Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sonna Sollai Marandhidalamo…
Sonna Sollai Marandhidalamo…
Sonna Sollai Marandhidalamo…
Ebook324 pages2 hours

Sonna Sollai Marandhidalamo…

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580104901448
Sonna Sollai Marandhidalamo…

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Sonna Sollai Marandhidalamo…

Related ebooks

Reviews for Sonna Sollai Marandhidalamo…

Rating: 4.038461538461538 out of 5 stars
4/5

26 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sonna Sollai Marandhidalamo… - Arunaa Nandhini

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    http://www.pustaka.co.in

    சொன்ன சொல்லை மறந்திடலாமோ...

    Sonna Sollai Marandhidalamo…

    Author :

    அருணா நந்தினி

    Arunaa Nandhini

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    பொங்கி வந்த கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷிதா.

    எதையோ சாதிப்பது போல ஓடி வருவதும். முடியாமல் திரும்பக் கடலுக்கே செல்வதையும் பார்த்தபோது அவளுக்குச் சிரிப்பு வந்தது…

    ‘மனித வாழ்க்கையும் அப்படித்தானோ. அதைத்தான் ‘சிம்பாலி’க்காக உணர்த்துகிறதோ… இந்த அலைகள். ஏதேதோ நினைத்து செயல்படுகிறோம்… எல்லாமே வெற்றியாவதில்லையே…’

    பெருமூச்சு விட்டாள் அவள்.

    சிலுசிலுவென்று வீசிய காற்றில் கேசக் கற்றைகள் கலைந்து நெற்றியில் புரள… அதை ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்.

    இன்னும் மகேசுவரி வரவில்லையே… சீக்கிரம் வந்தால்… பேசிவிட்டுச் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம். கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்…

    ஆறுமணி!

    கடவுளே… இவள் என்ன… நான் காத்திருக்கிறேன் என்பதை மறந்துவிட்டாளா…? நேரம் பறக்கிறதே…

    வேர்கடலை… வேர்கடலை… கடலை வேணுமாக்கா… வறுத்த கடலை… அருகே வந்து நின்ற பையனை பார்த்துவிட்டு… வேண்டாம் என்று சொல்ல வாய் திறந்தவள். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்…

    மலிவான பண்டம்… ஏழைகளின் பாதாம் பருப்பு! அதையாவது வாங்கி மென்று கொண்டு இருக்கலாம். கைப்பையைத் துளவி. இரண்டு ரூபாய் எடுத்து நீட்டினாள். ஐந்து ரூபாய்க்கு வாங்கிக்கோக்கா… இரண்டு ரூபாய்க்கு கொஞ்சம்தான் வரும்… வியாபார சாமர்த்தியத்துடன் சொன்னான் பையன். வேண்டாம்ப்பா… இரண்டு ரூபாய்க்கு எவ்வளவு வருமோ அது கொடு. போதும்… என்றாள் அவள்.

    சின்னக் காகிதத்தை பொட்டலமாக்கி அதில் கடலையை நிரப்பி நீட்டினான் அவன். கடலையை உடைத்துச் சாப்பிட்டதில் பத்து நிமிடங்கள் கழிந்தன…

    பொட்டலக் காகிதத்தை விரித்து… கண்களை ஓட விட்டாள்.

    ‘ப்ச்சு…’ சுவாரசியமில்லாத விஷயங்கள்…

    ஆளும் கட்சியைப் பற்றி எதிர்கட்சி கூறிய குற்றச்சாட்டு.

    எதிர்கட்சியை பழிக்கும் ஆளும் கட்சித் தலைவர்கள்…

    மூலையில்… இறந்து போனவளுக்கு கண்ணீர் அஞ்சலி…

    காகிதத்தை திருப்பிப் பார்த்தாள்…

    பெரிய அழகு நிலையத்தின் விளம்பரம்… பெண்களை கவர… புது உத்தியாய்… ‘பேர்ல் பேக்…’ ‘கோல்ட் பேக்…’ என்று விதவிதமான யுத்திகள்! கட்டணம் ஆயிரத்துக்கு மேல்! அம்மாடி!

    இப்போது ஆயிரம் என்றாலே மலைப்பாக தெரிகிறது. அப்பா இருந்த காலத்தில்… மாதத்திற்கு ஒரு தடவை ‘ப்யூட்டிபார்லர்’க்கு சென்றது எல்லாம் இப்போது கனவாய் தெரிகிறது…

    ஆயில் மசாஜ்… நீராவிக் குளியல்… ஹெர்பல் பேஷியல் எல்லாமே இப்போது எட்டாத தொலைவு…

    சாதாரண சோப்பும்… பாண்ட்ஸ் பவுடருமேதான் இப்போதைய அழகு சாதனங்கள்.

    பெருமூச்சுடன் காகிதத்தைச் சுருட்டி வீசினாள்…

    யார் மீது கோபம் உனக்கு… வர்ஷி…

    தோழியின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

    யார் மீதும் இல்லை… சரி. இத்தனை நேரமா… வருவதற்கு… நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்டீ.

    டிராபிக்டீ… அவ்வளவு தூரத்தில் இருந்து வரவேண்டும் இல்லையா…

    சரி… பணம் கொண்டு வந்திருக்கிறாய்தானே… தாங்க்ஸ்டீ… நாளைக்கு அம்மாவை டாக்டர்கிட்டே கூட்டிக் கொண்டு போகணும்… என்னிடம் சுத்தமா பணம் இல்லேடீ… அதான். உனக்கு போன் செய்தேன். மஹி…!

    கொண்டு வந்த பணத்தை அவள் கையில் திணித்துவிட்டு…

    நீயே ஏண்டி இழுத்து தலைமேல் போட்டுக்கறே… உன் தங்கையும் சம்பாதிக்கிறாளே… அவளும் தரட்டுமே… என்றாள் மகேசுவரி.

    ‘ப்ச்சு.’ அவ முன்னே மாதிரி இல்லே மஹி… வேலைக்குப் போய்… கையில் பணத்தைப் பார்த்ததும் சுத்தமாய் மாறிட்டாள். சுயநலமா இருக்கிறாள். வர்ற சம்பளத்தில் ஆபீஸில் சீட்டு போட்டிருக்கிறாளாம். உன்னை மாதிரி முட்டாள்தனமாய் எல்லாப் பணத்தையும் செலவு பண்ணிவிட்டு வெறும் கையுடன் இருக்க என்னால் முடியாது. கொஞ்ச பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்… இந்த வீட்டில்… என் பங்குன்னு ஆயிரத்து ஐநூறு கொடுத்து விடுகிறேன்… அதுக்கு மேல் கேட்காதே என்கிறாள்…

    அம்மாவின் செலவில் அவளுக்குப் பங்கில்லையா… வர்ஷி. நீதானே எடுத்துச் சொல்லணும்.

    எனக்குப் பிடிக்கவில்லை மஹி… அம்மா விஷயத்தில் கணக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. உன் பங்கு… என் பங்குன்னு சண்டை போடவும் பிடிக்கவில்லை… இதெல்லாம் அவர்களுக்காய் தெரிய வேண்டும்…

    அவளுக்காக நீ எத்தனை கஷ்டப்பட்டேடீ… அதைக் கூடவா அவள் நினைக்கிறதில்லை…

    என்ன மகா கஷ்டப்பட்டுவிட்டே என்கிறாள்… அப்பாவோட பணத்தில்தான் நான் படித்தது. நீ ஒன்றும் சம்பாதித்துப் படிக்க வைக்கவில்லையே… ஏதோ.. இந்த குடும்பத்துக்கு நீதான் மாடாய் உழைக்கிற மாதிரி பேசாதே என்கிறாள். இந்த விஷயத்தில் அம்மாவுக்குக் கூட வருத்தம்தான்…

    பக்கா சுயநலம்டீ… எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு வர்ஷி. கஷ்டம்னா என்னன்னு தெரியாம வளர்ந்தவ நீ. இப்போ… ஓடா உழைச்சு தேயற… உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு… அதுபத்தி யோசிக்கிறாயா… இல்லையே…

    அப்படி நான் நினைக்க ஆரம்பித்தால்… நானும் சுயநலவாதியாகி விடுவேன் மஹி… அப்புறம் எனக்கும் நித்யாவுக்கும் என்ன வித்தியாசம்… சொல்லு… ஏதோ இந்த மட்டும் வாழ்க்கை வண்டி ஓடுகிறதேன்னு சந்தோஷப்படுகிறேன். இதுவும் நீ போட்ட பிச்சைதானே மஹி… நன்றியில் அவளது குரல் தழுதழுத்தது.

    இப்படியெல்லாம் பேசினே அடிச்சிடுவேன்… ஆமாம்… எனக்கு நீ எத்தனை உதவி செய்திருக்கே… அவற்றை நான் திருப்பி சொல்லட்டுமா… போடீ…

    இல்லேடீ… நொடிஞ்சு போறப்போ தான் உண்மை நட்பு யார் என்று புரியும் என்பார்கள். அது சத்தியம்தான்னு புரிந்து கொண்டேன் மஹி… பணக்கார வர்ஷிதாவாய் இருந்தபோது என்னைச் சுற்றி இருந்த கும்பல்… நிலைமை தலைகீழானதும் கல் எறிபட்ட காக்கைக் கூட்டமாய் சிதறிப் போயிட்டாங்களே… ஆனால் நீ மட்டும்தான் என்னுடன் எப்பவும் இருக்கே… அதை நினைக்கிறபோது எனக்கு சந்தோஷமா இருக்கு மஹி… உன்னால்தானே எனக்கு இந்த வேலையும் கிடைத்தது…

    போதும்டீ. எனக்குப் புகழாரம் சூட்டறதை நிறுத்து. நான் என்னவோ பெரிசாய் பண்ணிவிட்ட மாதிரி பேசாதே… என் அண்ணனுக்குத் தெரிந்த கம்பெனி என்பதால்… அண்ணனைவிட்டு சிபாரிசு பண்ணச் சொன்னேன்…. உனக்கும் திறமை இருந்ததால் வேலை கிடைத்துவிட்டது… சரி… சரி… எழுந்திரு. போகலாம். இருட்டி விட்டது.

    அய்யோ… பேச்சு மும்முரத்தில் நேரத்தை மறந்தேனே… மஹி. தாங்க்ஸ்டீ.. பணம் கொடுத்து உதவியதற்கு…

    எதுக்குடீ… தாங்க்ஸ்… இந்தப் பணத்தை உடனே திருப்பித் தர வேண்டும் என்றில்லை. நிதானமாய் கொடு போதும். பஸ்ஸில் பணம் பத்திரம் வர்ஷி என்று எச்சரித்தாள் தோழி.

    வீட்டை அடையும்போது மணி எட்டரை.

    ஏம்மா லேட்டு… ஆபீஸில் வேலையா… என்று தாய் கேட்க…

    இல்லேம்மா… மஹியைப் பார்த்துவிட்டு வந்தேன்…

    நீ மாத்திரை சாப்பிட்டாயா… நித்யா வந்தாச்சா. குடிக்க ஏதாவது தந்தாளா… எங்கே அவள் என்று விசாரித்தாள் மகள்…

    நான் இங்கே… கிச்சனில் இருக்கேன்… என்று குரல் கொடுத்தாள் தங்கை.

    என்ன செய்து கொண்டிருக்கே நித்யா…

    மாகி நூடில்ஸ் பண்ணிக் கொண்டிருக்கேன். நீ வர்ற மாதிரி தெரியல்லே. அதான்… நானே செய்துட்டேன்…

    அம்மாவுக்குப் பிடிக்காதே நித்யா…

    அதுக்காக… நாமும் சாப்பிடக் கூடாது என்கிற சட்டமா… எனக்குப் பிடிக்கும். அதான் பண்ணினேன்… அம்மாவுக்குக் காலையில் செய்து வைத்த ரசம் இருக்கே… அதை சூடு பண்ணி கொடுத்தா போச்சு… நீ சாப்பிடுகிறாயா. சரி… நான் போட்டுக் கொள்கிறேன்… என்றவள் ஒரு தட்டை எடுத்து ‘நூடுல்லை’ வழித்து எடுத்துப் போட்டுக் கொண்டு. டி.வி. முன் அமர்ந்து கொண்டாள். மியூசிக் சானலை ரசித்தவாறு நூடுல்ஸை சுவைத்தாள்.

    கை, கால், முகம் கழுவி வந்து… கெட்டியாய் காம்ப்ளான் கலந்து வந்து தாய்க்கு கொடுத்துவிட்டு… மளமளவென்று கோதுமை மாவைப் பிசைந்து வைத்தாள். வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கினாள். வாணலியில் கடுகை தாளித்து… நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கி… தக்காளியை சேர்த்து… காரப் பொடி… உப்பு போட்டு அவசர கொத்சு செய்து இறக்கினாள். அம்மா பசியுடன் இருப்பாள் என்ற நினைப்பில் உடனே சப்பாத்தி செய்து கொத்சுடன் வைத்துக் கொடுத்தாள்.

    எதுக்கும்மா. கஷ்டப்பட்றே… வேலை செய்து களைப்பா வந்திருக்கே… இருக்கிறதைப் போட்டு தரக் கூடாதா… என்றாள் வனஜா.

    எனக்கொன்றும் சிரமம் இல்லேம்மா… டாக்டர் சொல்லியிருக்கிறார். உனக்கு சத்தான உணவு தரணும்னு என்னால் முடிந்ததை செய்து தருகிறேன்ம்மா… அப்புறம்… நாளைக்கு ஆஸ்பிட்டல் போகணும்மா… சீக்கிரமே குளிச்சிட்டு தயாராகி விடு. உன்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டு… நான் ஆபீஸுக்குப் போகவேண்டும்…

    என்னால் உனக்கு எத்தனை கஷ்டம்மா… நீ ஒருத்தியே அல்லாடுகிறாயேங்கற வருத்தம் எனக்கு… எனக்கு நித்யாவும் மகள்தானே… அவள் ஏன் உனக்கு ஒத்தாசை பண்ணாமல் இருக்கிறாள்…

    பரவாயில்லை… விடும்மா… சின்னப் பொண்ணில்லையா… இன்னும் பொறுப்பு வரவில்லை. கொஞ்ச நாள் போனால் சரியாகிவிடும்… இப்போ… நீ சாப்பிடு… எந்தக் கவலையும் வேண்டாம். உன் உடம்பு குணமாகி பழைய மாதிரி நீ இருக்க வேண்டும். அதுதான் என் ஆசைம்மா…

    எனக்கும் வேதனையாகத்தான் இருக்கும்மா… இப்படி உனக்கு பாரமா விழுந்து கிடக்கிறேனே என்று. எல்லாம் என் கெட்ட நேரம்… புருஷனை இழந்து… சொத்தெல்லாம் இழந்தது போதாது என்று… இப்போ ஆரோக்கியமும் கெட்டுப் படுத்திருக்கிறேன்… பார்… நான் மகாபாவி… பொங்கி வந்த கண்ணிரை முந்தானையால் துடைத்துக் கொண்டாள் வனஜா…

    அம்மா… ப்ளீஸ்… இப்படி நீ அழுதால் என்னால் தாள முடியாது… நீ தைரியமாக இருந்தால் தான் என்னால் சந்தோஷமாக இருக்க முடியும்.. உன் கண்ணீரை பார்க்கும் சக்தி எனக்கில்லைம்மா…

    இல்லேடா கண்ணா… ஏதோ பழைய நினைப்பு… அதான் துக்கம் தாளாமல் அழுதுவிட்டேன். இனி அழ மாட்டேன். போதுமா… போம்மா… நீயும் தட்டில் போட்டுக் கொண்டு வா.. என்னுடன் சேர்ந்து சாப்பிடு. உனக்கும் பசியிருக்கும்தானே…

    தாயின் விருப்பப்படியே தட்டில் சப்பாத்தியையும்… கொத்சும் போட்டுக் கொண்டு, அம்மாவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

    ஆபீஸில் என்ன நடந்தது… பஸ்ஸில் ஒருவன் குடித்துவிட்டு. இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. என்று ஏதேதோ பேசி. தாயின் மனநிலையை மாற்ற பிரயத்தனப்பட்டாள் வர்ஷிதா.

    அதில் வெற்றியும் பெற்றாள்… வனஜாவின் முகத்தில் இருந்த வாட்டம் மறைந்து… தெளிவு வந்தது. அதுவும்… கடற்கரையில் அமர்ந்திருந்த ஒரு இளம் ஜோடியை… அவர்களது குறும்புகளை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஐம்பது வயது வாலிபரை… அவரது மனைவி குமட்டில் குட்டி… கவனத்தை திருப்பியதை சொன்ன போது வனஜா சிரித்து விட்டாள்…

    இரவில் பாயை விரித்துப் படுத்தவளுக்கு சட்டென்று உறக்கம் வரவில்லை…

    ஏதேதோ எண்ணங்கள்… எத்தனையோ கவலைகள்.

    செல்வச்செழிப்பில் வாழ்ந்த அம்மா… இப்போது வறுமை வாழ்க்கையில் அவதிப்படும்படி ஆயிற்றே… பெரிய மாளிகை வீட்டில் மகாராணியாய் வாழ்க்கை நடத்திய தாய்க்கு… இந்த கஷ்ட ஜீவனம் வேதனையாகத்தான் இருக்கும் பாவம்… எதையோ மனதில் வைத்து அல்லாடுகிறாள்…

    போகட்டும்… வறுமையைக் கொடுத்த இறைவன்… தேக ஆரோக்கியத்தையாவது கொடுக்கக் கூடாதா… இல்லையே… இரத்த அழுத்தம்… சர்க்கரை வியாதி… இரத்த சோகை… என்று ஒவ்வொன்றாய் அனுப்பி வைக்கிறார்…

    இரண்டு கால்களும் வீங்கியிருப்பது எதனால் என்று தெரியவில்லை. நாளைக்கு டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை…

    இன்னும் எத்தனை நாள் இப்படிப் போராட வேண்டுமோ… சரி… உடன் பிறந்தவளாவது ஒத்தாசையா இருக்கிறாளா என்றால்… அவளும் விட்டேற்றியாக இருக்கிறாள்… குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் ஏதோ விடுதியில் தங்கியிருப்பதுபோல் ஒதுங்கி இருக்கிறாள்… ஏதாவது கேட்டால் ‘வள்’ளென்று எரிந்து விழுவாள்… அம்மாவின் காதில் விழுந்து… அவரும் வேதனைப்பட வேண்டுமா… வேண்டாம்…

    தலையெழுத்து இப்படித்தான் என்றால் அதை அனுபவித்துதான் தீர வேண்டும். என்ன நடக்கிறதோ… நடக்கட்டும். பார்க்கலாம்… உள்ளம் விரக்தியுடன் நினைத்துக் கொண்டது.

    பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுக் கேட்டது…

    ‘அந்த நாளும் வந்திடாதோ…’ அந்தக் காலத்துப் பாடல்… தேன் கிண்ணம் நிகழ்ச்சி போலும்…

    ஆனால் இப்போதை மனநிலையை… மனதின் ஏக்கத்தை எதிரொலிக்கும் பாடல்!

    ‘அந்த நாளும் வந்திடாதோ…’

    தந்தையின் நிழலில்… தாயின் சிறகு தந்த கதகதப்பில் துன்பம் என்பதே அறியாத அந்த நாட்கள்… படகு போன்ற காரில் ஊர்வலம் வந்த இனிமையான நாட்கள். சீமானின் செல்வ மகளாய்… செல்வத்தில் புரண்டு. சொர்க்க வாழ்வை அனுபவித்த சுகமான நாட்கள்…

    கடவுளே… அந்த நாட்களை திருப்பித் தர மாட்டாயா என்ற ஏக்கம்.

    ‘ப்ச்சு’ எல்லாம் மாயமாகி… இப்போது அவையெல்லாம் வெறும் கனவோ என்று தோன்றுகிறது… விதி எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டதே…

    தந்தை மட்டும் இறக்காமல் இருந்திருந்தால்…

    இத்தனை நேரம். பெரிய தொழிலதிபரின் மனைவியாய்… செல்வந்தர் வீட்டு மருமகளாய் இருந்திருப்பேன்… வாழ்க்கையில் வசந்தத்தைப் பார்த்திருப்பேன்… அன்று நடந்த விபத்து வாழ்க்கையை தடம் புரள வைத்துவிட்டதே…

    ‘சே’. என்ன சுயநலமான எண்ணம்… இந்த விபத்து… என் கல்யாணத்திற்கு பின் நடந்திருந்தால்… அம்மாவின் கதி என்னவாகியிருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்கிறதே.

    அப்பா இறக்கும்போது நித்யாவிற்கு பதினேழு வயசாச்சே.

    ஒண்டியாய் சமாளித்திருக்க முடியுமா… இப்போது நான் துணையாய் இருப்பது போல இருக்குமா… கெட்டதிலும் நல்லது என்பார்களே. அது மாதிரிதான்.

    நிச்சயம் செய்திருந்த பிள்ளை வீட்டாரின் பேராசை குணம் தெரியாமலே போயிருக்கும்… அப்பாவிடம் இருந்த பணத்தைப் பார்த்துவிட்டுத்தான் அவர்கள் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டது என்ற உண்மை தெரிந்த விஷயமானது அப்பாவின் மறைவுக்குப் பிறகுதானே…

    அதற்குப் பிறகு வாழ்க்கைப் படகு தட்டுத் தடுமாறி. ஆடிப் போனதும் துர்அதிர்ஷ்டம்தான்.

    அவளது எண்ணத்தின் எதிரொலியாய் அடுத்த பாடல் ஒலித்தது.

    ‘அமைதியான நதியனிலே ஓடம் ஓடும்…

    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்.’

    ப்ச்சு… வாழ்க்கைப்படகு இப்போது ஆடிக் கொண்டு தான் இருக்கிறது. கவிழாமல் இருந்தால் போதும்… துக்கம் நெஞ்சில் முட்டியது. கண்கள் கலங்கின. ஏன் அழுகிறோம் எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல்… விம்மினாள் அவள்.

    யாராம்மா வனஜா… நீங்க அவங்களோட வந்தவங்களா… உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்… என்று நர்ஸ் வந்து அழைத்ததும் எழுந்து சென்றாள் வர்ஷிதா மனம் அடித்துக் கொண்டது… என்ன சொல்லப் போகிறோரோ

    டாக்டர்… உட்காருங்க… நீங்க பேஷண்டோட மகளா… என்று சொன்ன அந்த டாக்டர். தன் முன்வைத்திருந்த மருத்துவப் பரிசோதனை செய்து வந்திருந்த ‘ரிஸ்ல்ட்’டைப் பார்த்தார்.

    சாரிம்மா… உங்கம்மாவோட ஒரு கிட்னி ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால அடுத்த கிட்னியும் பாதிக்கப்படலாம். இப்பவே இன்ஃபெக்ஷ்ன் ஆகியிருக்கிறது. அவங்க ‘சுகர்’ பேஷண்ட் வேறே… கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். வீட்டிலும் சுத்தமான சூழ்நிலை இருக்க வேண்டும். இன்ஃபெக்ஷ்ன் ஆகாமல் பார்த்துக் கொள்ளனும், இரண்டு நாளைக்கு ஒரு முறை ‘டயாலிஸிஸ்’ பண்ண வேண்டியிருக்கிறது… என்று வரிசையாக அடுக்கினார் அந்த மருத்துவர்.

    ‘அய்யோ கிட்னியுமா… பகீர்’ என்றது அவளுக்கு.

    டயாலிஸிஸுக்கு எவ்வளவு ஆகும்… டாக்டர்… நடுக்கத்துடன் கேட்டாள் வர்ஷிதா.

    இரண்டாயிரம் ஆகும்மா… அவளைப் பரிதாபமாய்ப் பார்த்தவாறே சொன்னார் டாக்டர்.

    வர்ஷிதாவுக்கு தலை சுற்றியது.

    இருக்கிற வியாதிகள் போதாது என்று இதுவும் வர வேண்டுமா…

    சாரிம்மா… ‘டயாலிஸிஸ்’ பண்ணியே ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஏன்னா… அசுத்த ரத்தம்… இன்னொரு ‘கிட்னியைப்’ பாதித்து விடக்கூடாது பார்… என்றார் இன்னும் பயமுறுத்துவது போல…

    மென்று விழுங்கியவள். மெல்லக் கேட்டாள், டாக்டர்… பணம் மொத்தமா கட்ட வேண்டுமா… இல்லை. அப்பப்போ… கட்டினால் போதுமா.

    டயாலிஸிஸ் முடிந்ததும் பணம் கட்டினால் போதும் என்ன செய்ய… வியாதிகளுக்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் இல்லையேம்மா…

    உண்மைதான் டாக்டர். அம்மாவை எப்போது அழைத்து வர வேண்டும்.

    ம்ம்… நாளை மறுநாள் அழைத்து வாம்மா… ட்யூட்டி நர்ஸிடம் தேதி வாங்கிக் கொண்டு செல்ல மறக்க வேண்டாம். அதை வந்து காட்டினால் உடனே சிகிச்சைக்குத் தயாராகி விடலாம்… காத்திருக்கத் தேவையில்லை… இன்னொரு விஷயம்… சாப்பாட்டில் உப்பு குறைக்க வேண்டும். கூடிய வரையில் பத்திய உணவு நல்லது…

    ஏற்கனவே அப்படித்தான் டாக்டர்… இனிப்பு இல்லை. உப்பில்லை… உறைப்பில்லை… எண்ணெய் பதார்த்தமும் கிடையாது. முற்றும் துறந்த சந்நியாசியின் நிலைதான்… பாவம்… சொல்லும்போதே கண்கள் கலங்கின அவளுக்கு…

    இதற்கு தான் ஆரம்பத்திலிருந்து உணவில் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் அவசியம் என்று சொல்வது… உங்கள் அம்மா தேக நலத்தை பொருட்படுத்தாமல் கொஞ்சம் அலட்சியமாய் இருந்து விட்டார்போல… இப்போது அதன் பலனை அனுபவிக்கிறார். இனிமேலாவது அசட்டை வேண்டாம் என்று எடுத்துச் சொல்லம்மா…

    சரி டாக்டர்… வருகிறேன்… என்று எழுந்து வெளியே வந்தாள் அவள்.

    டாக்டர் ஏதாவது சொன்னாராம்மா… பயப்படும்படியா ஏதும் இல்லையே… கலக்கத்துடன் கேட்ட தாயை பரிதாபமாய் பார்த்தாள் மகள்… ஊகூம்… இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். வீட்டிற்குப் போய் நிதானமாய் சொல்ல வேண்டும். என்று நினைத்தவளாய்…,

    எதுவும் இல்லைம்மா… கொஞ்சம் இன்ஃபெக்ஷ்ன் ஆகியிருக்கிறது. மாத்திரையில் சரியாகிவிடும் என்றார் டாக்டர். என்று சொன்னாள் வர்ஷிதா.

    அம்மாடி… இப்போதான் மனசு சமாதானமாச்சு. ஏதாவது பெரிய செலவில் இழுத்து விட்டிடுமோன்னு பயந்தேன். வெறும் மாத்திரையோடு போச்சு… மாங்காடு தாயே… எனக்கு எதுவும் இல்லைன்னு வந்ததற்கு உனக்கு கோடி கும்பிடும்மா… என்று சொன்ன தாயைப் பார்த்து நெஞ்சம் கனத்தது. ‘அய்யோ… அம்மா… உன்னிடம் எப்படிச் சொல்வேன்’ என்று உள்ளம் புலம்பியது.

    2

    அலுவலகத்தில் ‘லோன்’ கேட்டுப் பார்க்கலாமா என்று எதிர்பார்ப்புடன் வந்த வர்ஷிதாவிற்கு… ஏமாற்ற செய்தி ஒன்று காத்திருந்தது.

    முதலாளி சுந்தரேசனுக்கு நெஞ்சு வலி வந்து ஆஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்களாம்… ‘மைல்ட் ஹார்ட் அட்டாக்’ என்று ஐ.ஸி.யூ.வில் விசேஷ கவனிப்பில் இருக்கிறாராம். அடப்பாவமே என்று பரிதாபப்பட்டாலும். அவர் வரும் வரை ‘லோன்’ கிடைக்காதே என்ற தவிப்பும் வந்தது. தன் துர்அதிர்ஷ்டத்தை எண்ணி மனம் நொந்தாள் அவள்… எங்கு போனாலும்… தனக்கு முன்னாலே வந்து நின்று வரவேற்கிறதே… இந்த துர்அதிர்ஷ்டம் சே! முதல் ‘டயாலிஸிஸு’க்கு மகேசுவரி தந்த

    Enjoying the preview?
    Page 1 of 1