Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalapathi
Thalapathi
Thalapathi
Ebook271 pages2 hours

Thalapathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545542
Thalapathi

Read more from Yandamoori Veerendranath

Related to Thalapathi

Related ebooks

Reviews for Thalapathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalapathi - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    தளபதி

    Thalapathi

    Author:

    எண்டமூரி வீரேந்திரநாத்

    Yandamoori Veerendranath

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    கதைக்கு முன் கதை

    மாலை ஐந்துமணி. அந்தத் தெருவில் ரொம்ப கூட்டமில்லை. அதற்காக ஆளரவமில்லாமலும் இல்லை. முருகனின் பெட்டிக்கடை அருகில் மட்டும் மூன்றுபேர் நின்று கொண்டு வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

    முருகனின் முகத்தில் வருத்தத்தைவிட வேதனைதான் தென்பட்டது. அந்த மூவரிடமிருந்து பணம் வராது என்று தெரியும். அழ முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

    ஒரு சிகரெட் பாக்கெட் கொடு. அப்படியே மூன்று பீடாவும் கட்டிக் கொடு என்றான், அந்த மூவரில் கொஞ்சம் சின்ன ரௌடி போல் தென்பட்டவன். அவன் பிக்பாக்கெட் ஸ்டேஜ்க்கு மேலும், கொலை ஸ்டேஜ்க்குக் கீழும் இருப்பவன். இன்னும் பத்து வருஷங்கள் போனாலொழிய அரசியலில் முன்னுக்கு வருவானா இல்லையா என்று சொல்ல முடியாது.

    ஹி..ஹி... கட்டாயம். இன்னும் ஏதேனும் வேணுமா? என்றான் முருகன், வேதனை கலந்த சிரிப்புடன். சீக்கிரமாய் இவர்கள் போய்விட மாட்டார்களா என்ற உணர்ச்சி அவனிடம் தென்பட்டது.

    என்ன பாஸ் இன்னும் ஏதேனும்..? கேட்கப்போன சின்ன ரௌடியின் குரல் நடுவிலேயே நின்றுவிட்டது. மூவரில் தலைவன் போல் தென்பட்ட தாத்தாவின் பார்வை போன பக்கம் பார்த்தான்.

    இருபது இருபத்தி இரண்டு வயது பெண்ணொருத்தி, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு கடைப் பக்கம் வந்துகொண்டிருந்தாள்.

    அங்கு திடீரென்று சூழ்நிலை இறுகி விட்டது. முருகன் பீடாக்களையும், சிகரெட் பாக்கெட்டையும் சுறுசுறுப்பாய் அவர்களிடம் கொடுத்தான். அங்கிருந்து அவர்களைச் சீக்கிரமாக அனுப்பிவிட வேண்டும் என்ற உள்ளுணர்வு அவன் செய்கையில் தென்பட்டது. ஆனால் அவர்கள் அதனை லட்சியம் செய்யவில்லை. எக்ஸ்ரே பார்வையுடன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

    அவள் வந்து, இரண்டு வாழைப்பழம் கொடு என்றாள். முருகன் பணத்தை வாங்கிக் கொண்டு அவளிடம் பழத்தைக் கொடுத்தான். ஆனால் பழங்களுக்கு முன் அவள் கையில் ஒரு பாக்கெட் வைக்கப்பட்டது.

    இரண்டு வாழைப்பழம் வாங்கினால், இது ஒன்று இலவசம் மேடம் என்றான் நடு ரௌடி.

    அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.

    வாழைப்பழம் பக்கத்தில் நிரோத் பாக்கெட் சிம்பாலிக்காக மனிதாபிமானத்தின் அருகில் மிருகத்தனமாகத் தென்பட்டது.

    ஹி..ஹி... போக விடேன் அண்ணா என்றான் முருகன்,

    நான் என்ன சொல்லிட்டேன். போகட்டுமே என்றான். அவள் நகரத் தொடங்கியதும், குழந்தை ரொம்ப அழகாக இருக்கு. கன்னத்தைப் பாரு... குழந்தையின் கன்னத்தைத் தடவினான். அவன் கை அவள் மார்ப்பில் பட்டது. அவள் ஓரடி பின் வாங்கினாள்.

    சரியாய் அந்த நேரத்தில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆள் ஒருவன், இதைப் பார்த்து, இறங்கி அருகில் வந்தான். அவனைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

    என்ன தகராறு? என்றான், அவளுடைய கணவன்.

    ஒண்ணுமில்லை. வாழைப்பழத்துக்காக வந்தேன். வாங்க போகலாம் என்றாள்.

    அவர்கள் போகும்போது பின்னாலிருந்து ஒருவன், இரண்டு வாழைப்பழத்துக்கு ஒரு நிரோத் பாக்கெட் ப்ரீயாகக் கொடுத்தால் வாங்க மாட்டேங்கிறாள் உன் பெண்ஜாதி என்றான் இளித்தபடி.

    அந்த ஆள் நின்றான்.

    வாங்க போகலாம் என்றாள் அவள் பயந்து கொண்டே.

    என்னடா? அப்படிப் பார்க்கிறாய்? உன் பெயர் என்ன?

    சரவணன்.

    வேலை எங்கே?

    செக்கிரடேரியட்டில்.

    என்ன வேலை?

    கிளார்க்.

    சரவணன்னு பேரை வெச்சுகிட்டு கிளார்க் வேலையில் இவ்வளவு ரோஷப்பட்டால் நடக்காது. போ... உன் பெண்ஜாதியை அழைச்சுக்கிட்டு போ.

    சரவணனின் முகம் சிவந்துவிட்டது. ஆனால் ஒன்னும் செய்ய முடியாத இயலாமையில், சைக்கிளை எடுக்கப் போனான். காலரில் கிழிந்த சட்டையும், லூசாக இருந்த பேண்ட்டும் அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.

    கன்னம் நல்லா இருக்கு. போகப் போன சரவணன் நின்றுவிட்டதைப் பார்த்து அவன் சிரித்தான். உன் பெண்ஜாதியோடது இல்லை. உன் பெண்ணோடது. உன் பெண்ஜாதியை நான் தொடலை.

    அவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்து விளையாடுவது போல் இருந்தது அவர்களின் செயல்.

    மரியாதைப் பட்டவங்களோடு இப்படிப் பேச வேட்கமாக இல்லையா? என்றான் சரவணன்.

    ஏன்? நாங்களெல்லாம் மரியாதைப் பட்டவங்களாகத் தெரியலையா? ரௌடி சொன்னான்.

    சரவணன் தனக்குத் தானே, நல்லா தெரியும் என்று முணுமுணுத்து விட்டுத் திரும்பினான். பின்னாலிருந்து தோளின் மீது கை விழுந்தது.

    என்ன சொன்னாய்?

    ஒன்றும் இல்லை.

    ரௌடி அவன் கன்னங்களை இரண்டு கைகளால் அழுத்தி, என்னடா சொன்னாய்? என்றான்.

    முருகன் கடையிளிருந்தே, பாவம், விட்டு விடு அண்ணா! என்றான். சின்ன ரௌடி தன் பிரதாபத்தை சீனியர்களின் முன் நிரூபிக்க, அவள் கழுத்தைத் தடவிக்கொண்டே, இங்கேயும் மிருதுவாய் இருக்கு பாஸ் என்றான்.

    அப்பொழுதுதான் அடித்தான் சரவணன் அவனை. உள்ளிருந்து எழும்பிய ஆவேசம் அவனை அந்தக் காரியத்தை செய்ய வைத்தது. அங்கு இருந்த ஐவரும் ஆச்சரியப்பட்டு விட்டார்கள் அந்தச் செயலுக்கு. பளாரென்ற சதத்துக்குப் பிறகு அங்கு நிசப்தமாகிவிட்டது. சரவணனைப் பிடித்துக் கொண்டிருத்த ரௌடி பலமாக அவனைப் பின்னுக்குத் தள்ளினான்.

    கடையில் கீழே ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் விழுந்தான் சரவணன். சாக்கடைத் தண்ணீர் அவன் முகத்தில் அப்பியது. அவன் மனைவி வீலென்று அலறினாள். குழந்தை அழத்தொடங்கிற்று. இரண்டாவது ரௌடியின் கால் அவன் முகத்தை நோக்கி வந்தது. சரவணன் அந்தக் காலைப் பிடித்துத் தள்ளி விட்டான். அதை எதிர்பார்க்காத ரௌடி நிலை தடுமாறி விழும் போது கடையின் கதவில் இருந்த இரும்புக் கம்பி நெற்றியில் குத்தி விட்டது. பெரும் சத்தத்துடன் அவன் கீழே விழுந்தான்.

    ஊகித்திராத இந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட பெரிய ரௌடி இரண்டு கைகளால் அவனை எழுப்பினான். மின்னலைவிட வேகமாய் ஜெபியிலிருந்து கத்தியை எடுத்தான். தன் உயிர் போவது நிச்சயம் என்று சரவணனுக்குத் தெரிந்துவிட்டது. மனைவியின் பக்கம் பார்த்தான். அவள் அழுது கொண்டிருந்தாள்.

    அந்த வேகம் எங்கிருந்து வந்ததோ தெரியாது. சுட்டு விரலையும், நடு விரலையும் கத்தி போல் செய்து எதிராளியின் கத்தியைவிட வேகமாய், அவன் முகத்தின் பக்கம் கொண்டு போனான். எதிரி கையிலிருந்த கத்தி இவன் கையைத் தொடுவதற்கு முன் சரவணனின் விரல்கள் அவன் கண்களைக் குத்திவிட்டன.

    கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்ட இந்த இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்த்து ஜூனியர் ரௌடி பயந்து விட்டாலும், உடனே சமாளித்துக் கொண்டு சரவணன் மேல் தாவினான். அது அவனுடைய மானத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை. சரவணனுக்கு உயிருக்குச் சம்பந்தப் பட்ட பிரச்சனை.

    இருவரும் அந்தச் சேற்றில் சண்டை போட்டார்கள். சுற்றிலும் கூடிவிட்ட மக்கள் வெறும் பார்வையாளர்களாய் நின்றிருதார்கள். சமுதாயத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. யாராவது தம்முடைய உரிமைக்காகப் போராடினாலும், மற்றவர்கள் அதற்குத் துணை வரமாட்டார்கள் என்பது அங்கு நிரூபணமாகிக் கொண்டிருந்தது.

    மான பயத்தைவிட, பிராண பயம் அங்கு வெற்றி கொண்டது. சரவணன் அந்த ரௌடியைத் தோற்கடித்து விட்டு எழுந்து நின்றான். சேற்றில் மூழ்கி எடுக்கப்பட்ட பதுமை போலிருந்தான். மனைவியைப் பார்த்துச் சிரித்தான். இரும்புக் கம்பி மேல் விழுந்த முதல் ரௌடி எழுந்ததும், கடையில் முதல் வரிசையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து சரவணனின் தலையில் ஓங்கி அடித்ததும் நிமிட நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.

    சுற்றிலுமிருந்த மக்கள் கூக்குரலிட்டார்கள்.

    இரண்டு கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்து விட்டான் சரவணன். தலையிலிருந்து ரத்தம் தாரையாய் வழிந்து கொண்டிருக்க அவன் நினைவ்ழந்தான்.

    பத்து நிமிடம் கழித்து அங்கு ஆம்புலென்ஸ் வந்தது.

    இந்தக் கதை இப்பொழுதுதான் தொடங்குகிறது

    ****

    1

    காற்றில் மிதந்து வந்த மருந்து வாசனை, அந்த இடத்தை ஹாஸ்பிடலாய் உணர வைத்தது.

    நல்ல வேளை! தலையில் எலும்பு ஏதும் உடையவில்லை.

    அவன் கண்களைத் திறந்தான்.

    தொலைவில் ஒரு டாக்டர் ஸ்கல் எக்ஸ்ரேயைப் பரிசீலித்துக் கொண்டிருந்தார். இன்னும் இருவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவன் கண்களைத் திறப்பதை நர்ஸ் கவனித்தாள். எல்லோரும் அவனருகில் வந்தார்கள். டாக்டர் மற்றொரு முறை பரிசீலித்துவிட்டு மறுபடியும் சொன்னார்.

    அதிர்ஷ்டம் நல்லாயிருக்கு.

    அவன் எழுந்து உட்கார்ந்தான். தலையில் பாண்டேஜ் இருந்தது

    நீங்க வீட்டுக்குப் போய் விடலாம். பலமாய் அடிபட்டதால் நினைவு இழந்து விட்டீர்கள். அவ்வளவுதான். பத்து நாட்களுக்குத் தொடர்ந்து வந்து பாண்டேஜை மாற்றிக் கொள்ளுங்கள்.

    தாங்க்ஸ் டாக்டர்!

    வெளியில் உங்க மனைவி காத்துக் கொண்டிருக்கிறாள்.

    அவன் நெற்றியைச் சுளித்தான். மனைவியா? இன்னும் திருமணமே ஆகவில்லை என்றான்.

    எல்லோரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள்.

    என் பெயர் சைதன்யா!

    ஒருவரும் பேசவில்லை.

    நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? என்னைப் பார்க்க யாருமே வரவில்லையே ஏன்? சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டான்.

    உங்களுக்காக யார் வருவாங்கன்னு எதிர்பார்க்கிறீங்க?

    ப்ரொட்யூசர்ஸ்! டைரக்டர்ஸ்! என்னை அடையாளம் தெரியவில்லையா? நான் சைதன்யா.

    அதாவது தற்போது சினிமா உலகில் டாப் ஸ்டாராக இருக்கும் சைதன்யா நீங்கதான் என்று நினைக்கிறீங்களா?

    நினைப்பதாவது? நான்சென்ஸ்! நான்தான் சைதன்யா!

    நர்ஸ் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள். ஆனால் அனுபவம் மிகுந்த டாக்டரின் முகத்தில் வேதனை தெரிந்தது. நயமாயச் சொன்னார். பாருப்பா. உன் பெயர் சரவணன். வெளியின் உன் மனைவி, மகள் இருக்காங்க. உன் பிரெயின் சேல்ஸ் முழுவதுமே இறப்பதற்குள் ஆக்டிவேட் பண்ண முயற்சி செய்.

    அவன் கட்டிலிலிருந்து சட்டென்று இறங்கினான்.

    எனக்கு இல்லை. உங்களுக்குத்தான் மூளை கலங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் என் போட்டோ பேப்பரில் வந்துகொண்டே இருக்கும். உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாமல் இருப்பதாவது? போனைக் கொடுங்க.

    எதற்கு?

    என் வீட்டுக்கு போன் பண்றேன். இல்லாவிட்டால் வாகினிக்கோ, எ.வி.எம். ஸ்டூடியோவுக்கோ போன் செய்து என் டைரக்டரை வரச் சொல்கிறேன்.

    உங்க வீட்டு போன் நம்பர் என்ன?

    9-3-4-3-9-2.

    அது செக்ரடேரியட்டின் நம்பர். டாக்டர் நிதானமாய்ச் சொன்னார்.

    நோ!! என்று கடத்தினான்.

    டாக்டர் அவன் கத்தலைப் பொருட்படுத்தாமல் நர்ஸ் பக்கம் திரும்பி, டு ஸ்கான் தி பிரெயின் அரேஞ்ச டு சென்ட் ஹிம் மென்ட்டல் ஹாஸ்பிடல் என்றார்.

    நான்சென்ஸ்!! இந்தத் தடவை இன்னும் பலமாய்க் கத்தினான். அந்த நம்பர் என்னுடையதுதான். என்னை ஒரு தடவை போன் செய்ய....

    அவன் பேச்சு பாதிலேயே நின்றுவிட்டது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் உள்ளே வந்தாள். நடந்த விஷயங்கள் அவளுக்குப் புரிந்தாற்போல் இல்லை. கணவன் சாதாரணமாக இருப்பதைப் பார்த்து சந்தோஷமாக அருகில் வந்தாள்.

    பாரு சரவணன்! நீ செக்ரடேரியட்டில் கிளார்க். இவள் உன் மனைவி.

    இல்லை. நான் சைதன்யா. எ ஹீரோ இன் பிலிம் இண்டஸ்ட்ரீ.

    என்னங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? அவள் இன்னும் அருகில் வந்தாள். அதற்குள் நர்ஸ் அவனுக்கு இஞ்செக்ஷன் போட்டாள்.

    அவன் மயக்கத்தில் ஆழத் தொடங்கினான்.

    9344392 செக்ரடேரியட்டின் நம்பர் இல்லை. அது ஹீரோ சைதன்யாவின் வீட்டு நம்பர்தான். நர்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    உனக்கு எப்படித் தெரியும்?

    நான் அவருடைய விசிறி சார்.

    நினைவு இழப்பதற்கு முன் அவன் காதில் விழுந்த கடைசி வார்த்தைகள் இவை.

    மறுபடியும் அவனுக்கு நினைவு திரும்பிய போது ஒரு விசாலமான அறையின் இருந்தான். தொலைவில் நின்று கொண்டிருந்த நர்ஸ் அவன் விழித்திருந்தததைக் கவனித்து அருகில் வந்தாள்.

    நான் எங்கே இருக்கிறேன்?

    மெண்டல் ஹாஸ்பிடலில்.

    அவன் அந்த அறையைக் கவனமாய்ப் பார்த்தான்.

    நீங்க தமிழ்ப் பெண்தானே சிஸ்டர்?

    ஆமாம்.

    சினிமாவுக்குப் போவீங்களா?

    போவேன்.

    என் சினிமா ஏதேனும் பார்த்தீங்களா?

    அவள் ஏதோ சொல்வதற்குள் வெளியில் சந்தடி கேட்டது. நான்கு டாக்டர்கள் உள்ளே வந்தார்கள்.

    ஹெளவ் ஆர் யூ மிஸ்டர் சரவணன்? எல்லோரையும் விட வயதில் பெரியவராய் தென்பட்ட டாக்டர் கேட்டார்.

    நீங்க யாரு?

    நான் இந்த ஹாஸ்பிடல் சீஃப்.

    முந்தைய ஹாஸ்பிடலில் சொன்னவற்றை நீங்க நம்பாதீங்க. என் பெயர் சைதன்யா. தற்பெருமையாக சொல்லிக் கொள்வதாக நீங்கள் எண்ணா விட்டால், என்னை அடையாளம் தெரியாதவர்கள் இந்தத் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட யாருமே இருக்க மாட்டார்கள். ப்ரேக் டான்ஸ், டூப இல்லாமல்ஃபைட்ஸ், இளைஞர்களின் நடுவில் என் கிரேஸ் உயர்த்தியது. அவர்களில் யாரையேனும் கூப்பிடுங்கள். இல்லாவிட்டால் உங்களில் யாராவது சரி... ஒருவருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை என்றால் நான் நம்பமாட்டேன். போகட்டும், என் வீட்டு முகவரியைத் தருகிறேன். என் தாயை இங்கே அழைத்து வாருங்கள். அவள்கூட என்னை அடையாளம் கண்டுகொள்ளா விட்டால், நீங்க சொல்வதை நம்புகிறேன். எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று ஒப்புக்கொள்கிறேன்.

    கட்டாயம்.... அப்படியே செய்வோம். அதற்குமுன் ஒரு சின்ன கேள்வி. விஜயநகரத்தில் ஒரு பதினாறு வயது பையனுக்கு ஜுரம். அந்த ஜுர வேகத்தில், தான் சைதன்யாவின் விசிரி என்றும், அவரை நேரில் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறான். அவனுடைய டாக்டர் உங்களிடம் வந்து அந்த விஷயத்தைத் தெரிவிக்கிறார். சொல்லுங்கள். நீங்க போவீங்களா?

    விஜயநகரம்... அவ்வளவு தூரம்.. ஷூட்டிங்கை விட்டுவிட்டு. தயக்கமாகச் சொன்னான்.

    அதுவும் சாதாரண ஜுரத்திற்கு. டாக்டர் கூட்டினார்.

    ஆமாம். சாதாரண ஜுரத்திற்கு. அவன் சிரித்தான். மேலும் இப்படி எல்லோருடைய வீட்டுக்கும் போகத் தொடங்கினால் என்னுடைய நேரமெல்லாம் ஊர்கள் சுற்றுவதற்கே போய்விடும்.

    அப்படி இருக்கும் போது, மென்டல் ஹாஸ்பிடலில் யாரோ சரவணன், தான்தான் சாதனையா என்று சொன்னால் அந்த டாக்டர் போய் சைதன்யாவின் தாயை வரச்சொல்லி அழைப்பது நன்றாக இருக்குமா?

    அவன் முகம் களையிழந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எனக்கொரு முறை ஃபோன் செய்துகொள்ளும் வாய்ப்பு கொடுப்பதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? என்றான்.

    உங்க வீட்டில் யார் யார் இருப்பாங்க?

    என் தாய், வேலைக்காரங்க, என் செகரெட்ரி.

    சரி, போன் செய்து கொள்ளுங்கள்.

    9 3 4 4 3 9 2

    ட்ரிங்க் ... ட்ரிங்க்...

    மறுமுனையில் யாரோ ரிசீவர் எடுத்த சத்தம்.

    ஹலோ!

    யார் பேசறது? அவன் கேட்டான்.

    மறுமுனையில் குரலில் எரிச்சல் தென்பட்டது. யார் வேண்டும் உங்களுக்கு?

    அம்மாவைக் கூப்பிடு.

    எந்த அம்மா?

    சைதன்யாவின் அம்மாவை. நான்தான் சைதன்யா.

    யாரு?

    சீக்கிரமாய் அம்மாவைக் கூப்பிடு.

    நிமிடம் கழித்து வேறு குரல் லைனில் வந்தது.

    யாரு வேண்டும்? சைதன்யாவின் செகரெட்ரி ராஜனின் குரல் ஒலித்தது. அவன் நிம்மதியாய் மூச்சு விட்டான்.

    நான்தான் சைதன்யா.

    என்ன வேண்டுமோ சொல்லுங்கள்.

    அம்மா இல்லையா?

    அம்மா போன வாரம்தான் காஷ்மீர் போனாங்க, சைதன்யாவுடன்.

    ராஜன்! நான்தான் சைதன்யா!!

    ஆமாம். சொன்னீங்களே. வேறு யாரோ சைதன்யா என்று நினைத்து எரிச்சலுடன் சொன்னான்.

    அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு, நேற்று ஷூட்டிங் கிளம்பும்போது அம்மா எனக்கு டிபன்கூட கொடுத்தாங்க. போன வாரம் காஷ்மீர் போயிருப்பதாவது? உண்மையிலேயே நீ ராஜன்தானா? கேட்டுக் கொண்டிருந்தபோதே

    Enjoying the preview?
    Page 1 of 1