Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thiruvizhaa
Thiruvizhaa
Thiruvizhaa
Ebook90 pages50 minutes

Thiruvizhaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kove.Manisekaran has been publishing for more than 50 years. He has written 8 plays, 29 short story collections, 30 social novels, 50 historical novels and 8 essays. He is most noted for his historical novels. In 1992, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Kurrala Kurinji. He has also directed two Tamil and one Kannada film. He was an assistant to noted Tamil film director K. Balachandar for three years. His film Thennankeetru won the Tamil Nadu film fans association award and the Government of Karnataka's Neerikshe award.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545504
Thiruvizhaa

Read more from Ilakkiya Samrat Kove. Manisekaran

Related to Thiruvizhaa

Related ebooks

Reviews for Thiruvizhaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thiruvizhaa - Ilakkiya Samrat Kove. Manisekaran

    http://www.pustaka.co.in

    திருவிழா

    Thiruvizha

    Author:

    இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன்

    Ilakkiya Samrat Kove. Manisekaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kove-manisekaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஆண்டவன் திருமாளிகையில் நாகரிகம் பெருகப் பெருக மக்களுடைய இதய மாளிகையில் பக்தியெனும் திருவிளக்கின் அன்பொளி குறைந்து கொண்டே வருகிறது. நாகரிக மனிதர்க்கு இதன் உட்பொருள் தெரிவதற்குக் காரணமே இல்லை. அவர்கள் நயத்தகு நாகரிகத்தின் பிரதிநிதிகளாய் விட்டனர். இறைவனுடைய பிரதிநிதிகளாய் வீற்றிருந்த காலம் மாறிப்போய் விட்டது. நாகரிகத்தின் தவறான பொருள், அறிவெனும் பிரபஞ்ச தீபத்தின் அகல் விளக்கில் தண்ணீரை வார்க்கத் தொடங்கி விட்டது. நெய்யும், நீரும் ஒன்று சேருமா? பக்தியும் நாகரிகமும் இப்படித்தான் போய்விட்டதாகப் பல பெரியவர்கள் பேசிக்கொள்ளத் தலைப்பட்டனர்.

    சென்ற நூற்றாண்டு வரை பக்தி நன்முறையில்தான் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதனால் தானோ என்னமோ, பண்பு பாதுகாக்கப்பட்டது: பாவையார்களிடையே கற்பும் கூட களங்கமில்லாமல் கண்விழித்து வந்தது.

    கங்கையம்மன் திருவிழாவை வழக்கம் போல் அவ்வாண்டும் அமர்க்களமாக நடத்த உத்தரவிட்டிருந்தார் சங்கரன் பாளையக்காரர். தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான வேலூர்க் கோட்டத்து வேலப்பாடியை உள்ளீட்டாகக் கொண்ட பாளையத்துத் தலைவர் தான் சங்கரதேவனார்.

    ஆகா! ஒரு தலைமுறை காலத்துக்கு முன் வரை கோயில்களில் சுவாமி புறப்படும் அழகே ஓர் அலாதியான காட்சிதான். இருபுறமும் வரிசை பிறழாமல் எரியும் தீப்பந்தங்களுக்கிடையே எல்லையில்லா அலங்காரத்துடன் கங்கையம்மன் திருவீதி புறப்பட்டுக் கொண்டிருந்தாள். முன்னே பறையோசை காதுகளைப் பிய்த்துத் தூங்குபவர்களை எழுப்பிக் கொண்டிருந்தது. அடுத்து இரண்டு ஐதை நாதசுரக்காரர்கள் தோடி ராகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். தொட்ட சங்கதியைத் தொடாமல் விதவிதமான சஞ்சாரத்துடன் மூர்ச்சனையைக் காட்டித் தங்கள் வளமான கற்பனைக்கு மக்களிடையே ‘உச்சுக்கொட்டும் நற்சாட்சிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர். தோடிக்கே உரிய சாதாரண காந்தாரத்தைக் கார்வையாகக் கொண்டு மிகச் சாதாரணமாக-அநாயசமாக- மேலும், கீழுமாக ஸ்தாயிகளைத் தொட்டு விஸ்தாரம் செய்ய முனைந்தனர். ஆண்டவனைப் போல் இராகமும் எல்லையில்லாமல் பரந்துவிரிந்து இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் வித்துவான்களையும், அவர்களுடைய நற்புலமையை ரசிக்கவல்ல மக்கள் திருக்கூட்டத்தையும் சென்ற நூற்றாண்டுதான் எவ்வளவு அற்புதமாகக் கண்டுவந்தது!

    சுவாமி புறப்படும்போது தொடங்கப் பெற்ற இராகம் அது. மாட வீதிகளைப் பாதிக்கு மேற்கடந்துங்கூட இன்னும் முடித்த பாடில்லை. மக்களின் மன விஸ்தாரத்தைப் போலவே அக்காலத்தில் இராக விஸ்தாரமும் பெருகி வளர்ச்சிப் பெற்றிருந்தது.

    கங்கையம்மனும் மாட வீதிகளை வலம் வந்து கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தாள். மக்கள் குழாம் பலவிதமான எண்ணக் கிளர்ச்சிகளால் உந்தப் பெற்று- உணர்ச்சி வயப்பட்டு அந்தத் திருவிழாவைத் துய்த்துக் கொண்டிருந்தது. அன்று சிம்ம வாகன சொரூபினியாக கங்கையம்மன் திருக்கோலம் பூண்டிருந்தாள். குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் ஓர் அதிசயம் நிகழ்வது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளாக நிகழாத அந்த அதிசயம் அன்றாவது நிகழுமா என்ற எதிர்பார்ப்புதான் மக்கள் உணர்ச்சி வயப்பட்டதன் உட்பொருள்.

    பெரும்பாலானோர் நாதசுர இசைக் கிறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். சிற்சிலர் வேறுவிதமான வேடிக்கைகளில் தத்தம் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தனர். முன்னே பூத உருதாங்கிய மிக உயரப் பொம்மைக் கூத்திலும் சில குட்டிக்கண்கள் பரவசமடைந்து கொண்டிருந்தன. ஆமாம்: சின்னஞ் சிறார்கள்தாம் அந்தச் சிங்காரக் காட்சியில் தங்களை ஈடுகொடுத்துப் பிஞ்சுக் குரல் எழுப்பி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூத்திற் கடுத்துப் புரவி நாட்டியம் நடந்து கொண்டிருந்தது. தஞ்சையிலிருந்து இதற்காக முன் கூட்டியே வரவழைக்கப்பட்ட நாட்டியம் அது. பொய்க்கால் குதிரைக் காட்சியை ரசிக்காத பெண்மணிகளும் உண்டோ? தொண்டை மண்டலத்துப் பெண் மணிகள் சோழநாட்டுப் பொய்க்கால் குதிரைக் காட்சியை இன்பமாக ரசித்துக் கொண்டிருந்தனர்கள். கொட்டு மேளத்திற்கேற்ப ஆடிய அந்தக் கூத்தைப் பல முதிய கட்டைகளும் தளர்ந்த உடல்களை அசைத்து மகிழ்ச்சியில் மூழ்கின. அடடா! இன்னொரு காட்சியை நாம் காணாமல் விட்டு விட்டோமே! அன்றைய

    Enjoying the preview?
    Page 1 of 1