Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanikkai
Kaanikkai
Kaanikkai
Ebook102 pages51 minutes

Kaanikkai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateJul 5, 2016
ISBN6580100601339
Kaanikkai

Read more from Devibala

Related to Kaanikkai

Related ebooks

Reviews for Kaanikkai

Rating: 4.8 out of 5 stars
5/5

5 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    author an family story would be happy if i could down load
  • Rating: 5 out of 5 stars
    5/5
    Great Imagination , really great to be true. 2 best words better than 25 words

Book preview

Kaanikkai - Devibala

A picture containing icon Description automatically generated

https://www.pustaka.co.in

காணிக்கை

Kaanikkai

Author:

தேவிபாலா

Devibala

For more books

https://www.pustaka.co.in/home/author/devibala-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

1

காலை சீக்கிரமே புறப்பட்டுவிட்டாள் சச்சு!

நாலு மணிக்கே எழுந்து, குளித்து டிபன், சாப்பாடு எல்லாம் தயாரித்து விட்டாள்!

காலை எட்டறைக்கு ஆபீசுக்கு புறப்படும் சச்சு, ஏழுக்கே புறப்பட்டு விட்டாள்!

கிரி குளித்து விட்டு வந்தான்!

என்ன சச்சு சீக்கிரமே கிளம்பிட்டே?

ஆபீஸ்ல ஒரு மீட்டிங்! அதுக்காக தகவல்களை ரெடி பண்ணனும்! சீக்கிரமா போனாத்தான் முடியும்!

மாமியார் அப்போது தான் எழுந்து வந்தாள்.

சச்சு நாளைக்கு ஆடிவெள்ளி! வழக்கம்போல மாவிளக்கு போடணும்! லீவு போட்டுடு!

சரிங்க அத்தே!

சமயபுரத்துக்கு போகனும்! ஒரு பிரார்த்தனை இருக்குடா கிரி! எப்பப் போகலாம்!

சொல்றேன்மா! இப்ப உடனடியா முடியும்னு தோணலை!

எனக்கு திங்கள் டாக்டர் செக்கப்!

நா வர முடியாதுமா! சச்சு வரட்டும்! இல்லைனா ராகினியைக் கூட்டிட்டுப் போ!

அத்தே! எல்லாம் ரெடி! மறக்காம மாத்திரை போட்டுக்குங்க! நான் கிளம்பறேன்!

சச்சு அரக்கப்பரக்க புறப்பட்டாள்!

நீ சாப்பிடலியா?

கைல டப்பா எடுத்துக்கிட்டேன் அத்தே! நான் வர்றேன்!

அவசரமாக படி இறங்கினாள்!

சச்சு, ஒரு முதுகலை பட்டதாரி அழகான பெயர் தனியார் நிறுவனத்தில் உத்யோகம் பார்ப்பவள்! அவளுக்கும் கிரிக்கும் கல்யாணமாகி பத்து வருடங்கள் முடிந்துவிட்டன! இன்றுவரை குழந்தை இல்லை.

கிரியும் எம்.காம். படித்து ஒரு நிதி நிறுவனத்தில் அதிகாரி!

கிரிக்கும் ஒரு விதவைத் தாயார் பங்கஜம்!

ஒரு தங்கை ராகினி! இந்த வருடம் தான் +2 முடித்து விட்டு கல்லூரி படிப்புக்காக காத்திருக்கிறாள்!

இந்த பத்து வருடங்களில் சொந்தமாக ஒரு ஃபளாட் வாங்கிவிட்டார்கள்!

சச்சுவுக்கு ஒரு அம்மாவும், தம்பியும் மட்டும்!

அப்பா பொறுப்பில்லாமல் ஊரைச் சுற்றி, பத்து வருடங்களுக்கு முன்பே குடும்பத்தை விட்டுப் பிரிந்து போனவர்! அதன் பிறகு அம்மா வசந்தா ஒரு மெஸ் நடத்தி, சில பல கல்யாண விடுதிகளில் சமையல் பொறுப்புகளை ஏற்று கடுமையாக உழைத்து, சச்சுவை படிக்க வைத்தாள்!

நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் சச்சு ஸ்காலர்ஷிப்பில் படித்தாள்!

வேலையும் கிடைத்துவிட்டது! தம்பி சிவசு இந்த வருடம் தான் +2 முடித்திருக்கிறான்!

சச்சு வேலைபார்க்கும்போது கிரியை காதலிக்கத் தொடங்கி ஒரு வருட காலம் காதல் நீடித்து, இரு வீட்டுக்கும் விவரம் தெரிய, ஒரே ஜாதி எந்த பிரச்சனையும் இல்லை வேறு எந்தத் தடையும் இல்லை.

இரண்டு இடத்திலும் அப்பாக்கள் இல்லை!

ஒரு அம்மா விதவை! அடுத்தவர் வாழாவெட்டி!

அதனால் காதலுக்கு தடையில்லை.

பெண் பார்த்து அம்மா பங்கஜத்துக்கு சச்சுவை பிடித்துவிட்டது! அதனால் சச்சு கிரியிடம் முதலிலேயே நிபந்தனைப் போட்டு விட்டாள்!

எங்கப்பா குடும்பத்தை விட்டு ஓடிவிட்டார், எங்கம்மா மெஸ் நடத்தி படாதபாடுபட்டுத்தான் எங்க ரெண்டு பேரையும் ஆளக்கியிருக்காங்க! நான் தலை தூக்கி சம்பாதிக்கத் தொடங்கின பிறகுதான் அம்மாவுக்கு மூச்சுவிட அவகாசம் கிடைச்சிருக்கு!

அதனால் கல்யாணத்தை பெரிசா நடத்த முடியாது! கோயில்லவச்சு எளிமையா நடத்தி, ஒரு ஓட்டல்ல வச்சு சிம்பிளா ரிசப்ஷன் குடுத்துடலாம்! அதுதான் எங்களால முடியும்!

சரி சச்சு!

கிரி உடனே சம்மதித்து விட்டான்.

ஆனால் அம்மா பங்கஜத்துக்கு மனக்குறைதான்.

புலம்பி விட்டாள்!

கிரி! நீ பெரிசா படிச்சு நல்ல உத்யோகத்துல இருக்கே!

உன் கல்யாணத்தை பெரிசா நடத்தணும்னு நான் ஆசைப்பட்டேன்!

அம்மா! அவங்களால் அவ்வளவுதான் முடியும்! கசக்கிப் பிழியமுடியாது! மேலும், நான் விரும்பற சச்சுக்கூட வாழ்ந்தா, என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்!

அம்மா பங்கஜத்தால் அதற்கு மேல பேசமுடியவில்லை.

சச்சுவின் அடுத்த நிபந்தனை!

என் சம்பளத்துல பாதியை எங்கம்மாவுக்குக் குடுப்பனே!

அப்படியும் இப்ப நடத்தர மெஸ்ஸை அம்மா நடத்தினாத்தான் அம்மாவும், தம்பியும் வாழமுடியும்! அவங்களுக்கு செய்யற கடமை எனக்கிருக்கு! தம்பி தலைதூக்கிட்டா, நான் எதுவும் செய்ய வேண்டாம்!

சரி சச்சு!

சச்சுவின் சம்பளம் இருபதாயிரம்! அதில பத்தாயிரம் அம்மா வசந்தாவுக்கு வந்து விடும்!

வேண்டாம் சச்சு! நானும் உன் தம்பி சிவசுவும் வாழ என் உழைப்பு போதும்! நீ இன்னொரு வீட்டுக்கு வாழப் போன பிறகு நிபந்தனைகள் போடறது சரியில்லை!

அப்படி சொல்லாதேம்மா! எங்கே இருந்தாலும் உனக்கு செய்யற கடமை எனக்கு உண்டு! அதை

Enjoying the preview?
Page 1 of 1