Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunbam Nergaiyil…
Thunbam Nergaiyil…
Thunbam Nergaiyil…
Ebook54 pages28 minutes

Thunbam Nergaiyil…

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580105701559
Thunbam Nergaiyil…

Read more from Vidhya Subramaniam

Related to Thunbam Nergaiyil…

Related ebooks

Reviews for Thunbam Nergaiyil…

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Good story with different perspective on married life & women mindset.

Book preview

Thunbam Nergaiyil… - Vidhya Subramaniam

http://www.pustaka.co.in

துன்பம் நேர்கையில்…

Thunbam Nergaiyil…

Author :

வித்யா சுப்ரமணியம்

Vidhya Subramaniam

For other books

http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

துன்பம் நேர்கையில்…

1

பட்டம்மாள் அந்த ஊருக்குள் புதியவளாய்க் குடியேறி நாலு நாள்தான் ஆகியிருந்தது. அதற்குள் அக்கம்பக்கத்து மனிதர்கள் மாற்றி மாற்றி வந்து குசலம் விசாரித்து விட்டுப் போயிருந்தனர்.

வம்புக்கு மறுபெயர் அன்பு!

நான் இந்தக் கிராமத்து அம்மன் கோயில் குருக்களோட பொண்டாட்டி பேரு லலிதா! நீங்க மெட்ராஸாமே? உண்மையா...

ஆமா...

அடடா! ஏம்மாமி அதை விட்டுட்டு இந்தக் கிராமத்துக்குப் போய் வந்திருக்கேள்? என்ன இருக்கு இங்க…

ஏன்? ஆத்தங்கரையும் அம்மன் கோவிலும் இல்லையா?

நன்னாயிருக்கு போங்கோ! எங்களுக்கெல்லாம் அது ரெண்டையும் பாத்துப் பாத்துச் சலிச்சுப் போச்சு! பட்டணம் பக்கம் போகமாட்டோமான்னு இருக்கு

இக்கரைக்கு அக்கரை பச்சை!

அப்படிச் சொல்லாதீங்கோ… என்ன இருந்தாலும் மெட்ராஸ் மாதிரி வருமா? என்ன அழகு... என்ன நாகரீகம் பீச்சு பார்க்குன்னு எவ்வளவு எடம்! சினிமால தான் பார்க்கறேனே...

பட்டம்மா ஒரு மாதிரியாய்ச் சிரித்துக் கொண்டாள். பேச்சிலிருந்தே புரிகிறது இவள் ஒரு வெகுளிப்பெண் என்று. ஏழைக் குருக்களுக்கு மனைவியாய் வாக்கப்பட்டு அந்த ஒத்தமடை கிராமத்தில் குண்டுச்சட்டி குதிரையாய்ப் பார்த்த இடத்தையே பார்த்துப் பார்த்து அவள் அதிகம் துவண்டு போயிருப்பதும் நன்கு புரிந்தது. பாவம், சின்ன வயதுப் பெண்தானே என்ற இரக்கமும் கூடவே எழுந்தது.

மற்றொரு நாள் -

என்ன மாமி மெட்ராஸ்லேர்ந்து வந்துர்க்கேளாக்கும்! கட்டைத் தொண்டையோடு, தொண்டைக்கேற்ற கட்டை குட்டையான உருவத்துடன் வந்தவள் தன்னைச் சாமுண்டீஸ்வரி என்று சொல்லிக் கொண்ட பின்பு -

"எங்காத்துக்காரர் ரிடையர்டு தாசில்தாராக்கும்… மூணு பெண் ரெண்டு பிள்ளை எனக்கு. எல்லார்க்கும் கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டு இப்ப அக்கடான்னு கிராமத்துல வந்து விழுந்துட்டோம். இப்ப

Enjoying the preview?
Page 1 of 1