Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Uyir Neethaney
En Uyir Neethaney
En Uyir Neethaney
Ebook93 pages55 minutes

En Uyir Neethaney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580110001565
En Uyir Neethaney

Read more from Anuradha Ramanan

Related to En Uyir Neethaney

Related ebooks

Reviews for En Uyir Neethaney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Uyir Neethaney - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    என் உயிர் நீதானே

    En Uyir Neethaney

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    என் உயிர் நீதானே

    கதைக்குள் பிரவேசிப்பதற்கு முன்…

    ஒன்றைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட விரும்புகிறேன்...

    இது வழக்கமான காதல் கதை இல்லை... இந்த நாட்டில் வரதட்சணைப் பணம் கொடுக்க முடியாமல் எத்தனை முதிர் கன்னிகள் மனமொடிந்து போயிருக்கிறார்கள் என்பதை விளக்குகிற கதையில்லை… குடிகாரப் புருஷனிடம் அப்பாவிக் கதாநாயகி எப்படியெல்லாம் அடி வாங்கினாள் என்பதை ஆதியோடு அந்தமாக விவரிக்கப் போவதில்லை, புருஷன் சரியில்லாததால் ‘அந்த' மாதிரி தொழிலுக்குப் போன பெண்ணின் சரித்திரத்தை மறுபடியும் புரட்டிப் பார்க்கப் போவதில்லை, கொலை, கொள்ளை - மூச்!

    பின் என்ன…

    ஒரு ஆணின் கதை…

    சீனுவாசன் என்கிற கவர்ச்சியில்லாத பெயரைக் கொண்ட கட்டை விரல் நுனியில் நின்றால் மட்டும் ஐந்தடியை எட்டுகிற கறுப்பான- லேசான முன் வழுக்கையும்; எடுப்பான பல் வரிசையும்- ஐம்பது வயசில் அறுபது வயசு முதிர்ச்சியும் கொண்டநமது இந்தியக் குடிமகன் ஒருவனின் கதை...

    "ச்சே! போர்தான் அப்ப...

    நீங்கள் முணகுவது காதில் விழுகிறது…

    தயவு செய்து ஒரு கணத்தில் அப்படிப்பட்ட முடிவுக்கு வந்து விடாதீர்கள்...

    இந்த சீனுவாசன் உங்களில் ஒருவர்.

    அதற்கென்ன… வாட்டசாட்டமாய் ஆறடி உயரமும், சுருள் முடியும், சந்தன மரம் போன்ற தேகமும், கவர்ச்சியான கண்களும் கொண்டு இருபத்தியைந்து வயசு வாலிபன்தான் கதாநாயகனாக இருக்க முடியும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன...

    இப்பொழுது உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தானே ஹிரோ ஹிரோயின் எல்லாம்... என் வாழ்க்கையில் கதாநாயகி நான். சீனுவாசன் கதையில் அவர்தானே நாயகர்.

    சென்ற டிசம்பர் மாதத்தில் சாயங்கால நேரத்தில்- இவர்- என் வீடு தேடி வந்தார்…

    கதாசிரியை...

    நான்தான்...

    என் பேரு சீனுவாசன்... '______'லே மெகானிகல் இன்ஜினிய ராக இருக்கேன்...

    உள்ளே வாங்க…

    நான் அசந்தர்ப்பமான நேரத்துல வந்துட்டேனா… ஏன்னா, இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை... டி.வி.யிலே சினிமா… இங்கே வாசல் வரைக்கும் வந்ததுக்கு அப்புறமாத்தான், எனக்கு இது ஞாபகம் வந்தது...

    டோண்ட் ஒர்ரீ... இந்த சினிமாவைப் பார்க்கலையின்னா குடி முழுகிடாது...

    "நான் என் மனசில் பட்டதைச் சொன்னேன்.

    அவர் தயங்கி, தயங்கி உள்ளே வந்தவர்- சோபாவில் அமர்ந்து வெகுநேரம் வரையில், இரு கை விரல்களையும் கோத்துக் கோத்துப் பிரித்துக் கொண்டிருந்தார்.

    விழிகளிலே தத்தளிப்பு…"

    நான் உங்க கதைகளை நிறையப் படிச்சிருக்கேன்…

    ……………

    யதார்த்தமா இருக்கும். ஆனா ஒரு கோபம் வரும்... நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது...

    நான் சிரித்தேன்.

    எதுவானாலும் சொல்லுங்க மிஸ்டர் சீனுவாசன்…

    அது ஏன் பொம்மனாட்டிகளை சப்போர்ட் பண்ணி எல்லாக் கதைகளையும் எழுதுறீங்க… ஆம்பிளைங்கன்னா மோசமானவங்கதான்னு உங்களுக்கு யார் சொன்னது...

    சேச்சே… நான் ரெண்டு பக்கத்துல இருக்கற நியாய அநியாயங்களையும் எழுதியிருக்கேன் மிஸ்டர்…

    "மிஸ்டர் வேண்டாம்... பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க.

    சரி... உங்க இஷ்டப்படி... சொல்லுங்க…"

    எத்தனையோ பேசணும்னு வந்தேன். இப்ப எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல்லே…

    நான் ஆரம்பிக்கட்டுமா...

    "அவர், ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். முகத்தில் ஒருவிதப் பதட்டம் தெரிந்தது.

    நான், ஆண்களைத் தாக்கி எழுதறேன்கறது உங்க அபிப்பிராயம்… அப்படித்தானே...

    அபிப்பிராயமில்லே. நிஜமே அப்படித்தான்... ஆம்பிளைங்க தான் ஏமாத்துக்காரங்க, பொய் புரட்டுக்காரங்கன்னு நீங்க தப்பா ஒரு எண்ணத்தை, உங்க எழுத்து மூலமாப் பரவச் செய்யறீங்க... ஆம்பிளை கிட்ட ஏமாந்த பொண்ணு மாதிரி ஒரு பொண்ணால சந்தியிலே நிக்கற ஆம்பிளைங்க எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா...

    நான்- நடுவே புகுந்து குறுக்கிட விரும்பவில்லை. ஏனெனில், அவர் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

    மூக்கு விடைத்துச் சுருங்கியதிலிருந்தே- அழுகையைக் கட்டுப் படுத்திக் கொள்ள, அவருள் எப்பேர்ப்பட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பது புரிகிறது…"

    எழுதுங்களேன்... ஒரு ஆம்பிளை பட்ட கஷ்டங்களையும் தான்… தாலி கட்டினவ சரியில்லைன்னா- ஒருவன் என்ன பாடு படுவான்னு தைரியமா எழுதுங்களேன்… மாட்டீங்களே… உங்களுக்கெல்லாம் லேடி ரீடர்ஸை திருப்தி பண்ணனும்…

    அதுக்காக, என்ன வேணுமானாலும் எழுதுவீங்க… ஒண்ணும் வேண்டாம். என்னைப் பத்தி எழுத தைரியமிருக்கா உங்களுக்கு?"

    சொன்னாத்தானே எழுத முடியும் சீனுவாசன்…

    "என் பேருதான் தெரியும்… ‘________’ ஃபாக்டரியிலே மெக்கானிகல் இன்ஜினியர்… குவார்ட்டர்ஸ் இருக்கு...

    Enjoying the preview?
    Page 1 of 1