Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil Vazhkkai
Vaanavil Vazhkkai
Vaanavil Vazhkkai
Ebook160 pages1 hour

Vaanavil Vazhkkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவர் - தாமிரபரணி தந்த இலக்கிய விளைச்சல். கவிதைப் பெண் என்பது இவரது முகம். நெல்லை மண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர். பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி(Not feminist but humanist) என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்.
LanguageUnknown
Release dateJul 5, 2016
ISBN6580109301349
Vaanavil Vazhkkai

Reviews for Vaanavil Vazhkkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil Vazhkkai - Andal Priyadarshini

    http://www.pustaka.co.in

    வானவில் வாழ்க்கை

    Vaanavil Vazhkkai

    Author:

    ஆண்டாள் பிரியதர்ஷினி

    Andal Priyadarshini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/andal-priyadarshini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கல்யாண தவம்

    2. அருப வேலிகள் இன்னும் இன்னும்.

    3. வானவில் வாழ்க்கை

    4. வெள்ளையம்மா

    5. வழுக்குப் பாறை

    6. புருஷ லட்சணம்

    7. தாலிக் கொடியும் தொப்புள் கொடியும்

    8. சிலம்பின் மிச்சம்

    9. இருட்டு இல்லையடி கண்ணே !

    10. யுத்தம் இனிதான்

    11. ஆப்பிளின் கடைசி வாசனை

    1

    கல்யாண தவம்

    "சேலை கட்டும் பெண்ணுக்கொரு

    வாசமுண்டு... கண்டதுண்டா?

    கண்டவர்கள் சொன்னதுண்டா?

    உற்சாகக் குரலில் பாடிக் கொண்டிருந்தாள் ரேகா.

    எங்கேயோ வெளியே கிளம்புகிறாள் மாதிரி தெரிந்தது.

    பாத்ரூமிலிருந்து- பாலியெஸ்டர் புடவைகளை சோப் நுரை பொங்கப் பொங்கத் துவைத்துக் கொண் டிருந்த விஜயலட்சுமிக்கு ரேகாவைப் பார்க்கப் பார்க்கச் சிரிப்பாய் வந்தது…

    ஞாயிற்றுக் கிழமையென்றால் போதும், பத்து மணிக்குள்ளாக ஷாம்பு போட்டுக் குளித்துவிட்டு பார்த்துப் பார்த்து கை, காது, கழுத்தில் நகைகளைப் போட்டுக் கொண்டு, கைப் பையில் கணிசமாய் முழுசாய் நூறு, இருநூறு என்று வைத்துக் கொண்டு ரேகா கிளம்பி விடுவாள்-

    சம்பாதிக்கும் பணம் எல்லாவற்றையும் தனக்கு மட்டுமே செலவு செய்யும் பிறவி அவள்…

    வீட்டுக்குக் குடுத்துப் பழகிட்டா, அப்புறம் நமக்குக் கைல காசு மிஞ்சாது… என்ன, கல்யாணம் வரைக்கும்தானே இந்த சுதந்திரம்! அப்புறம் புருஷங்காரன் கிட்டத்தான் தொங்கணும். பத்துப் பைசாவுக்குக் கூடக் கணக்கு சொல்லணும். பெரிய நாட்டாமை பேசுவான் புருஷன்கற பந்தால…

    படிக்க வச்சு, வளர்த்துவிட்ட அம்மா அப்பாவுக்குத் தரல்லேன்னா துரோகமில்லையா? நம்ம சம்பளத்தில ஒரு முழம் பூவும், ஒரு வாய் அல்வாவும் வாங்கிக் குடுத்தா தப்பா? மாசம் முன்னுாறு அனுப்பினா குறைஞ்சிடுவோமா என்ன?

    அடி எவடி இவ... ஒரு தரம் ஆசை காட்டியாச்சுன் னால் அவ்வளவுதான். அந்தச் செலவு இந்தச் செலவுன்னு மாசா மாசம் அதிகமாய்க் கேட்டுட்டே இருப்பாங்க. நமக்கும் முறிச்சுக்க மனசு வராது. இல்லேன்னா, ஏதாச்சும் பண்டிகை, அது இதுன்னா மட்டும் பணம் வரும்னு தெரியுமே அவங்களுக்கு...

    கல் நெஞ்சுடி உனக்கு...

    சொல்லிட்டுப் போயேன்... நான் முயற்சி எடுக்கல்லைன்னா, என் கழுத்தில் தாலி ஏறாது. கல்யாணச் செலவுக்குக் கூட எங்கப்பா கைல பைசா இல்லை. சம்புடம் சம்புடமா பெத்தப்ப புத்தி தெளிஞ்சிருக்கணும். அஞ்சு பொம்பளைப் புள்ளைங்க இருக்கேன்னு இப்ப அழுது என்ன பிரயோஜனம்? நான் பணம் காய்ச்சி மரம்னு ருசி கண்டுட்டால் என் கல்யாணம் நின்னு போயிடும். தங்கச்சிங்கள்லாம் தாலி வாங்கிட்டு, வயித்தைத் தள்ளிட்டு நிப்பாங்க என் சம்பளத்தில. நான் பைசா செலவழிச்சு டை' வாங்கி நரையை மறைச்சிட்டு நிக்கணும். மூஞ்சில இருக்கற கோடெல்லாம் பார்த்தா, அறுபது வயசுக் கிழம்கூட வேணாம்னுடும். ஸோ, சென்டிமெண்ட்ஸ்லாம் எனக்கு ஒத்து வராது. முப்பத்தஞ்சு முடியறதுக்குள்ளயாச்சும் எனக்குக் கல்யாணம் முடிச்சுக் கணும். இல்லேன்னா ரொம்ப லேட்டாக் குழந்தை பிறந்து கஷ்டமாயிருக்கும்...

    ரொம்பவும் பிராக்டிகலாய்ப் பேசுவாள் ரேகா.

    ஒவ்வொரு மாசமும் விஜயலட்சுமி ஆயிரத்தைந்நூறு ரூபாய் மணியார்டர் அனுப்பும்போதும் ரேகாதான் கத்துவாள்…

    ஹாஸ்டல்ல எலிப்பொறி மாதிரி ரூம்ல மூச்சடைக்க தங்கிக்கறோம். இவங்க தர்ற சாப்பாட்டை வெந்தும் வேகாமயும் தின்னுட்டு, லொங்கு லொங்குன்னு பஸ்ஸுக்கு ஒடி முதுகொடிய வேலை பார்த்து அவஸ்தைப் படறோம். நல்லதா, வாய்க்கு ருசியா ஆப்பிள் திராட்சைனு வாங்கிச் சாப்பிடு, லட்டு ஜாங்கிரின்னு தின்னுப்பாரு. அரை லிட்டர் பால் வாங்கி சுண்டக் காய்ச்சிக் குடி. அத்த விட்டுட்டு, ஊருக்கு அனுப்பறியே. இதில ஒத்தப் பைசாக் கூட மிச்சம் வக்காம செலவு பண்ணிட்டு, பணமுடைன்னா உன்கிட்டத்தான் ஓடிவருவாங்க பாரு. என்னடி பொண்ணு நீ.

    மாசா மாசம் விஜயலட்சுமியும் பணம் அனுப்புவாள்.

    மாசாமாசம் ரேகாவும் கத்துவாள்.

    அஞ்சு பாலியெஸ்டர் புடவை, மூணு ப்ளவுஸ், மூணு உள் பாவாடை இத்யாதிகளைப் பிழிந்து பக்கெட் டில் அமுக்கி, ரூமுக்குள் விஜயலட்சுமி வந்தபோது, ரேகா கையகலக் கண்ணாடியில் பொட்டைச் சரி செய்து கொண்டு ஹாண்ட்பேகில் போட்டுக் கொண்டாள்.

    நல்லாருந்துச்சு ரேகா, பாட்டு…

    அதை மனசுக்குப் புடிச்ச ஆம்பளை பாடிக் கேக்கணும். அந்த சுகமே தனி… உனக்கெங்க அதெல்லாம் தெரியப் போவுது...

    விஜி ஒன்றும் பேசாமல் பட்பட்டென்று பிளவுஸை உதறிக் கொடியில் போட்டாள்.

    எம்பிப் போடுகையில் இடுப்பு தெரிந்தது.

    மாவுமாதிரி வழுவழுன்னு இடுப்புடி உனக்கு. கட்டிக்கப் போறவனுக்கு இதுமாதிரி ரசனையெல்லாம் இருக்கோ. இல்ல அம்மாக்கோண்டா இருந்துட்டு, உன்கிட்ட பேசக்கூட அம்மாக்காரி உத்தரவு வேணும்பானோ... யாரு கண்டா? நான் மட்டும் ஆம்பளையா இருந்தா, உன்னைத்தாண்டி கட்டிப்பேன். ஹூம்... எவனுக்குக் குடுத்து வச்சிருக்கோ.

    நீளமாய்ப் பெருமூச்சுவிட்ட ரேகாவைப் பார்த்துச் சிரிப்புதான் வந்தது விஜயலட்சுமிக்கு.

    எங்க வெளில கிளம்பிட்ட? மாட்ரிமோனியல் காலம் பார்க்கல்லியா? அப்ளிக்கேஷன் போடல்லியா?

    ப்ச். எழுதி எழுதிப் போட்டு என்ன பிரயோஜனம்? முப்பது வயசு முதிர் கன்னின்னா எவனுமே கிட்டக்க வரமாட்டேங்கறான். வயசான ஆம்பளைங்களுக்குக் கூட சின்னப் பொண்ணுங்களைத்தான் புடிச்சிருக்கு. என்ன பண்ண?

    அவளின் முகத்தில் நிஜமாகவே கல்யாண ஏக்கமும், குடித்தன ஆசையும் பளிச்சிட்டன.

    இந்த ரூம் மேட்டாக வந்த நாளிலிருந்தே ரேகா வும் ஆசைப்படுகிறாள். கல்யாணம் காட்சியெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று.

    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தினத்தந்தியும் கையுமாக உட்கார்ந்து விடுவாள்.

    கைப் பையிலிருந்து இருபது இருபத்தஞ்சு கார்டு, கவர் எடுப்பாள்... ஒவ்வொருத்தனின் விலாசமாய் எழுதுவாள்...

    இவன் நமக்கு ஒத்துவர மாட்டான்னு விளம்பரத் தைப் பார்த்தாலே தெரியுது... பெரிய ராங்கிக்காரன்… ஆம்பளைப் பவுசு…

    அட இவரைப் பாரு... பாக்கறது ப்ரைவேட்ல செக்யூரிட்டியாம். கேக்கறது பாங்க் குமாஸ்தா, டீச்சர், ஸ்டெனோ வேணுமாம். பார்த்தியா தெனாவட்டை?

    எவனைப் பாரு வேலை பார்க்கற பொண்ணுதான் வேணும்கறான். இவனுங்கல்லாம் தாலி கட்டப் போறது பொண்ணுக்கா, வேலைக்கான்னே தெரியல்ல...

    எத்தனையோ விளம்பரங்களைப் பார்த்து அனுப்பி விட்டாள் ரேகா.

    இதுவரைக்கும் ஒன்றுமே குதிரவில்லை.

    இவளுக்கு ஆளைப் பிடிக்காது.

    இல்லையென்றால் வருபவனுக்கு இவளைப் பிடிக்காது.

    ஜாதகம் சரியிருக்காது. அல்லது சாதிசனம் சரி யிருக்காது.

    எத்தனையோ தரம் ரேகாவுக்குத் துணையாக விஜயலட்சுமியும் போய் வருவாள், வரன்களைச் சந்திக்க!

    வெளியே போனாலே, ரேகா கையைவிட்டுக் காசைச் செலவு பண்ணும் வேகத்தைப் பார்த்தே பாதி ஆம்பளைகள் ஒடி விடுவார்கள்.

    வெளிப்படையாக, கொஞ்சம் தோரணையான குரலில் ரேகா பேசுவதைக் கேட்டே பாதிப் பேர் ஒடி விடுவார்கள்.

    தம்பி இவ வேணாம். ஆம்பளைக் குரலும், ராங்கித் தனமுமா, முத்தின முருங்கக் காயாட்டம் இருக்கா. உன் அழகுக்கு எத்தனையோ இளசான ராஜகுமாரிங்க கிடைப்பாங்க. வாப்பா… குடும்பத்துக்கு இது மாதிரி ஆம்பிளைத் தனமானவள் வேணாம்ப்பா..

    என்னடி, என்ன சொன்ன? உன்னை மாதிரி புருஷன் சம்பாத்யத்தில குளிர் காய்ஞ்சு, கஷ்டம்னா என்னன்னே தெரியாம சொகுசா இருந்தா, நானும் இளசாத்தான் இருப்பேன். ஆடி ஒடி ரத்தம் சுண்ட, முதுகுத் தண்டு உடையற மாதிரி டைப் அடிச்சு சம்பாதிக்கறேன்டி நான். என் ஒட்டம் நீ ஒடிப் பாரேன் தினத்துக்கும், செத்துடுவே. பூஞ்சையா இருந்தா மல்லுக் கட்டி ஒட முடியாது. என்னை மாதிரி ஆம்பளைத்தனமா யும் இருந்தாத்தான், மூச்சு வாங்காம, விடாம தொடர்ந்து ஒட முடியும். புரியுதா? குடும்பத்துக்குத் தேவை, குயிலுக் குரலும், சினிமா அழகுமில்ல… புரிஞ்சுக்க திடம் வேணும். மனசு, உடம்பு எல்லாத்திலேயும்...

    மறுகுரலில் ரேகா கத்திய போது, விஜயலட்சுமியே பயந்து விட்டாள்.

    இது மட்டுமா?

    இதுமாதிரி எத்தனையோ பேர்… எத்தனையோ தரம்…

    ஆனாலும், இதோ இன்றைக்கு வரைக்கும் கூட ரேகாவின் தாலி ஆசை நிறைவேறவேயில்லை.

    போகும்போதே அழிச்சாட்டியமாப் பேசறேன்னு நினைக்காதே. இப்ப எங்க கிளம்பறே ரேகா? ரூம்ல இருந்து நல்லா ரெஸ்ட் எடு. நிம்மதியா சாப்பிட்டுத் தூங்கு. கல்யாணம்லாம் நடக்கறப்ப, தானா நடக்கும். வேளை வந்தா கழுத்தில தாலி. அவ்வளவுதானே…

    "நீ சுலபமாச் சொல்லிட்ட வி.ஜி. வயசாக, வயசாக எனக்குப் பயம்மா இருக்கு… தாலி கட்டிக் குடித்தனம் பண்ணுவேனா? குழந்தை குட்டி பெத்துப்பேனா? புருஷங்காரன்கூட ஜாலியா ரெண்டு இடம் போயிட்டு வருவேனான்னு மனசு கொள்ளாம ஏக்கம்

    Enjoying the preview?
    Page 1 of 1