Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Usha Subramanian Kadhaigal Part - 3
Usha Subramanian Kadhaigal Part - 3
Usha Subramanian Kadhaigal Part - 3
Ebook158 pages1 hour

Usha Subramanian Kadhaigal Part - 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

She has written many Tamil novels and short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109401558
Usha Subramanian Kadhaigal Part - 3

Read more from Usha Subramanian

Related to Usha Subramanian Kadhaigal Part - 3

Related ebooks

Reviews for Usha Subramanian Kadhaigal Part - 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Usha Subramanian Kadhaigal Part - 3 - Usha Subramanian

    http://www.pustaka.co.in

    உஷா சுப்பிரமணியன் கதைகள்

    பாகம் - 3

    Usha Subramanian Kadhaigal

    Part - 3

    Author:

    உஷா சுப்பிரமணியன் 

    Usha Subramanian

    For other books

    http://www.pustaka.co.in/home/author/usha-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தர்மங்களும் நியாயங்களும்

    2. அடங்காப்பிடாரி மருமகள்

    3. ஒழுக்கம் மட்டும் போதிக்க என்ன உரிமை

    4. அம்மாவுக்கு ஒரு இடம்

    5. முற்றுப் பெறாத முதல் காதல்கள்

    6. எனக்குப் பொறாமை இல்லை

    7. நான் கன்னி இல்லை

    8. தொழில் ரகசியம்

    9. அவனாவது உறங்கட்டும்

    10. ஜாதி - நிறம் - கொள்கை

    11. வலி

    12. நீயுமா இப்படி?

    13. கார்ல் மார்க்சும் கத்தரிக்காய்ப் பொரியலும்

    14. கணிப்புகள்

    1. தர்மங்களும் நியாயங்களும்

    ஏறக்குறைய ஓராண்டுக்கு முன் முகமெல்லாம் புதுமைப் பொலிவாக, கன்னத்தில் நாணக்குழைவு பளிச்சிட, உற்றவர்களைப் பிரிகிறோம் என்ற வருத்தத்தின் சாயையையும் மறைக்கும் குதிநடையுடன் கொண்டவனுடன் வீட்டைவிட்டுச்சென்ற கெளரி இன்று திரும்பி வந்திருக்கிறாள். முகத்தில் மங்கலத்துக்குக் குறைவில்லை. நெற்றியில் அக்னிப் பிழம்பெனக் குங்குமம். கழுத்தில் கட்டிய மஞ்சள்கயிற்றில் பூச்சுஇன்னும் மறையவில்லை; பெண்மைக்கு அழகூட்டும்தாய்மைச்செறிவு வேறு.

    ஆனால்… ஆரத்திகரைத்து வரவேற்க வேண்டிய பெற்றவள், அவள் முகத்தைப் பார்க்கவும் திறனற்றுப் புடவைத் தலைப்பை வாயில் அடைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதபடிநிற்கிறாள். கெளரியைப் பின்தொடர்ந்த தந்தையோ தலையைக் கையில் ஏந்தியபடி ஊஞ்சலில் அமர்ந்தார். அந்தக் கம்பீர புருஷரின். ஆண்மையையும் மீறிக்கண்ணில் கங்கை பிரவாக மெடுத்தாள்.

    அம்... மா! - கெளரியின் குரல் அடிவயிற்றிலிருந்து கதறலாக எழுந்தது. காமாட்சி ஓடிவந்து அவளைத் தாங்கிக் கொண்டாள்.

    குரு, சாமான்களை வண்டியிலிருந்து இறக்கினான். சுற்றுப்புறத்தின் சோகத்தையும் கனத்தையும் மீறிய ஓர் அமைதி அவனிடம் இருந்தது.

    காமாட்சியிடம் திரும்பினான்: மாமி, கெளரி மனத்தாலும் உடம்பாலும் ரொம்பக் கஷ்டப்பட்டு நொந்து வந்திருக்கிறாள். அவளை எதுவும் கேட்காதேயுங்கள். முடிந்தவரை அன்பா, இதமா வைத்துக் கொள்ளுங்கள். இனிமே அவளை நாமதான் சந்தோஷமாகப் பாதுகாக்கவேண்டும். மாமா, மேலே ஆகவேண்டிய விஷயங்களை நாம அப்புறம் பேசுவோம்… மனசைத் தளர விடாதேங்கோ…- அவன் குரல்தழுதழுத்தது.

    குரு செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகராஜன். அறுபது வருடமாய் சுருதி பிறழாமல் லயத்துடன் சென்று கொண்டிருந்த அவர்வாழ்வில் ஏன்இந்தஅபஸ்வரம்…?

    அவர் விரும்பியது போல் கெளரியைகுருவிற்கே கல்யாணம் செய்து கொடுத்திருந்தால்... அந்த விருப்பத்தை வெளியிட்ட அன்றுதான் காமாட்சியின் எண்ணம் அவருக்குப் புரிந்தது. குரு நல்ல பிள்ளைதான், வேதவித்து, சம்ஸ்கிருத புரொப் ஸராக இருக்கிறான். பார்க்கவும் பங்கரையில்லை, உறவும் விட்டுப் போகாது. ஆனாலும் காலையில் பசங்களுடன்மாரடி, சாயங்காலம் ஆனால் கோயிலில் அர்ச்சனைத் தட்டு, போதும் போதாதற்கு அனாதை ஆச்ரமம் அது இது வேறு… என்ன இருந்தாலும் ஸகுட், கோட்போட்டுண்டு ஆபீசுக்குப் போறஆம்படையான்னு பெருமை ஒரு பெண்ணுக்கு வேண்டாமா? - அவள் குரலில் இருந்த பயங்கரமான அழுத்தம் அவள் வாழ்வில் இத்தனை நாள் வெளிப்படாமல் இருந்த ஏக்கத்தைப் பறைசாற்றியது. 'ஓரியண்டல் பள்ளித் தலைமை ஆசிரியரான என்னுடன் வாழ்ந்த வாழ்வை நாகரிகமற்றதாகத்தானே கணித்திருக்கிறாள்? இனி காமாட்சியின் குறையைத்துடைக்கமுடியாது எனினும், கெளரிக்கும் இந்தக்குறை வேண்டாம்' - நாகராஜன்ஜாதகக் கட்டுடன் கிளம்பினார்.

    சங்கர்ராமனின் ஜாதகம் கெளரி ஜாதகத்துடன் அற்புதமாய் இணைந்திருந்தது. தாய், தந்தையற்றவன். ஒரே சகோதரிக்கும் மணமாகி விட்டது. நாகராஜன் தானே பம்பாய் சென்று சங்கரைச் சந்தித்தார். எம்.எஸ்ஸி., முடித்து விட்டுப் பெரிய கம்பெனியில் ஆபீசராக இருந்தபோதிலும், சகஜமாகப் பேசி அவரைச் சிரித்து உபசரித்தான். அறுநூறு ரூபாய் வாடகையுள்ளஃப்ளாட், ஸ்கூட்டர், போன் வசதி. கெளரியின் அதிர்ஷ்டத்தை வியந்தவாறே திருமணத்தை நிச்சயம் செய்தார்.

    பதினைந்து வருடம் காத்திருந்து தவமிருந்து பெற்ற பெண்ணுக்குத் தானே முன்வந்து பார்த்துப் பார்த்துச் சீர் செய்தார். பெண்மையின் மென்மையும் நனினமும் கொண்ட கொடியாகக் கெளரி பதினெட்டு வயதுப் பருவப்பூரிப்பிலும், இன்னும் மாறாத குழந்தைத்தனத்துடன், கணவனுடன்கண்களாலேயே பேசி, குழிந்த - கன்னங்களாலே சிரித்து மகிழ்ந்தபோது புளகாங்கிதம் அடைந்தார்.

    கெளரியின் பெண்மை மொட்டவிழ்ந்து அவனுக்கென மலர்ந்தபோதுசங்கர்கிறங்கிப்போனான். கெளரிஎன்றுமே ஒருமிகச் சாதாரணமான பெண்ணாகத்தான்இருந்தாள். அவள் பெண்மையின் எண்ணமே ஒரு புருஷனைச் சார்ந்து இனிய தாம்பத்யம் நடத்த வேண்டும் என்றுதான் நாடியது. அவள் கவனம் படிப்பிலே சென்றதில்லை. பள்ளிப் படிப்யையே இப்படி, அப்படி என்று கஷ்டப்பட்டுத்தான்முடித்திருந்தாள்.

    பம்பாய் வாழ்க்கையின் நாகரிகம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. சங்கர் பெரிய வேலையில் இருந்ததால் நினைத்த போதெல்லாம் அவளை நாடி வீட்டுக்கு வருவான். கெளரீ உன் அழகுக் கன்னத்துக்கு ஒன்று, குண்டுக் கண்களுக்கு ஒன்று, இந்தக் குஞ்சு வாய்க்கு ஒன்று என்று முத்தமாரிபொழிவான். ஞாயிற்றுக் கிழமைகளில் பூனா, மகாபலேஷ்வர் என்று சுற்றுவார்கள். அவர்களுடைய உல்லாச வாழ்க்கைக்கு, வீட்டில் விலை மதிப்புள்ள பொருள்களை வைத்துக்கொள்வது தடையாயிருந்ததால் வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நகைகள், உயர்ரகப் புடவைகள் எல்லாவற்றையும் பாங்க் "லாக்கரில் வைத்துவிட்டான்சங்கர். இப்போது கெளரியின் காதிலும் மூக்கிலும் வைரத் தோடோ, பேசரியோ இல்லை. மாறாக, காதில் மாத்திரம் நவீனரக ரிங்கும், ஷிபான் புடவையுமாக நாகரிக நங்கையாகிவிட்டாள்.

    நாளாக நாளாக, சங்கரைப் பற்றிய பல விஷயங்கள் குழப்பமாகத் தோன்றின. போனில் சங்கரைத் தேடும் பெண் குரல்கள், காரணமின்றி அவளைச்சிடுசிடுப்பது, குடித்துவிட்டு நடு இரவில் வீடு திரும்பி அவள் பெண்மையை அவமதித்து அவளை அடைவது… சங்கர் ஏன் இப்படி மாறிப் போனான்? அதுமட்டுமா, பாங்க்கில் டெபாஸிட் ஆரம்பிக்க, பணமெடுக்க என்று அவளைப் பலவந்தப்படுத்தி, அவளுக்குப் புரியாத காகிதங்களில் அவளைக் கையெழுத்திடச்சொல்கிறான். அப்பாவுக்குக் கடிதம் எழுதலாம்… ஆனால் இத்தனைநாள் இந்திரன், சந்திரன் என்று தானே புகழ்ந்த கணவர், தன்னைத் துன்புறுத்துகிறார் என்றால் நம்புவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முடிவுகட்டினாள் கெளரி.

    அனைத்துக்கும் மேல், அவள்தாய்மையுற்றிருக்கிறாள்என்று அறிந்தும், சங்கர் துளிக்கூட மகிழ்வு அடையவில்லை. மாறாக ஆக்ரோஷத்துடன் அவளை இழுத்துத் தரையில் தள்ளினான். நீ என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறாயா? உன்னைப் பலிவாங்க நேரமாகாது. டாக்டரிடம் அழைத்துச் சென்று டிஅண்ஸி செய்யப் போகிறேன் என்றுகத்தினான். 'முதல் குழந்தையைச்சிதைப்பதா? இவருக்கு என்ன புத்தி கெட்டுவிட்டதா?' - கெளரி விம்மி விம்மி அழுதாள். மறுநாள், சங்கர்புறப்பட்டுச்சென்றவுடன், 'தன்தாய்மையைச் சாக்காக்கி ஒரு மாதமாவது பெற்றோருடன் சென்று இருக்கலாம், இடைவெளி எத்தனையோ பிரிவுகளையும் பாலமாக்கும்' எனத் தாய்க்குத்தன்மசக்கையைப் பற்றிக்கடிதம் எழுத அமர்ந்தாள்.

    வாயிலில் மணி அடித்தது. சங்கராகவே இருக்கலாம். கடிதத்தைப் படுக்கையடியில் மறைத்துவிட்டு, ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். பயத்தில் அவள் மூச்சே நின்று விடும்போல் இருந்தது. தலை சுற்றியது. மூன்று போலீஸ்காரர்கள். 'இங்கே எதற்காக...? அவர் ஏதாவது தப்புத்தண்டா செய்து விட்டாரா..? கடவுளே காப்பாற்று..!'

    கெளன் ஹை ஸ்ரீமதி கெளரி சங்கர் ராமன்? கெளரியின் நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

    போலோ?

    நான்தான், ஹம்ஹை.

    அரெஸ்ட் வாரண்ட்.

    என்னது? - கீழே விழப் போனவள் கதவைப் பிடித்துக் கொண்டாள். ஹிந்தியும் சரியாகப் புரியாது; ஆங்கிலமும் பேச வராது. தமிழிலேயே உளறிக் கொட்டினாள், யாருக்கு அரெஸ்ட் வாரண்ட்? ஏதோதப்பாக வந்திருக்கீங்க.

    சப்-இன்ஸ் பெக்டர் தெளிவான ஆங்கிலத்தில் எடுத்துச் சொன்னார், 'பொய்ப் பெயரில் கம்பெனிகள்தொடங்கிப்பல பேரை ஏமாற்றியதாகவும், பல லட்சம் ரூபாய் கடன்வாங்கியதற்காகவும், சட்டமீறியசெயல்களில் ஈடபட்டதற்காகவும் திருமதி கெளரிசங்கர் ராமனைக் கைது செய்ய அரெஸ்ட்வாரண்ட் எடுத்துவந்திருப்பதாக.'

    கம்பெனி, ஐ நோ நோ கம்பெனி. மை ஹஸ்பெண்ட் சங்கர்ராமன்ஆபீஸர். உடைந்த ஆங்கிலம் கைகொடுத்தது.

    இது உங்கள் கையெழுத்துத்தானே? கெளரியின் கண்கள் குத்திட்டு நின்றன. இது அவள் கையெழுத்தேதான். எப்போதோ பாங்க்கில் அக்கவுண்ட் துவங்கப் போட்டது. யெஸ்… - குரல் குழறியது.

    வீண் தகராறு செய்யாமல் வாருங்கள். - இரு பெண் போலீஸார்மத்தியில் ஒன்றும் புரியாதநிலையில் கெளரி, போலீஸ் வண்டியில் ஏறியபோது, அந்த ஃப்ளாட்டில் இருந்த அறுபத்தாறு குடும்பங்களுக்கும் அவள்காட்சிப் பொருளானாள்.

    போலீஸார் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவளால் பதில் தர முடியவில்லை. சங்கர் தலைமறைவாகி விட்டான். பம்பாய் போலீஸ் சென்னையுடன் தொடர்பு கொண்டது, எங்கப்பாவை வரவழையுங்கோ, என்னைக்காப்பாத்துக்கோ என்ற அவள்கதறல் தாங்காது.

    மறு நாள் மாலை ப்ளேனில் நாகராஜனும் குருமூர்த்தியும் பதைபதைப்புடன் ஓடி வந்தனர். லாக் - அப்பில் இருந்த மகளைக் கண்டதும்

    Enjoying the preview?
    Page 1 of 1