Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sanga Ilakkiya Kathaikal
Sanga Ilakkiya Kathaikal
Sanga Ilakkiya Kathaikal
Ebook242 pages3 hours

Sanga Ilakkiya Kathaikal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Kavingar Puviyarasu live in Coimbatore. He was born in 19th September 1931. More than 30 years he worked as Tamil teacher.
He also interested to do work in Kavithai, Drama, Art, Newspaper, Radio, Television, Film industry. He wrote 96 books in Tamil.
"Moonram Pirai" Drama has won the first prize in State level. In 2007, he won "Saathiya Academy Award"" for "Purachikaram" novel.
Again he won the Saathiya Academy Award in 2010 for "Kaiyapam". His Kavithai has transulated to Malayalam, Hindi, Kannada, Singalam, English, Aghori
and Russian.
Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580104201538
Sanga Ilakkiya Kathaikal

Read more from Puviyarasu

Related to Sanga Ilakkiya Kathaikal

Related ebooks

Reviews for Sanga Ilakkiya Kathaikal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sanga Ilakkiya Kathaikal - Puviyarasu

    http://www.pustaka.co.in

    சங்க இலக்கியக் கதைகள்

    Sanga Ilakkiya Kathaikal

    Author :

    புவியரசு

    Puviarasu

    For other books

    http://www.pustaka.co.in/home/author/puviyarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.அனைவர்க்கும் கொடு

    2.வாள் கொடுத்தான்

    3.நட்பின் இமயம்

    4.ஒரு வேல் கொடு

    5.அதே நிலா

    6.நடுகல்

    7.மூவேந்தர்

    8.போர் வெறி

    9.அந்த நாள்

    10.கவரிமான்

    சங்க இலக்கியக் கதைகள்

    1.அனைவர்க்கும் கொடு

    கார்காலம். உலகம் நீராடி எழுந்தாற் போன்று புதுப் பொலிவுடன் விளங்கியது. எங்கும் பசுமை பூத்துக் குலுங்கியது. பொன் தளிர் ஈன்று புது வாழ்வு பெற்ற குருக்கத்திக் கொடிகள் ஈரக் காற்றில் உடல் நடுங்கி ஆடின. இடையிடையே தென்றல், முல்லையின் மன்றலை ஏந்தி வந்து விளையாடியது.

    விண்ணகத்துத் தண் முகில்கள் வெண்சுடரின் ஒளிபட்டு வெள்ளித் தேர்களைப் போல வான வீதியில் உலா வந்தன. ஓடுகின்ற தேரின் ஒலியைப் போலக் கீழ்வானில் சில கரிய முகில்கள் 'குடுகுடு'வெனத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

    மாமரக் கிளையிலிருந்து ஒரு குயில் கூவெனக் கூவியது. அதன் குரலும் வழக்கம் போலின்றிக் 'கரகர'த்தது.

    ஊரின் கோடியிலிருந்த மரங்கள் சூழ்ந்த ஓரிடத்தில் சிறிய எளிய மனையொன்று அமைந்திருந்தது. வண்ண மலர்க் கொடிகளையே வேலியாகக் கொண்ட அந்த வீட்டின் வெளித் திண்ணையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    நடுத்தர வயது; வாடிய மேனி, ஒட்டியுலர்ந்த கன்னங்கள்; உட்குழிந்த கண்கள்; சுருக்கங்கள் விழுந்த நெற்றி அறிவொளி வீசும் கூரிய பார்வை; இவையெல்லாம் அவரை ஒரு புலவரெனத் தெளிவாகக் காட்டின.

    ஆம்! அவர் வறுமையின் பிறப்பிடம்; புலமையின் இருப்பிடம்! சுடர்விடும் அவர் விழிகளில் ஒரு துன்பத்திரை படர்ந்திருந்தது. அவர் கண்கள் எதனையோ வெறித்து நோக்கியவாறு நிலைத்து நின்றன.

    மரங்களிலிருந்து சொட்டுச் சொட்டென்று விழும் நீர்த்துளிகளின் ஒலியும், குருவிகளின் 'கிசுகிசு' ஒலியும் தவிர, வேறு ஒலியில்லை. அங்கே அமைதி குடிகொண்டிருந்தது.

    மேகத் திரைகளில் மறைந்தும் வெளிப்பட்டும் விளையாடியவாறு இடைவிட்டு இடைவிட்டு ஒளி வீசிக் கொண்டிருந்தது ஞாயிறு. புலவரின் கவனம், நிழலும் ஒளியுமாக மாறி மாறிப் படியும் பசும்புல் தரையின்மீது படிந்தது, 'வாழ்வும் இப்படித்தான், இன்பமும் துன்பமும் கலந்ததாய் விளங்குகின்றது. இன்பமோ துன்பமோ வாழ்வில் நிலைத்து நின்று விடுவதில்லை; ஒவ்வொன்றும் சிறிது சிறிது காலமே. அல்லலொரு காலம்; செல்வமொருகாலம்!' என்று அவர் இதயம் எண்ணமிட்டது.

    காற்று சற்றே விரைவாக வீசியது. மரக்கிளையில் அரவமின்றி அமர்ந்திருந்த சில பறவைகள் சிறகு விரித்துச் 'சட சட'வென மேலே எழுந்தன. மரங்கள் உடல் சிலிர்த்தன. 'பொல' 'பொல'வென நீர்த்துளிகள் தரையில் விழுந்தன. தன் துன்ப வாழ்வைக் கண்டு இயற்கையே கண்ணீர் வடிப்பதைப் போலத் தோன்றியது புலவருக்கு.

    கதிரவன் மலைச்சாரலை நோக்கி இறங்கினான். மேல் வானில் பொன்னொளி பரவியது. புது மழை வரவால் துளிர்த்திருந்த செடி கொடிகளின் இளந்தளிர்கள் மாலைக் காலத்தின் ஒளிபட்டுப் பொற்காசுகளெனப் பொலிந்தன. இலைகளில் நடுங்கிக் கொண்டிருந்த நீர்த் துளிகள் முத்துக்களைப்போல விளங்கின.

    மெல்ல மெல்ல இருண்டு வந்தது. வீடு நோக்கி வரும் ஆவினங்களின் கழுத்தில் கட்டியிருந்த மணிகளின் ஒலியும், ஆயர்களின் குரலும், அது கேட்டு வீடுகளிலிருந்து கன்றுகள் 'அம்மா' வென்றழைப்பதும் கேட்டன. முல்லையின் மணத்தை முன்னைவிட மிகுதியாக அள்ளி வந்து தெளித்தது மாலைத் தென்றல்.

    புலவர் எழுந்து வீட்டுக்குள் சென்றார். அகல் விளக்கின் மங்கிய ஒளியில் அறையில் கண்காட்சி அவர் நெஞ்சைப் பிழிவதாயிருந்தது.

    புலவரின் மூப்படைந்த தாய் மூலையில் அமர்ந்திருந்தாள். முதுமைப் பருவத்திலும் அவள் வறுமையை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. ஒட்டியுலர்ந்து வாடிய மேனியும், கிழிந்த ஆடையுமுடைய மற்றொரு பெண் - புலவர் பெருந்தகை பெருஞ்சித்திரனாரின் இல்லாள் - மடியில் மூன்றாண்டு மகவொன்றை இருத்தியவாறு அமர்ந்திருந்தாள். நீர்த்திரையிட்ட கண்களோடு, மார்பைச் சுவைத்துப் பாலின்றியழும் மகவைப் பார்த்தாள். அது அழுத வண்ணம் அன்னையின் மடியிலிருந்து இறங்கியது. அடுப்பருகே இருந்த உணவுப் பாத்திரத் தருகே சென்றது! அதன் மூடியை எடுத்து விட்டு அடங்கா ஆவலோடு உள்ளே கைவிட்டுத் துழாவியது! அந்தோ! அடுத்த கணம் ஏக்கமும் ஏமாற்றமும் முகத்தில் படர வெறுங்கையை வெளியிலெடுத்து அன்னை முகம் நோக்கி அழுதது!

    அவள் யாது செய்வாள்? அழாதே! அழுதால் புலி வந்து பிடித்துக் கொண்டு போய்விடும் என்று அச்சுறுத்தினாள்!

    அதற்கு மேல் பெருஞ்சித்திரனாரால் அங்கு நின்றிருக்க முடியவில்லை. சரேலென வெளியில் வந்தார்; மீண்டும் திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

    இருள் கண்டு அஞ்சிய இளங்கதிர் இரவி ஓடி ஒளிந்துவிட்டது. இப்பொழுது இருளாட்சி நடக்கின்றது. இல்லை, யில்லை! அதோ அதற்கும் ஒரு முடிவு வந்து விட்டது. கீழ்வானில் முகில்களுக்கிடையே முத்துச்சுடர் வீசி முழு நிலா முகிழ்த்துவிட்டது. பால் நிலவின் ஒளி வெள்ளம் பொங்கிப் பரவி உலகைப் பகலாக்கத் தொடங்கி விட்டது. எங்கும் ஒளி வெள்ளம்.

    படமுடியாது இனித்துயரம். பட்டதெல்லாம் போதும். எத்துணை நாட்களுக்கு வேளைக் கீரையையே உப்பின்றி அவித்து உண்டு உயிர் வாழ்வது? பெரியவர்கள் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் குழந்தை? எங்கேனும் பயணம் சென்று எவரை யேனும் கண்டு வந்தாலன்றி இக்கொடிய வறுமையைப் போக்குதல் அரிது! என்று எண்ணியபடி இருந்த அவர் நினைவைக் குழந்தையின் அழுகுரல்கலைத்தது.

    புலவரின் மனையாள் குழந்தையைக் கையில் ஏந்தி முற்றத்திற்கு வந்தாள். முழுநிலா மேகத்திரையிலிருந்து வெளிப்பட்டது.

    கண்னே! அதோ பார், நிலா! என்று அவள் தன் குழந்தையின் கவனத்தை வேறு பக்கம் திருப்பினாள். வயிறு பசிக்கும்போது நிலவைக்கண்டு மகிழ முடியுமா? ஒரு முறை வானை ஏறிட்டு நோக்கிவிட்டுக் கைகளைக் கண்களில் வைத்துப் பிசைந்தவாறு அழத் தொடங்கிவிட்டது குழந்தை, சிறிது நேரம் அழுதது; பிறகு தானாக ஓய்ந்தது. ''அதோ பார், அப்பா!" - அன்னை சுட்டிய திக்கை நோக்கியது குழந்தை. பெருஞ்சித்திரனார் இருண்ட திண்ணையைவிட்டுக் கீழே இறங்கி அருகில் வந்தார். குழந்தை ஏனோ அவரிடம் தாவிச் செல்லவில்லை. அது புலவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது என்பதை அவர் முகமே காட்டியது.

    அப்பாவை எவ்வாறு வெறுப்பாய்? எங்கே காட்டு! - புலவரின் வாழ்க்கைத் துணைவிதான் இவ்வாறு கேட்டாள். குழந்தை உதட்டை ஒரு புறமாகச் சுளித்து முகத்தை உம்மென்று வைத்துக் காட்டியது. கவிஞரின் முகத்தில் துன்பச் சிரிப்பொன்று தோன்றி மறைந்தது.

    இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே வாடுவது? திண்ணையில் அமர்ந்திருந்தால் பொருள் வீடு தேடிவருமா? நமக்காக இல்லாவிடினும் குழந்தைக்காக வேனும் சென்று வரவேண்டாவா? எவ்வாறு இருந்தவன் எலும்புந் தோலுமாக எவ்வாறு இளைத்துவிட்டான் பாருங்கள் என்றாள் கடமையுணர்ந்த அக்கற்பின் நல்லாள்.

    போகிறேன். தவறாது புறப்படுகிறேன். வெளிமானைக் கண்டு பாடினால் அவன் வரையாது வழங்குவான். என் புலமையுணர்ந்த வள்ளல் அவன். நாளைக் காலையே பயணம் மேற்கொள்ளுகின்றேன்! என்று பதிலிறுத்து ஆறுதல் கூறினார் பெருஞ்சித்திரனார்.

    அவரது இல்லக் கிழத்தியின் இதயத்தில் நம்பிக்கை துளிர்த்தது.

    பெருஞ்சித்திரனார் வெளிமானுரை அடையும் போது நன்றாக இருட்டிவிட்டது. நான்கு நாட்களாக வழி நடந்த களைப்பு அவரைக்கீழே தள்ளிவிடும் போலிருந்தது. கண்கள் இருண்டு வந்தன. மேலே நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மெல்லத் தள்ளாடிய படியே, ஊரின் கோடியில் அமைந்திருந்த சத்திரத்தை அடைந்தார். திண்ணையின் ஒரு புறமாக அமர்ந்து கால்களை நீட்டிப் பெருமூச்சு விட்டார். புழுதியளைந்து இளைத்திருந்த அவர் கால்கள் உணர்ச்சியற்ற மரக்கட்டைகள் போல் சில்லிட்டிருந்த தரையில் கிடந்தன.

    புலவர், தம் கண்களைச் செலுத்தி நாற்புறமும் நோக்கினார். சத்திரத்து முன் மண்டபம் இருண்டு கிடந்தது, அவரது வாழ்வைப் போல! 'பின் பகுதியில் யாரேனும் இருக்கலாம். இன்னும் ஏன் விளக்கேற்றவில்லை?' என்று எண்ணினார். தரையில் சிறிது சாய்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் போலிருந்தது.

    மேலாடையைச் சுருட்டி தலைக்கு வைத்தவாறு தரையில் தம் முடலைச் சாய்த்தார். அவர் எண்ணம் இனி நடக்கப் போவதை நினைத்தது. 'இது முன்னிரவு தான். அரண்மனை வாயிலை இதற்குள் அடைத்திருக்கமாட்டார்கள். அவ்வாறு அடைந்திருந்தால் தான் என்ன? இள வெளிமான் அடையா நெடுங்கதவும் அஞ்ச லென்ற சொல்லும் உடையவனாயிற்றே! பகைவரைக் கண்டு மூடிக்கொள்ளும் வாயில்கள் பாவலரைக் கண்டால் திறந்து தானேயாக வேண்டும்! இருப்பினும் இந்த வேளை தகுந்த வேளையன்று. தக்க காலமறிந்து கொற்றவனைக் காணுதலே மிக்க பயன் தரும். இன்று இங்கேயே படுத்திருந்து நாளைக்காலை திருவோலக்க மண்டபத்தில் நல்ல பாடலொன்றோடு சென்று அவனைக் காணவேண்டும். அவன் நற்பரிசு வழங்குவான். என் வாழ்வு மீண்டும் வளம் பெறும், என்றெண்ண மிட்டவாறு படுத்திருந்த பெருஞ்சித்திரனார் களைப்பால் தம்மை மறந்து உறங்கிவிட்டார்.

    உறக்கத்தில் ஆழ்ந்திருந்த புலவர் தம்மை யாரோ தொட்டு, 'ஐயா ஐயா எழுந்திருங்கள்' என்று பன்முறை கூறி எழுப்புவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தார்.

    ஒருவர் கையில் விளக்கொன்றை ஏந்தியவாறு அருகே குனிந்து தம் முகத்தை ஊற்று நோக்குவதைக் கண்டார். எழுந்து சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்தார்.

    'என்ன ஐயா. இவ்வாறு மெய்ம் மறந்து உறங்கி விட்டீர்களே! ஊருக்குப் புதியவர்போல் தோன்றுகிறது. எழுந்து வழி நடந்த களைப்புப்போக கைகால் முகம் கழுவி உண்ண வாருங்கள். சத்திரத்தில் எல்லோரும் உண்டாகிவிட்டது. மடப்பள்ளியை மூடப்போகிறோம். எழுந்திருங்கள்!' என்று அன்பொழுக வேண்டினார், கையில் விளக்குப் பிடித்திருந்தவர்.

    பெருஞ்சித்திரனார் பதிலொன்றும் பேசவில்லை. வெளிமானாட்சியில் அறம் நிலவும் தன்மையை வியந்தவாறே எழுந்து சத்திரக்காவலரைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.

    உணவருந்திக் கொண்டு இருந்த போது அக்காவலன் மீண்டும் புலவரை நோக்கி, தங்களுக்கு எந்த ஊர்! என்றான் பணிவாக.

    "என்னைப் போன்ற புலவனுக்கு எல்லா ஊரும் சொந்த ஊரே! எல்லாரும் என் சுற்றத்தவரே! என்னைப் பெரு ஞ்சித்திரன் என்று அழைப்பார்கள்!' என்றார்.

    சத்திரக் காவலர் முகம் வியப்புக் குறியைக் காட்டியது. 'ஆ! தாங்களா பெருஞ்சித்திரனார்! என்னே! என்பேறு! தங்களுக்குப் பணிவிடை செய்யும் பெரும் பேற்றை இன்று நான் பெற்றேன். புலவர் பெருமானே! தங்களைப் பற்றி யான் கேட்டிருக்கிறேனே அன்றிக் கண்டதில்லை. இன்று காணவும் பெற்றேன்; கண்டு பணிவிடை செய்யவும் பெற்றேன். தாங்கள் மன்னரைக் காண வந்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்." என்றார் அவர்.

    "ஆம் கனிகள் பழுத்துக் குலுங்கும் மரத்தை நாடித்தானே பல்வேறு திசைகளிலிருந்து பறவைகள்

    பெருஞ்சித்திரனாரின் சிந்தனைப் பறவை சிறகடித்து மேலெழுந்து பறக்கத் தொடங்கியது. ஆ! சாவுதான் எத்தனை கொடியதாயிருக்கிறது. மரணத்தை வெல்ல மனிதனால் முடியவில்லை. கூற்றுவன் எத்துணைக் கருணையற்றவனாக உள்ளான். இரவலர் காவலன், புரவலர் தலைவன் வெளிமானை மண்தாழியினுள் இட்டு அதனைக் கவிழ்த்துப் புதைத்திருப்பர். அதன் குவிந்த மேற்புறத்திலே கழுகுகளும் 'பொகுவல்' என்ற பறவையும், அண்டங் காக்கையும் கோட்டானும் கூடிப் பேயினத்தோடு விருப்பம் போலாடும். அத்தகைய சுடுகாட்டை நோக்கிச் சென்றான் வீரபானம் விரும்பும் வெளிமான். அவனை இழந்த மகளிர் கைவளை கழித்திருப்பார்கள். அது போலவே பாடுவாரது சுற்றமும் தம் ஒளி மழுங்கியுள்ளன. முரசுகளின் கண்கள் கிழித்தன. யானைகள் தம் தந்தங்களை இழந்தன. இவ்வாறு கூற்றம் கொடுந்துயர் செய்யவல்ல தென்பதை அறியாமற் போனேனே! எந்தலைவன் அதன் கொடுமைக்கு ஆற்றாது படுவான் என்பதை அறியாது உறுதியாக நம்பியன்றோ இங்கு வந்தேன். என் சுற்றம் எத்தகைய துயர்ப்படுமோ? பெரு மழை பெய்யும் நள்ளிரவில் கடல் நடுவிற் சிக்கிய மரக்கலம் கவிழும் போது அதிற் சிக்கிய ஊமை, கரை சேரவும் வழியறியாது கூச்சலிடவும் வகையின்றி அமிழ்ந்து சாவது போலத் துன்பத்தில் ஆழ்ந்து வாடுவதினும் சாதலே நல்லது; இனியது. எம்போன்றோர்க்கு தகுதியானதும் அதுதான்.

    புலவரின் சிந்தனை அவரைச் நோக்கி இழுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டது. அப்போது மண்டபத் தெழுந்த ஏதோ ஒலி அவர் சிந்தனையைக் கலைத்தது. அவர் தலை நிமிர்ந்து நோக்கினார். காவலனொருவன் கையில் தட்டொன்றை ஏந்தியவாறு நின்றிருந்தான். அதில் சிறிய பையொன்றிருந்தது.

    காவலன் புலவரிடம், பணிந்த குரலில் "புலவர் பெருந்தகையீர், எம் மன்னர் இப்பொழுது அரசியல் அலுவலில் ஈடுபட்டுள்ளார். தங்களைக் காண இயலாதென்று இப்பொன் முடிப்பை அனுப்பியுள்ளார். இதனைத் தாங்கள் ஏற்றுச் செல்ல வேண்டும்.'' என்றான்.

    சித்திரனாரின் நெஞ்சம் கொதித்தது. தன் பாடலைக் கேட்க முடியாத அளவு அவனுக்கு அலுவலா? இவரால் நம்ப முடியவில்லை. இளவெளிமான் தமிழ்ச்சுவை அறியாதவன் போலும். அதனால்தான் தன்னைக் காண மறுக்கிறான் என்று நினைத்தார். அவர் உள்ளம் புண்பட்டுவிட்டது. தன்னை அவமதித்தது கவிதையை அவமதித்ததாகும்; தமிழை அவமதித்ததாகும் என்று எண்ணினார்.

    பெருஞ் சித்திரனாரின் வாழ்வில் இத்தகைய நிகழ்ச்சி நிகழ்ந்தது இரண்டாவது முறையாகும். முன்பொரு நாள் அதியன் இப்படித்தான் செய்தான். அவன் சிறந்த வள்ளல். அதியமான் நெடுமானஞ்சி அப்படியொன்றும் கவிச்சுவையறியாதவனல்லன். அதனால் அவனை நாடிச் சென்றார்; ஆனால் நடந்தது வேறாக இருந்தது. பரிசிலைக் கருதி, குன்று, மலை, அரிய வழி ஆகியவற்றைப் பெருந் துன்பத்தோடு கடந்து சென்றார். அவ்வாறு சென்றவரை இனிய மொழி கூறி வரவேற்றானோ? உபசரித்தானா? பரிசிலைக் கொள்க என்று நேராகச் சொன்னானா? இல்லை. பின் என்ன செய்தான்? காவலரிடம் பொருளைக் கொடுத்து அனுப்பினான். அவர் திறனைக் காணாமலேயே எவ்வாறு அவன் அறிந்தான்?

    பெருஞ் சித்திரனார் அது கண்டு நெஞ்சம் கொதித்தார். இப்பொருளைக் கொண்டு செல்ல நான் வணிகப் பரிசிலன் அல்லேன். என் தகுதியறிந்து தரும் பரிசிலே உயர்ந்தது. அது அளவில் சிறியதாயின் குறைவில்லை. அதுவே எனக்கு இனியது என்று சொல்லி வெறுங் கையோடும் வெறுத்த உள்ளத்தோடும் திரும்பினார். திரும்பிய புலவருக்கு அன்று வெளிமான் நல்கிய பரிசில் மகிழ்வது ஊட்டியது; வாழ்வளித்தது.

    ஆனால் இன்று எந்த வெளிமான் அரண்மனையினின்று நிறைந்த உள்ளமும், நிரம்பிய பொருளும் சிறப்பும் பெற்றுச் சென்றாரோ, அதே வெளிமான் அரண்மனையில் அவமதிப்பா?

    புலவர் கொடுத்த பொருளைப் பெற்றுக் கொள்ளாது பிரமை பிடித்தவர் போலப் பேசாது இருத்தல் கண்ட காவலன் 'புலவர் பெருமானே!'... என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான்.

    பெருஞ் சித்திரனார் அவன் கூறிய மொழியைக் கேளாது தம் நெஞ்சொடு கூறுவார் போலப் பேசலானார்.

    "நெஞ்சமே! எழுந்திரு செல்வோம். மகிழ்வின்றி விருப்பமின்றி, நேரில் காணாது, கண்டும் அறியார் போலத் தந்த பரிசிலை மானமுள்ள புலவன் தீண்டுவானா? யார்தான் இத்தகைய பரிசிலை ஏற்றுக் கொள்வர்?

    Enjoying the preview?
    Page 1 of 1