Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Zen Kathaikal
Zen Kathaikal
Zen Kathaikal
Ebook155 pages2 hours

Zen Kathaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Udayadeepan has written many books on self-improvement, spiritual and meditation related topics.
Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580110801434
Zen Kathaikal

Read more from Udayadeepan

Related to Zen Kathaikal

Related ebooks

Reviews for Zen Kathaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Zen Kathaikal - Udayadeepan

    http://www.pustaka.co.in

    ஜென் கதைகள்

    Zen Kathaikal

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அதிசயம்

    2. அப்படியா?

    3. அரைவேக்காடு

    4. அன்பும் துக்கமும் எங்கே?

    5. ஆசிரியரினை ஆச்சரியப் படுத்து

    6. ஆமைகளின் சுற்றுலா

    7. இடிபோல குத்துவிடும் துறவி

    8. இயல்பின் அழகு

    9. இரண்டு பாறைகள்

    10. இரண்டே வார்த்தைகள்

    11. இளைப்பாறி செல்லுமிடம்

    12. இறந்து பிறந்தோமா? பிறந்து இறந்தோமா?

    13. உபயோகம் இல்லாத ஓக் மரம்

    14. உன் கையில்

    15. எத்தனை வருடங்கள்

    16. எந்த நிலா

    17. எப்படிச் சொல்லுகிறாய்?

    18. ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு

    19. ஏன் பார்த்து வரவேண்டியது தானே?...

    20. ஒரு கையின் தட்டும் ஓசை

    21. ஒரு துளி நீர்

    22. ஒரே அடி

    23. ஒரே சொல்லில் புத்தர் போதனைகளின் சாராம்சம்

    24. ஒன்பது திருடர்கள்

    25. ஓவியனும் ஜென்னும்

    26. கண்ணாடி

    27. கண்ணாடியான செங்கல்

    28. கதவில்லாத கோயில்

    29. கற்பாலம்

    30. காரணங்கள்

    31. கியோடோவின் கவர்னர்

    32. கீழ் படிதல்

    33. குரு - சிஷ்யன் - கடவுள்

    34. குளிரோ, வெப்பமோ இல்லாத இடம்?

    35. கேள்வியே இல்லாத நிலை

    36. கோபம்

    37. கோப்பையைக் காலி செய்

    38. கோமாளியை விட மோசமானவன்

    39. சகதியான மனம்

    40. சரியான இடம்

    41. சிலையை கைது செய்

    42. சுகமானது பன்றி வாழ்வு

    43. சூத்திரங்களை ஓது

    44. சொர்க்கத்தின் வாசல் படி

    45. டிராகான் (Dragon) கதவுக் கோயில்

    46. தலை விதியை மாற்ற முடியாது

    47. திபேத் சிலந்தி

    48. துப்பிக் கொள்

    49. தேளின் இயற்கை குணம்

    50. தேனீர் விருந்து

    51. தொட்டிக்காரன்

    52. நட்பும் ஹார்ப் இசைக் கருவியும்

    53. நரியா, புலியா?

    54. நற்பண்பு நன்மையேத் தரும்

    55. நன்றியுணர்ச்சி

    56. நிலவை கொடுத்திருப்பேன்

    57. நீ மீன் அல்ல

    58. பதிலா உயிரா?

    59. பரம்பரையான ஞானம்

    60. பாத்திரங்களும் சூத்திரங்களும்

    61. பிசாசை துரத்து

    62. பிக்ஷுனி ரியோனென் வாழ்க்கை

    63. பிக்ஷுனி ஸுங்கோயின் வாழ்க்கை

    64. புத்தாவினை உடைத்துக் கொடு

    65. புல்லும் மரமும் அறிவு ஜீவியா?

    66. புளித்த மிஸோ

    67. பூனையை வெட்டுதல்

    68. பேரலைகள்

    69. பொய் பேசக் கற்றுத் தருவது

    70. போர் வீரர்களும் மனிதத் தன்மையும்

    71. மடாதிபதியின் ஆசிரியர்

    72. மனம் தளராதே

    73. மனமும் புத்தத்தன்மையும்

    74. மனோதிடம்

    75. மார்க்கத்தின் வழி

    76. மு

    77. முதல் நடைமுறை

    78. முரட்டுக் குதிரை

    79. முன்னாள் சீடன் இன்னாள் பிச்சைக்காரன்

    80. மூன்று தலைகள்!

    81. யார் ஒருவர் நோய்வாய்ப் படாதவர்?

    82. வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை

    83. வில்லாண்மைத் திறன் போட்டி

    84. வேலை இல்லன்னா, சாப்பாடு இல்லை

    85. வைரசூத்திரம்

    86. ஜென் உரையாடல்

    87. ஜென் குருவும் ஒன்பது திருடர்களும்

    ஜென் கதைகள்

    1. அதிசயம்

    பான்கெய் என்ற ஜென் மாஸ்டர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர் மீதோ ஜென் மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார்.

    ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்றார். பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை.

    ஐயா, உங்களுக்கு என்ன பிரச்சனை? என்றார் அமைதியாக.

    எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?

    தெரியவில்லை, சொல்லுங்கள்!

    அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்! என்ற பூசாரி, இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?

    நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா என்ற பான்கெய், ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.

    அதென்ன?

    அமைதியாகச் சொன்னார் பான்கெய். யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், எங்களை அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!

    2. அப்படியா?

    கிராமத்தில் இருந்த அழகிய பெண் திடீரென கர்ப்பமானாள். மிகுந்த கோபமடைந்த பெற்றோர்கள் யார் காரணம் என்று கூறுமாறு வற்புறுத்தினார்கள். முதலில் கூறமறுத்த அவள், மிகுந்த மனக் குழப்பத்துடன் ஹாகுய்ன் தான் காரணம் என்று கையைக் காட்டினாள்.

    ஹாகுய்ன் அந்த கிராமத்தில் மிகவும் புனிதமானவராக மதிக்கப்பட்ட ஒரு ஜென் துறவி. அதைக் கேள்விப் பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஹாகுய்னிடம் சென்று தங்களுடைய மகளின் குற்றச்சாற்றினைக் கூறி சண்டையிட்டனர். எதுவும் திருப்பி சண்டையிடாமல் ஹாகுய்ன் அப்படியா? என்று கேட்டுக் கொண்டார்.

    கொஞ்ச நாட்கள் கழிந்ததும் அழகான குழந்தை பிறந்தது. இதற்கிடையில் சம்பவத்தினை அறிந்த ஊர் மக்கள் ஹாகுய்னை இகழ்ந்து பேசலானார்கள்.

    மகளுடைய தந்தை ஹாகுய்னிடம் சென்று குழந்தையை வளர்க்கும் பொறுப்பு உன்னையே சேரும், அதனால் நீதான் குழந்தையை வளர்க்க வேண்டும் என்றார். அப்படியா! என்று சொல்லி விட்டு அமைதியாக குழந்தையை ஏற்றுக் கொண்டார்.

    குழந்தையை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். ஏதேனும் குழந்தைக்கு தேவைப்பட்டால் அந்த ஊரில் உள்ளவர்களிடம் கேட்டுப்பெற்று குழந்தையின் தேவைகளை கவனித்துக் கொண்டார்.

    பல மாதங்களாக இது தொடர்ந்தது. இதைப் பார்க்க சகிக்காத பெண், தனது கிராமத்தில் இருந்த மற்றொரு வாலிபனே இதற்கு காரணம் என்ற உண்மையினை தனது பெற்றொர்களிடம் கூறினாள். உடனே ஹாகுய்னிடம் சென்ற பெற்றோர்கள், "தனது மகளின் பொய் வார்த்தையினைக் கேட்டு நம்பியதற்காக தங்களை

    மன்னித்து விடுமாறும் குழந்தையை தாங்களே கவனித்துக் கொள்வதாக கூறி கேட்டனர். ஹாகுய்ன் அப்படியா! என்றவாறு குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.

    3. அரைவேக்காடு

    மூன்று மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகச் செல்லும் வழியில் சிற்றுண்டி தயாரிக்கும் பாட்டியிடம் தோசை கேட்டு வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.

    ஒருவன் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான், மற்ற இருவரும் கார சாரமாக தாம் படித்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். சாப்பிட்டுக் கிளம்பும்முன் பாட்டி, எங்க போய்ட்டிருக்கிங்க தம்பி? எனக் கேட்டாள். மூவரும் தேர்வு எழுத போய்க் கொண்டிருப்பதாக கூறினார்கள். அதற்கு பாட்டி நீங்கள் இருவரும் தோல்வி அடைவீர்கள், மூன்றாமவன் வெற்றி பெறுவான், எனக் கூறினாள். பாட்டியை முறைத்துக் கொண்டே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

    தேர்வு முடிவுகள் பாட்டி கூறிய படியே அமைந்திருந்தது. இருவரும் அந்த பாட்டியிடம் சென்று உங்களுக்கு முகசாஸ்திரம் தெரியுமா? எனக் கேட்டார்கள். அதற்கு, எனக்கு தெரிந்ததெல்லாம், வேகாத வடை சத்தமிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடும்; வெந்த வடை அமைதியாக இருக்கும் என்றாள்.

    4. அன்பும் துக்கமும் எங்கே?

    ஹுய்சூ தன்னுடைய நண்பனும் டாவோயிஸத் துறவியுமான சூயாங்சூவினைப் பார்த்து அவருடைய அன்பு மனைவியின் மறைவிற்காக ஆறுதல் கூற வந்திருந்தார்.

    சூயாங்சூவினைப் பார்த்தவர் திகைத்து விட்டார். அவர் குடிசைக்கு வந்த போது சூயாங்சூ கால்களுக்கு இடையில் மரத்தினால் ஆன பாத்திரத்தினை வைத்துக் கொண்டு தாளம்

    Enjoying the preview?
    Page 1 of 1