Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akbar Birbal Stories
Akbar Birbal Stories
Akbar Birbal Stories
Ebook197 pages2 hours

Akbar Birbal Stories

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Interesting collection of Akbar Birbal stories for Children.
Languageதமிழ்
Release dateJul 29, 2016
ISBN6580110801380
Akbar Birbal Stories

Read more from Udayadeepan

Related to Akbar Birbal Stories

Related ebooks

Reviews for Akbar Birbal Stories

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    I liked the pictures of the story.Ok thanks love regards

Book preview

Akbar Birbal Stories - Udayadeepan

http://www.pustaka.co.in

அக்பர் பீர்பால் கதைகள்

Akbar Birbaal Kadhaikal

Author:

உதயதீபன்

Udayadeepan

For more books
http://www.pustaka.co.in/home/author/udayadeepan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

2. ஆகாயத்தில் அழகிய மாளிகை

3. அக்பருக்கும் பீர்பாலுக்கும் அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு

4. அசலும் போலியும்

5. ஆண்டவனிடம் பெற்ற அறிவு

6. ஆண்டவன் அளித்த தண்டனை

7. அபசகுனம்

8. ஆந்தைகளின் மொழி

9. அறிவுப் பானை

10. ஏமாற்றாதே, ஏமாறாதே!

11. உழைத்து வாழ வேண்டும்

12. கடவுளும் தூதுவர்களும்

13. கடவுள் ஒருவரே

14. கிணற்றுக்குள் வைர மோதிரம்

15. காயத்ரி மந்திரம்

16. காவல்காரர்கள் பெற்ற பரிசு

17. குழந்தையின் அழுகை

18. குளிரில் நின்றால் பரிசு

19. காளை மாட்டின் பால்

20. கொடுக்கும் கை கீழே, வாங்கும் கை மேலே!

21. சத்தியமே வெல்லும்!

22. சத்திரம்

23. சிறந்த ஆயுதம்

24. சிறிய தவறும் பெரிய தண்டனையும்!

25. செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்

26. தண்டனைக்குத் தகுந்த குற்றம்

27. திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி?

28. தொழில்

29. நெய் டப்பாவில் பொற்காசு

30. புகையிலை

31. பீர்பாலின் புத்திசாலித்தனம்

32. பொறாமையால் அமைச்சர் பதவியை இழந்தவர்கள்

33. பொற்காசுகளை திருடிய செல்வந்தர்

34. மக்கள் நேர்மையானவர்களா?

35. மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை!

36. முட்டாள்களிடம் எப்படி பேசுவது?

37. முட்டாள்களின் கேள்விகள்

38. முதல் வழக்கில் வெற்றி!

39. முத்திரை மோதிரத்தின் மகிமை

40. யாருக்கு மரண தண்டனை?

41. யார் பெரியவர்?

42. விலைமதிப்புள்ள பொருள்

43. வேந்தராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்

44. வெயிலும் நிழலும்

45. வேலை இழந்த அரண்மனை சேவகர்கள்

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அக்பரின் அரசவையில் இருந்த பீர்பாலின் புகழ் இந்திய நாடு தவிர அயல்நாடுகளான பாரசீக நாட்டிலும் பரவியிருந்தது. ஆதலின், பாரசீக மன்னர் பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி மன்னர் அக்பருக்கு ஓர் ஓலை அனுப்பினார்.

மன்னர் அக்பரும் சில பரிசு பொருட்களுடன் பீர்பாலை பாரசீக நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

பரிசுப் பொருட்களுடன் பாரசீகம் சென்ற பீர்பாலை ராஜமரியாதையோடு வரவேற்பளித்து விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர் பாரசீக அதிகாரிகள். பீர்பாலின் அறிவாற்றலை சோதிக்க விருப்பம் கொண்டார் பாரசீக மன்னர். பீர்பாலும் இதுவரையில் பாரசீக மன்னரை நேரில் பார்த்ததும் இல்லை. ஆதலின், அரசவையில் அரசரை சந்திக்க ஆவலுடன் காத்திருந்தார் பீர்பால்.

மறுநாள்-

பீர்பாலை மிக மரியாதையுடன் அரசவைக்கு அழைத்துச் சென்றார் அதிகாரிகள்.

அரசவையில் அரசர் அமர்வதற்காகப் போடப்பட்டுள்ள ஆசனங்கள் ஐந்து போடப்பட்டு, ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர்கள் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். அரசவைக்குச் சென்ற பீர்பாலுக்கு ஆச்சரியமாகி விட்டது. அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்திலும் அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இந்த ஐவர்களில் எவர் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார்.

பின்னர், ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆசனத்தின் அருகே சென்று, மேன்மை மிகு பேரரசே! தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள்.

பாரசீக மன்னருக்கு பெரும் வியப்பாகி விட்டது. தான்தான் மன்னர் என்பதை எப்படி உடனடியாக பீர்பால் அறிந்து கொண்டார் என்று பீர்பாலைப் பார்த்து, எப்படி நான்தான் மன்னர் என்பதை அறிந்து கொண்டீர்கள்? என வினவினார்.

மேன்மைமிகு மன்னர் பெருமானே! இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. அது மட்டுமின்றி அவர்களின் பார்வையில் ஒருவித மிரட்சி இருப்பதைக் கண்டேன். ஆனால், தாங்கள் மட்டுமே அரசர்களுக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டு வணங்கினேன். அதுமட்டுமின்றி என்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய செயல்கள் முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார் பீர்பால் அவர்கள்.

பீர்பால் கூறியதைக் கேட்ட அரசர், அவரது பேராற்றலைப் பாராட்டி பரிசுகள் வழங்கி, சில நாட்கள் அரச விருந்தினராக இருக்கச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார் பாரசீக மன்னர்.

2. ஆகாயத்தில் அழகிய மாளிகை

ஒரு நாள் மாலை நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் தென்றல் காற்றை அனுபவித்தபடி அக்பரும் - பீர்பாலும் பேசிக்கொண்டு உலவிக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் அக்பருக்கு திடீரென்று ஒரு நாள் ஆசை ஏற்பட்டு, பீர்பால் அவர்களே! எனக்கு ஆகாயத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்ட வேண்டும் என்று எண்ணுகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று அரசர் கேட்டார்.

அரசரின் பேச்சைக் கேட்டதும் பீர்பால் திடுக்கிட்டார். ‘மன்னரிடம் எப்படி முடியாது என்று கூறுவது’ என்று தயங்கியபடியே முயன்றால் முடியும் மன்னா! என்றார்.

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. அதற்கான ஆக்கப்பூர்வமான வேலையில் இறங்கி வெகு சீக்கிரம் முடியுங்கள் என்றார் அரசர்.

‘மன்னரின் ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டும் ஆசை எப்படி சாத்தியமாகும். அசட்டுத்தனமான இந்த ஆசை நிறைவேறவே வாய்ப்பு இல்லை. ஆகையினால், இந்த வேலை முடியாதது என்பதை மன்னரே உணர்ந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான் பீர்பால்.

என்ன பீர்பால்... நான் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனமாக உள்ளீர்! என்றார்.

"அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்டுவதற்கு முன்னர் பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதனைச்

செய்வதற்கே மூன்று மாதம் ஆகிவிடும். அதன் பின்னர் தான் கட்டிடம் கட்ட முடியும்" என்றார் பீர்பால்.

தாங்கள் கூறியபடியே ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நாளை காலை கஜானாவிலிருந்து அதற்கான பணம் வரும் என்றார் மன்னர்.

பீர்பால் கூறியபடியே, மறுநாள் காலை வேடன் ஒருவன் வந்து சில கிளிகளைக் கொடுத்து விட்டுச் சென்றான். வேடன் சென்றதும் கிளிகளை ஒரு கூண்டில் அடைத்து அதற்கு சில வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் ஆகாயத்தில் மாளிகை கட்டும் பணிக்கு ஆட்களை திரட்டி வர வெளியூர் சென்றிருப்பதாகவும் மன்னருக்கு தகவல் சொல்லியனுப்பினார் பீர்பால்.

மூன்று மாதங்கள் முடிந்ததும் அரண்மனைக்கு வந்து அரசரை சந்தித்தார் பீர்பால். அரசே! ஆகாயத்தில் அழகிய மாளிகை கட்ட ஆட்களை தயார் செய்து விட்டேன். அவர்களை நீங்கள் வந்து பார்வையிட்டதும் வேலையைத் தொடங்கி விடலாம்! என்றார் பீர்பால்.

பீர்பால் கூறியதைக் கேட்டு மன்னர் மகிழ்ச்சியடைந்தார். ஆர்வமிகுதியால் உடனே பீர்பாலுடன் புறப்பட்டுச் சென்றார் மன்னர். கிளிகள் இருந்த அறைக்கு அரசரை அழைத்துச் சென்றார் பீர்பால். அந்த அறையில் அரசரும் பீர்பாலும் மட்டுமே இருந்தனர். அரசரைப் பார்த்ததும் கிளிகள், சுண்ணாம்பு கொண்டு வா! செங்கல்லை கொண்டு வா! சாரத்தைக் கட்டு! கல்லை இந்தப் பக்கம் போடு! சுண்ணாம்பைப் பூசு! என்று ஒவ்வொன்றும் பேச ஆரம்பித்தது.

அரசருக்கு ஆச்சரியமும், அதே சமயம் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. பீர்பால் இது என்ன? என்றார் கடுங்கோபத்துடன்.

மன்னர் பெருமானே! என்னை மன்னிக்க வேண்டும். ஆகாயத்தில் கட்டடம் கட்ட பறவைகளினால்தான் முடியும்! ஆகையினால் தான் இவைகள் பேசுகின்றன. இவைகளெல்லாம் நல்ல பயிற்சி பெற்றவையாகும். ஆதலால், ஆகாயத்தில் மாளிகை கட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்து விடலாம் என்றார் பீர்பால்.

பீர்பால் கூறியதைக் கேட்டதும் மன்னருக்குப் புரிந்து விட்டது. ‘ஆகாயத்தில் - அந்தரத்தில் எப்படி மாளிகை கட்ட முடியும். இது நடக்க முடியாத விஷயம் என்பதை நாசுக்காக நமக்கு உணர்த்துகின்றார்’ என்பதை புரிந்து கொண்டு புன்னகைத்தார் மன்னர். கட்டிடம் கட்டும் தொடர்பான வார்த்தைகளை சிரமப்பட்டு பீர்பால் கற்றுக் கொடுத்ததை எண்ணி பீர்பாலை மனதாரப் பாராட்டினார் அக்பர்.

3. அக்பருக்கும் பீர்பாலுக்கும் அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு

அக்பருக்கும் பீர்பாலுக்கும் அடிக்கடி ஏற்படும் மனவேறுபாடு அன்றைக்கும் ஏற்பட்டது. அக்பர் ஏதோ சொல்ல, அதற்கு பதிலாக பீர்பால் எதையோ சொல்ல... பேச்சு வளர்ந்து பெரிய சச்சரவில் கொண்டு போய் விட்டு விட்டது. மன்னர் கோபம் கொண்டார்.

"இனிமேல் என்னுடைய மண்ணில் நீ வாழக்கூடாது.

எனது ஆளுகைக்கு உட்பட்ட மண்ணில் நீர் நடமாடுவதை குற்றமாக நான் கருதுகிறேன். அதனால் என் மண்ணைவிட்டு நீ வெளியேறி விடவேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தார்.

சரி. உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்ட மண்ணில் நான் வாழமாட்டேன்! என்று வீராப்பாகச் சொன்ன பீர்பால் அங்கிருந்து வெளியாகி சீன நாட்டுக்குச் சென்றார். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான மூட்டைகளுடன் தில்லி வந்து சேர்ந்தார்!

பீர்பால் ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று சிலகாலம் இருந்து விட்டு இப்போது மீண்டும் தில்லிக்கே வந்துவிட்டதை அக்பர் அறிந்தார். உடனே அவருக்கு சினம் வந்தது. தனது தலைமை அமைச்சரை அனுப்பி பீர்பாலை உடனே அரசவைக்கு அழைத்து வரச் சொன்னார்.

பீர்பாலின் இல்லம் சென்ற அமைச்சரை அன்போடு வரவேற்று வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினார்.

இது என்ன வீட்டுக்குள்ளும் வெளியிலும் மண்ணைக் கொட்டி வைத்திருக்கிறீர்களே? என்று கேட்டார் அந்த அமைச்சர்.

இந்த மண் சீன நாட்டில் இருந்து கொண்டு வந்தேன். ஒரு காரணத்திற்காகத்தான் பரப்பி வைத்திருக்கிறேன்! என்று கூறினார். பின்னர் அந்த அமைச்சரின் வண்டியைப் பின்தொடர்ந்து தன் வண்டியிலேயே அரசவை நோக்கி புறப்பட்டார்.

செல்லும் வழியில்... இதென்ன வண்டிக்குள்ளும் இவ்வளவு மண்? என்று கேட்டார் அந்த அமைச்சர்.

எல்லாம் காரணமாகத்தான்! என்று பதில் அளித்தார் பீர்பால்.

அரண்மனைக்குச் சென்றதும் அரசர் முன் நின்று வணங்கினார் பீர்பால்.

என் உத்தரவையும் மீறி இன்னும் தில்லி நகரத்தில் உலவுகிறீர்? என்னுடைய உத்தரவை அலட்சியம் செய்கிறீர்! என்னை மதிக்காமல் இந்த மண்ணில் உம்மால் வாழ்ந்து விட முடியுமா? என்று கோபத்துடன் கேட்டார் அக்பர்.

மன்னர் பெருமானே! தங்கள் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் உத்தரவை அப்படியே பின்பற்றி வருகிறேன்! என்று சொன்னார் பீர்பால் பவ்யமாக.

எங்கே நிறைவேற்றுகிறீர்? இப்போது தில்லியில் அல்லவா நீர் தங்கி இருக்கிறீர்?

Enjoying the preview?
Page 1 of 1