Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayiliragu
Mayiliragu
Mayiliragu
Ebook198 pages2 hours

Mayiliragu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

'மயிலிறகு' குமுதத்தில் தொடர்ந்து வந்து பல்லாயிரக் கணக்கான மனங்களிலே இனிமை ததும்ப இடம்பெற்ற நெடுங்கதையாகும்.

மணிசேகரன் கையாளுகின்ற அந்தத் தமிழும், அருமை நடையும் அழகு, அழகு, அழகு! தேனாகப் பாய்ந்து வரும் தீந்தமிழும், தெவிட்டாத நடையழகும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன!

சிலர் எழுதுவதிலே நடையின் சிறப்பு இராது. அடுத்து என்ன - அடுத்து என்ன என்று படிப்போரைத் துடித்துவிடச் செய்யும் விதத்திலே சம்பவங்களின் கோவை அமைந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால் விறுவிறுப்பு மட்டுமே இருக்கும். எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்ற அளவிலே இருக்குமே தவிர, நினைவிலே இருந்து நீங்காமல் நெஞ்சினை இன்ப மயமாகச் செய்யும் வல்லமை எல்லாக் கதைகளிலும் இருந்து விடுவதில்லை.

மணிசேகரனின் 'மயிலிறகு' தனித்தன்மை வாய்ந்த ஒரு கதை. எடுக்கிறோம், படிக்கிறோம், இனிக்கிறது! அதனால், வேகமாகப் படித்து முடிக்க இஅயலவில்லை. விறுவிறுப்பு இல்லை என்பதில்லை காரணம். தொட்ட இடந்தோறும் சுவை மணக்கச் சுவை மணக்க எழுதிவிடுகிறார். ஆகவே கண்பட்ட இடத்திலே நெடுநேரம் நெஞ்சம் நின்று விடுகிறது. எல்லையற்ற பேரழகென்றாலே இந்தக் கதிதான்!

- சௌந்தரா கைலாசம்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545481
Mayiliragu

Read more from Ilakkiya Samrat Kove. Manisekaran

Related to Mayiliragu

Related ebooks

Related categories

Reviews for Mayiliragu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayiliragu - Ilakkiya Samrat Kove. Manisekaran

    http://www.pustaka.co.in

    மயிலிறகு

    Mayiliraku

    Author:

    இலக்கிய சாம்ராட். கோவி. மணிசேகரன்

    Ilakkiya Samrat Kove. Manisekaran

    For more books
    http://www.pustaka.co.in/home/author/kove-manisekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1 - புதிய ஒளி

    அத்தியாயம் 2 - இந்திர விழா

    அத்தியாயம் 3 - செய்த தவம்

    அத்தியாயம் 4 - பாண்டியன் சபதம்

    அத்தியாயம் 5 - கொலைத் திட்டம்

    அத்தியாயம் 6 - புன்னைவனச் சோலையில்...

    அத்தியாயம் 7 - இயல் இசை கூத்து

    அத்தியாயம் 8 - பாணர் விட்ட பாணம்

    அத்தியாயம் 9 - பெண் பாவம்

    அத்தியாயம் 10 - திருமண அழைப்பு

    அத்தியாயம் 11 - கலங்கள் மூன்று

    அத்தியாயம் 12 - நான்காவது கலம்

    அத்தியாயம் 13 - சமுத்திர கேசரி

    அத்தியாயம் 14 - கடற்கழுகும் மணிப்புறாவும்!

    அத்தியாயம் 15 - வைரச் செங்கோல்

    அத்தியாயம் 16 - சித்திர கூடம்

    அத்தியாயம் 17 - வாழ்நாளில் மறவேன்

    அத்தியாயம் 18 - முரசொலி

    அத்தியாயம் 19 - கீர்த்தி மிக்க சீர்த்தி

    அத்தியாயம் 20 - ஓ... பீலிவளை!

    அத்தியாயம் 21 - கடற்கோள்

    அத்தியாயம் 22 - எழுத்தறியாக் காவியம்

    ஞானபீட வாழ்த்து

    அன்புள்ள திரு. கோவி. மணிசேகர் அவர்கட்கு வணக்கம்.

    ‘மயிலிற’கின் எழில் வண்ணங்களை நினைவூட்டும் நடையழகுக்கே முதலில் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகவும் அற்புதமான - கம்பீரமான - இன்ப மயக்கம் தரும் தமிழ் நடை.

    சங்க காலச் சூழ்நிலைப் பாத்திரங்கள் உயிரும் உடலுமாக உலவுகின்றனர். பீலிவளை, சோழன் நெடுமுடிக்கிள்ளி, பாண்டியன் வெற்றிவேல் செழியன் ஆகியோரது பாத்திரப் படைப்பின் தனித்தன்மைகள் தொடக்கத்திலேயே நன்கு தெரிகின்றன. கதைக்குச் சுவையூட்டும் போராட்டமும் இயல்பாக அமைந்து ஆரம்பத்திலேயே வந்துள்ளதால், படிக்கும் ஆர்வமூட்டும் தன்மையும் நிறைந்துள்ளது. ‘மயிலிறகு’ வெற்றிகரமாக வளர்ந்து நிறைவுற்று ரசிகர்களின் இதயத்தில் தன் எழில் வண்ணங்களோடு தோகை விரித்திட என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    - அகிலன்

    சென்னை - 14.      

    16.9.1967

    ***

    1967-இல் ‘குமுதம்’ வார இதழில் இந்த ‘மயிலிறகு’ நாவல் தொடராக வெளிவந்தபோது பல்லாயிரக்கணக்கான பாராட்டுக் கடிதங்கள் குவிந்தன. அந்தக் கதையை விவரித்தாலே ஒரு நூலாகும்.

    அவ்விதம் வந்த வாழ்த்துக் கடிதங்களுள் தலையான - சிகரமான வாழ்த்தாக இலக்கிய மேதை திரு. அகிலன் அவர்களின் இதயம் நிறைந்த மடலை வெளியிட்டு மகிழ்வதில் பெருமையடைகிறோம்.

    ***

    1

    புதிய ஒளி

    வைகறையின் ஞானக்கண் பொன்னாய் மலர்கிறது. துயில் களைந்த வையத்தின் மகிழ்ச்சியிலோர் ஒளி நர்த்தனம்.

    சிறகினங்கள் பாடும் புறநீர்மை, பூபாளமாய் ஒலிக்கிறது. கூப்பிய கரம் விரித்துக் குளங்கள் தோறும் காப்பியப் பெருமை பேசும் கமலப்புன்னகை. மலையில் விழி மலர்த்தி, மலரில் மொழியுணர்த்தி, மண்ணை முத்தமிடும் காலை இளங்காற்றின் நிவேதனச் சிலிர்ப்பு.

    பூவிரி சோலைசூழ் காவிரி நதிக்கரையின் நீராழி மண்டபம் பேரிசையாய்ச் சலசலக்கிறது. காற்சதங்கை கொஞ்ச, கைவளை குலுங்க நாகநாட்ட அழகுப் பெட்டகம் பீலிவளை நீராடுகிறாளாம்! அவள்தான் நீராடுகிறாளோ? அல்லது அவளைத்தான் அந்தச் சிற்றலைகள் நீராட்டுகின்றனவோ?

    நீரன்னை மென்மடியில் மீனன்ன நீந்தி விளையாடும் பீலிவளையின் வந்தனைக்குரிய சந்தனத் திருமேனியில் செங்கதிரவனின் கரம்பட்டு, எழிலான பகுதிகளில் பல காலம் தவம் செய்த கற்பனைகள் உதயமாகின்றன. நீரை அள்ளியள்ளி மூழ்கித் துள்ளித் துள்ளி எழும்போதெல்லாம், காவிய ரசனை தான்! அதோ, சொட்டச் சொட்ட எழுந்து முழுமேனியுடன் கரைசேரும் பீலிவளையின் பேரெழிலை நாவார என்ன சொல்ல! அடடா, ஓ... அடடா!

    நிர்வாணக் குளியல் நாகர்களின் ஒரு தனியான நாகரிகம் தான்!

    தோழிப்பெண் கோமுகியாள் கொண்டு வந்த பாலாவி அன்ன துகிலை மேலாடப் போர்த்திக் கொண்டு, சேலாடும் வேல்விழிகளில் செருக்கார்ந்த புன்முறுவலைத் தேக்கித் தன்னைத் தானே ஒரு முறை நோக்கிக் கொண்டாள். இயற்கைச் சிற்பி மிகமிக நன்றிக்குரியவன்.

    தந்தையார் வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறாராம்மா! விழாவுக்கு நேரமாகவில்லையா? - மெல்லிய குரலில் பணிவுடன் கூறி நிறுத்தினாள் தோழிப் பெண் கோமுகி.

    ஓ... இன்றைக்கு இந்திர விழா ஆரம்பமாகிறதல்லவா? மறந்தே போய் விட்டேன்!

    பேரியாழின் ஆயிரம் நரம்புகள் பேச வேண்டுமா? பீலிவளையின் ஒரே நாவு அசைந்தால் போதாதா? நூபுரங்களின் ஓசை கலீர் கலீரென வேகமும் விரைவுமாக நடந்து சென்றாள் பீலிவளை. சுற்றிச் சூழ்ந்த சூழ்நிலையைச் சுவைத்தன அவளுடைய சுரும்பாடும் கருவிழிகள்! பச்சைப் பசேலென்ற பசிய மரங்கள் வழிநெடுக! பார்வையை வசியம் செய்யும் வண்ணவண்ண மலர்க்கோலம் எங்கு நோக்கினும்! கிசு கிசுக்கும் பூங்காற்று! கிறுகிறுக்கும் பூமணம்! கிளுகிளுக்கும் புள்ளினக் கீதம்! காவிரிப்பூம் பட்டினத்தின் இயற்கை ஜாலங்களை வருணித்தால் சொல்தான் மணக்குமோ? சொன்ன நாவே இனிக்குமோ!

    விருந்தினர் மாளிகையில், நாகநாட்டரசர் வளைவணர், மகளை எதிர்பார்த்த வண்ணம் உலவிக் கொண்டிருந்தார். ஒற்றை மகளாய்ப் பிறந்த அவள் மீது உயிரையே வைத்திருந்தார் அவர். நாகநாட்டிலிருந்து புறப்பட்டு நேற்றுக் காலையில் தான் பூம்புகாருக்கு வருகை தந்திருந்தார். இந்திர விழாவின் போது ஆண்டு தோறும் அவருக்கு அழைப்புச் செல்லும். ஆனாலும் அவரால் வரமுடிவதில்லை. இந்த ஆண்டு, பீலிவளையின் தொந்தரவு தாளாமல்தான் புறப்பட்டார். பூம்புகாரின் எழிலைக்காண அந்தப் பூங்கொடிக்குத்தான் ஆர்வம் உந்தியதோ? அல்லது விதியெனும் செப்படி வித்தைக் காரன்தான் ஆவலைத் தூண்டினானோ?

    சோழிய அதிகாரிகள், நாகவரசரின் புதிய வருகை கண்டு தனிக் கவனம் செலுத்தினர். தமிழ் மரபின் மூல மரபல்லவா, நாகமரபு!

    நீண்ட மயிலிறகு, செங்காந்தள் விரல்களில் தவழ்ந்து விளையாட, அலங்காரப் பொற்றேராய் நடந்து வந்த திருமகளை நோக்கிப் பூரித்துப் போனார் வளைவணர். எவ்வளவு நாழியாக நீராடுவது பீலிவளை? புதிய மண்ணாயிற்றே! உடம்புக்கு ஒத்துக் கொள்ள வேண்டாமா?

    அன்போடு கடிந்து கொண்டார் அரசர் வளைவணர். பீலிவளை கலகலவென்று சுநாதமாய்ச் சிரித்தாள். தமிழ் பிறந்த மண்ணப்பா, இது! யாருக்கும் ஒத்துக் கொள்ளும்!

    அழகுதான், போ!

    காவிரி நதியாள் என்னைவிட மகாப் பேரழகியப்பா! சோழர்கள் தலை நிமிர்ந்து இருக்கிறார்கள் என்றால், ஏன் இருக்க மாட்டார்கள்?

    ஏது, ஏது! வந்ததும் வராததுமாகச் சோழர்களைப் புகழத் தொடங்கி விட்டாய்!

    பீலிவளையின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு ஒளிர்ந்தது. சூரிய குலத்தின் புகழ், நான் சொல்லித்தான் சிறக்க வேண்டுமா, அப்பா?

    ஏன் சிறக்கக் கூடாது? அழகான மகர யாழாக இருந்தாலும், அதை மீட்டும் விஞ்சைமகளுடைய விரலில்தான் ஏழிசை மிதக்கிறது! உன் குரலினிமையில் சோழ நாடு சிறக்க வேண்டும் என்றிருந்தால், யாரால் தடுக்க முடியும்? எந்த நோக்கத்தை மனத்தில் வைத்துக் கொண்டு வளைவணர் சொன்னாரோ? ஆனால், பீலிவளை எதையோ நினைத்துக் கொண்டு நெஞ்சின் யாழை மீட்டிக் கலகலவென்று நகைத்தாள்.

    நான் என்ன அப்படி நகைச்சுவையாகக் கூறிவிட்டேன் என்று நீ சிரித்தாய் பீலிவளை? வளைவணரின் கேள்வியில் வியப்பு, கொக்கியாய் வளைந்தது. பீலிவளை சொன்னாள்:

    அப்பா! சிரிப்பு என்பது நகைச்சுவையில்தான் மிதக்க வேண்டுமென்பதில்லை. சிந்தனைப் புகைச்சலில் அது மிதக்கலாம்! சினச் சீற்றத்தில் அது பீறிடலாம்! செப்பொணா மகிழ்ச்சிப் பிரவாகத்திலும் அது மேலிடலாம்!

    நீ சிரித்ததன் அடிப்படை?

    மகிழச்சிப் பிரவாகம்!

    வளைவணர் நிமிர்ந்து கவனித்தார். மீண்டும் பீலி வளையின் சிரிப்பொலியில் யாழ் முத்தமிட்டது.

    அப்படி என்ன மகிழ்ச்சி கண்டாய், பீலிவளை?

    சோழ மன்னரைத் தரிசிக்கப் போகிறேனே, அதுவே ஒரு மகிழ்ச்சிதானே, அப்பா?

    இப்போது வளைவணர் ஏனோ கடகடவென்று பெருநகை புரிந்தார். பீலிவளைக்கு வியப்பு ஏற்பட்டதென்றால், அது இயற்கைதானே?

    வேண்டுமென்றே சிரிக்கிறீர்களா, அப்பா?

    எனக்கென்ன பைத்தியமா, பிடித்திருக்கிறது? உன் சிரிப்பின் எதிரொலியம்மா?

    எதிரொலியா?

    ஏன்? எதிரொலி மலையிடுக்கிலிருந்துதான் வர வேண்டுமா? அது மன இடுக்கிலிருந்தும் புறப்படலாமே! உனக்குத் திடுமென்று சோழ மன்னரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வானத்திலிருந்தா குதித்துவிட்டது? பூமியிலிருந்துதானே புறப்பட்டது?

    குபீரென்று சிவந்த கன்னக்குழிகளில் நாணம் பதுங்கியது.

    மகளின் மாற்றம் நிறைந்த தோற்றத்தைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட வளைவணர், மெல்லச் சிரித்துக் கொண்டவராய், பீலி! உனக்கேற்பட்ட ஆசை இயற்கையானதுதானம்மா! இந்திர விழாவின் போது, சதுக்கப் பூதத்தை மாசற்ற மனத்துடன் வேண்டிக்கொள். வேண்டியதை வேண்டியபடித் தருவானாம் அந்த ஆயிரங்கண்ணோனின் அருமந்த தூதுவன்! என்றார் அமைதியுடன்.

    பீலிவளையின் அலங்காரத் தலை இன்னும் நிமிர வேண்டுமே!

    பணியாளன் வந்து செய்தியறிவித்தான். நாகர்ப் பெரும! பல்லக்கு ஆயத்தமாகிவிட்டது. தாங்கள் புறப்படலாம்.

    நாகநாட்டரசர் வளைவணரும், இளவரசி பீலிவளையும், முத்துப்பல்லக்கில் மோகனமாய் அமர்ந்து, இந்திரன் கோயில் நோக்கிப் பயணமாயினர். பீலிவளையின் இதயத்தில் மட்டும் புதியதோர் ஒளிப்படர்வு மெல்ல மெல்ல ஆட்கொண்டது.

    2

    இந்திர விழா

    சித்திரைத் திங்களின் செல்வத் திருநாள். பொழுது சாய்ந்தால் முழமதியின் வெள்ளித்தேர்ப் பவனி வான வீதியிலே! புவனப் புகழ் கொண்ட பூம்புகார்த் தலைநகரம் விழாக்கோலம் பூண்டது. வீதிகள் தோறும் வண்ணத் தோரணங்கள். வீடுகள் தோறும் வாழைப் பந்தல். கழுகும், கரும்பும், வஞ்சிக் கொடியும் சந்தி மண்டபங்களில் சாரி சாரியாய் அணி செய்தன. பன்னிறத் துகிற்கொடிகள்! முத்துமணி ஒப்பனைகள்! நோக்கிய இடந்தோறும் பூரணக் கும்பம் பொலம் பாலிகை பாவை விளக்கு!

    வச்சிரக்கோட்டத்துக் கொடிக்கம்பத்தில் ஐராவதம் பொறித்த அழகுமிக்க பட்டுக்கொடி! அதற்கொப்ப அரண்மனையின் உச்சியிலே புலிக்கொடியின் கம்பீரம்!

    இருபத்தெட்டு நாள் விழாவைப் பற்றி, மங்கல முரசறைவோன் யானைமீதமர்ந்து இயம்புகின்றான். கூடி நின்று செவிமடுத்தார் நாவுகளில் மாநகரின் பாமாலை! மரபின் மன்னனின்

    Enjoying the preview?
    Page 1 of 1