Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamizhaga Medai Aalumaikal
Tamizhaga Medai Aalumaikal
Tamizhaga Medai Aalumaikal
Ebook112 pages43 minutes

Tamizhaga Medai Aalumaikal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி,
என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109701519
Tamizhaga Medai Aalumaikal

Read more from Umapathi K

Related to Tamizhaga Medai Aalumaikal

Related ebooks

Related categories

Reviews for Tamizhaga Medai Aalumaikal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamizhaga Medai Aalumaikal - Umapathi K

    http://www.pustaka.co.in

    தமிழக மேடை ஆளுமைகள்

    Tamizhaga Medai Aalumaikal

    Author:

    கே. உமாபதி

    K. Umapathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/k-umapathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.அருள்மொழி, வழக்கறிஞர் மற்றும் திராவிடர் கழகப் பேச்சாளர்

    2.நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,

    3.தீப்பொறி ஆறுமுகம், தி.மு.க., பேச்சாளர்

    4.என். நன்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சாளர்

    5.பழ.கருப்பைய்யா, (2015 பேட்டி)

    6.பழ.கருப்பைய்யா(2006 பேட்டி)

    7.பீட்டர் அல்போன்ஸ்,

    8.ஆர்.பி.வி.எஸ்.மணியன்

    9.க.சுப்பு

    10.வாகை சந்திரசேகர்

    11.ஜி.கே. மணி

    12.திருமாவளவன்

    13.தலித் எழில்மலை

    1.மதன், அனுராதா ரமணன், எம்.எஸ். உதயமூர்த்தி

    2.நிர்மலா பால்சாமி

    3.சொர்ணம்மாள் (சுதந்திரப் போராட்ட தியாகி)

    தமிழக மேடை ஆளுமைகள்

    முன்னுரை

    தமிழகத்தில் மேடைப் பேச்சுகளால்தான் அரசியல் வளர்ந்தது. கட்சிகளின் கொள்கைகளை தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம் எடுத்துச் சென்றவர்கள் பேச்சாளர்கள்தான். தமிழகத்தின் முக்கியமான மேடை ஆளுமைகளிடம் விகடன் இணையதளத்துக்காக பேட்டிகள் எடுத்தேன். அவர்கள் பேச்சாளராக முதன் முதலாக மேடை ஏறிய அனுபவம் முதல் தற்போதைய மேடை பேச்சு வரை பேட்டி விரிகிறது. இத்துடன், நான் சுயசார்பு பத்திரிகையாளனாக இருந்த போது சிஃபி தமிழ் இணையதளம், ஆறாம் திணை இணைய இதழ், சாவி வார இதழ், இதயம் பேசுகிறது வார இதழ் ஆகியவற்றுக்காக எடுத்த பேட்டிகளையும் இத்துடன் தொகுத்திருக்கின்றேன்.

    நன்றி!

    அன்புடன்,

    கே.பாலசுப்பிரமணி என்ற கே.உமாபதி

    1.அருள்மொழி, வழக்கறிஞர் மற்றும் திராவிடர் கழகப் பேச்சாளர்

    மூன்றரை வயது சிறுமி, பாரதிதாசன் பாடல்களை மனனம் செய்து மழலை மொழியில் ஒப்புவிக்கிறாள். பெற்றோர், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வியந்து பார்க்கின்றனர். சேலத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் முன்பு முதன்முதலாக அந்த சிறுமி மேடையேறினாள்.

    கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று தொடங்கி தொடர்ச்சியாக புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கவிதைகளை ஒப்பிக்கத் தொடங்கினாள்.

    கணக்கன் சொல் ஓவியமே கடவுள்.

    இன்றைக்கு ஒன்று, நாளைக்கு ஒன்று என,

    ஒருவன் குறித்த தை அடுத்தவன் ஒப்பான்

    ஆதலின் தெய்வம், நிலையிலது ஆகும்.

    ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்வதும்

    ஒருத்தி ஐவரை மணந்து உயிர் வாழ்வதும்,

    பெருகும் பொய்மையை மெய்யென பிதற்றலும்,

    பிறநூற்கொள்கை அதை ஒப்பிடான் தமிழன்

    பாரதிதாசனின் பாடலை முழுவதுமாக ஒப்புவித்தாள். பின்னாளில் பேச்சாளராகவும், வழக்கறிஞராகவும் புகழ்பெற்ற அருள்மொழிதான் அந்த சிறுமி.

    அருள்மொழியின் தந்தை அண்ணாமலை திராவிட இயகத்தின் மீது பற்றுக்கொண்டவர். தமிழ் புலவர். அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர். எனவே தன் குழந்தைகளை தமிழ் பற்றுடன், திராவிடப் பாரம்பரியத்தை ஊட்டி வளர்த்தார். பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசுகளை அருள்மொழி தட்டிச் சென்றார். ழ, ல போன்ற தமிழ் எழுத்துக்களை அழகாக உச்சரிப்பது, நினைவாற்றலுடன் சரளமாக அழகு தமிழில் பேசுவது என அருள்மொழியின் பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.

    குழந்தையாக இருக்கும் போது மேடையில் பேசும் போது அச்சம் ஏதும் ஏற்படவில்லையா?

    இல்லை. நான் பெரியார் முன்பு பேச வேண்டும் என்பதற்காக எனக்கு என் தந்தை நிறைய பயிற்சிகள் கொடுத்தார். ஒரு குச்சியை எனக்கு முன்பாக நிறுத்தி, குச்சியின் முனையில் ஒரு தேங்காய் சிரட்டையை கவிழ்த்து மைக் போல செய்தனர். அதை மைக்காக பாவித்து நான் பேச வேண்டும் என்று அப்பா சொல்வார்கள்.

    என் அண்ணன், அக்காக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என் எதிரே நிற்பார்கள். இப்படித்தான் எனக்கு என் அப்பா பேசுவதற்கு பயிற்சி கொடுத்தார். இதனால் எனக்கு மேடை கூச்சம் அறவே இல்லை. பாரதிதாசன் பாடல்களை 10 வரி அல்லது 15 வரி கொடுத்து மனனம் செய்யவும் அப்பா கூறினார்.

    பள்ளியில் படிக்கும் போது பேச்சுப்போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறீர்களா?

    ஆம். அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்புப் படிக்கும் போது, அங்கு இலக்கிய மன்றம் இருந்தது. ஒவ்வொரு மாதமும் அதில் கூட்டங்கள் நடக்கும். அதில் நான் தவறாமல் கலந்து கொண்டு பேசி வந்தேன். பள்ளிகளில் மாவட்ட அளவில் நடக்கும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கின்றேன். நான் கல்லூரியில் படிக்கும்போது, சென்னையில் பெரியார், பாரதியார் நூற்றாண்டு விழாக்கள் நடந்தன. அதில் பங்கேற்று பேசியிருக்கின்றேன். ஆனால் எனக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை. இரண்டாவது, 3வது பரிசுகள்தான் கிடைத்தன.

    முதல் பரிசு வாங்கியவர்களின் பெற்றோர், என்னிடம் வந்து, உனக்குத்தான் முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். நீதான் நன்றாக பேசினாய் என்று பாராட்டினர். தேர்வு குறித்து சந்தேகம் எழுந்ததால் இது போன்ற பேச்சுப்போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து விட்டேன்.

    மறக்க முடியாத நிகழ்வுகள் என்று எதைச் சொல்வீர்கள்?

    தமிழக அரசின் சார்பில் 1978ம் ஆண்டு சேலத்தில் பெரியார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் நான் பேசினேன். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் இந்த விழாவில் பங்கேற்றார். ஆனால் நான் பேசும் போது அவர் வெளியே சென்றிருந்தார். பேசிய உரையின் ஒலிபதிவை கேட்ட அவர், என்னை பாராட்டியதாக திருவாரூர் தங்கராசு உள்ளிட்டோர் என் தந்தையிடம் கூறினர்.

    திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் நூற்றாண்டு நடைபெற்றபோது, அன்றைக்கு பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி முன்பு நான் பேசினேன். இதுவும் என்னால் மறக்க முடியாத நிகழ்வு. ஈரோட்டில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு தொடக்கவிழாவில் பெரியாரின் பிஞ்சுகளில் என்ற தலைப்பில் ஒரு அரங்கம் நடைபெற்றது. அதில் பேசினேன். தஞ்சையில் நடைபெற்ற நிறைவு விழாவிலும் பேசினேன்.

    1987ம் ஆண்டு சென்னை தொலைகாட்சியில் கொடைக்கானல் ஒளிபரப்புத் தொடங்கியது. அப்போது முதல் நாள் நிகழ்ச்சியில் பட்டிமன்றம் இடம் பெற்றது. சிக்.சபேசன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பெற்றோரிடம் நீண்டகாலம் வாஞ்சையுடன் இருப்பது மகனா? மகளா என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் மகளே என்ற தலைப்பில் நானும்

    Enjoying the preview?
    Page 1 of 1