Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Zen Buddhar Thaayumanavar
Zen Buddhar Thaayumanavar
Zen Buddhar Thaayumanavar
Ebook102 pages1 hour

Zen Buddhar Thaayumanavar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Kavingar Puviyarasu live in Coimbatore. He was born in 19th September 1931. More than 30 years he worked as Tamil teacher.
He also interested to do work in Kavithai, Drama, Art, Newspaper, Radio, Television, Film industry. He wrote 96 books in Tamil.
"Moonram Pirai" Drama has won the first prize in State level. In 2007, he won "Saathiya Academy Award"" for "Purachikaram" novel.
Again he won the Saathiya Academy Award in 2010 for "Kaiyapam". His Kavithai has transulated to Malayalam, Hindi, Kannada, Singalam, English, Aghori
and Russian.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580104201488
Zen Buddhar Thaayumanavar

Read more from Puviyarasu

Related to Zen Buddhar Thaayumanavar

Related ebooks

Reviews for Zen Buddhar Thaayumanavar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Zen Buddhar Thaayumanavar - Puviyarasu

    http://www.pustaka.co.in

    ஜென் புத்தர் தாயுமானவர்

    Zen Buddhar Thaayumanavar

    Author :

    புவியரசு

    Puviarasu

    For other books

    http://www.pustaka.co.in/home/author/puviyarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஜென்

    2. பாரதியின் பாடல்-ஜென்னுக்கு ஒரு விளக்கம்

    3. ஓ, அப்படியா!

    4. அச்சம் தவிர்

    5. பறந்த பட்டம்

    6. அதுவாதல்

    7. மரமும் நானே

    8. குரு உபதேசம்

    9. தன்னை அறிய

    10. எரித்தது புத்தரையா?

    11. தகுதி

    12. மௌன குரு

    13. நான் விழிப்புணர்ச்சி - பற்று அற

    14. பாவத்தின் சம்பளம்…

    15. அந்தக்கணம் - விழிப்பு

    16. இந்திரஜாலம் - கனவு

    17. ஆணவத் திரை

    18. புதிய பார்வை

    19. சும்மா

    20. வட்டிலில் ஞானம் - சிரிக்கும் புத்தர்

    21. பார் - சுயதரிசனம்

    22. சமநிலை - அழுவதா சிரிப்பதா?

    23. பார்வை

    24. நானே தியானம்

    25. முடிச்சவிழ்த்தல்

    26. நம்பிக்கையே குரு

    27. நீயாக இரு

    28. அறையில் ஞானம் - வைர மொழி

    29. அழுகை வருகிறதே

    30. சிறைக் குரு

    நூலாசிரியர் உரை

    செவி அமுதம் கண் அமுதமாய்…

    என்னதான் தொலைக்காட்சிப் பெட்டி நம் வீட்டு முன்னறை மூலைக்குள் உட்கார்ந்து கொண்டு, நம் குடும்பத்தாரை அந்தச் சதுரப் புதைகுழிக்குள் போட்டுப் புதைத்து நம்மைக் காணாமல் போகடித்துக் கொண்டிருந்தாலும், வானொலியின் ஆற்றல் இன்னும் வற்றிவிடவில்லைதான்.

    வீட்டின் மற்ற பகுதிகளிலும், பேருந்துகளிலும், தெருக்களிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது வானொலி.

    வானொலியின் பெரும் தாக்கத்தை உணர்த்தியவை இந்த ஜென் கதைகள்.

    தமிழக, அகில இந்திய வானொலி நிலையங்கள் வழியாகத் தொடர்ந்து முப்பது நாள்கள் ஒலித்துப் பல இலட்சக்கணக்கான மக்களின் காலைப் பொழுதுகளை சிந்தனையுடையவையாக மாற்றியவை இவை.

    மகான் ஒஷோவின் மூலமே ஜென் தமிழகத்தில் பரவலான அறிமுகம் பெற்றது. பலரும் இந்த மாதிரிக் கதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள், நான் உட்பட.

    தமிழர் வியந்து போற்றும் இந்த உலகக் கதைகள், 'போதி தர்மர்' என்ற காஞ்சித் தமிழரால் உருவாக்கப்பட்ட ஜென் தத்துவத்தின் விகசிப்பு.

    இங்கிருந்து வடக்கே வெகுதூரம் போய் இங்கேயே திரும்ப வந்திருக்கிறது, ஓர் அந்நியத் தத்துவம்போல.

    இதன் தமிழகத் தொடர்பை ஒவ்வொரு கதையிலும் சொல்லியிருக்கிறேன்.

    இவை கண் பார்வைக்காக எழுதப்பட்டவை அல்ல. செவி வழிச் சென்று மனவாயில் திறந்து உள்ளே நிலைக்கும் திட்டத்துடன், எளிமைப்படுத்தி, வேறு சில ஒப்புமைகளுடன் பேசப்பட்டவை.

    பலமுறை ஒலிபரப்பானபோது, இது நூல் வடிவம் பெறவேண்டும் என்று செவிமடுத்தவர் பலரும் வேண்டியதன் காரணமாகவே இது இப்படி இங்கே உங்கள் கரங்களில் மணக்கிறது.

    இதை ஒலிபரப்பிய அகில இந்திய-தமிழக-வானொலி நிலையங்களுக்கும், இதை முதன்முதலாக ஒலிபரப்பிய கோவை வானொலி நிலையத்திற்கும் நேயர்கள் சார்பான நன்றிகள்.

    நல்லனவற்றையே தேடித் தேடி வெளியிடும் விழிகள் பதிப்பகத்தின் அருமைச் சகோதரர்கள் தி.வேணுகோபால், தி.நடராசன் ஆகியோர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    புவியரசு

    1. ஜென்

    ஜென் ஒரு தத்துவம் அன்று; ஜென் ஒரு புன்னகை; ஜென் ஓர் இசைப் பாடல்; ஜென் ஓர் அழகு; ஜென் ஒரு வாழ்க்கை முறை; அது ஓர் ஆனந்த தரிசனம்; அது எந்தத் தத்துவத்திற்குள்ளும் சமயக் கோட்பாட்டிற்குள்ளும் அடங்குவது அன்று.

    சமய ஆசாரங்களையும், தத்துவ விசாரங்களையும், மத அனுஷ்டானங்களையும் கடந்தது ஜென்.

    மனிதன் தன் சொந்த இயல்பைக் கண்டுகொண்டு, எளிமையாக, எதார்த்தமாக வாழ்வதுதான் ஜென்.

    என்றாலும் ஜென் ஞானத்தின் சிகரம்.

    ஜென் என்ற ஞான மார்க்கத்தின் பிதாமகர்களில் மிக முக்கியமானவர், தமிழர் போதிதர்மர். காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த பெளத்த ஞானி போதி தர்மர், தமது குருவின் ஆணையை சிரமேற் கொண்டு, சீனாவுக்குச் சென்று ஜென் மார்க்கத்தைப் பரப்பினார்.

    அனுப்பி வைத்த அவரது குரு ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கே நிலவி வந்த தியானம்தான் சீனாவில் 'ஸ்யான்' என்று வழங்கப்பட்டு, அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று ஸென் ஆயிற்று.

    இந்தியாவில் தோன்றிய தியான வித்து, சீனாவில் முளைத்து, வளர்ந்து, ஜப்பானில் பூப்பூத்து, இன்று உலகெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

    'ஸென்'னை உலகம் முழுவதிலும் அறியச் செய்த பெருமை மகாஞானி ஓஷோவுக்கே உரியது.

    கன்பூசியஸ் தத்துவத்தின் எதார்த்தவாதம், தாவோவின் இயற்கை நேயம், புத்தரின் தியானம் - ஆகியவற்றின் கலவையில் தோன்றிய இரசவாதமாக ஜென் திகழ்ந்தாலும், இது

    Enjoying the preview?
    Page 1 of 1