Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uratha Sindhanaikal
Uratha Sindhanaikal
Uratha Sindhanaikal
Ebook266 pages3 hours

Uratha Sindhanaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Dr.K.S.Subramanian (1937) belongs to the Thirunelveli District of Tamil Nadu and presently lives in Chennai. He has Masters Degrees in Physics, History, and Business Management and a Doctorate in Public Administration.

He served the Government of India (IRAS) from 1960 to 1975 and the Asian Development Bank from 1975 to 1998, retiring as a Director.

Since his return to India in 1998, he has been involved in literary and social pursuits. He has translated more than 30 Tamil literary works into English. The translations cover 11 novels, 7 novellas, 3 collections of short stories, 7 anthologies of Poetry (including about eighty Sangam Poems). He has also translated a large number of collected essays covering literary and socio-economic themes as also biographical and autobiographical works. He has translated more than 40% of Subramania Bharathiar’s poetic corpus as a part of the proposed Sahitya Akademi publication of the entire works of Bharathi in English translation. His translations have been published by Sahitya Akademi, Macmillan, Katha, East-West Books, New Horizon, Tamil University, International Institute of Tamil Studies, Central Institute of Indian Languages, Kanaiyazhi Pathippagam and others.

He has presented a sizeable number of Papers in Tamil and in English in different fora. These include Papers on eminent creative writers of Tamil such as Subramania Bharathi, Na.Pichamurthy, Laa.Sa.Ramamirtham, Thi. Janakiraman, Ka.Naa. Subramanyam, Asokamithran, Jayakanthan, Venkat Samnathan, Sirpi Balasubramaniam, Erode Thamizhanban and others. The papers also encompass literature – society interface and development – humanism challenges.

He was the compiling editor of Jayakanthan Reader, one of the pioneering efforts in this genre in Tamil. He has collated and brought out seminal articles of the Father of India’s Green Revolution, C.Subramaniam ( a Bharath Ratna Honouree), published by Bharatiya Vidya Bhavan.

Seven volumes of his Tamil articles and Papers have been published, covering literary, social and developmental themes.

He has received a few awards in the field of literary translation. He is a trustee of National Agro Foundation involved in comprehensive rural development, and also a trustee of MOZHI Trust, a resource centre of Tamil language and culture. He is a former member of the Tamil Advisory Board of Sahitya Akademi.

Languageதமிழ்
Release dateAug 9, 2016
ISBN6580108301398
Uratha Sindhanaikal

Read more from Dr.K.S.Subramanian

Related to Uratha Sindhanaikal

Related ebooks

Reviews for Uratha Sindhanaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uratha Sindhanaikal - Dr.K.S.Subramanian

    http://www.pustaka.co.in

    உரத்த சிந்தனைகள்

    Uratha Sindhanaikal

    Author :

    கே.எஸ்.சுப்பிரமணியன்

    K.S.Subramanian

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ks-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.பழையன கழிதலும் புதியன புகுதலும்

    2. எங்கே மொழி நாணயம்?

    3. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - ஒர் அஞ்சலி

    4. ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி

    5. சி. எஸ்.-அரசியலில் ஒரு கலங்கரை விளக்கு

    6. மக்கள் சார்ந்த அறிவியல்

    7. சுற்றுச் சூழல் தனித்து இயங்கும் கோளல்ல

    8. இந்து சமயத்தின் மனிதநேயம்

    9. தொழிலாளர் இயக்கம் : கூறுகள் - கேள்விகள்

    10. இந்தியக் களன் - ஒரு பார்வை

    11. இந்திய அரசியல் அமைப்பு: ஒரு விமரிசனம்

    12. அரசின் பங்கு என்ன?

    13. தேசிய அரசியலில் யாருக்கு இடம்?

    14. இட ஒதுக்கீட்டின் இரு பக்கங்கள்

    15. நிபுணர்களும் நிர்வாகிகளும்

    16. ஜே.கே.வீடியோ படம்

    17. ஜெயகாந்தன் - 66

    18. பிவிப்பின்ஸ் நாட்டு ‘மக்கள் சக்திப் புரட்சி’:

    19. வேரித்தாஸ் வானொலி - தமிழ்ப் பணி

    உரத்த சிந்தனைகள்

    1.பழையன கழிதலும் புதியன புகுதலும்

    ஒரு மொழி அவ்வினத்தின் பாரம்பரியத்தின், பட்ட்றிவின் ஒட்டு மொத்த வெளிப்பாடு. எனவே, ஓர் இனத்தின், வரலாற்றின், பண்பாட்டின் முக்கியமான கூறு, மொழி. மொழி சார்ந்த இனப்பற்று அச்சமுதாயத்துக்கு ஒர் அடையாளக் குவிப்பு மையம் மட்டும் அன்று; வேராகவும், வேர்வழிச் சாறாகவும் உயிரளிக்கும் சிறப்புடையது. தமிழ்ச் சமுதாயத்தில் பரவலாக நாம் எதிர்கொள்ளும் இவ்வினப்பற்று பாராட்டுக்குரியது; காக்கப்பட வேண்டியது.

    ஒவ்வொரு தலைமுறைக்கும் இத்திக்கில் பணியும் பொறுப்பும் உண்டு. மொழிப்பற்றும் இனப் பற்றும் வெற்றுச் சடங்காக, குறுகிய வீச்சுள்ள அரசியல் முதலீடாகத் தேய்ந்துவிடாமல் காக்கவேண்டும். தன் பங்கீடாக ஒவ்வொரு தலைமுறையும் மொழியின் ஆழத்தையும், வீச்சையும் பெருக்கவேண்டும். இதனை வெறும் மொழி சார்ந்த, மொழி வாயிலாக ஊக்குவிக்கத்தக்க விளைவு எனக் கொள்வது தவறான கணிப்பு. ஓர் இனத்தின் சாதனை வட்டம் விரிந்தால் தான் அம் மொழியின் ஆளுமையும் வீரியம் பெறும். அதே நேரத்தில் மற்ற இனத்தவரின், நாட்டினரின் சீரிய சாதனைகளை ஆக்கமான முறையில் தம் சமுதாயத்தின் வாழ்வுடன் இணைத்துக் கொள்ளும் ஆற்றல் இத்திக்கில் பயனுள்ள துணைக் காரணியாகச் செயல்படும். இவ்விரு திக்கிலும் நாம் வெற்றி கண்டுள்ளோமா என்பது கேள்விக்குரியது. நமது சாதனைத் தளத்தில் ஒரு தேக்கநிலை தென்படுகிறது.

    உலக அரங்கில் அறிவியல், தொழில் நுட்பத் துறைகளில் வெடித்தெழும் முன்னேற்றப் பேரலைகளின் பின்னணியில், நமது சாதனை வட்டம் ஒப்புவமை நோக்கில் சுருங்கிவிட்டதோ என எண்ண இடமுள்ளது. பிற நாட்டுச் சாதனைகளை உள்வாங்கிக்கொள்வதில், மேலோட்டமான அரிதாரப் பூச்சுள்ள தாக்கத்தையே காண்கிறோம். ஒரு சில ‘முன்னேற்றங்களும்’ மேல்தட்டு வர்க்கம் சார்ந்த வேர் மட்டத்தைத் தீண்டாத நிகழ்வுகளாகவே உள்ளன. இவை குறித்து பொறுப்புள்ள சிந்தனையும், அதன்வழி பிறக்கும் செயலும் தேவை.

    ஒரு மொழிவழி வெளிப்பாடு அம்மொழியையே சார்ந்திருக்குமானால், ஒரு மொழியின் படைப்புத் தளத்தை மொழியைக் கருப்பொருளாகக் கொண்ட கவலைகளே ஆக்கிரமித்துக்கொண்டால், இப்போக்கு அச் சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாகச் செயல்படும். தமிழ்ச் சமுதாயம் இவ் எதிர்மறைத் தாக்கத்துக்கு இலக்காகி இருந்து வருகிறது. இது குறித்த புரிதலும் விழிப்புணர்வும் தேவை. அணுகுமுறை - செயல்பாட்டுப் பரிணாமம் இவற்றைத் தொடரும்.

    ஓர் இனத்தின் வளர்ச்சியும், அம்மொழியின் வளர்ச்சியும் ஒன்றையொன்று வளப்படுத்தும் காரணிகள். ஓரினம் பல துறைகளில் வெகுவாக முன்னேற்ற மடையாத சூழலிலும், அவ்வின மொழியைச் செழுமைப்படுத்தி, அதன் வாயிலாக அவ்வின வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிட்ட அளவாவது உந்து சக்தியை நல்க முடியும். இத்திசையில் பயனுள்ள விளைவுகளுக்கு வித்துன்ற, தமிழ்மொழிப் படைப்புக் களனில் ஒரு கருப்பொருள் புரட்சி தேவை.

    அறிவியல், சமூகவியல், தொழில்நுட்பவியல் போன்ற துறைகளும், அவற்றின் உயிருள்ள பல கூறுகளும் தமிழ் மொழி வெளிப்பாடுகளில் படிப்படியாக அதிக அளவில் இடம்பெறவேண்டும். இது ஒரு தன்னுணர்வுடன், ஒரு பேரியக்கம் போலப் பேணி வளர்க்கப்படவேண்டிய பணி. இது இன்று கருவுற்று நாளை ஈன்றெடுக்கும் பாங்கில் அமைவதன்று. இந்தப் பணியின் பயன் மெல்ல மொட்டவிழ்ந்து, மலராகி, காயாகிக் கனியாகும். இதற்கு பொறுமை தேவை; உறுதியான ஈடுபாடு தேவை; இது தமிழ்ச் சமுதாயத்துக்கு,தமிழ் அறிவு ஜீவிகளுக்கு ஒரு முக்கியமான சவால். இந்தக் கடினமான பணியிலிருந்து தந்திரமாகத் தப்பித்துக் கொண்டு, புளித்துப் போன சொற்சுகத்தில் ஆழ்ந்துவிடும் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும்.

    தமிழ்ச் சமுதாயத்தின் இனப்பற்றின்,மொழிப்பற்றின் ஒரு முக்கியப் பரிமாணம், பிற மொழிகளின் பால் உள்ள எதிர்மறை அணுகல். இதனை வெறுப்பு அல்லது காழ்ப்புணர்வு என்று கூறுதல் கூடப் பொருத்தமான வரைமுறையாகலாம். ஆங்கிலம், ஸம்ஸ்க்ருதம், இந்தி முதலிய மூன்று மொழிகளும் இந்த உணர்வுத் தாக்கத்துக்கு இலக்குகள். இந்த உணர்வுக்கு வரலாற்றுப் பின்னணியே இல்லை என எண்ணுவது ஒர் இருட்டடிப்பு முயற்சி. அதே நேரத்தில், வரலாறு என்பது இயக்கமற்ற, நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகித் தேங்கி நிற்கும் குட்டையன்று. அறிவியல் உலகம் எண்ணற்கரிய வேகத்தில் விண்ணோக்கிப் பறக்கிறது.

    மின் அணுவியல் புரட்சி, பரந்த இவ்வுலகை, ஒரு Global Village ஆக, அனைத்துந் தழுவிய கிராமமாகச் சுருக்கி விட்டது. உலகில் மாற்றமே மாற்றவியலாத நிகழ்வாக, நெறியாக நிலைப்பட்டுவிட்டது. கடிதே ஓடினால்தான் இன்று நிற்கும் இடத்தையே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது இன்றைய இயக்க நியதி. பின்தங்கிய நிலையிலிருந்து நம் இனம் முன்னேறப் பல காத தூரம் செல்லவேண்டும். இப் பயணத்தின் தடத்திலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்பும் அரசியல் பூச்சுள்ள, காலத்தினாற் சவமாய்ப்போன நேற்றைய வாய்பாடுகளை நாம் முணுமுணுத்துக்கொண்டிருக்கக் கூடாது. நாம் தொட்டாற் சுருங்கிகளாக வடுபட்டுப் போகக் கூடாது.

    ஆங்கிலம் உலக மொழி; இன்றைய அறிவுலகத்தின் சீர்களுக்குத் திறவுகோல். ஸம்ஸ்க்ருதம் இந்தியப் பாரம்பரிய, தத்துவக் கருவூலங்களின் கருமொழி; தமிழுடன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான உறவு கொண்ட சோதர மொழி. தமிழ் நாட்டுப் பொருளியல் இந்தியப் பொருளியலின் இணை பிரியாத ஒர் அங்கமாகப் பல உறவுச் சரங்களால் பிணைக்கப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் வேலைவாய்ப்புக்குத் தமிழக எல்லைக்கப்பால் கவனத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்; இது வெட்கப்படத்தக்க நிலை அன்று; பரந்த பொருளியல், வர்த்தக, நிர்வாக, நிதித்துறை ஒன்றிணைப்பின் தவிர்க்க முடியாத வரவேற்கத்தக்க வெளிப்பாடு. இந்தப் பின்னணியில், வசதியான இந்திய இணைப்பு மொழியான இந்தியை வெறுத்து ஒதுக்குதல் தேவையில் பயனுள்ள தொடர்பு வாய்ப்பை முரட்டுத்தனமாகத் துண்டிக்கும் அறிவீனமாகும்.

    பிறமொழி வெறுப்பு ஓரினத்தின் தன்னம்பிக்கைச் சரிவின் வெளிப்பாடு. தமிழ்மொழியின் ‘சீரிளமைத் திற’த்தில் நம்பிக்கையுள்ள தமிழ்ச் சமுதாயம், பிறமொழி வெறுப்பு என்ற கடுகுள்ளத் தேய்வுக்குத் தன் சுயமரியாதையை அடகு வைக்கக் கூடாது. மேலும், தமிழ் மொழி உணர்வும், இன உணர்வும் அவற்றின் அரசியல் இலக்கை எட்டிவிட்ட நிலை இன்று. இதற்கு இணையாக இவ்வுணர்வுகள் தன்னிறைவையும் முதிர்ச்சியையும் பெற வேண்டும். துவக்கக் காலக் குறுகிய சாய்வுகளையும், வெறுப்புகளையும் துறந்து வளர்ச்சியுற்ற ஆளுமையை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். எத்திக்கிலிருந்தெல்லாம் அறிவையும், உறவை யும், வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளையும் பெற முடியுமோ, அவற்றைப்பேராவலுடன் வரவேற்க வேண்டும்; நமதாக்கிக் கொள்ள வேண்டும்; வளர்ச்சிப் பரப்பை விரிவாக்கவேண்டும்.

    (தினமணி - பொங்கல் மலர் 1999)

    2. எங்கே மொழி நாணயம்?

    தமிழ்ப் புத்தாண்டு நாள் கூப்பிடு தொலைவில் இருக்கிறது. தமிழ்மொழி எந்த அளவுக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் கல்விக்களனிலிருந்தும், அலுவலகப் பரப்பிலிருந்தும், பன்முகப்பட்ட அறிவியல் துறைப் பரிமாற்றங்களிலிருந்தும் அந்நியப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்பது குறித்து கவலையும் சினமும் கலந்த எண்ண வெளிப்பாடுகளைக் காண்கிறோம்.இவை பொருளார்ந்த, நியாயமான கவலைகள். அதே நேரத்தில், தமிழ்மொழி பரவலாக இன்று எவ்வாறு கையாளப்படுகிறது, கருத்துக்களின் பொறுப்புள்ள வடிகாலாக அது செயல்படுகிறதா என்ற வினாக்களை நாம் எதிர்கொள்வதும் நம் கடமை என நான் எண்ணுகிறேன்.

    ஒரு தனிமனிதனுக்காயினும் சரி, ஒரு மொழிக்காயினும் சரி, நாணயம் அல்லது integrity என்பது ஒர் அத்தியாவசியமான குணநலன் ஆகும். ஸம்ஸ்க்ருத மொழியில் இந்த நாணயத்தை ‘‘ஸத்யம் என்றும் த்ரிகரணசுத்தி" என்றும் குறிப்பிடுவார்கள். இது ஒர் அருமையான கருதுகோள். த்ரிகரணசுத்தி என்பது மனோ, வாக், காயம் அல்லது எண்ணம், சொல், செயல் இம்மூன்றையும் தழுவிய ஒரு நாணயம். எண்ணுவதையே சொல்லல், சொல்வதையே செய்தல் - இவை இந்த முழுமையான நாணயத்தின் பரிமாணங்கள். இந்த முழுமையான நாணயத்தை ஸ்த்யம் என்ற சொல் தன்னகப்படுத்துகிறது. தமிழ் மொழியில் இந்த மூன்று பரிமாணங்களையும் குறிக்க மூன்று தனிப்பட்ட சொற்கள் உள்ளன- உண்மை; வாய்மை; மெய்ம்மை. உள்ளத்தால் பொய்யாமை உண்மை; வாயினால் அல்லது சொல்லால் பொய்யாமை வாய்மை; செயலால் அல்லது உடலால், அல்லது மெய்யால் பொய்யாமை மெய்ம்மை.

    ஒரு தனிமனிதனின் நாணயம் இந்த மூன்று பரிமாணங்களையும் தழுவியதாக இருக்க வேண்டும். எண்ணத்துக்கும் சொல்லுக்கும் முரண்பாடின்மை; சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடின்மை; எண்ணத்துக்கும் செயலுக்கும் முரண்பாடின்மை. அதாவது, மூன்று நிலைகளிடையே, மூன்று வெளிப்பாடுகளிடையே ஒரு இயைவு.இதுவே நேர்மையின், நாணயத்தின், integrity-யின் எல்லை, குறிக்கோள். இந்த எல்லையை அடைவது கடினம் தான்.ஆனால் இந்த எல்லையை நோக்கி உறுதிப்பாட்டுடன் பயணம் செய்ய முயல்வது, முயன்று ஓரளவு வெற்றி பெறுவது மேம்பாட்டுக்கு வழிகோலும்.

    மேலே குறிப்பிட்ட மூன்று பரிமாணங்களும் தனித்தியங்கும் உலகங்கள் அன்று. ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த, உறவாடுகின்ற, உரசுகின்ற, முரண் படுகின்ற கோள்கள், உலகங்கள். தனிமனித நாணயத்திற்கு இந்த மூன்று நிலைகளின் இயைபின் பெருக்கம் தேவை. இந்த இயைபு பெருகப் பெருக தனிமனித நாணயத்தின், integrity-யின் கூர்மை, செறிவு அதிகரிக்கிறது.

    ஒரு மொழியின் நாணயத்திற்கு இரண்டு பரிமாணங்களின் இயைபு தேவை. எண்ணமும், சொல்லும் இணைய வேண்டும். எண்ணமும் சொல்லும் இயைந்தால், சொல்லும் கருத்தும் இணையும்; சொல்லும் பொருளும் இணையும். சொல்லும் பொருளும் இணைந்து இயங்குவது ஒரு மொழியின் அடிப்படைத் தேவை. இந்த இணைப்பின் இறுக்கம் தளர்ந்தால், அல்லது இந்த உறவு முறிந்தால், மொழியின் ஆன்மாவே சிதைகிறது. இந்தச் சிதைவு தமிழ்மொழியின் ஆன்மாவைப் பீடிக்கிறதோ என்ற அச்சம் என்னைப் பல ஆண்டுகளாக ஆட்கொண்டு வருகிறது.

    பல ஆண்டுகளாகவே தமிழ்மொழியைக் கையாளும் பாங்கில், பொருளுக்கும் கருத்துக்கும் பொருத்தமான சொற்களை உபயோகிப்பதை நம் பழக்கத்திலிருந்து விலக்கி வருகிறோம். நகைப்புக்குரிய மிகைப்படுத்துதல் மொழி வெளிப்பாட்டின் இலக்கணமாகவே நிலைபெற்று வருகின்றது. மூன்றாம் தர அரசியல் பொறுக்கி இறந்திருப்பான்; இரங்கற் செய்தி வரலாறு காணாத பேரிழப்பாக இதை விவரிக்கும். பிஞ்சில் பழுத்த ஒரு கவிஞனின் அரைவேக்காட்டுப் பிதற்றல்கள் அணிந்துரையால் தமிழ்த் தாய்க்குச் சூட்டிய பொன்மலர் அணியாகப் புகழப்படும். முகவரியில்லாத அரசியல் சூதாடி கருப்புப்பண உதவியுடன் ஒரு புதுக்கட்சியைத் துவங்குவான். வெட்கமின்றி ஒரு கூட்டம் அவனைத் ‘‘தமிழினத்தின் வரலாற்று நாயக"னாகப் பறைசாற்றும். கூலிப்பட்டாளங்களின் கூச்சல் மட்டும் அன்று. பொதுவாகவே தமிழ்மொழி, கருத்துக்கும் பொருளுக்கும் ஏற்ப அமைதியுடன், ஆரவாரக் கூச்சலின்றி, பொறுப்புணர்வுடன் சொற்களைப் பயன்படுத்தும் பாங்கினை இழந்து கொண்டு வருகிறது என்று எண்ண இடமுள்ளது.

    மேலே விவரிக்கப்பட்ட சரிவு தமிழ் போன்ற ஒரு மூத்த, செழுமையான மொழிக்கு ஒர் இமாலயச் சரிவாகும். இது மொழியின் ஆன்மாவை அண்டியே கொல்லும் புற்றுநோய் என்ற அச்சம் கலந்த புரிதல் நமக்குத் தேவை.

    தமிழகத்தைப் பல ஆண்டுகளாகப் பீடித்துள்ள தனிமனித வழிபாடு என்ற சமூகப் பிணி மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைக்கு ஒரு விஸ்வரூபமே கொடுத்துள்ளது. உண்மைக்கு முற்றிலும் புறம்பான, சுயமரியாதையை வடுப்படுத்துகின்ற, அடிப்படை அறிவுணர்வைக் கூசச் செய்யும், அசிங்கமான புகழுரைகள் பரவலாகச் செல்லுபடியாகும் அவலத்தை நாம் காண்கிறோம். பல அளவுகளில் இந்த அவலம் கட்சி வரம்புகளைக் கடந்து அங்கெங்கெனாதபடி எங்கும் நிறைந்து காட்சி தரும் நிகழ்வு.

    தமிழ் மொழியைக் கையாளுவதில் கருத்துப் பரிமாற்றம் புறக்கணிப்படும், சொல் வாந்திகளுக்குத்தான் தலையாய இடம் உண்டு என்று சுட்டும் பாங்கில், சொற் பொழிவு என்ற சொல்லாட்சி நிலைபெற்று விட்டது. இந்தச் சொல்லாட்சியை இந்த அவலத்துக்கு நம் உள்ளுணர்வு சார்ந்த அங்கீகாரம் அல்லது ஒரு Freudian Slip என்று கொள்வது தவறில்லை போலும்!

    இப்படிப்பட்ட பல காரணிகளின் தாக்கங்களினால் தமிழ்மொழிக்கு விளைந்துள்ள இழப்பு பொறுப்புள்ள தமிழார்வலர்களின், மொழி அறிஞர்களின், படைப்பாளிகளின், அறிவுஜீவிகளின் கவனத்தைத் தேவையான அளவில் ஈர்த்துள்ளதாகத் தெரியவில்லை. தமிழ் மொழியைப் பேணும் நல்லோர் அனைவருக்கும் இது ஒரு ஆழமான, அடிப்படையான கவலையையும் அச்சத்தையும் அளிக்க வேண்டும். பரவலாக, தமிழ்மொழி வெளிப்பாடு என்பது உண்மையான கருத்துக்கும் பொருளுக்கும் உறவில்லாத சொற்சேர்க்கைகளின் பொறுப்பற்ற கூச்சல்தான் என்ற மரபு நிலையுறுமானால் அது எவ்வளவு மகத்தான வீழ்ச்சி! கருத்துத் திண்மையில்லாமல், உண்மை நீர்த்துப் போய், உயிர்த்துடிப்பு அடங்கி, சொற்கள் உலா வந்தால் மொழியின் ஆன்மா ஊமைக் கண்னீர் வடிக்கும்.

    இந்த வீழ்ச்சியைக் கண்டு நாம் வாளாவிருப்பது பொறுப்பற்ற கயமைத்தனத்திற்கு ஒப்பாகும். தமிழ் மொழியை உண்மைத் துறவிலிருந்து, பொருள் மறுப்பிலிருந்து, நாணய விலக்கிலிருந்து காக்க வேண்டும். இத்திக்கில் உறுதியுடன், தெளிவுடன் நாம் செயல்பட முயல்வோம். ஆரவாரமில்லாத, பொறுப்புள்ள, உண்மைச் சார்புள்ள, ஆரோக்கியமான சொல் லாட்சியைத் தமிழ்மொழியின் புது மரபாக்க முயல்வோம். புத்தாண்டைத் தமிழ்மொழியின் புது விடியலாக்குவோம்.

    (அம்பலம் - ஏப்ரல் 2000)

    3. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் - ஒர் அஞ்சலி

    தமிழகத்தின் தலைநகராம் சென்னையம்பதியில் மயிலாப்பூர் தொகுதியில் ஏழைகளுக்கென ஒரு மாளிகை உள்ளது. ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்களுக்கு ஊணும் உறையுளும், உடுப்பும் கல்வியும், சீரிய மனிதப் பண்புகளும் அளித்து வாழ வழிகாட்டும் தவப்பணி, இம்மாளிகையின் உயிர்மூச்சு. இதன் இளவலாகச் செங்கல்பட்டு அருகே ஆத்தூர் எனும் சிற்றுாரில் இவ் அரிய பணி ஆற்றப்பட்டு வந்தது. ஆண்டுதோறும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஏழ்மையின் பிறப்புகளுக்குப் புகலிடமும், வாழ்வில் முன்னேறு வதற்கு வழிவகைகளும் அளிக்கப்படுகின்றன. தொண்ணுற்று நான்கு ஆண்டுகளாக இவ்விழுமிய பணி ஆற்றி, ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்களுக்கு வாழ்வு அளித்த திருக்கோயில் இது. இதன் பெயர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவரில்லம்.

    இப்பணியின் ஊற்றுக்கால் இந்திய நாட்டின் ஆன்மீகப் பெரியார்களில் ஒருவரான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். இம்மாணவரில்லத்தின் ஈகைப் பணியின் கருணைப் பொழிவில் பத்து ஆண்டுகள் திளைத்துப் பயனுறும் பெரும் பேற்றை நான் பெற்றிருந்தேன். எனக்கு வாழ்வளித்த இல்லத்தின் ஆன்மீக அடித்தளமாம் அருள்மிகு ராம கிருஷ்ணருக்கு அவரது பிறந்த நாளன்று அஞ்சலி செலுத்துவதில் என் உள்ளமும் இதயமும் நன்றியிலும் பெருமிதத்திலும் நிறைகின்றன.

    வரலாற்று நாயகர்கள் என்று போற்றத்தக்க, செயற்கரிய செய்த பெரியார்களின் வாழ்க்கைகளை இரு கோணங்களிலிருந்து அணுகலாம். ஒன்று அவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தனர்; அவர்கள் வாழ்வின் முகப்பு மையம்

    Enjoying the preview?
    Page 1 of 1