Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meeravin Kaadhal
Meeravin Kaadhal
Meeravin Kaadhal
Ebook104 pages54 minutes

Meeravin Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580110001473
Meeravin Kaadhal

Read more from Anuradha Ramanan

Related to Meeravin Kaadhal

Related ebooks

Reviews for Meeravin Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meeravin Kaadhal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    மீராவின் காதல்

    Meeravin Kaadhal

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    மீராவின் காதல்

    1

    சம்பந்தி நம்மை நல்லா ஏமாத்திட்டாரு...

    -அகிலாண்டம் போட்டக் கூச்சலில், அந்தத் தெருவே ஒரு முறை கிடுகிடுத்தது.

    நல்ல வேளை... இவர்களது வீடு, அடுக்கு மாடிக் கட்டடத்தில் இல்லை. தனி வீடு, மதுரையில்- திருப்பரங்குன்றம் போகும் வழியில், மலிவான விலைக்கு வந்ததென்று சோமசுந்தரம், நாலு கிரவுண்டு வாங்கிப் போட்டிருந்தார்.

    அகிலாண்டம்- சோமசுந்தரம் தம்பதிக்கு நாலு மகன்கள், அகிலாண்டம், தான் பெற்றது நாலும் ஆண்பிள்ளைகள் என்பதை, தலை கொள்ளாதப் பெருமையுடன் சொல்வாள்.

    அவராலே ஆனது, நாலு பையன்களையும் வேண்டியது படிக்க வச்சதுதான். நாலு கிரவுண்டு வாங்கிப் போட்டிருக்காரு. அவனவன் சம்பாத்தியத்திலேயோ, மாமனார் தர்ற வரதட்சணையிலேயோ வசதிப்படி வீட்டைக் கட்டிக்க வேண்டியதுதான். எங்களுக்கென்ன, மூணு மாசம் ஒரு மகன் வீட்டுலே தங்கினாலும் நாலு பேர் கிட்ட ஒரு வருஷம் ஒடியே போயிடும்...

    கடைசியில் அரவிந்தைத் தவிர, யாருமே மதுரையில் இல்லை.

    பெரியவன் வினோத் கனடாவில், அடுத்தவன் பிரதீப்- சிங்கப்பூர், மூன்றாவமவன்தான் அரவிந்த். மதுரையில் பெற்றோரோடு. கடைசியவன் முரளி மட்டும் சென்னையில்...

    வினோத்-கனடாவிலேயே ஒரு பிரபஞ்சுக்காரியை மணந்து அங்கேயே தங்கியும் விட்டான். அகிலாண்டமோ, சோமசுந்தரமோ வாயைத் திறக்க வழியில்லை. அடுத்தவனும் அப்படி யெல்லாம் திசை கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காகவே அவன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து கிளம்பும் போதே தன் தம்பி மகள் கவிதாவை அவனுக்குக் கட்டி வைத்து அனுப்பினாள் அகிலாண்டம்.

    அரவிந்தனுக்குப் பெண் பார்க்கும் போது மட்டும், அவள் திருவாய் மலர்ந்தருளினாள்.

    இதப் பாருங்க... அரவிந்தனுக்குப் பார்க்கற பொண்ணுக்கு, பெரிய படிப்பெல்லாம் வேண்டாம்...

    -சோமசுந்தரம் இழுத்தார். அவருக்கு, தனது மருமகள்கள் நிறைய படித்திருக்க வேண்டும் என்கிற ஆசை.

    மேலும் அரவிந்தனுக்கு என்ன குறை?

    பார்க்க வாட்ட சாட்டமாய் இருக்கிறான். நிறைய படித்து, ஆடிட்டராக இருக்கிறான். காரும், பதவியும் இருப்பத்தியெட்டு வயசுக்குள் கிடைக்கக்கூடிய பாக்கியமா என்ன?"

    எத்தனை பெரிய மனிதர்கள் தங்களதுப் பெண்ணைத் தர, நீநான் என்று போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்...

    அகிலாண்டமானால் இப்படிச் சொல்கிறாளே?

    பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கேட்டே விட்டார்.

    அப்பொழுதுதான் அவள் சொன்னாள்:

    "அதிகமாய் படிச்சிருக்கற வேணாம்னுதானே சொன்னேன்? ஒரேயடியாக கைநாட்டா இருக்கணும்னு சொல்லலையே... காலேஜ் வாசப்படி மிதிச்சிருந்தாப் போதும். பி.ஏ. எம்.ஏ.யின்று டிகிரியெல்லாம் வேணாம். கையில டிகிரி இருந்தா- வீட்டுல உட்காராது. நானும் வேலைக்குப் போறேன்னு கிளம்பும். கடைசியில. அவளுக்கும் சேர்ந்து நான் பொங்கிப்போடும்படியா இருக்கும். நாலு பிள்லைளகளை மடி கணக்கப் பெத்தேன்னுதான் பேரு. வரப்போறவளாவது, என்கைக்கு அடங்கின சரக்காயிருக் கட்டும்...

    இதை, உன் பையன் கிட்டச் சொன்னியா...

    நான் சொல்லி, என்னிக்கு அவன் தட்டியிருக்கான்...

    அரவிந்தனுக்கு, தாயின் வாதம் பிடிக்கவில்லை.

    ஆனாலும் வேறு வழியில்லை. மற்றவர்களைக் காட்டிலும் 'அம்மா' பாசம் அதிகம் அவனுக்கு. போதாக் குறைக்கு அண்ணன்கள் மீது சிறு வருத்தமும் இருந்தது.

    'பெண்டாட்டி வந்துட்டா- பெத்தவர்களையே கவனிக்கக் கூடாதா என்ன... நாமாவது, கல்யாணத்துக்கு அப்புறம் பெத்தவங்க மனசு கோணாம நடந்துக்கனும்."

    -இந்த நினைப்புதான் அவனை சம்மதிக்க வைத்தது.

    சோமசுந்தரம் இவனுக்காக- படித்தும், படிக்காத அழகாக இருந்தாலும் கவர்ச்சியாக இல்லாத- நாகரீகமான, அதேசமயம் அகிலாண்டத்தின் வார்த்தையை மீறாதப் பெண்ணாக அலச ஆரம்பித்தார்.

    அப்படி அவர் தேடித் தேடி கிட்டத் தட்ட ஒய்ந்துவிட்ட சமயத்தில்தான், விடுமுறைக்கு மதுரை வந்திருக்க கடைக்குட்டி மகன் முரளி கூறினான்:

    'அப்பா, இன்னும் அண்ணனுக்குப் பொண்ணு கிடைக்க வில்லையா?"

    எங்கே, ஒண்ணு சரியா இருந்தா இன்னொண்ணு உதைக்குது.

    எனக்குத் தெரிஞ்சு ஃபர்ஸ்ட் கிளாஸ் பொண்ணு ஒண்ணு இருக்குப்பா...

    'உனக்கு தெரிஞ்சா? என்னடா இடிய இறக்கறே?

    -பதறி விட்டாள் அகிலாண்டம்.

    முரளி, தாயை சமாதானப்படுத்தி, இதோ தற்சமயம் அறைக்குள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறாளே... இந்த மீராவைப் பற்றி சொன்னான்.

    நல்ல பொண்ணும்மா.

    உனக்கு எப்படி தெரியும்?

    இவளோடத் தங்கை பூர்ணாவும் நானும் ஒரே காலேஜ்லதான் படிக்கிறோம். வகுப்புதான் வேறு. இதப்பாரு, அப்படிப் பார்க்காதே. ஒரு தடவை ஏதோ மறியல் போராட்டம்னு சென்னை மாநகரமே திகைச்சுப் போச்சு. ஒரு ஹோட்டல் இல்லே. டீக்டை இல்லை. கேன்டீன்ல கூட காய்ஞ்சு போன ரொட்டியும் பொறையும் தான் இருந்தது. சோத்துக்குப் பறந்த எங்க வகுப்பு பசங்க பத்து பேரை, வீட்டுக்கு அழைச்சிட்டுப் போய், சுடச்சுட தோசையும், சட்னி, சாம்பாருமா அமர்களப் படுத்திட்டா பூர்ணா. அப்பத்தான் அறிமுகமாச்சு. பூர்ணாவை விடவும் நாலு வயது பெரியவ. அடுப்படியில உட்கார்ந்து. சலிக்காம தோசை போட்டுக் கொடுத்தது இந்தப் பொண்ணு தான். பார்த்தா நீ அசந்தே போயிடுவே. அண்ணனுக்கு ஏத்த ஜோடி உனக்கும் சரியான மருமக...

    என்ன படிச்சிருக்கா?

    'பார்த்தியா... அதைச் சொல்ல மறந்துட்டேனே... அவ கொஞ்சம் பயந்த சுபாவமாம். காலேஜிக்கு அனுப்பினா

    Enjoying the preview?
    Page 1 of 1