Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ooz Nagarin Mayavi
Ooz Nagarin Mayavi
Ooz Nagarin Mayavi
Ebook241 pages1 hour

Ooz Nagarin Mayavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

P.B Subramaniyam alias Sivan was born on 22-06-1955. He did his education across various cities like Madurai, Senkai and Chennai. He started his career with
Peasum Padam Magazine followed by Gemini Cinema, Thinasari, Vetri Malai Magazines. He translated many English classic like Frankenstein, Alice in the wonder
world and etc., and Malayalam books written by various authors like Kottayam Pushpanath, Thakazhi Sivasankara Pillai etc., to Tamil. He has published more than 100 books
are published.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580103700509
Ooz Nagarin Mayavi

Read more from Sivan

Related to Ooz Nagarin Mayavi

Related ebooks

Reviews for Ooz Nagarin Mayavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ooz Nagarin Mayavi - Sivan

    http://www.pustaka.co.in

    ஓஸ் நகரின் மாயாவி

    Ooz Nagarin Mayavi

    Author:

    சிவன்

    Sivan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஓர் அறிமுகம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    ஓர் அறிமுகம்

    சிறுவர் இலக்கியத்தில் நித்தியமான ஆச்சரியம் ஏற்படுத்தும் ஒரு படைப்பு எல் ஃபிராங் பாமின் ‘தி ஒண்டர்ஃபுல் விஸாடு ஆஃப் ஓஸ்.’ ஒரு நூற்றாண்டுப் பழைமையுள்ள ஆச்சரியம். 1990-ம் ஆண்டில் வெளியான இந்தப் புத்தகம், அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை உலகம் முழுவதிலிருந்து இன்றுவரை உலகம் முழுவதிலுமுள்ள குழந்தைகளைக் கவர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் விருப்பமான ஒன்றும்கூட, இந்த நாவலின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ஃபிராங்பாம் ஏராளமான ஓஸ் நாவல்களை எழுதினார். ஓலைக் குறித்தும் ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நிறையத் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஓஸின் ஓவியங்களும் ஓஸ் தொடர்பான விளையாட்டுப் பொருள்களும், இசைத்தட்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் ட்விஸ்ட்டர் என்று அழைக்கப்படும் சுழல்காற்று ஒன்றில் சிக்கி, அதிசியமான ஓர் உலகத்தை அடையும் டோராத்தி என்ற சிறிய பெண் ஒருத்தியுடன் அங்கு அவளுக்கு நண்பர்களாகும் சோளக்கொல்லை பொம்மை, தகரமனிதன், பயந்தாங்குளி சிங்கம் ஆகியோர் இணைந்து படைக்கும் சாகசங்கள்தான் ஓஸ் நகரின் மாயாவி.

    அந்த விசித்திர உலகமும் அதில் இடம் பெற்றுள்ள விசித்திர மனிதர்களும், உயிரினங்களும், மஞ்சள் சாலையும் பச்சை நிற மரகத நகரமும், மந்திரவாதியான ஓஸும் குழந்தைகளை கற்பனை உலகத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவை.

    அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான லேமன் ஃபிராங் பாம் எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட பல்வேறு புத்தங்களில் மிகவும் புகழ் பெற்றது தி ஒண்டர் ஃபுல் விஸார்டு ஆஃப் ஓஸ்

    1856-ஆம் ஆண்டு ஃபிராங் பாம், நியூயார்க் நகரின் பிறந்தார். அவரின் குடும்பத்தினர் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். 1873-ல் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் ஷவேர்ல்டு| பத்திரிக்கையில் ஒரு நிருபராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு பத்திரிக்களிலும் வரா-மாத இதழ்களிலும் பணிபுரிந்த ஃபிராங் பாம், இறுதியாகத் தன் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்த எண்ணெய் வியாபராத்துக்கே திரும்பினார். அதில் அவர் பெரும் தோல்வியையும் நஷ்டத்தையுமே சந்தித்தார்.

    1897-ல் ‘மதர் கூஸ் புரோஸ்’ என்ற படைப்புடன் நாவல் உலகுக்கு அறிமுகமானார். இந்த நாவலின் இறுதியில் இடம் பெறும் ஒரு கதாபாத்திரம்தான், டோரத்தி என்கிற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தை. 1899-ல் வெளியான ‘ஃபாதர் கூஸ்: ஹிஸ் புக்’ மகத்தான வரவேற்பு பெற்றதால் ஃபிராங் பாம் முழுநேர எழுத்தாளரானார்.

    1900-ல் வெளியான ‘தி ஒண்டர்ஃபுல் விஸாடு ஆஃப் ஓஸ்’ ஃப்ராங் பாமுக்கு மிகுந்த புகழ் தேடித் தந்தது.

    தொடர்ந்து தி மார்வலஸ் லேண்ட் ஆஃப் ஓஸ் (1904), ஓஸ்மா ஆஃப் ஓஸ் (1907) டோராத்தி அண்ட் விஸார்டு ஆஃப் ஓஸ் (1908), தி ரோடு டு ஓஸ் (1909), தி எமாரால்டு சிட்டி ஆஃப் ஓஸ் (1910), தி பேட்ச் ஒர்க் கேர்ள் ஆஃப் ஓஸ் (1913), டிக் டாக் ஆஃப் ஓஸ் (1914), தி ஸ்கேர்குரோ ஆஃப் ஓஸ் (1915), தி லாஸ்ட் பிரின்சஸ் ஆஃப் ஓஸ் (1917), தி டின் உட்மேன் ஆஃப் ஓஸ் (1918), தி மேஜிக் ஆஃப் ஓஸ் (1919), தி கிளிண்டா ஆஃப் ஓஸ் (1920), போன்றவை ஓஸ் வரிசையில் அவர் எழுதிய புத்தகங்கள்.

    தி லாஃபிங் டிராகன் ஆஃப் ஓஸ் (1934)ஈ தி விசிட்டர் ஃபிரம் ஓஸ் (1960) ஆகிய இரண்டு புத்தங்களும் ஃபிராங் பாமின் மரணத்துக்குப் பின் வெளியிடப்பட்டன. இவை தவிர மேலும் பல புத்தகங்களையும் அவர் எழுதியிருக்கிறார்.

    லூயிஸ் எஃப் பாம், ர்ஷலர் ஸ்டாண்டன், ஃப்ளோயிட் அக்கர்ஸ், லாரா பான் கிராஃப்ட், ஜான் ஈஸ்ட் அவுஸ்குக், கேப்டன் ஹ்யூ, போன்றவை ஃபிராங்கின் பல்வேறு புனைபெயர்கள். இந்தப் பெயர்களிலும் அவர் நிறைய எழுதியிருக்கிறார்.

    தி ஒண்டர்ஃபுல் விஸாடு ஆஃப் ஓஸின் மொழிபெயர்ப்புதான் இந்த ஓஸ் நகரின் மாயாவி. இதன் மூல முன்னுரையிலிருந்து...

    கற்பனையும், நம்ப முடியாததும், யதார்த்தமற்றதுமான கதைகளின் மீது குழந்தைகள் கொண்டிருக்கும் அதிகமான ஈடுபட்டினால்தான் நாட்டுப்புறக் கதைகள், ஐதீகக் கதைகள், புராணம் போன்றவை நூற்றாண்டுகளாக அவர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு இடம் பிடித்திருக்கின்றன. கிரிம் கதைகள் ஆண்டர்சன் கதைகள், இறக்கையுள்ள தேவதைகள் போன்றவை குழந்தைகளின் மனதுக்கு வெறெந்தப் படைப்புகளையும்விட அதிகமான மகிழ்ச்சி அளித்திருக்கின்றன.

    கடந்த சில தலைமுறைகளை மகிழ்ச்சிப்படுத்திய மோகினி அல்லது ஆவிக் கதைகள் தற்போது குழந்தைகளின் நூலகத்தில் வரலாற்றுப் புத்தகங்களுடன் இடம் பிடித்திருக்கின்றன. ஒரே அச்சில் வார்த்து எடுக்கப்படுவது போன்ற பூதம், குள்ளன், ஆவி, தேவதை போன்ற கதாபாத்திரங்கள் பயத்துடன், திகைப்பையும் படைப்பும் ரத்தம் வடியும் சம்பவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அற்புதமான புதிய கதைகள் வெளிவர வேண்டிய காலம் இது. நவீன கல்வி முறை தார்மின அடிப்படையில் அமைந்துள்ளதால் எவ்வளவுதான் பொருத்தமற்ற சம்பவங்கள் இருந்தபோதிலும், இத்தகைய கதைகளில் கிடைக்கும் சுவாரஸ்த்தையே நவீன குழந்தைகள் தேடுகிறார்கள் அல்லது விரும்புகிறார்கள்.

    இந்த ஒரு லட்சியத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் இன்றைய குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மட்டுமே ‘ஓஸ் நகரின் மாயாவி’ யை எழுதியிருக்கிறேன். எல்லா விதமான மனத்துயரங்களையும் பயமேற்படுத்தும் கனவுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சுவாரஸ்மும், மகிழ்ச்சியும் மட்டுமே கொண்ட இந்த நாவல் ஒரு நவீன மோகினக் கதையாக விளங்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை.

    சிக்காக்கோ

    ஏப்ரல்-1900

    எல். ஃப்ராங் பாம்

    ஓஸ் திரைப்பட வரிசையில் மிகவும் புகழ் பெற்றது விக்டர் ஃபிளாமிங் இயக்கி 1939-ல் வெயியான ‘தி ஒண்டர் ஃபுல் விஸாடு ஆஃப் ஓஸ்.’ மிகவும் புகழ் பெற்றது. புதுமையான படமும் கூட சிட்னி லூமெட் இயக்கி 1978-ல் வெளியான படம் ‘தி விஸ்’ ஓஸ் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு இதுவரை பதினான்கு படங்கள் வெளியாகியுள்ளன.

    1919-ம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதியன்று ஃபிராங் பாம் மரணமடைந்தார். ஹாலிவுட் நகரில் ஓஸ்காட் என்ற பெயருள்ள சொந்த வீட்டிலேயே இறுதிவரை வாழ்ந்தார். அவருக்குப் பின் ஓஸை கதாபாத்திரமாக வைத்து வேறு சிலரும் கதைகள் எழுதினார். ஃபிராங் பாமின் பேரன் ரோஜன் பாமும் அவர்களில் ஒருவர்.

    குழந்தைகளிடம் பாராம்பரியத் தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஃபிராங்பாமின் லட்சியம். தற்காத்துக் கொள்ளுதல், தைரியம், நேர்மை, ஆத்மார்த்த ஈடுபாடு, திட சிந்தனை போன்ற இயல்புகளை வளர்க்கவும் மனிதர்களுக்குகிடையே அமைதியை நிலை நாட்டவும் ஓஸ் நாவல்களின் ஊடாக முயற்சி செய்திருக்கிறார் எல் ஃபிராங் பாம்.

    தோழமையுடன்

    சிவன்

    சென்னை-600 078

    தொலைபேசி: 2437681

    ஓஸ் நகரின் மாயாவி

    1

    விவசாயியான ஹென்றி மாமாவும் அவர் மனைவி எம் அத்தையும் ஒன்றாக அமெரிக்காவின் கான்சஸ் மாநிலத்திலுள்ள பிரயரி என்ற இடத்தில் புல்வெளிக்கு நடுவே சிறு வீடு ஒன்றைக் கட்டி வாழ்ந்து வந்தனர். அவர்களுடன் வசித்து வருபவள்தான் டோரோத்தி. அவர்களின் செல்ல மருமகள். வீடு கட்டுவதற்கான மரங்களை வெகு தொலைவிலிருந்து கொண்டு வர வேண்டி இருந்தாதால் மிகவும் சிறியதாக இருந்தது அவர்களது வீடு. மரத்தாலான நான்கு புறச் சுவர்கள் மரத்தாலான கீழ்ப்புறத்தளமும், மேற்கூரையும். மொத்தமே அவ்வளவுதான். ஆக மொத்தம் ஒரேயொரு அறை.

    அதற்குள் துருப்பிடித்த ஒரு சிறிய இரும்பு அடுப்பு. பாத்திரங்கள் வைப்பதற்கான ஓர் அலமாரி, ஓர் மேஜை, மூன்று அல்லது நான்கு நாற்காலிகள், படுக்கைகள். அறையின் ஒரு மூலையில் கிடக்கும் பெரிய படுக்கையில் தான் எம்.அத்தையும் ஹென்றி மாமாவும் படுத்துக் கொள்வார்கள். அந்த வீட்டுக்கு மேல் மச்சுப் பகுதியோ நிலவறையோ கிடையாது. அங்கிருந்த மற்றொரு பகுதி சுழற்காற்று வீசும்போது ஓடி ஒளித்து கொள்வதற்காகத் தரையில் உருவாக்கப்பட்டிருந்த பதுங்கு குழி. அதன் பெயரே ‘சுழற்காற்று நிலவறை’தான். அந்தப் பகுதியில் சுழல்காற்று திடுமென்று கிளம்பும். அப்படி வரும்போது எவ்வளவு பெரிய கட்டடத்தையும் அது இடித்துத் தரை மட்டமாக்கிவிடும். அதனால் சுழல்காற்று அடிக்கும்போது ஒளிந்து கொள்வதற்காக அந்தப் பதுங்கு குழிக்குள் இறங்குவதற்கு தரையில் பிடிபோட்ட ஒரு கதவும் சிறிய ஏணி ஒன்றும் இருந்தன.

    வீட்டின் வாசற்படியிலிருந்து வெளியே பார்த்த டோரோத்திக்கு நீண்டு பரந்து கிடக்கும் சாம்பல் நிறப் புற்பரப்பைத் தவிர வேறெதுவும் தட்டுப்படவில்லை. வேறொரு வீடோ, மரமோ அருகில் எங்கும் இல்லை. கடுமையான வெயிலால் செடிகள் வாடிக் கருகியிருந்தன. நிலப்பகுதியோ ஆங்காங்கே வெடித்துப் பிளந்து கிடந்தது. அங்கு வளர்ந்திருந்த புற்கள் கூட சாம்பல் நிறத்திலிருந்தன. எங்கு பார்த்தாலும் சாம்பல் நிறம் மட்டும்தான். முன்னொரு காலத்தில் பெயிண்ட் பூசப்பட்ட வீடு இது. வெயில், பெயிண்ட் பூசியதையெல்லாம் அழித்துவிட்டது. இப்போது மற்றவற்றைப் போல அந்த வீடும் வெளிறிப்போய்க் கிடந்தது.

    அங்கு வசிப்பதற்கு வந்தபோது எம் அத்தை இளம் பெண்ணாகவும், அழகியாகவும் இருந்தாள். சூரியனும் காற்றும் அவளையும் மாற்றிவிட்டிருந்தன. அவளின் பளபளப்பான கண்களுக்கு வந்தபோது இருந்த ஜொலிப்பு இப்போது இல்லை. சிவந்து உப்பியிருந்த கன்னங்களும், உதடுகளும் வாடிக் கருமைடயடைந்திருந்தன. மெலிந்து இளைத்துப் போயிருந்த அவள் இப்போதெல்லாம் சிரிப்பதே இல்லை.

    டோரோத்திக்கு அப்பா - அம்மா இல்லை. அவள் அங்கு வந்து சேர்ந்த பிறகு அவளின் சிரிப்புச் சத்தம் கேட்கும். போதெல்லாம் எம் அத்தை திடுக்கிட்டு அலறியபடி தன் கைகளை நெஞ்சோடு வைத்து இறுக்கிக் கொள்வார். டோரோத்தியின் சிரிப்பை பார்க்கும் போதெல்லாம், ‘எதைப் பார்த்து அவள் இப்படிச் சிரிக்கிறாளோ?’ என்று அத்தை ஆச்சரியப்படுவாள்.

    ஹென்றி மாமாவும் ஒருபோதும் சிரிப்பதே இல்லை. விடியவிடியக் கண் விழித்து வேலை செய்யும் அவருக்கு மகிழ்ச்சி என்பது எப்படியிருக்கும் என்பதே தெரியாது. நீண்ட தாடியிலிருந்து முரட்டுத்தனமான பூட்ஸ_கள் வரை மாமாவின் எல்லாப் பொருள்களும் நிறம் மங்கிப் போயிருந்தன. வலிமையான உடம்புடன் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் மாமா எப்போதாவது ஒருமுறைதான் பேசுவார்.

    டோட்டோதான் மற்றவர்களைப் போல் வறண்டு போகாமல் இருக்க டோரோத்திக்கு உதவிய உயிர். டோட்டோ என்பது குள்ளமான, கறுப்புநிற நாய்க்குட்டி நல்ல பளபளப்பான நீண்ட முடியும், கருமையான குட்டிக் கண்களும், சிறிய மூக்கும் கொண்ட நாய். நாய்க்குட்டி டோட்டோ நாள் முழுக்க விளையாடிக் கொண்டே இருக்கும். அதனுடன் டோரோத்தியும் விளையாடுவாள். டோட்டோவை அவளுக்கு அவ்வளவுக்குப் பிடிக்கும்.

    இன்றைக்கு அவள் விளையாடப் போகவில்லை. வாசற்படியருகே நின்று ஆகாயத்தை ஏதோ ஓர் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஹென்றி மாமா. அன்று ஆகாயம் வழக்கத்தைவிட அதிகமாக வெளுத்திருந்தது. வாசற்படியருகே டோட்டோவைக் கையில் பிடித்தபடி டோரோத்தியும் ஆகாயத்தை வேடிக்கை பார்த்தாள். எம் அத்தை பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

    வெகுதொலைவில் வடக்கு திசையிலிருந்து காற்றின் சன்னமான முணுமுணுப்புக் கேட்டது. சற்றுத் தொலைவில் வளர்ந்துள்ள செடிகளின் மேற்புறப் பகுதிகள் காற்றில் படபடப்பதை அவர்கள் கவனித்தனர். திடுமென்று தென்திசையிலிருந்து காற்றின் விசில் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, செடிகளின் மேற்புறப் பகுதிகள் சுழன்று திரும்புவதை அவர்கள் கவனித்தனர்.

    ஹென்றி மாமா சட்டென்று எழுந்தார்.

    எம், சுழல் காற்று வருகிறது. மாமா அத்தையிடம் உரத்த குரலில் கூறினார்: நான் கால்நடைகளைக் கவனித்துவிட்டு வருகிறேன்! என்ற மாமா பசுக்களையும் குதிரைகளையும் கட்டிப் போட்டிருக்கும் ஷெட்டை நோக்கி விரைந்தார்.

    செய்து கொண்டிருந்த வேலையைப் பாதியில் விட்டுவிட்டு அத்தை வாசல் பகுதிக்கு வந்தாள். முதல் பார்வையிலேயே அவள் ஆபத்தை உணர்ந்து கொண்டாள்: சீக்கிரம் டோரோத்தி, அவள் அவசரமாகக் குரல் கொடுத்தாள்: சீக்கிரமாக நிலவறைக்கு ஓடு!

    டோரோத்தியின் கையிலிருந்த டோட்டோ அவள் கையிலிருந்து கீழே குதித்துக் கட்டிலுக்கு அடியில் போய்ப் புகுந்து கொண்டது. அதைப் பிடிப்பதற்காக டோரோத்தி அதன் பின்னால் ஓடினாள். பயந்துபோன அத்தை நிலவறைக்குச் செல்லும் கதவைத் திறந்து கீழ்ப்புற ஏணியில் இறங்கத் தொடங்கினாள். ஒரு வழியாக டோட்டோவைக் கண்டுபிடித்து டோரோத்தியும் அத்தையின் பின்னால் சென்றாள். அவள் அறையின் மையப் பகுதியை அடைவதற்கு முன்பே வலுவான காற்று அந்த வீட்டைக் குலுக்கியது. அந்த அதிர்ச்சியில் டோரோத்தி அப்படியே தரையில் விழுந்தாள்.

    அப்போதுதான் விசித்திரமான அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு அல்லது மூன்று முறை வட்டமடித்த அந்த வீடு, திடுமென்று ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. தான் ஒரு பலூனில் பறப்பது போலிருந்தது டோரோத்திக்கு.

    தென்திசைக் காற்றும் வடதிசைக் காற்றும் சந்தித்துக் கொண்டது. அந்த வீடு இருந்த பகுதியில்தான். அது அந்த வீட்டைச் சுழற்காற்றின் மையமாக்கி விட்டிருந்தது. ஒரு சுழற்காற்றின் மையத்தில் காற்று எப்போதும் அசைவற்று இருக்கும். ஆனால் காற்றின் இரு புறங்களிலுமுள்ள அழுத்தம் வீட்டை மேற்புறமாக உயர்த்திக் கொண்டே போனது. ஓர் இறகு மாதிரி, அது மைல் கணக்கில் வீட்டை இழுத்துக் கொண்டு போனது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. அவளுக்குச் சுற்றிலும் காற்று, பயங்கரமான சத்தத்தை எழுப்பியது. ஆனால், தான் சுகமாக ஆகாயத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1