Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedi Vandha Kaadhal
Thedi Vandha Kaadhal
Thedi Vandha Kaadhal
Ebook52 pages22 minutes

Thedi Vandha Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580101501457
Thedi Vandha Kaadhal

Read more from Jyothirllata Girija

Related to Thedi Vandha Kaadhal

Related ebooks

Reviews for Thedi Vandha Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedi Vandha Kaadhal - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    தேடி வந்த காதல்

    Thedi Vandha Kaadhal

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    தேடி வந்த காதல்

    1

    மாணவ மாணவிகள் அனைவரின் பார்வைகளும் ஒருசேர வகுப்பு வாயில்புறம் நோக்கியதைக் கவனித்த விரிவுரையாளர் தமது பார்வையையும் அங்கே செலுத்தினார். வகுப்பறை வாயிலில் தயங்கியபடி நின்றிருந்த ரமாவைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை தோன்றியது.

    என்ன? லேட்டா?

    ஆமா, சார்.

    பஸ்ஸை மிஸ் பண்ணிட்டீங்க, அதானே?

    இல்லே சார். பஸ்தான் என்னை மிஸ் பண்ணிடிச்சு.

    வகுப்பறை சிரிப்பில் ஆழ்ந்தது. விரிவுரையாளரும் சிரிப்பில் கலந்து கொண்டதுதான் வியப்புக்கு உரிய ஒன்று. அது ரமாவுக்கென்றே உள்ள ராசி. ரமாவின் இடத்தில் வேறு எவரேனும் இருந்திருந்தால், ‘அதிகப்பிரசங்கி’ எனும் கடுஞ்சொல் விரிவுரையாளரின் எதிரொலியாக இருந்திருக்கும். அவரது முகத்தில் சிரிப்புக்குப் பதில் சிடுசிடுபபுத் தோன்றி இருக்கும்.

    காரணம் ரமாவின் வியக்க வைக்கிற பேரழகு. அதுமாதிரி ஓர் அழகைப் பார்த்தே இருக்க முடியாது என்று நினைக்க வைக்கிற அழகு அவளுடையது. சக மாணவர்கள் மட்டுமல்லாது விரிவுரையாளர்களும் அவர்களோடு சேர்ந்து வழிவதிலும் வியப்பு இல்லை. மாணவிகளிடம் வேறுவகையான ‘வழிசல்’ அவள்பால்' இருந்தது.

    அதாவது அவர்கள் மனங்கள் பொறாமையால் ததும்பி வழிந்து கொண்டிருந்தன.

    விரிவுரையாளரின் புன்னகையினின்று, தனது தாமத வருகை மன்னிக்கப்பட்டுவிட்டதைப் புரிந்து கொண்ட ரமா தன்னிருக்கைக்குக் சென்று அமாந்தாள். அவள் வகுப்பறை வாயிலில் தோன்றியதிலிருந்து தன்னிருக்கையை அடைந்து உட்காரும் வரையில் அவளைப் பார்வையால் தொடர்ந்தவர்களில் ரகுபதியும் ஒருவன். அநேகமாக எல்லா மாணவர்களின் விழிகளும் அவள் மேல் பதிந்திருந்தாலும், அவர்களில், ஒருவனின் பார்வையில் மட்டும் காதல் இருந்தது. மற்றவர்களின் பார்வைகளில் ஒரு பிரமிப்பு மட்டுமே தென்பட்டது. (கொஞ்சம் காமமும்கூட)

    அவசர அவசரமாக நடந்து வந்ததாலோ என்னமோ ரமாவின்

    Enjoying the preview?
    Page 1 of 1