Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Porattam
Porattam
Porattam
Ebook437 pages2 hours

Porattam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580101501487
Porattam

Read more from Jyothirllata Girija

Related to Porattam

Related ebooks

Reviews for Porattam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Porattam - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    போராட்டம்

    Porattam

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    1

    ஆற்றில் வெள்ளம் நன்றாக வடிந்துவிட்டிருந்தது. மழை அதிக அளவில் பெய்தாலும் தொல்லை; பெய்யாமலே இருந்தாலும் தொல்லை. நசநசவென்று சேறும் சகதியுமாய் எங்கே கால் வைத்தாலும் சறுக்கிக் கொண்டு போயிற்று. இன்றைக்குப் பரவாயில்லை. நேற்றெல்லாம் தெருவில் கால் வைக்க முடியவில்லையே. எங்கே பள்ளம் இருக்கும், எங்கே மேடு இருக்கும் என்று தெரிந்து கொள்ள இயலாத அளவுக்குத் தெருக்களில் தண்ணீர் சரசரவென்று ஓடிக்கொண்டும், குட்டைகளாய்த் தேங்கிக் கொண்டும் இருந்ததில், காலை வைத்து எடுப்பதே பெரிய பாடாகவன்றோ இருந்தது? இந்த அழகில் தண்ணீர்ப் பாம்புகள் வேறு. மழை அதிகமாய்ப் பெய்து தெருக்களில் சிற்றாறுகள் ஒடும் நேரங்களில் இவ்வாறு தண்ணீர்ப்பாம்புகள் சர்வ சாதாரணமாய்க் காலைச் சுற்றுவது உண்டுதானென்றாலும், பாம்பு என்றாலே அச்சந்தானே? காலைச் சுற்றுவது தண்ணீர்ப்பாம்பு தான் என்று உறுதியாக எப்படி நினைப்பது? அதிலும் குழந்தைகளுக்கு இன்னும் அதிக அச்சம். இதனால் மழைக் காலங்களில் நீர் ஓடும் தெருக்களில் பொதுவாகக் குழந்தைகளைக் காண முடிவதில்லை.

    ஆனால், வடிவேலுவின் வீட்டுக் குழந்தைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. தண்ணீரில் அளைவது என்றாலே அவற்றுக்குச் சொல்லி மாளாத உற்சாகந்தான். வடிவேலு அவை தண்ணீர்ப்பாம்புகள்தாம் என்றும், கடிப்பதில்லை என்றும், கடித்தாலும் ஒன்றும் நேராது என்றும் படித்துப் படித்து அவற்றுக்குச் சொல்லி வைத்திருந்தபடியால், அவை தாராளமாகத் தெருக்களில் சுற்றின. -

    வடிவேலுவுக்கு இரண்டே குழந்தைகள். இரண்டும் பெண்கள். மூத்தவளுக்கு ஆறு வயது. இரண்டாமவளுக்கு ஐந்து வயது. இரண்டு பேரும் முறையே இரண்டாம் வகுப்பு முதல் வகுப்பு ஆகியவற்றில் அவ்வூரின் தொடக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். வடிவேலு தன் குழந்தைகளின் மேல் உயிரையே வைத்திருப்பவன். பிள்ளைக்குழந்தைக்கு ஆசைப்பட்டு மேலும் மேலும் பெண் குழந்தைகளாகவே பெற்றுக் கொண்டு சீரழிந்து போன ஒரு குடும்பத்தைப் பற்றிய சினிமாவைப் பார்த்த படிப்பினையில் மனைவி மங்கம்மாவை எதிர்த்துத் தானாகவே கருத்தடை அறுவைச் சிகிச்சையைச் செய்துகொண்டவன்.

    மழை நின்று தெருக்களில் நீர் குறைந்துவிட்ட அந்த நாளின் அதிகாலை நேரத்தில் வடிவேலு வழக்கம் போல அன்றைய நாளிதழைப் படித்தபடி தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அந்தக் கிராமத்திலேயே அதிகம் படித்தவன் வடிவேலுதான். பத்தாம் வகுப்பை வெற்றிகரமாய்த் தாண்டியவன். அவன் மனைவி மங்கம்மாவுந்தான் ஒன்பதாவது வகுப்பை முடித்திருந்தாள். அந்த ஊரின் அக்கிரகாரத்து ஆண்களையும் பெண்களையும் நீக்கிவிட்டால், பார்ப்பனர் அல்லாதாரில் அதிகம் படித்த ஆண் வடிவேலுவாகவும், பெண் மங்கம்மாவுமாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமே இல்லை

    ஊர் பட்டிக்காடாக இருந்தாலும், பத்தாவது வரையில் படிக்க ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அது அந்த ஊரின் மிகப்பெரிய அதிசயந்தான். பண்டைய பழக்க வழக்கங்களை இம்மியும் விடாமல் இன்னமும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிற மக்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் அடக்கி இருந்த அந்தக் கிராமத்துக்கு அது ஓர் அதிசயந்தானே.

    நாளிதழைப் படித்துக்கொண்டிருந்த அவன் வாயிலிருந்து, சே என்ற ஒற்றைச்சொல் அருவருப்புடனும் ஆத்திரமாகவும் இரைந்து ஒலிக்க சமையற்கட்டில் வேலையாக இருந்த மங்கம்மா உதடுகளில் சன்னமான சிரிப்புடன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். ஏனைய கிராமத்து வீடுகளைப் போன்று நீளமாக இராமல், சதுர வடிவில் அவர்களது வீடு அமையப் பெற்றிருந்ததால், வடிவேலுவின் சே அவளது செவிகளைத் துல்லியமாக வந்தடைந்தது.

    நாளேடுகளையோ ஏனைய ஏடுகளையோ படிக்கும் போதும் தன் எதிரொலிகளை சே, கொன்னுட்டான், சோமாறிப் பயலுக, அய்யோ பாவம் என்ற சொற்களின் வாயிலாக வடிவேலு இரைந்து வெளியிடுவது வழக்கந்தான். அவனது இந்தச் செய்கை மங்கம்மாவுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்றும் வேடிக்கையாகத்தான் இருந்தது. அவள் கையில் காப்பிக்குவளையுடன் சமையற்கட்டை விட்டு வெளியே வந்து திண்ணையையடைந்து, இந்தாங்க காப்பியைக் குடியுங்க மொதக்கா, பெறகு படிப்பீங்க என்றாள்.

    வடிவேலு கழுத்தை அசைக்காமலே, நாளிதழின் மீது பதிந்திருந்த கண்களை நீக்காமல், கையை மட்டும் நீட்டினான். மங்கம்மாவுக்கு மேலும் சிரிப்பு வர அவனது நீட்டிய கையில் காப்பியைக் கொடுக்காமல் அவள் நின்று கொண்டிருந்தாள் அவலும் இட்டிய கை நிலையிலேயே மற்றொரு கையில் பற்றியிருந்த நாளிதழின் வரிகளின் மீது விழிகளைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

    சரியாக ஒரு நிமிடம் ஆனதும் மங்கம்மாவின் பொறுமை காணாமற் போனது. முகத்துச் சிரிப்பு மறைந்து எரிச்சல் குடிகொண்டது.

    என்னங்க இது? பேப்பரை அப்பால வச்சுப்போட்டு காப்பியை வாங்கிக்குங்க. அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக் காப்பியைக் கொட்டிறப் போறீங்க.

    அவன் நாளிதழைப் பக்கத்தில் வைத்துவிட்டு, என்ன அநியாயம் பார்த்தியா, மங்கம்மா? இந்தியா ரொம்பக் கெட்டுப் போயிறுச்சு என்று கூறிப் பெருமூச்சுவிட்டான். பிறகுதான் காப்பியைப் பெற்றுக்கொண்டான்.

    இன்னைக்கு என்ன புதுசாக் கெட்டுப் போயிறுச்சு? என்று அவள் நக்கலான சிரிப்புடன் கேட்டதும், அதானே"? என்று அவன் அவளுடன் ஒத்துப் போனான்.

    வடிவேலு வாய் வாயாகக் காப்பியைப் பருகினான். அவன் பருகி முடிக்கக் காத்திருந்த மங்கம்மா, இன்னைக்கு என்ன புதுச் சேதி உங்க இந்தியாவைப் பத்திக் கவலைப் படுறதுக்கு? என்றாள்.

    பள்ளிக் கூடத்துலேருந்து திரும்பிக்கிட்டிருந்த ஒரு பதினாலு வயசுப் பெண்ணை ரெண்டு ஆளுங்க டாக்சியில கடத்திக்கிட்டுப் போய்க் கற்பழிச்சுட்டாங்களாம். பாவிங்க, கற்பழிச்சுட்டு குத்துசிரும் கொறையுசிருமா மாந்தோப்புல கிடத்திட்டுப் போயிருக்காங்க. பாவம். அந்தக் கொழந்தை மழையில நனைஞ்சுக்கிட்டு மயக்கமாக் கிடந்திருக்கு யாரோ மாட்டுக் காரப்பய பார்த்துட்டு ஊருக்குள்ள வந்து சத்தம்போட்டு ஆளுங்களைச் சேர்த்துக்கிட்டுப் போயிருக்கான். பொண்ணை ஆசுபத்திரியில சேர்த்திருக்காங்க. ஆனா அது, பாவம், செத்திடுச்சு...

    மங்கம்மாவுக்குத் திடுக்கென்றது. நெஞ்சே வறண்டு போயிற்று விழிகள் அதிக விரிவுகொண்டு நிலைகுத்தி நின்றன. உதடுகள் பிளந்துகொண்டன.

    என்ன மங்கம்மா ஷாக் அடிச்ச மாதிரி நின்று போயிட்டே? இப்பல்லாம் பேப்பரைப் பிரிச்சாலே இது மாதிரி செய்திங்கதானே அதிக எண்ணிக்கையில வருது? காலம் கெட்டுப் போயிறுச்சு பொண்ணுங்களைப் பூவா நினைக்க வேண்டிய மனுசங்க இப்படிக் கெட்டுப் போனாங்களே, இதென்ன அநியாயம், வரவர இது மாதிரி அக்கிரமங்க நாட்டுல நாளுக்கு நாள் அதிகமாயிக்கிட்டேல்ல வருது? காந்தி கண்ட கனவு இந்தியா எங்கே? இப்ப நாம காண்ற நிஜ இந்தியா எங்கே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாவில்ல இருக்குது?

    காப்பியைப் பருகி முடித்த பிறகும் சிந்தனை கலையாததால் அவன் கையிலேயே வைத்துக் கொண்டிருந்த குவளையை எடுத்துக்கொண்ட மங்கம்மா, "நீங்க சொல்றது நெசந்தாங்க நாடு கெட்டுத்தான் போயிறுச்சு பொண்ணுங்க அதிக அளவில வெளியே வரத் தொடங்கி இருக்குறாங்கல்ல? பொண்ணுங்க வீட்டை விட்டு வெளியே அதிகமா வராம இருந்த நாடு இல்ல? நம்ம நாடு? இப்ப திடீர்னு வெளியே வரவே, காஞ்ச மாடு கம்பத்துல பாயுற கணக்கா இந்த ஆம்பளைங்களுக்கு வெறி வந்திறுது நம்ப ஆம்பளைங்க லச்சணந் தெரிஞ்சுதான், பொம்பளப் பிள்ளங்க வீட்டு வாசப்படி தாண்டி வெளியே போகக்கூடாதுன்னு நம்ம பெரியவங்க எழுதி வச்சிருக்குறாங்க. இல்லையா? என்றாள்.

    நல்லாருக்குதே நீ பேசறது? அதுக்குன்னு ஒரு நியாய அநியாயம் கிடையாதா? அவங்கவங்க வீட்டில பொம்பளப் பிள்ளங்க இருக்க மாட்டாங்களா? அட பொம்பளப் பிள்ளங்க இல்லைன்னே வச்சுக்கிறுவம். இந்தக் கழுதைங்களைப் பெத்தவ ஒரு பொம்பளதானே? அந்த நெனப்புக்கூடவா இல்லாம போயிறும்?

    அந்த நெனப்பு ஆம்பளைங்களுக்கு இருந்திச்சுன்னா, இந்த நாடு என்னங்க, இந்த உலகம் முழுக்கவே வேற மாதிரியாவில்ல இருக்கும்? என்னமோ, போங்க, நாமளும் ரெண்டுபொம்பளப் பிள்ளங்களைப் பெத்து வச்சிருக்குறோம். ரெண்டு பேத்தையும் படிக்க வைக்கணும்குற ஆசைவேற நமக்கு இருக்குது. இதுங்க ரெண்டும் படிச்சு முடிச்சுப் பத்திரமா இருக்கணுமேங்குறதை நெனச்சா அடி வயித்துல பகீர்ங்குது…

    வடிவேலு பதில் சொல்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனும் அதைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தான்.

    என்னங்க யோசிக்கிறீங்க?

    நானும் அதையேதான் நெனச்சுக்கிட்டிருக்குறேன், மங்கம்மா.

    நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யோசிக்கிறோமில்ல, மங்கம்மா? என்றவாறு அவன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டி அவனது கன்னத்தில் இலேசாய்த்தட்ட அந்தக் காலை நேரத்து வெளிச்சத்தில் யாரேனும் பார்த்துவிடப் போகிறார்களே என்ற கூச்சத்தில் மங்கம்மா சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் அக்கம்பக்கத்தில் இல்லை என்பது உறுதிப்பட்ட பிறகு, ரொம்பத்தான் வழியாதீங்க, காலங்கார்த்தால, என்று கூறிச் சிவந்துபோனாள்.

    காலங்கார்த்தாலதானே வழியக்கூடாது. இருக்கட்டும், இருக்கட்டும்.

    போதும், போதும். பொடிவச்சுப் பேசாதீங்க... ஏங்க? ராசம்மா சங்கதி என்னாச்சு? எல்லாரும் கம்முனு இருந்தா என்ன அருத்தம்? சட்டுப் புட்டுனு எதுனாச்சும் ஒரு முடிவுக்கு வரவேணாமா அப்புறம் ஊரு கூடிச் சிரிக்கும்படி அசிங்கமா நடந்துறப்போவுது.

    வடிவேலுவின் முகத்துக் குறும்பு உடனே மறைந்து அதில் ஒரு கவலை குடியேறிற்று.

    நேத்து ராத்திரி முழுக்க ராசம்மா பத்தின கவலைதான் எனக்கு. உறங்கவே முடியல்லே. நீயும்தான் பொரண்டு, பொரண்டு படுத்தே. நானும் கவனிச்சுக்கிட்டுத்தானே இருந்தேன்?

    மங்கம்மா ஒன்றும் கூறாதிருந்தாள்.

    யோசிச்சுக்கிட்டே இருந்தா ஆச்சுதா? எதுனாச்சும் முடிவுக்கு வரணுமில்ல? காலம் கடத்துறது நல்லால்லீங்க.

    அவன் முகத்தில் அடி வாங்கிய துணுக்குறலுடன் தலை உயர்த்தி அவளை ஏறிட்டான்.

    என்ன சொல்றே, மங்கம்மா? எதுனாச்சும் விபரீதமா ஆயிடிச்சா? எதையும் ஒளிக்காம எங்கிட்ட சொல்லிறு

    மங்கம்மாவின் முகத்துக் கவலை மறைந்து ஒரு கோபம் உடனே வந்து உட்கார்ந்து கொண்டது.

    ராசம்மாவைப் பத்தி அப்படியெல்லாம் தப்பா எதுவும் நினைக்காதீங்க. உங்க தங்கிச்சி அது. நான் எதுனாச்சும் எசகு பெசகாப் பேசினாலும் நீங்க பரிஞ்சுக்கிட்டு வர வேண்டியது போக, நீங்களே சந்தேகப்படுறாப்ல கேள்வி கேக்கலாமா?

    வடிவேலுக்கு வாய் அடைத்துப் போயிற்று. சில கணங்கள் வரை அவனால் எதுவுமே பேசமுடியாது போயிற்று. பிறகு சமாளித்துக் கொண்டு, அதுக்குச் சொல்லல்லே, மங்கம்மா. இந்தக் காலத்துப் பொண்ணு பாரு. நாலு எழுத்துப் படிச்சிருக்குதில்ல? கொஞ்சம் முன்ன பின்ன நடந்துக்கக்கூடிய சூழ்நிலையில எதுனாச்சம் எக்குத் தப்பா ஆயிருந்திச்சுன்னா, காலாகாலத்துல முடிச்சிறனுமில்ல? அதுக்குத்தான் வெளிப்படையாக் தேக்குறேன். மத்தப்படிக்கு எந் தங்கச்சி மேல இல்லா நம்பிக்கையா? இருந்தாலும் ஒரு முன் சாக்கிரதை, நல்லதை யோசிக்கிறதுக்கு முந்தி கெட்டதை யோசிச்சுப் பார்த்துட வேண்டிய காலமில்ல இந்தக் காலம்? சினிமாப் பார்க்குற பொண்ணு. கதைபடிக்கிற பொண்ணு அதனாலதானே இப்படி வம்பில மாட்டிக்கிட்டு நிக்கிது

    ஒகோ, இது மாதிரி ஒரு வம்பில மாட்டிக்கிட்டு நிக்கிறதுக்கு சினிமாப் பார்த்துக் கதையும் படிக்கனுமோ? உங்க ஆத்தா உங்க அப்பாவைத்தான் கட்டுவேன்னு அந் காலத்துல ஒத்தைக்கால்ல நின்னாங்களாமே? அவுங்க எந்தச் சினிமாவுக்குப் போனாங்க? எந்தக் கதை படிச்சாங்க? கைநாட்டு வைக்கிற பொம்பளையில்ல அவங்க? என்று மங்கம்மா அவனைச் சரியாக மடக்க அவன் வாய்மூடிப் போனான்.

    அவன் சிரித்துக்கொண்டான்.

    நீ சொல்றது சரிதான், மங்கம்மா. படிக்காதவங்களுக்கே அப்படி ஒரு நெஞ்சழுத்தம் சில நேரங்கள்ல ஏற்படுதுன்ன படிச்சிருக்குற எந்தங்கச்சிக்கு ஏற்பட்டா அதுல ஆச்சரியமே இல்லதானே? அதுக்குச் சொல்ல வந்தேன்.

    ஒரு தரம் அவங்களைப் போய்ப் பார்த்துப் பேசுங்களேன்.

    போடா நாயேன்னாங்கன்னா?

    அப்படித்தான் சொல்லுவாங்க. ஒசந்த சாதிக்காரங்க நாமதாங்க தணிஞ்சு போகணும். பொண்ணு வீட்டு காரங்கல்ல?

    நாத்தனாருக்குப் பரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரே பொம்பளை இந்த உலகத்துலயே நீ ஒருத்தியாத்தான் இருப்பேன்னு நினைக்கிறேன்.

    உங்களைக் கட்டினதுனால அது எனக்கு நாத்தனார்ங்கிற உறவுக்கு மாறிச்சு. அதுக்கு முந்தி என்னோட செநேகிதிதானே அது? நம்ம கல்யாணம் நடக்க அது எப்படியெல்லாம் உதவி செய்திருக்குது? அதையும் நாம நெனச்சுப் பார்க்கணுமில்ல?

    வடிவேலு பழைய ஞாபகங்களின் சுவையில் சிரிப்புக் கொண்டான்.

    ராசம்மா என்ன பண்ணுது?

    குளிச்சுக்கிட்டிருக்கு.

    அப்போது தெரு முக்கில் மிக விரைவாக நடந்துவந்து கொண்டிருந்த ஒர் ஆளின் மீது இருவருடைய பார்வைகளும் ஒருசேரப் பதிய, இருவரும் பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

    2

    அந்தக் கிராமத்திலேயே பெரிய வீடு அவர்களுடையது தான். அதாவது வரதராசனுடையது. அவர் மனைவி வள்ளியம்மாளுடையது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இருவர் பெயர்களிலும் சம மதிப்பளவில் இணைந்துள்ள வீடு அது. மிகப் பெரிய வீடு என்பதால் அவர்களுடைய குடும்பத்துக்கே பெரிய வீட்டுக்காரங்க என்ற அடைமொழி உண்டு. வரதராசனின் பெயரைக் கூட யாரும் சாதாரணமாகச் சொல்லுவதில்லை. பெரிய வீட்டுக்காரர் என்றுதான் மரியாதையாக ஊர்க்காரர்கள் அவரைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுவார்கள்.

    அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நன்செய், புன்செய் நிலங்களின் பெரும்பகுதிகள் அவருக்கும் அவர் மனைவிக்குமாகச் சேர்ந்து சொந்தமானவை. இதனால் கிட்டத்தட்ட அந்தக் காலத்துச் சமீந்தார் பரம்பரையைச் சேர்ந்தவருக்குரிய மதிப்பும் கவுரவமும் அவருக்கு அந்த ஊரில் மக்களிடையே இருந்தன. சுருக்கமாய்ச் சொல்லப்போனால் அந்த ஊரிலேயே அவர்கள்தாம் மற்ற எவரையும் காட்டிலும் அதிகமாய்ப் பணங்காசு, சொத்து சுகம் எல்லாம் உடையவர்கள். இதனால் அந்த ஊரே அவர்கள் மீது அச்சமும் மரியாதையும் கொண்டிருந்தது எனலாம்.

    வரதராசன் அதிகம் படித்தவர் அல்லர். எட்டாவது வகுப்பு வரை எட்டிப் பார்த்துவிட்டு வெற்றிகரமாய்ப் படிப்பை நிறுத்திக் கொண்டுவிட்டவர். எட்டு வகுப்புகள் வரை எப்படியோ படித்து முடித்ததே அவரைப் பொறுத்த மட்டில் அதிசயத்திலும் அதிசயந்தான். அவரே அப்படி வாய்க்கு வாய் சொல்லிச் சிரிப்பதுண்டு. பரம்பரை பரம்பரையாய் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர்களாதலின், அவருடைய மூதாதையர்களில் யாரும் படித்தவர்கள் இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஈராண்டுகள் வீதம் டேரா போட்டு இழுத்துக்கொள் பறித்துக்கொள் என்று ஒரு வழியாக எப்படியோ எட்டு வகுப்புகள் வரை வந்துவிட்டது அவருக்கே நம்ப முடியாத ஆச்சரியமாகவே இருந்து வந்துள்ளது.

    அவருடைய மக்களுக்கோ அவர் படித்த அந்த அற்பப் படிப்புகூட ஏறவில்லை. மூத்த மகன் ருக்மாங்கதன் ஏழு வகுப்புகள் வரையில் எப்படியோ வந்து சேர்ந்தபின், மேற்கொண்டு தன்னால் படிப்பைத் தொடர முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டான். அவருக்கு ஒரு மகனும் மகளும் மட்டுமே. மகள் காந்திமதியின் படிப்பு ஒன்பது வகுப்புகளோடு நிறுத்தப்பட்டுவிட்டது.

    அதிகமாய்ப் படித்தால் மகன் வருங்காலத்தில் தமக்கு அடங்காமற்போகக்கூடும் என்ற அச்சம் உள்ளுற அவருக்கு இருந்தது. ஆனால், மூத்த மகன் ருக்மாங்கதன் கடந்த ஆறு மாதங்களாய்க் கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லிவரும் பிடிவாதமான சொற்களை நினைவு கூர்ந்தபோதோ, படிப்புக்கும் நடத்தைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்ற கசப்பான முடிவு அவருள் தோன்றியது.

    அவரும் அன்று காலையில் தம் வழக்கத்துக் கிணங்க அன்றைய நாளிதழ்களைத் தமக்கு எதிரே இருந்த மேசை மீது பரப்பிவைத்துக் கொண்டு எதை முதலில் படிக்கலாம் என்று யோசித்தபடி தினமணியைத் தம் கையில் எடுத்த கணத்தில், அவர் மனைவி வள்ளியம்மாள் தகதகக்கும் நகைகளால் உடம்பின் எந்தெந்த பாகங்களையெல்லாம் அதிகபட்ச அளவில் மறைக்கலாமோ அந்த அளவுக்கு மறைத்துக் கொண்டு ஆடி அசைந்து வந்து அவருக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டாள்.

    என்னங்க, நம்ப ருக்மாங்கு இப்படிப் பண்ணிடிச்சே என்று அங்கலாய்த்துப் பெருமூச்சுவிட்டபடி கண்கலங்கிய அவளை அவர் ஏறிட்டு விட்டுத் தாமும் ஒரு பெருமூச்சை உதிர்த்தார்.

    எல்லாம் நம்ம போதாத காலண்டி, வள்ளி, போதாத காலம். வேற என்னத்தைச் சொல்லுறது?

    வள்ளியம்மாளுக்கு ருக்மாங்கதன் என்று மூத்த மகனின் முழுப்பெயரையும் ஒருசேர ஒழுங்காய் உச்சரிக்க வராது. சின்ன வயசில் அவனை ருக்கு, ருக்கு என்றே அவள் அழைத்து வந்தாள். ஆனால் ருக்மாங்கதனுக்கு விவரம் புரிகிற வயசு வந்ததும். ருக்கு என்பது சாதாரணமாக ருக்மிணி என்ற பெண்ணுக்குரிய பெயரின் சுருக்கம் என்பது புரிய, அவன் அப்படி ஒரு பெயர்ச் சுருக்கத்தால் தன்னை யாரும் அழைப்பதை வலுவாக எதிர்த்தான். அதன் விளைவாக அவனை வீட்டில் எல்லாரும் ருக்மாங்கதன் என்ற முழுப் பெயராலேயோ இல்லாவிட்டால் ருக்மாங்கு என்றோ அழைத்தார்கள். வரதராசன் எப்போதும் முழுசாகப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். வள்ளியம்மாள் மட்டும் இரண்டுங்கெட்டானாக ருக்மாங்கு என்று அழைத்து மகனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டாள். எனினும் ருக்குவுக்கு ருக்மாங்கு பரவாயில்லை என்று தோன்ற அவள் அவ்வாறு கூப்பிடப்படுவதைச் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

    போதாத காலம்னு சொல்லி சும்மா இருந்துடப் போறீங்களா? அவன் இஸ்டம் போல நடக்க அவனை விட்டுறப்போறீங்களா? என்று அவள் மறுபடியும் அங்கலாய்க்க, அவர் மவுனமானார்.

    என்னங்க, பேசாம இருக்கீங்க? அவன் இஸ்டத்துக்கு விட்டுறக்கூடிய விசயமாங்க இது? இப்படி ஒரு மோகினிப் பிசாசு நம்ப மகனைப் பிடிச்சிக்குதே?

    சரியாச் சொன்னே, வள்ளி. அவனைப் பிடிச்சிருக்கிறது மோகினிப் பிசாசுதான். இல்லாட்டி இப்படி உடும்புப் பிடி பிடிப்பானா

    என்ன செய்யிறதா இருக்கீங்க? அதைச் சொல்ல மாட்டேங்கறீங்களே

    என்ன செய்யலாம்? நீதான் சொல்லேன்

    அந்தப் பக்கிரிப் பொண்ணைக் கலியாணம் கட்டிக்கிட்டா சொத்துல ஒரு தம்பிடி கூட அவனுக்குக் கிடைக்காதுங்கிறதை இன்னும் திட்டவட்டமா அவங்கிட்டப் பேசிறுங்க. எல்லா அப்பா அம்மாங்க மாதிரியும் சும்மானாச்சும் பயமுறுத்தறாங்கன்னு நினைக்கிறான்னு தோணுது. அப்படியெல்லாம் இல்லைங்கிறதைப் பளிச்சுனு சொல்லிறுங்க. கண்டிப்பாப் பேசுங்க, பேரன், பேத்தின்னு பொறந்ததும் எப்படியும் நாங்க வழிக்கு வந்திறுவோம்னு கனாக்கூடக் காணேதேடான்னு அடிச்சுச் சொல்லுங்க. உங்களுக்குத்தான் அவன் கொஞ்ச மாச்சும் அடங்குவான். நான்னா அந்தப் பயலுக்குத் தொக்கு

    அவனைக் கூப்பிடு

    அவன் வீட்டுல இல்லீங்க.

    காலங் கார்த்தால எங்கிட்டுத் தொலஞ்சான்

    என்னமோ வயக்காட்டுப் பக்கம் வாக்கிங் போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு ஆறுக்கெல்லாம் பொறப்பட்டுப் போயிட்டான். காப்பி கூடக் குடிக் கல்லே வந்து குடிக்கிறேன்னுட்டான்.

    "ஒருக்கா அந்தச் சிறுக்கி வீட்டுக்குப் போயிருப்பானோ’?’

    இருக்காதுங்க. இம்புட்டுக் காலங்கார்த்தாலயெல்லாம் அங்கிட்டுப் போக மாட்டான். நெசமாவே வாக்கிங்குக்குத்தான் போயிருப்பான்.

    இதென்ன புது வழக்கம் வாக்கிங்கும் மண்ணாங் கட்டியும்.?

    அவனுக்கு மனசு சரியில்லேன்னு தோணுது. எப்ப பார்த்தாலும் மோட்டு வளையைப் பார்த்துக்கிட்டு எதையோ பறி கொடுத்தவன் மாதிரி உக்காந்துக்கிட்டுக் கிடக்கான். அந்தப் பொண்ணை அவன் லேசில மறப்பான்னு எனக்குத் தோணல்லீங்க... ஒரு வகையில பார்த்தா பரிதாபமா இருக்கு

    வரதராசன் ஒரு திடீர் எரிச்சல் தனது முகத்தில் பரவ, சற்றே துடித்த மீசையை வலக்கை ஆட்காட்டி விரலால் வருடியபடி என்னது நீ? அப்படின்னா, அந்தச் சிறுக்கியையே நாம மருமகளா ஏத்துக்கிடணும்னு சொல்லிடுவே போலி ருக்குதே இன்னும் கொஞ்சம் போனா உன் குரல் அவனுக்கு ஆதரவா ஒலிக்கிற மாதிரி தோணுதே வள்ளி, இத பாரு. இது நல்லால்லே. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழுன்னு ஒம் மகனுக்குச் சொல்லி வச்சிருக்கிறயா என்ன? இந்தப் பம்மாத்து வேலையெல்லாம் ஏங்கிட்ட வானாம். ஆமா. சொல்லிட்டேன். இது நல்லால்லே, என்று ஓர் அதட்டல் போட்டார்.

    வள்ளியம்மாள் நடுங்கிப் போனாள். உண்மையில், அவள் ஒன்றும் ருக்மாங்கதனுக்காக அவரிடம் வக்காலத்து வாங்கவில்லைதான். ஆயினும், மகனின் சோகம் அவள் மனத்தைக் கக்கித் துன்புறுத்திக்கொண்டிருந்தது. அவர் அவனது துயரத்தை அவ்வளவாக மேற்போட்டுக் கொள்ளவில்லை என்ற நிலையில், உள்ளது உள்ளபடி அவருக்கு எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் அவள் அவனது எதிரொலி பற்றி அவருக்கு எடுத்துச் சொன்னாள். அந்தப் பெண்ணை அவன் தேர்ந்தெடுத் திருப்பதும், அவளை மணந்துகொள்ள அனுமதிக்காவிட்டால் வாணாள் பூராவும் கலியாணம் கட்டாமலே இருந்துவிடப் போவதாக அறிவித்திருப்பதும் அவளுக்கும் சற்றும் பிடிக்க வில்லைதான். மகன் ஒரு பெண்ணைத் தானாகத் தேர்ந்தெடுத்துக் காதலிப்பது என்பதை இந்த நாட்டின் எந்தத் தாயும் வரவேற்பதில்லை என்ற உண்மையால் மட்டுமல்லாமல், அவன் விரும்பிய பெண் தங்களுக்குச் சரியான அந்தஸ்துள்ள குடும்பத்தைச் சேராதவளாக இருந்தது வேறு அவளது சம்மதமின்மைக்குக் காரணங்கள். ஆனாலும் அவளுக்கென்னவோ ருக்மாங்கதனை உடனே வழிக்குக் கொண்டு வர முடியாது என்ற அவநம்பிக்கை மனம் முழுக்க நிறைந்து கிடந்தது. இதனால், அவனைக் கொஞ்சம் விட்டுப் பிடித்துப் படிப்படியாக வழிக்குக்கொண்டு வர வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது. அவளது எண்ணப்போக்கு இவ்வாறாக இருக்க, கணவரின் குற்றச்சாட்டு அவளைத் திகைப்பில் அமிழ்த்தியது.

    என்னங்க, நீங்க, கண்டமேனிக்குப் பேசறீங்க? நம்ம குடும்பத்துல நடக்குற முதக் கலியாணம். அதுக்குப் போயி நம்ம அந்தஸ்துக்கு ஒத்துவராத ஒரு பொண்ணை ஏத்துக்க எனக்கு மட்டும் சம்மதமா இருக்கும்னா நினைக்கிறீங்க? நம்ம மகனை அன்னையிலேருந்து நீங்க ஏறெடுத்தும் பார்க்குறல்லே. அவன் எந்த அளவுக்கு உருக்குலைஞ்சு கிடக்கான்கிறதை நீங்க கவனிக்கவும் இல்லே. அவன் பக்கமா நீங்க தலையைக் கூடத் திருப்புறதில்லே. அதனால நாளைக்கு எதுனாச்சும் ஆயிறுச்சுன்னா, அப்பவே நீ ஏங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்லன்னு நீங்க என்னயப் பிடிபிடின்னு பிடிச்சுக்கக்கூடாதில்ல? அதுக்குத்தான் உள்ளது உள்ளபடி உங்க காதுல ஒரு வார்த்தை போட்டு வச்சிறனும்னுதான் சொல்றேன்.

    என்னடி சொல்றே நீ? நாளைக்கு எதுனாச்சும் ஆயிறுச்சுன்னா? ங்குறியே என்ன ஆயிறும்னு பயப்டறே தெளிவாப் பேசு" என்று அவர் அவளை அதட்டிய போதிலும், அவள் எதை மனத்தில் வைத்துக்கொண்டு பூடகமாய்ச் சொன்னாள் என்பது அவருக்குப் புரியவே செய்தது.

    நம்மள மாதிரி அந்தக் காலத்து ஆளுங்க இல்லீங்க இந்தக் காலத்துப் பசங்க. ரொம்பவும் ரோசக்காரங்க எது வேணும்னாலும் செய்வாங்க. ஒண்னு - நம்மள மீறிப் போய் ந்தப் பொண்ணை அவன் கட்டுவான். இல்லாட்டி விபரீதமா துணாச்சும் ரெண்டு பேருமே செய்துக்குவாங்க. நீங்கதான் நெதமும் பேப்பர்ல படிக்கிறதாச் சொல்றீங்களே, காதல்ல தோத்துப்போய்க் கிஷ்ணாயிலை ஊத்திக்கிட்டோ, இல்லாட்டி அரளி விதையை அரச்சுக் குடிச்சோ இளசுங்க தற்கொலை செய்துக்கிறதா. அதுமாதிரி செய்துக்கிட்டாங்கன்னா ரெண்டு குடும்பத்துக்கும் வருத்தம்.

    அப்ப... ரெண்டு பேத்துக்கும் முழு மனசோட சம்மதிச்சு கலியாணத்தை நடத்தி வெச்சுடலாம்னு மறை முகமாச் சொல்றே அதானே? உள்ளதைச் சொல்லு.

    நான் அப்படிச் சொல்லல்லீங்க முடிவு செய்ய வேண்டியது நீங்கதான். நான் உள்ள நிலவரத்தை விவரமா எடுத்துச் சொல்றேன். அம்புட்டுத்தான். அது என் கடமை இல்லீங்களா? இதையெல்லாம் சொல்லாம போயிட்டமேன்னு நாளைக்கு எனக்கும் ஒரு பச்சாதாபம் வரக் கூடாதில்ல? அதுக்குத்தான்.

    வரதராசன் மனைவியை உறுத்துப் பார்த்தார். கண்களில் சினத்தின் விளைவான சிவப்புத் தோன்றி இருந்தது.

    ஓகோ நீ என்னதான் மறைச்சுப் பேசினாலும் எனக்குப் புரியதுடி நீ உன் மகன் பக்கந்தான். அவன் தற்கொலை செய்துக்கிட்டா என்ன செய்யிறதுன்னு பயப்படறே, அதனால அவனுக்கு அந்தப் பொண்ணையே கட்டி வச்சுறலாம்னு மறைமுகமா எனக்குப் புத்தி சொல்றே. கேட்டா அப்படியெல்லாம் இல்லையின்னு புளுகறே. எனக்கும் மண்டையில கொஞ்சம் மூளை இருக்குடி. நான் ஒண்ணும் வாத்து மடையனில்லே. இந்த அடாவடி சாமர்த்திய வேலையெல்லாம் ஏங்கிட்ட வேணாம். வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு உன் மனசில இருக்குறதைத் தேங்காய் உடைக்கிற மாதிரி பட்னுபோட்டு உடைச்சிறு."

    வள்ளியம்மாள் திடுக்குற்றாள். ஒரு வேளை உள்ளுறத் தன் மனம் மகனின் பக்கமோ, அது தனக்கே தெரியவில்லையோ என்ற குழப்பத்துக்கு முதன் முறையாக அவள் ஆளானாள். ஆனாலும், சம அந்தஸ்தில் இல்லாத அந்தப் பெண் தன் குடும்பத்தின் முதல் மருமகளாகக் காலடி எடுத்து நுழைவதில் அவளுக்குச் சம்மதம் இல்லைதான். சாதி வித்தியாசம் வேறு.

    "அப்படியெல்லாம் இல்லீங்க. எனக்குச் சம்மதமே கிடையாதுங்க. ஆனா. எல்லாத்தையும் அலசிப் பார்த்துட்டு நாம ஒரு முடிவுக்கு வர்றது நல்லதுங்கிறதுக்காகச்

    Enjoying the preview?
    Page 1 of 1