர்ந்தது. அப்போதுதான் ‘கிட்நாப்டு’ மற்றும் ‘டாக்டர் ஜெக்கிளும் மிஸ்டர் ஹைடும்’ ஆகிய நாவல்களுடன் நிறையக் கவிதைகளும் ஸ்டீவன்சனிடமிருந்து வெளிப்பட்டன.

    ஆரோக்கியத்துக்கு உரிய சூழ்நிலைகளைத் தேடி 1887-ஆம் ஆண்டில் ஸ்டீவன்சன் தன் மனைவி மற்றும் தாயாருடன் அமெரிக்கா சென்றார். அங்கு நியூயார்க் நகரில் சில காலம் தங்கியிருந்தார். அப்போது ஏராளமான கட்டுரைகளுடன் ‘மாஸ்டர் ஆஃப் பலன்டிரே’ என்ற நாவலையும் எழுதினார்.

    1888 முதல் 1890 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பசிபிக் கடல் பகுதிகளில் உள்ள தீவுகளில் ஸ்டீவன்சன் தங்கியிருந்தார். 1890 - ஆம் ஆண்டு சமோவாவை அடைந்த ஸ்டீவன்சன், வைலிமா என்ற பகுதியில் நிரந்தரமாகத் தங்கினார். அங்கு ஸ்டீவன்சனுடன் அவர் தாயாரும், ஃபானி ஆஸ்பானும், அவரின் இரண்டு குழந்தைகளும் வசித்தனர்.

    பசிபிக் கடலால் சூழப்பட்ட அந்தத் தீவின் ஆரோக்கியமான பருவ காலமும் அந்தத் தீவுவாசிகளின் அபரிமிதமான அன்பும் தாயார் மற்றும் மனைவியின் உடனிருப்பும் ஸ்டீவன்சனுக்குப் புத்துணர்ச்சி அளித்தன. பசிபிக் கடலின் தெற்குப் பகுதி அனுபவங்களையும், ஆங்காங்கு வசிக்கும் தீவுவாசிகளைக் குறித்தும் பல நூல்களை இந்தக் காலகட்டத்தில் ஸ்டீவன்சன் எழுதினார். கட்ரியானா, எப்டைடு, ஆகிய நாவல்களுடன் வியர் ஆஃப் ஹெர்மிஸ்டன் என்ற நாவலையும் எழுதினார். கடைசியாகக் குறிப்பிட்ட நாவலை முடிக்கு முன்னரே 1894-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதியன்று லூயிஸ் ஸ்டீவன்சன் மரணமடைந்தார். அவர் மரணம் அடையும் நாளில் கூட ஒரு கதையைக் கூறி எழுதச் செய்தார். தனது சொந்த வீட்டின் வராந்தாவில் அமர்ந்து உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்டீவன்சனை மரணம் வெற்றி கண்டது.

    தான் இறந்துவிட்டால், சமோவாவின் வயியா மலை உச்சியில் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டீவன்சன் தன் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்தார். டிசம்பர் மாதம் 4-ஆம் தேதியன்று திடகாத்திரசாலிகளான ஆறு சமோவாவாசிகள் அவர் உடலை அந்த மலை உச்சிக்கு எடுத்துச் சென்று அவரது இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றினர்.

    ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனது புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று கிட்நாப்டு. ஸ்காட்லாந்தின் கடந்த கால வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஸ்டீவன்சன் , 18-ஆம் நூற்றாண்டின் ஸ்காட்லாந்து குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ளார். ஸ்காட்லாந்தின் மலைப் பகுதிகளில் சிறிது காலம் வசித்துமிருக்கிறார். ஸ்டீவன்சன் பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சில வரலாற்றுச் சம்வங்களின் பின்னணியில் கிட்நாப்டு நாவலை எழுதினார். அந்தக் கால கிராம வாழ்க்கையையும், அரசியல் புரட்சிகளையும் இதில் தெளிவாகக் காண முடியும். ஸ்காட்லாந்தின் இயற்கை அழகு இதில் தனித்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த நாவலின் பிந்தைய பகுதிதான் கட்ரியேனா நாவல். பிரின்ஸ் ஆட்டோ, த்ரோன் ஜானெட், தி மெரிமென், தி பீச் ஃபெயில்ஸ் போன்ற குறிப்பிடத் தக்க கதைகளையும் ஸ்டீவன்சன் இயற்றியிருக்கிறார்.

    கடிதம் எழுதுவதிலும் மிகுந்த புகழ் பெற்று விளங்கியவர் ஸ்டீவன்சன். அவர், தன் பல நண்பர்களுக்கும் எழுதியுள்ள கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை. அவற்றில் பெரும்பாலான கடிதங்கள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியாகியுள்ளன. அவர் மனைவி ஃபானி ஆஸ்பான், தனது டைரிக்குறிப்புகளின் உதவியுடன் தொகுத்து வெளியிட்ட ‘ஓவர் சமோவன் அட்வெஞ்சர்ஸ்’ ஸ்டீவன்சனின் இறுதிக் காலம் குறித்த தெளிவான தகவல்களைத் தருகிறது.

    ‘ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் தனது கடைசிக் காலத்தில் எழுதத் தொடங்கி, முழுமை பெறாமல் போன நாவலை முற்றிலுமாக எழுதி முடித்திருந்தால், அது ஸ்டீவன்சனின் மகத்தான நூலாக விளங்கியிருக்கும்!’ என்பது இலக்கிய விமர்சகர்களின் கருத்து.

    தோழமையுடன்

    சிவன்

    சென்னை-600 078

    தொலைபேசி: 24837681

    ஆள் கடத்தல்….

    -சிவன்

    1

    விடியல் வேளை. 1751-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒரு நாள். அன்றுதான் எனது சாகசம் மிக்க சுற்றுப் பயணத்தின் கதை ஆரம்பமானது. விடியற் காலையிலேயே நான் வீட்டைப் பூட்டிக் கொண்டு சாவியுடன் வெளியேறினேன்.

    அது என் அப்பாவின் வீடு. அங்கிருந்து நான் நிரந்தரமாக வெளியேறுகிறேன். அந்த வீட்டை விட்டுப் போவதில் எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் மற்றொரு வீடு என் மனத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அது, இதைவிடப் பெரிய வீடு. அதற்குச் சுற்றிலும் எஸ்டேட் இருந்தது.

    நான் உற்சாகத்துடன் நடந்தேன். சூரியன் அப்போதுதான் உதித்து மேல் நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது. மலையடிவாரம் முழுக்கப் பனி படர்ந்திருந்தது. நான் ஐசென்டைனிலிருந்த ஃபாதரின் (பாதிரியாரின்) வீட்டை அடைவதற்குள் பனியின் சிலந்தி வலைகள், சூரிய ஒளியில் உருகி மறைந்து விட்டிருந்தன.

    அங்கு ஃபாதர் காம்ப்பெல்

    Enjoying the preview?
    Page 1 of 1