Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nan Ramaseshan Vanthirukkiren
Nan Ramaseshan Vanthirukkiren
Nan Ramaseshan Vanthirukkiren
Ebook185 pages1 hour

Nan Ramaseshan Vanthirukkiren

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

- இந்திரா செளந்தர்ராஜன் " />

கலைமகள் மாத இதழில் நான் தொடராக எழுதிய தொடர் கதைதான் இந்த ‘நான் ராமசேஷன் வந்திருக்கேன்' என்னும் புதினம்.

‘ஆகாயம் காணாத நட்சத்திரம்’ என்று ஒரு தொடரில் ஐம்பது வயதைக் கடந்து விட்ட மீனாட்சி என்கிற ஒரு முதிர் பெண்ணை நாயகியாக வைத்து நாவல் செய்தேன். நல்ல வெற்றியையும் பாராட்டையும் அது பெற்றுத் தந்தது.

அதைத் தொடர்ந்து அதே போல முதுமையைத் தொட்டுவிட்ட ஒரு ஆண் பாத்திரமான ராமசேஷன் என்பவரை வைத்துச் செய்ததுதான் இந்தப் புதினமும்…

ஒரு நாவலில் கதா பாத்திரங்கள் இளையவர்களாக இருக்க வேண்டும். அழகானவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்பது திரைப்படங்களின் நிலைப்பாடு.

கிட்டத்தட்ட தொடர் கதைகளிலும் அது தான் நிலை. விதிவிலக்காய்ச் சில தொடர்கள் உண்டு. அந்த வகையைச் சேர்ந்தது இந்த நாவல்.

நான் மிக அனுபவித்து எழுதிய தொடர்களில் இதுவும் ஒன்று. நிச்சயம் இதை வாசிப்பவர்களுக்கு நல்ல மன நிறைவும் நெகிழ்வும் ஏற்படுவது உறுதி.

இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர் மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு… அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவணைப்பில் வாழ வழியில்லாமல் தனிமையில் அவர் படும்பாடும் அதை உடைக்க அவர் மகள் செய்யும் யத்தனங்களும் தான் இத்தொடரின் பிரதான அம்சம்.

- இந்திரா செளந்தர்ராஜன்

Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580100701597
Nan Ramaseshan Vanthirukkiren

Read more from Indira Soundarajan

Related to Nan Ramaseshan Vanthirukkiren

Related ebooks

Reviews for Nan Ramaseshan Vanthirukkiren

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nan Ramaseshan Vanthirukkiren - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    நான் ராமசேஷன் வந்திருக்கேன்

    Nan Ramaseshan Vanthirukkiren

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    என்னுரை

    கலைமகள் மாத இதழில் நான் தொடராக எழுதிய தொடர் கதைதான் இந்த 'நான் ராமசேஷன் வந்திருக்கேன்' என்னும் புதினம்.

    'ஆகாயம் காணாத நட்சத்திரம்' என்று ஒரு தொடரில் ஐம்பது வயதைக் கடந்து விட்ட மீனாட்சி என்கிற ஒரு முதிர் பெண்ணை நாயகியாக வைத்து நாவல் செய்தேன். நல்ல வெற்றியையும் பாராட்டையும் அது பெற்றுத் தந்தது.

    அதைத் தொடர்ந்து அதே போல முதுமையைத் தொட்டுவிட்ட ஒரு ஆண் பாத்திரமான ராமசேஷன் என்பவரை வைத்துச் செய்ததுதான் இந்தப் புதினமும்…

    ஒரு நாவலில் கதா பாத்திரங்கள் இளையவர்களாக இருக்க வேண்டும். அழகானவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும் என்பது திரைப்படங்களின் நிலைப்பாடு.

    கிட்டத்தட்ட தொடர் கதைகளிலும் அது தான் நிலை. விதிவிலக்காய்ச் சில தொடர்கள் உண்டு. அந்த வகையைச் சேர்ந்தது இந்த நாவல்.

    நான் மிக அனுபவித்து எழுதிய தொடர்களில் இதுவும் ஒன்று. நிச்சயம் இதை வாசிப்பவர்களுக்கு நல்ல மன நிறைவும் நெகிழ்வும் ஏற்படுவது உறுதி.

    இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர் மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு… அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவணைப்பில் வாழ வழியில்லாமல் தனிமையில் அவர் படும்பாடும் அதை உடைக்க அவர் மகள் செய்யும் யத்தனங்களும் தான் இத்தொடரின் பிரதான அம்சம்.

    நமது சமூக அமைப்பில் பெண் என்பவள் திருமணத்திற்கு முன் ஒரு விதமாகவும், பின்பு ஒரு விதமாகவும் வாழும் ஒரு நிலைப்பாடு உள்ளது. குறிப்பாகத் திருமணத்திற்குப் பிறகு அல்லது பிறந்த வீடு என்பது அவளுக்குச் சீர் செய்வதற்கு மட்டும் தான்… மற்றபடி எந்தவிதமான உயிரோட்டமுள்ள தொடர்புகளும் அவளுக்குக் கிடையாது என்கிற ஒரு நிலைப்பாடு உண்மையில் மிகக்கொடியது.

    இந்த வகையில் கேரளம் மிக வேறுபடுகிறது. சொத்திலும் பெண்ணுக்கே முதல் உரிமை. கர்ம காரியங்களையும் அவளே வாழ்நாள் முழுக்கச் செய்ய வேண்டும் என்று எதை வைத்து அங்கே மட்டும் அந்த நியாயத்தை நிலை நிறுத்தினார்கள் என்பது விளங்கவில்லை.

    ஆணோ பெண்ணோ பந்த பாசங்களும் உணர்வு நிலைகளும் பொதுவானவையல்லவா? இந்த நியாயங்கள் எவ்வளவு தான் தெரிந்தாலும் இன்னும் பல குடும்பங்களில் சிடுக்குகளுக்கும் சிக்கல்களுக்கும் பஞ்சமேயில்லை. பொருளாதார ரீதியில் வருமான வரி கட்டும் அளவுக்கு உள்ளவர்கள் இந்த மாதிரி சமூக லெளகீக வளையங்களில் சிக்கிக்கொள்ளாமல் அதையே தங்கள் பணத்தால் விலைக்கு வாங்கி விடுகிறார்கள்.

    அவர்கள் சிக்கல்கள், கவலைகள் எல்லாம் வேறு ரகம்.

    முழுக்க முழுக்க நடுத்தட்டுக் குடும்பங்களே இது போன்ற நியதிகளில் சீரழிகின்றன.

    எனக்குத் தெரிந்து ஒரு முதிய தம்பதியினர். இவர்களுக்கு இரு பெண்கள். திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். இந்த தம்பதியினருக்குச் சரியாக கண் பார்வையும் இல்லை. இறுதிக் காலத்தில் ஆதரிக்க யாரும் இல்லாமல் இவர்கள் பட்டபாடு இருக்கிறதே அது மிகக் கொடுமை...

    இவர்கள் பெண்கள் பேரன் பேத்திகளுடன் விடுமுறைக்கு விடுமுறை வந்து ஏராளமாய்ச் செலவு வைத்து விட்டுப் போவதுதான் மிச்சம்.

    நான் கூட அவர்களிடம் 'உன் தாய் தந்தையை உங்களுடன் வைத்துக்கொண்டால் என்ன?' என்று கேட்டேன்.

    'எங்க வீட்ல ஒத்துக்கமாட்டாங்க...'

    'அப்புறம் என் மாமனார் மாமியாரை எங்க அனுப்புவது?' என்று மின்னல் வேகத்தில் பதில் வந்தது.

    இதனால் தான் பெண்களைப்பெற்றுக்கொள்ள பெண்களே அஞ்சும் நிலை.

    கள்ளிப்பால் கொடுத்துச் சாகடிக்கும் கொடுமைக்கெல்லாம் இப்படிப்பட்ட சமூக அமைப்பே காரணம்.

    இவை மாறவேண்டும். மாற்றும் பொறுப்பு எல்லோருக்கும் உண்டு. அதற்கு இந்த நாவல் ஏதாவது ஒரு வகையில் துணை செய்யும். இது தொடராக வெளிவந்த தருணத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் உணர்ச்சி மயமாக ஸ்லாசித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

    கலைமகள் இதழும் நன்கு வெளியிட்டது. ஆசிரியர் திரு.நாராயணசாமி ஐயர் அவர்களும் பொறுப்பாசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமண்யன் அவர்களும் இத்தொடருக்கு நல்ல ஊக்கமளித்தனர்.

    திரு.கீழாம்பூர், சிங்கப்பூர், மலேசியா சென்ற சமயம் அங்கு பலரும் இத்தொடரை வெகுவாக ஸ்லாசித்ததை நேரில் குறிப்பிட்டார்.

    கலைமகள் என் தாய்வீடு.

    1978ல் என் முதல் கதை கலைமகளில் தான் வெளிவந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு 2003ல் என் வெள்ளி விழா ஆண்டில் இத்தொடரும் கலைமகளில் வெளியாகி பெருமையையும் நிறைவையும் அளித்துள்ளது. இப்போது திருமகளிலும் வெளிப்பட்டு அனைவரையும் நெகிழ வைக்க வருகிறது.

    அன்புடன்

    இந்திரா செளந்தர்ராஜன்

    1

    விடிந்து விட்டது!

    சூரியனின் விட்ட பாகம் கிழக்கு பாகத்தில் ஒரு தர்ப்பூசணிக் கீற்று மாதிரித் தெரிய ஆரம்பித்திருந்தது.

    அதிகபட்சம் ஐந்து நிமிஷம் போதும்… விறுவிறுவென்று மேலேறி விடுவான் சூரியன்.

    ஒருநாள் தாமதமாகவோ இல்லை உடம்பு சரியில்லை என்று வராமலோ போனதேயில்லை இவன்!

    உலகம் தோன்றி லட்சோப லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.

    இத்தனை லட்சம் ஆண்டுகளில் ஒருநாள்… ஒரு நொடி இவன் பிசகிப்போயோ, இல்லை கிழக்குத்திசை போரடிக்கிறது என்று கொஞ்சம் தள்ளியோ கூட உதிக்க வில்லையே…?

    என்ன ஒரு ஆச்சரியம்…?

    இந்த ஆச்சரியத்தை என்ன வென்பது?

    அதனால்தான் உலகின் கண் கண்ட கடவுளாக அவனை அதிகாலையில் எல்லோரும் வணங்கி நிற்கிறார்களோ?

    தப்புத்தப்பு…

    எல்லோரும் எங்கே வணங்கி வரவேற்கிறார்கள்? மயிலாப்பூர் அசந்து தூங்கும் நேரமே இப்போதெல்லாம் அதிகாலை நேரம்தான் என்றாகிவிட்டது.

    ராமசேஷன் மட்டும்தான் இந்த விஷயத்தில் தவறுவதே இல்லை. இத்தனைக்கும் அவரிடத்திலும் டி.வி. இருக்கிறது. அதில் இருபத்திநாலு மணிநேரமும் கூத்து பாட்டுச் சேனல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

    ஆனால் மனிதரை அந்தப் பெட்டியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நாள் தவறாமல் கோவில், பின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம். பின் ருத்ரம் ஜெபிப்பது என்றெல்லாம் ஒரு ரிடயர்ட் ஆன கோஷ்டி ஒன்று மயிலாப்பூரில் இருந்தது.

    இப்போது அதுகூட 'மெட்டி ஒலி' ருத்ர வீணை, அலைகள், அண்ணாமலை என்று சீரியல் பிம்பங்களிடம் சிக்கிக்கொண்டு விட்டது. அப்படியே தொடர்ந்து ஒரு சினிமா என்று பார்த்து விட்டுக் கண்கள் அசந்து மயங்கி, தூங்க ஆரம்பிக்கும் போது மணி எப்படியும் பன்னி ரெண்டாகி விடுகிறது.

    தெருவில் ஊளை நாயின் குரல் கூட கேட்கத் தொடங்கி விடும். அப்புறம்தான் தூக்கமே… இதில் விடிகாலைக் கண்விழிப்பு, பின் சூரிய நமஸ்காரம் என்பதெல்லாம் திருப்பதி, காசி போல ஷேத்ராடனம் செய்யும் பலமான முயற்சிக்குரிய விஷயங்கள் போலாகிவிட்டன.

    அது என்னவோ தெரியவில்லை.

    ராமசேஷன் மட்டும் இந்த 'கச்சராத்து' எதிலும் மாட்டவேயில்லை. மனிதருக்கு அத்தனை திடசித்தம்.

    பால்காரனிலிருந்து பேப்பர்காரன் வரை அவரைப் பார்த்து தினமும் வியந்து போவார்கள். ஆறுமணி என்றால் ஆறுமணி... கூப்பிய கையோடு கிழக்குப் பார்த்தபடி நிற்கும் அவரை மாடவீதி மொட்டை மாடியில் பார்க்கலாம்.

    உதடிரண்டும் ஆதித்ய ஹ்ருதயம் சொன்னபடி அந்த ஒளிப்பந்தை எதிர்பார்த்தபடி இருக்கும். அவனை நமஸ்கரித்து விட்டுத்தான் அடுத்தவேலையே…

    அடுத்த வேலை என்ன?

    காலைச் சந்திதான்… ஸபஷ்டமாக அர்க்யம் விட்டு வணங்கிச் சேவித்து பின் நூற்றி எட்டு காயத்ரி மந்திரத்தை எண்ணிக்கைக் குறைவில்லாதபடி சொல்லிமுடித்து, பின் மொட்டை மாடியில் இருந்து இறங்கும்போது மணி ஆறரை ஆகிவிடும்.

    அதன் பிறகும் அவர் சும்மா இருப்பதில்லை.

    ஆழியார் பக்கம் ஆஸ்ரமம் அமைத்து யோகம் தியானம் என்று பழைய சமாச்சாரங்களை உயிர்ப்பித்த படி இருக்கும் வேதாத்திரி மகரிஷியின் எளிய காயகல்ப உடற்பயிற்சியில் ஒரு இருபது நிமிஷத்தைச் செலவிடுவார்.

    அப்புறமாய் அவரது ஜாகை என்று கருதப்படும் அந்தச் சிறிய ஹாலும், பத்துக்குப் பத்து சமையல் கட்டும் கொண்ட வீட்டுக்குள் நுழைந்தால் ஒன்பது பத்துமணி வரை சரியாக இருக்கும். முதல் காரியம் ஆவின் பூத்துக்குப் போய் பால் பாக்கெட்டை வாங்கி வருவது தான். ஒரு அரைலிட்டர் பாக்கெட்டை பூத்காரனும் தனியே ஒரு வாளித் தண்ணிரில் போட்டு வைத்திருப்பான், இவராகப் போய் அதை எடுத்துக்கொள்வார்.

    அப்போது அவனும் இவரது முகத்தை ஒரு பார்வை பார்ப்பான். பளிச்சென்று புளிபோட்டுத் தேய்த்த வெண்கலப் பாத்திரம் கணக்காய் இருக்கும்.

    அதிலும் நெற்றியில் அவர் தீட்டிக்கொள்ளும் விபூதிப் பட்டை ஏதோ நூல் பிடித்து இன்ஸ்ட்ருமென்ட் வைத்து அளந்து தீட்டிக் கொண்ட மாதிரி இருக்கும்.

    அவனுக்கு அவரை விட அவர் நெற்றியில் பட்டையைப் பார்ப்பதுதான் மிக பிடிக்கும்.

    சாமி... நானும்தான் தினம் திண்ணூறு பூசிக்கறேன். பத்து நிமிஷம் இந்த நெத்தியிலே நிக்க மாட்டேங்குது. என்ன ஆவுது, எங்க போவதுன்னே தெரியல. ஆனா நீங்க மட்டும் எப்படி சாமி இப்படிச் பளிச்சுன்னு பூசிக்கறிங்க. சாய்ந்தரம் ராத்திரின்னு அது கலையவே மாட்டேங்குதே. எப்படி சாமி? என்று மிக நைச்சியமாகக் கேட்பான். நிச்சயம் அதற்கு முன் ஒரு சிகரெட் பிடித்திருப்பான். அவன் பேச்சில் வார்த்தைக்கு வார்த்தை அதன் வாடை வீசியபடி அடிக்கும்.

    ராமசேஷனும் முகத்தைக் கோணிக் கொண்டே அதற்குப் பதில் சொல்வார்.

    "சிகரெட் வாயோட பேசப்படாதுன்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அந்த புகையிலைக் கோட்டானையா ஹ்ருதயம் வரைக்கும் அனுப்புவே? புத்திகெட்டவனே…

    ஹ்ருதயம்கறது வேத புத்தகம் மாதிரிடா.

    பவித்ரமா படுசுத்தமா இருக்கணும் அது. என்னிக்கு உன் ஹ்ருதயம் கழுவின தரைமாதிரி சுத்தப்படறதோ அன்னிக்கு நெத்தியிலையும் விபூதி நிலைக்கும்" என்பார்.

    இதெல்லாம் அன்றாடங்கள் அவ்வளவு சொல்லும் அவரே பாழாய்ப் போன காபிக்கு அடிமையாகத் தான் இருக்கிறார்.

    ஒவ்வொரு நாளும் காபி போடும் சமயம் டிகாக்ஷன் ஃபில்டரை 'ணொட்… ணொட்' ன்னு தட்டும் போது மனசுக்குள் யாரோ தட்டுகிற மாதிரி இருக்கும்.

    'ராமசேஷா… நீ எல்லாம் பிறத்தியாருக்கு உபதேசம் பண்ணாதே…" என்று

    Enjoying the preview?
    Page 1 of 1