Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugal Kathirukindrana
Kanavugal Kathirukindrana
Kanavugal Kathirukindrana
Ebook196 pages1 hour

Kanavugal Kathirukindrana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சி.ஜே. ஷாஜஹான் பொறியாளராக, பன்னாட்டு நிறுவனங்களின் பொதுமேலாளராக, இந்தியாவிலும், வளைகுடா நாடுகளிலும் பணிபுரிந்த இவரின் சிறுகதைகளும்,நாவல்களும் தமிழின் தலைமையிதழ்களில் வெளிவந்திருக்கின்றன. ஆனந்த விகடனில் வெளியான ‘ கோலம் ‘ என்ற இவரது சிறுகதை மத நல்லிணக்கத்திற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தமிழக அரசின் முதற் பரிசான ரூ 10,000 பரிசு பெற்றது.

இவருடைய சமூக மற்றும் அரசியல் கட்டுரைகள் ஆங்கில நாளேடுகளான The Hindu, The Indian Express, Arab News, Saudi Gazettee –ல் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், தமிழ் இரண்டிலுமே சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.

நார்வேயிலிருந்து ஜப்பான் வரை உலக நாடுகளனைத்திற்கும் பயணம் செய்துள்ள இவர் சென்னையிலுள்ள தலைமைத் திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகப் ( Motivational Speaker ) பங்காற்றி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580109001420
Kanavugal Kathirukindrana

Read more from C.J. Shahjahan

Related authors

Related to Kanavugal Kathirukindrana

Related ebooks

Reviews for Kanavugal Kathirukindrana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugal Kathirukindrana - C.J. Shahjahan

    http://www.pustaka.co.in

    கனவுகள் காத்திருக்கின்றன

    Kanavugal Kathirukindrana

    Author:

    சி.ஜே. ஷாஜஹான்

    C.J. Shahjahan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/cj-shahjahan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    கனவுகள் காத்திருக்கின்றன.

    1

    At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. We end today a period of ill fortune and India discovers herself again.

    - Jawaharlal Nehru in his

    first Independence Day speech, 1947

    பருவத்தின் தலைவாயிலில் நின்றுகொண்டு கள்ள மில்லாது சிரிக்கும் மங்கையைப் போல, அந்தச் செம்மண் பாதையின் இருமருங்கிலும் அலையலையாய் மோதிச் சிரிக்கும் நெற்கதிர்களின் நாணத்தில், பச்சைப் பசேலென்ற வயல்களின் குளுமை நெஞ்சைச் சுண்டியிழுத்தது.

    வசந்த் ஜீப்பின் இஞ்சினை அணைத்துவிட்டுக் கீழே குதித்தான்.

    செம்மண் புழுதியில் அவனுடைய அமெரிக்கன் ஸ்போர்ட்ஸ் ஷூஸ் சிவந்து நின்றன.

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே பசுமை...

    இடையிடையே முளைத்து நிற்கும் தென்னந்தோப்பு களிலிருந்து கிளம்பி வரும் ரீங்காரத்தைத் தவிர வேறு சப்தமேயில்லாத இந்த அமைதி...

    நிமிடத்துக்கொரு முறை தலைக்கு மேலே கிறீச்சிட்டுச் செல்லும் சிட்டுக் குருவிகளைத் தவிர வேறு ஒட்டமே யில்லாத இந்த அழகான நிசப்தம்... தூரத்தேயாரைப் பற்றியும் கவலைப்படாது வரிசை வரிசையாகக் குனிந்து கொண்டு, முழங்கால்கள் சேற்றில் புதைய நாற்று நட்டுக் கொண்டிருக்கும் கூலிப் பெண்களின் மெல்லிய சிரிப்பொலியைத் தவிர வேறெந்த அசைவுகளேயில்லாத இந்த நளினம்...

    எல்லாமே இன்னும் இரண்டே வருடங்களில் நசுக்கப்பட்டு விடுமோ?

    இந்தப் பசுமையை அழித்து அதன்மேல் தார் ரோட்டின் கருமை அழுத்தப்பட வேண்டும். அதோ அந்தத் தென்னை மரங்கள் வெட்டியெறியப்படும். அந்தக் கூலிப் பெண்கள்... அவர்களில் சிலர் தொழிற்சாலையில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். பாவம். இந்த ஊர்க் குருவிகள்தான் அனாதைகளாகிவிடும்...

    ஒப்புதலளிக்கப்பட்ட ப்ளூபிரிண்ட் பிரகாரம் இந்தச் செம்மண் பாதையை அகலப்படுத்தித் தொழிற்சாலையின் பிரதான பாதையாக மாற்ற வேண்டும். டவுன்ஷிப் கட்டி முடிக்கப்படும் பொழுது இந்த அழகான வயல்களின் மேல் அதிகாரிகளுக்கான குவார்ட்டர்ஸ் தயாராகிவிடும். இன்னும் இரண்டே வருடங்களில் இந்த அமைதி செத்துப்போய், இரவும் பகலும் உரங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் பெருத்த ஒசைகளும், தொழிலாளர்களின் சைக்கிள் மணி யோசைகளும்...

    குருவிகளே... நீங்கள் வேறு தென்னந்தோப்பிற்குப் போய்விடுவது நல்லது.

    அவன் சிரித்துக் கொண்டே பாதையோரம் நடந்தான்.

    அமெரிக்காவில் ஹார்வார்ட் யுனிவர்ஸிடியில் படித்துக் கொண்டிருந்தபொழுது அவனுடைய தோழி மேரி ஹாம்பி சொன்னது நினைவில் இடறுகிறது.

    வசந்த், உங்களுடைய கிராமங்கள் எவ்வளவு அழகானவை! அவற்றை அழித்து இயந்திரமயமாக்குவது ஸ்டுப்பிட்...

    நோ மேரி. தொழில் வேகத்தில் முன்னேறி வாழ்க்கையை அனுபவிக்கும் உங்களைப் போல எங்களுடைய மக்களும் முன்னேற வேண்டுமென்றால் இந்தத் தொழில் மாற்றம் நடந்தே தீர வேண்டும். கிராமங் களென்ன, வெளிநாட்டினருக்குக் காண்பிக்க நாங்கள் வைத்திருக்கும் மியூஸியங்களா? ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சி பெற இந்தத் தொழில் வேகம் அவசியமே. ரஷ்யாவைப் பார்க்கவில்லையா...

    மேரி ஒத்துக் கொள்ள மாட்டாள்.

    தம்பீ...

    வசந்த் திரும்பிப் பார்த்தான்.

    தூரத்தில் கிணற்றருகே இஸ்மாயில் ராவுத்தர் நின்று கொண்டிருந்தார்.

    அவன் திரும்பி வரப்பின் மேல் நடந்தபொழுது, தவளைகள் சில தாவிக் குதித்தன.

    'என்னங்க. செளக்கியமா..."

    வாங்க தம்பீ இப்படி உக்காருங்க. என்ன விடியக் காத்தாலேயே இந்தப் பக்கம் பொறப்புட்டு வந்துட்டீங்க...

    கட்டம் போட்ட வெள்ளை லுங்கியை இடுப்பில் தூக்கிக் கட்டிக் கொண்டவர், மேல் துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டார். கிணற்றில் குளித்துவிட்டு வந்திருப் பார் போலிருக்கிறது.

    சும்மாத்தான் வந்தேன்... உங்க பள்ளிக்கூடமெல்லாம் எப்படியிருக்கு?

    ஸ்கூல் வேலையென்னங்க பெரிய சுமையா? வாத்தியாருங்கதான் நிரந்தரமா தங்க மாட்டேங்கறாங்க. அந்த இங்லீஷ் டீச்சரம்மா சிதம்பரத்திலே கேர்ள்ஸ் ஸ்கூல்லே வேலை கிடைச்சிடிச்சின்னு யோசனை பண்ணாமப் போயிடிச்சு. இந்தக் கிராமத்துக்கு யாருங்க நிரந்தரமா வரப் போறாங்க? பசங்களுக்கும் மண்டையிலே படிப்பே ஏறதில்லே. அவங்க ஆயி அப்பனும் பசங்க வயக்காட்லே கூலி வேலை செஞ்சாப் போதும்னு கூட்டிட்டுப் போயிடறாங்க...

    இஸ்மாயில் ஸார். ஊர்ப் பெரியவரான நீங்களே இப்படி அலுத்துக்கிட்டா எப்படி? கொஞ்சங் கொஞ்சமாத் தான் ஜனங்களை மாத்தணும். ஆமா, இன்னிக்கு ஸ்கூல் இல்லையா? நீங்க இங்கே இருக்கீங்க..

    நம்ப பழனியாப்பிள்ளை-அதாங்க நம்ப பஞ்சாயத்துப் பிரஸிடெண்ட்-ஏதோ கட்சி மீட்டிங்குக்காகப் பள்ளிக் கூடம் வேணுமின்னார். அதான் லீவ் விட்டுட்டேன்.

    வசந்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

    என்ன ஸார்... அரசியல் கட்சியோட மீட்டிங்குக்காகப் பள்ளிக்கூடத்தை மூடிட்டிங்களா? இது அநியாயம்...

    தம்பீ. நீங்க சின்னப் புள்ளே... உங்க வயசிலே நானும்தான் இப்படித் துடிச்சிக்கிட்டிருந்தேன். இதோ பாத்தீங்களா. காந்தியோட உப்பு சத்தியாக்கிரகத்துலே சேர்ந்து நான் பட்ட அடி. குண்டுபட்டு ஒரு கையே போயிடிச்சு விடுதலை கிடைச்ச பொறகு இந்தியாவே சொர்க்கலோகமாயிடும்னு அப்ப நாங்கள்ளாம் கனவு கண்டோம். சரி விடு தம்பீ... அதெல்லாம் பழங்கதை. நம்ப பழனியாப்பிள்ளை ஆளுங்கட்சியிலே ரொம்ப செல்வாக்கு உள்ளவர். நம்ப தொகுதி எம்.பி.யோட சொந்த மருமகன். அவரை எதிர்த்துக்க முடியுமா?

    நோ... நோ... நீங்க என்ன சொன்னாலும் இது ரொம்ப அநியாயம்.

    தம்பீ. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நான் உங்களைவிட வயசிலே பெரியவன். இந்தக் கிராமத்துலே பெரிய தொழிற்சாலை நிறுவ டெல்லியிலிருந்து வந்திருக்கீங்க... பஞ்சாயத்துலேயும் பெரியவங்க எல்லாரும் உங்க பேச்சைக் கேட்டு நஞ்செய் நிலத்தைக்கூட தொழிற் சாலைக்குத் தர ஒத்துக்கிட்டாங்க. நீங்களும் இந்த ஊர்ப் பெரிய புள்ளிங்களோட கொஞ்சம் ஒத்துப் போனிங்கனா தான் நல்லது.

    இஸ்மாயில் ஸார். இந்தக் கிராமத்துலே உரத் தொழிற் சாலை நிறுவ அரசாங்கம் தீர்மானம் செஞ்சது உங்க எல்லோருடைய நன்மைக்குத்தான். இந்த நியாயத்திலே யாரோட குறுக்கீட்டையும் நான் அனுமதிக்கப் போறதில்லே...

    சபாஷ் தம்பீ காந்தியோட இந்த நாட்டிலே சத்தியமும் செத்துப் போச்சுன்னு நெனைக்கிறவன் நான். ஆனா உங்களைப் பாக்கறப்போ எனக்கு சந்தோஷமாயிருக்கு. ஆனா... தம்பீ... ஒரேயொரு விஷயத்தை நெனைச்சாத் தான் மனசு வேதனைப்படுது. இவ்வளவு நாளா நாங்க பெத்த குழந்தைகளைப் போலக் கட்டிக் காத்த இந்த வயக்காட்டை அழிச்சு நீங்க பேக்டரி கட்டப் போறதை நெனச்சாத் தான்.

    இஸ்மாயில் ஸார். நாங்க எல்லா நிலத்தையும் மாத்தப் போறதில்லே. பேக்டரி வேலை ஆரம்பிச்சு நாலு மாசமாச்சு. அது வெறுங் காடாய்க் கிடந்த இடம். பேக்டரியையும் மெயின் ரோட்டையும் இணைக்கிறதுக்கும், அதிகாரி களுக்கான குவார்ட்டர்ஸ் கட்றதுக்கும்தான் இந்த வயல்கள் எங்களுக்குத் தேவை. இன்னும் ரெண்டே வருஷத்திலே பாருங்க. இந்தக் கிராமமே மாறிப் போயிடும். குடிக்கத் தண்ணி கூட இல்லாத இந்த வாழ்க்கையை மாத்திக் காண்பிக்கப் போறேன்... வசந்த் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த போது அவள் அங்கே வந்தாள்.

    'கும்பிட்ரேன் சாமி..."

    அவள் இஸ்மாயில் ராவுத்தரைப் பார்த்துச் சிரித்தாள்.

    என்ன வள்ளி, அப்பனுக்கு சாதம் கொண்டு போறியா...

    ஆமா சாமி. அவரு அங்கே பேட்டரியிலே கூலி வேலை பாக்கறாரில்லே...

    காட்டுப் பூக்களின் அழகு சிக்கென அவள் உடலில் இறங்கியிருந்தது. செதுக்கி வைத்த கோயில் சிலையைப் போன்ற கட்டான உடலமைப்பில் கருமை நிறம் பளிட்டது. சிவப்பான புடவையின் பின்னணியும், அவளுடைய திமிறும் இளமையும் வசந்தின் நெஞ்சில் மெல்ல மெல்ல இறங்கி...

    வள்ளி, இவர்தான் பேக்டரி இஞ்சினியர்... ஆமா. மடியிலே என்ன முடிஞ்சு வச்சிருக்கே.. வெள்ளரிப் பிஞ்சா... கொண்டா. ஐயாவுக்குக் கொஞ்சம் கொடு....

    அவள் தயங்கினாள்.

    என்ன புள்ளே... தயங்கறே?

    அவள் திடீரென்று எங்கேயோ ஒடினாள்.

    தம்பீ. இவள் அப்பனும் என்னோட சுதந்திரப் போராட்டத்திலே அடி வாங்கினவன்தான். அரிசனக் குடும்பம். இப்ப உங்க பேக்டரியிலே கூலி வேலை செய்றான் போலிருக்கு. வள்ளி ரொம்பவும் துடிப்பான பொண்ணு. நல்ல வாயாடி. அல்லாஹூத்தாலா இவளுக்கேத்த புருசனாக் கொடுக்கணும்.

    அவள் மீண்டும் வந்தாள்.

    பிஞ்சுங்களை கழுவிட்டு வந்தேன். இஞ்சினர் ஐயா அழுக்காயிருந்தா சாப்பிடுவாங்களா...

    அவன் வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கிக் கடித்தான்.

    அவளுடைய அந்தத் திமிறும் இளமை... பளிச்சென்ற சிரிப்பில் உதிரும் அழகு...

    அவனால் சுமித்ராவை நினைக்காமலிருக்க முடிய

    கைகளின் அணைப்பில் தன்னையே இழந்து, அவனது பாபினில் கொடியாய்த் தவழும் அவளது அந்த மென்மையான இளமைக் கனிவுகள்

    ஓ! சுமி... வில் யூ கிவ் மி ஒன் மோர் கிஸ்?

    ஐயா... இன்னும் வேணுங்களா?

    ஊம்... நோ... நோ... அப்ப இஸ்மாயில் ஸார். நான் கிளம்பறேன். பேக்டரிக்குப் போகணும்.

    வரப்பின் மேல் நடக்கத் தொடங்கியபோது தான் அவளும் பேக்டரிக்கு வருவதாகச் சொன்னது நினைவில் இடறியது.

    என்ன வள்ளி, ஜீப்பிலே வர்றியா.

    இதை அவள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஜீப்பில் அவனோடு பிரயாணம் செய்யும் நினைவில் முகம் மலர்ந்தது.

    கமான்...

    பின்னால் ஏறப் போனவளைத் தடுத்து முன் ஸீட்டில் உட்காரச் சொன்னான்.

    அவளும் தயங்கிக் கொண்டே நாணியவாறு முன்னால் உட்கார்ந்தாள்.

    ஜீப் செம்மண் புழுதியைத் துறிக் கொண்டு பறந்தது.

    ஐயா... இவ்வளவு வேகமாப் போறீங்களே...

    என்ன வள்ளி, பயமாயிருக்கா.

    பயமா? யாரைப் பார்த்துக் கேக்கறீங்க. ஆத்துலே தைரியமா நாலு மைல் நீந்துவேன் தெரியுங்களா. நாலு ஆம்பிளைங்களை ஒரே சமயத்துலே சிலம்பம் போட்டு ஜெயிக்க அப்பா எனக்குக் கத்துக் கொடுத்திருக்காரு. ஐயா சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே... உங்களைப் பாத்தா சினிமாவிலே வர்ற கமலஹாசன் மாதிரியிருக்கு...

    அவனால் சிரிக்காமலிருக்க முடியவில்லை.

    சுமித்ரா கூட இப்படித்தான் 'வசந்த், நீங்க குமார் கெளரவ்

    Enjoying the preview?
    Page 1 of 1