Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manitha Nilaikku Appal Oru Payanam
Manitha Nilaikku Appal Oru Payanam
Manitha Nilaikku Appal Oru Payanam
Ebook164 pages39 minutes

Manitha Nilaikku Appal Oru Payanam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மனித நிலைகளை தாண்டி, பிரபஞ்ச உணர்வில் கலக்கவும், சஞ்சார நிலை இயக்கத்துக்கும் எண்ணச் சலனங்களை வெல்லும் முறையையும், அமானுஷ்ய கனவு நிலைகளில் மனிதன் செல்லவும், அன்பின் வழியே அமானுஷ்ய சக்திகளை அடையவும், நாத அதிர்வுகளை நம் உடல், மனத்தில் இறக்கவும்.

மற்றும் வெள்ளை பிரபஞ்ச ஒளிக்குள்ளும், உங்களது ஆதி உணர்வுகளுக்குள் செல்லவும், மௌனத்தின் மூலம் சக்திகளைப் பெறவும், சப்தரிஷி மண்டல பயணத்திற்கும், ஆனந்தமான வெளி உலகப் பயணத்துக்கும், மனித உடல், மனம், ஆசைகள் இவற்றைத் தாண்டி மனிதனை, ஒரு புது பரிணாமத்தில் நிலைக்க அழைக்கும், இவரது அழைப்பு, வாழ்க்கையின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் நிலைக்க அழைக்கும் உன்னத, ஒரு அழைப்பு ஆகும்.

இனி இந்நூலைப் படியுங்கள். ஆனந்தத்தில் திளைத்திடுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 20, 2016
ISBN6580110801530
Manitha Nilaikku Appal Oru Payanam

Read more from Udayadeepan

Related to Manitha Nilaikku Appal Oru Payanam

Related ebooks

Reviews for Manitha Nilaikku Appal Oru Payanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manitha Nilaikku Appal Oru Payanam - Udayadeepan

    http://www.pustaka.co.in

    மனித நிலைக்கு அப்பால் ஒரு பயணம்

    Manitha Nilaikku Appal Oru Payanam

    Author:

    உதயதீபன்

    Udayadeepan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/udayadeepan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனித நிலைக்கு அப்பால் ஒரு பயணம்

    2. மனித நிலையை கடக்க உறுதி அவசியம்

    3. கண்ணாடி முன்பு உங்களின் மனித நிலை, மறந்த நிலை

    4. செல் கருவின் அமைதியில் லயித்திடுங்கள்

    5. சப்த பிரம்ம சப்தத்தை அடிக்கடி உள்ளே, உச்சரிக்கவேண்டும்

    6. மனித மனத்தை ஒரு கண்ணாடி ஆக்குங்கள்

    7. 'ஸோ...ஹம்’ என்று உங்கள் மூச்சின் ஊடே கூறுங்கள்

    8. பிரபஞ்ச உணர்வில் லயித்திடுங்கள்

    9. உங்களின் பார்வையை வித்தியாசப்படுத்துங்கள்

    10. சப்தரிஷி மண்டலத்திற்கு ஓசிப்பயணம் செய்யுங்கள்

    11. விதையாக இருங்கள், சக்திமான் ஆவீர்கள்

    12. அலையற்ற மௌனத்தில் இருங்கள் சக்திகளோடு விளையாடலாம்

    13. சஞ்சார சமாதி நிலை தியானம்

    14. எண்ணச் சலனங்களை வெல்லுங்கள்

    15. நமது கனவுகளுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துங்கள்

    16. அமானுஷ்ய சக்திகளை கொடுக்கும் அன்பின் வழிகள்

    17. ஹிரண்ய கர்ப்ப கோல்டன் முட்டை

    18. நாத அதிர்வுக்குள்ளே நம் பயணம்

    19. வெள்ளை ஒளிக்குள்ளே ஒரு மனிதநிலை தாண்டிய பயணம்

    20. உங்களது ஆதி உணர்வுகளில், ஒரு சொகுசுப் பயணம்

    21. ஆனந்தமான வெளி உலகப்பயணம்

    22. மனிதப் பரிணாமத்தை அடிக்கடி மனித நிலைக்கு அப்பால் மாற்றுங்கள்

    1. மனித நிலைக்கு அப்பால் ஒரு பயணம்

    மனித நிலைக்கு அப்பால்...

    போக முடியும் என்று நினைப்பதில்கூட, ஒரு குஷி நிலை நம்மைப் பற்றிக் கொள்ளவே செய்கின்றது. அதாவது நம்மையும் அறியாது நமக்குள்ளே, இந்த நமக்குக் கிடைத்திருக்கும் மனித நிலையில், பெரியதாக நாம் எதையுமே அடைந்துவிடவில்லை, என்ற கவலை, நமக்குள்ளவே சுற்றிக் கொண்டு உள்ளது.

    ஏதோ ஒரு இழுபறி நிலை...

    எதுவோ ஒரு தடுமாறும் நிலை, நமக்குள்ளே பிண்ணிக் கிடக்கிறது. நமது மனித நிலையிலே, நாம் சந்தோஷம் எதையும், அள்ளிக் கொள்ளவில்லை. மகிழ்ச்சி எதையும், நாம் அடைந்துவிடவில்லை, என்ற எண்ணம், நமக்குள்ளே பரிபூரணமாக வீற்றிருக்கிறது.

    அரிது, அரிது மானிடராய் பிறத்தல்...

    அரிது என்று கூறினார், அவ்வைப் பிராட்டி. ஆனால் அவரே கூட, வாலிபம் வந்த அவரை, மணக்கோலத்தில் பார்க்க, அவரது பெற்றோர்கள், பிரியப்பட்டபோது.....

    அது அவருக்குப் பிடிக்காது போனது...

    வினாயகர் பக்தையான அவர், வினாயகர் காலில் விழுந்து ஹே இறைவா எனக்கு, இந்த வாலிபமே வேண்டாம். இதில் உள்ள கவர்ச்சிகள் வேண்டாம். இவைகள் என்னுடன் இருந்தால், என்னை வாழ்க்கையின் கூண்டுக்குள்ளே, என் வாழ்நாள் முழுக்கவும் கட்டிப்போட்டு விடுவார்கள்

    "நான் இந்த சம்சார பந்தத்தில்...

    கட்டுண்டு கிடக்காமல், சுதந்திரமாகவும், இயற்கையாகவும் வாழவும், இருக்கவும் விரும்புகிறேன். அதனால் என் இறைவனே, என் வாலிபத்தை, நீ எடுத்துக் கொண்டு, எனக்கு வயோதிகப் பருவத்தை கொடுத்துவிடு"

    என்று வினாயக பெருமானின் காலில்...

    விழுந்து வணங்கி வேண்ட, அதற்கு அந்த வினாயகப் பெருமான், யாரும் இதுவரைக்கும், தன்னிடத்தில் கேட்காத வரத்தை, இந்த அவ்வைப் பெண், தன்னிடத்தில் கேட்கின்றார் என்று, அகம் மகிழ்ந்து, அப்பொழுதே அவர் மனம் களிக்க, அவரது வேட்கையின்படிக்கு,

    அவருக்குரிய இளமையை தான்...

    அகற்றி, அவருக்கு சுருக்கம் விழுந்த, தள்ளாத வயதை அளிக்கின்றார். வயது தான் தள்ளாத வயதே தவிர்த்து, ஞானம் முழுக்க அவரது கோலத்தில், வந்து இறங்கி விட, அவ்வையாரின் மனதில், கவி ஊற்றாகப் பெருகுகிறது.

    கம்பன் முதலான, பெரும் புலவர்களும்...

    மெச்சும்படி ஆழ்ந்த கவித்திறனுடன், ஆழ்ந்த புலமையுடன், உலகை சுதந்திரமாக சுற்றி காடு, மலை, மேடு, ஊர், வனாந்திரம் என்று சுற்றி, ஒரு கூட்டுக்குள் அடைய விருப்பம் இல்லாமல், சுதந்திரமான காற்றை சுவாசித்துக் கொண்டு, அரசர்களை சந்திக்கும் அறிவுத் திறனுடன், பாக்கள் பல இயற்றி, கடைசியில் சுந்தரருக்கு முன்னே...

    அந்த சிவனையும் கண்டு, வினாயகர்...

    அருளால் அவனுடன் முக்தியிலும் விரும்பி இணைந்தார் அவ்வை. ஆதி காலத்திலேயே, மனித வாழ்க்கையை எப்படி கொண்டு போகவேண்டும்.

    எப்படிக் கொண்டு போனால், ஆனந்தமாக...

    சுதந்திரமாக இருக்க முடியும் என்று, தன் மதிகொண்டு சிந்தித்த அவ்வைக்கு கிடைத்தது, அத்தனையும் அவரது வாழ்க்கை முழுக்க சந்தோஷமும், நிம்மதியும் தான்.

    பெண்ணின் கூர்மை, தளதளப்பு...

    இளமை, வசீகரம், நெளிவு, சுளிவு, மேடு, பள்ளம், சிரிப்பு, புன்னகை, அங்கச் செழுமைகள், அவற்றின் பளபளப்பு என்று, அவற்றில் அழுந்தாமல், அதைவிட்டு வெளியில் வந்தவர், அவ்வை பிராட்டி.

    இது ஒரு ஆதி காலத்தில் நடைபெற்ற...

    ஒரு மனோ சுதந்திரம், மற்றும் உடல் சுதந்திரம். எண்ணங்களை நாம் நினைத்தால், அதை தெய்வ பலம் கொண்டு தான், நம் எண்ணங்களை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்பது, அவ்வையார் காட்டிச் சென்ற வழி.

    வாழ்க்கை என்பது ஒரு கட்டு...

    அந்த கட்டில் ஒருமுறை, தனக்கு பந்தக் கட்டைப் போட்டுக் கொண்டு, விடும்போது, பின்பு அதைவிட்டு, தாண்டி வெளியில் வருவது நடக்காது என்பது, அவ்வைக்கு, தன் இளம் வயதிலேயே, அவருக்குள்ளே விளைந்த ஞான அறிவு. பந்தங்களால் உண்மையான அறிவு, ஒருவருக்குள்ளே சிறை வைக்கப்படுகிறது என்பது, அவ்வை பிராட்டியின் கருத்து.

    இந்த ஞான அறிவினால், அவரது...

    எண்ணங்கள் நிறைவேறின. சுகம், துக்கம், மகிழ்ச்சி, கவலை, இன்பம், பிரச்சனைகள் என்று, மாறி மாறி சிறிது ஒளி, பின்பு நிறைய இருட்டு என்று இருட்டுக்-குள்ளே, பந்த இருட்டுக்குள்ளேயே பயணித்துச் சென்று கடைசியில், மரணத்தின் மடியில் சென்று, படுத்துக் கொள்ளும், மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் கிடைக்காத, ஒரு நிம்மதிக்கு, தன் அறிவு ஞானத்தால் கொடுத்து வைத்தவர், இந்த அவ்வை பிராட்டி.

    எனவே உலகம், எதுவாக இருக்கட்டும்...

    அதில், எது தன்னைச் சுற்றி நடக்கட்டும், தனக்கு இந்த மனித வாழ்க்கைக்கு அப்பால் சென்றால் தான், மகிழ்ச்சி, நிம்மதி, சுதந்திரம் என்று, சுகம் கொள்ளும் பாதைக்கு முன், தனது நினைப்பை நிறுத்தும் யாருக்கும், அவ்வையைப் போன்ற, பெரும் நிம்மதி, நிச்சயம் கிட்டும்.

    அவ்வை, தன் நிலையை, மனித நிலை...

    தாண்டி அமைத்துக் கொண்டார். பின்பு அதிலிருந்து அவர் தன்னை, பின் வாங்கிக் கொள்ளவில்லை. இந்த அவரது உறுதி நிலையால், அவருக்குள் கொள்ளை கொள்ளையாக மகிழ்ச்சியும், ஆனந்தமும், சுதந்திரமும் கிடைத்தன...

    என்பது மட்டுமில்லை. அவர்...

    இதற்கு மேல் தாண்டி, மனிதர்கள் அடையாத புது வழிகளை அடைந்து, மனபாரமின்றி, மனக்கவலையின்றி மன ஆசைகளிலிருந்து, ஒரு ஒளி நிலைக்கு, தன்னை உயர்த்திக் கொண்டார்.

    இந்த அவரது வாழ்க்கையின் பயணமே...

    மனித நிலை தாண்டிய, ஒரு அமுத வாழ்க்கைதான். அதாவது மனித அறிவில், அதன் உணர்வில் அகப்படாமல் அதைத் தாண்டி, இந்த மண்ணுலகில் இருந்தபடியே, தான் விரும்பிய ஒரு சொர்க உலகை, வயதான தன் வயோதிக உடலில், தனது சுதந்திர உணர்வுகளுடன் வாழ்ந்து, ஆனந்த வாழ்க்கையை தனித்து நடத்தியவர், அவ்வையார்.

    "இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால்

    என்றும் தொல்லையடா"

    என்ற கவிஞனின், பாதைக்கு அப்பால் நடைபோட்டுச் சென்றவர், இந்த அவ்வை பிராட்டி. இவர் மனித நிலைக்கு அப்பால் செல்ல, மனித உடலில் வாழ்ந்த-படியே, அதற்கு பாதை காட்டியவர்.

    சங்க காலத்திலும் படிப்பு அறிவு...

    சரியாக கிடைக்காத அக்காலத்திலும், இதன் ஞான அறிவில், மனித நிலைக்கு அப்பால், ஒரு பயணம் நடந்திருக்கிறது. அவ்வையின் வழியில், இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. இது ஒரு அசாதாரணம் நிறைந்த, ஒரு வாழ்க்கையின் வெற்றி.

    2. மனித நிலையை கடக்க உறுதி அவசியம்

    வாழ்க்கை என்பது எப்போதும்...

    எத்தனை வருடங்கள் ஆனாலும், அது மேட்டிலும், பள்ளத்திலும், கவலையிலும், மகிழ்ச்சியிலும், மாறி மாறி ஓடிக்கொண்டே இருக்கிறது.

    ஒரு ஆய்வு என்பதை செய்தால்...

    அதில் தெரியும், நாம் அனுபவித்த மகிழ்ச்சியை விட, நாம் பிரச்சினைகளில், அதிக நேரம் செலவழித்திருப்பது. இதில் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. எல்லோருக்குள்ளும் வாழ்க்கையில் வருவது, திருப்தி படிந்த, ஒரு நிலை அல்ல.

    இந்த திருப்தியற்ற நிலையை, நாம்...

    அடைவதற்கு, ஒரு முக்கிய காரணம், நமது உறுதியற்ற சலனமுள்ள, ஒரு நிலைதான். நாம் எளிதில் ஒரு ஆசையை, நமக்குள் தூக்கிவைத்துக் கொண்டு, அதற்கு உயிர் மாட்டிக் கொண்டு, அதற்குப் பின்னால், நாம் அலைகின்றோம்.

    அந்த ஆசை, தோல்வி அடைந்து விடும்போது...

    மறுபடியும், அதை தூக்கி எறிந்துவிட்டு, இன்னொரு ஆசையை தூக்கிக் கொஞ்சுகிறோம். பிறகு அதுவும் நம்மைக் கைவிடும் என்கிற நிலையில், விட்டேனா பார், நான் வெற்றியடையப் பிறந்தவன், என்ற நினைப்பில், வேறு ஒரு புதிய ஆசையை, எடுத்துக் கொஞ்சுகிறோம்.

    ஒன்றன் பின் ஒன்றாக, நம் ஆசைகள்...

    தோல்வி அடைகிறபோதும், நமக்குள் உள்ள ஒரு வீம்பு நிலையில், நாம் அடுத்ததில் வெற்றி அடையப் போகிறோம் என்று, மார் தட்டிக் கொண்டு, மீண்டும் முயற்சிக்கிறோம்.

    ஒரு வெற்றி வருகின்றது, உடனே நம்...

    குணம், நம் நடை, உடை பாவனை எல்லாமும் மாறிப் போகின்றது.

    Enjoying the preview?
    Page 1 of 1