Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bramma Kanave Pratisha!
Bramma Kanave Pratisha!
Bramma Kanave Pratisha!
Ebook139 pages2 hours

Bramma Kanave Pratisha!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580111001606
Bramma Kanave Pratisha!

Read more from Arnika Nasser

Related to Bramma Kanave Pratisha!

Related ebooks

Reviews for Bramma Kanave Pratisha!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bramma Kanave Pratisha! - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    பிரம்ம கனவே பிரதிஷா!

    Bramma Kanave Pratisha!

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    பிரம்ம கனவே பிரதிஷா!

    1

    ஷுட்டிங் குழு' கோத்தகிரியில் ஷுட்டிங்குக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தது. மொத்தம் ஆறு இடங்களில் 'ரிஃப்ளக்டர்'கள் நிறுத்தப்பட்டன. ட்ராலி தண்டவாளத்தில் பேனா பிளக்ஸ் கேமிரா. டயலாக் பதிய மிகப் பெரிய டேப்ரிக்கார்டர் மைக்குடன்.

    டைரக்டர் இதயச்சந்தர் கேமிராமேனுடன் விவாதித்துக்கொண்டிருந்தார். இதயச்சந்தர் வயது 20X2+10. 'ஒயிட் அண்ட் ஒயிட்'டில் ஷர்ட்டை 'டக்' இன் பண்ணி யிருந்தார். தூக்கிச் சீவியிருந்த சொற்ப கேசத்தலை, பவர் கிளாஸ். நெற்றியில் ஒற்றை கீற்றலாய் விபூதி, தெத்துப் பல் அமைந்த வாய்.

    இதயச்சந்தர் கடந்த 25 வருடங்களாக சினிமாத் துறையில் வெற்றிப்பட டைரக்டராய் இருப்பவர். அவர் எடுப்பவை எல்லாம் மசாலா படங்கள்தான். இந்தப்படம்தான் ஒரு விதிவிலக்கு.

    ஹீரோ சஞ்சய்காந்த் மேக்கப்புடன் தயார் நிலையில் இருந்தான். ரஜினி, விஜய்போல் ஆக்ஷன் ஹீரோ. தனக்கும் நடிக்க வரும் என்று நிரூபிக்க இந்தப் படத்தை விரும்பி ஒப்புக் கொண்டான். தான் கொண்டு வந்த சேரில் அமர்ந்திருந்தான்.

    ஹீரோயின் பிரதிஷா மிதமான மேக்கப்பில் இருந்தாள். கதைப்படி அவள் ஏழுமாத கர்ப்பம். ஆகவே, 'பேடு' கட்டி கர்ப்பிணிபோல் காட்சியளித்தாள். வயது 19. உயரம் 5 அடி, 6 அங்குலம் சாமுத்ரிகா லட்சணம் மீறாத அழகு.

    உதவி டைரக்டர் ஸ்கிரிப்டை கையில் வைத்துக் கொண்டு காட்சியை பிரதிஷாவுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

    இந்தப் படத்தின் கதைக்கு சொந்தக்காரன் எழுத்தாளர் சூர்யகுமாரன், ஷுட்டிங் அமளியில் சிக்காமல் சற்றுத் தள்ளி நின்று புகைத்துக் கொண்டிருந்தான். குளிர் தாக்காமலிருக்க சால்வை போர்த்தியிருந்தான். தமிழ் நாட்டில் எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டு ஆயிரம் பேர் அலைந்தாலும் அந்த வார்த்தைக்கு தகுதியுடைய ஒரு சிலரில் சூர்யகுமாரனும் ஒருவன். இவனின் கதைகள் முழுதும் பெண்கள் பிரச்னையைப் பற்றியே அமையும். சில பெண் எழுத்தாளர்கள் போன்று புலம்ப மாட்டான். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் நிமிர்ந்து தன்னம்பிக்கையாய் உலகப் பிரச்னைகளை எதிர்கொள்ள, கதைகளில் கற்றுத் தருவான். ஒவ்வொரு கதையும் இவனுக்கு யானை கர்ப்பம்தான். சினிமாத் துறையே பிடிக்காமல் விலகியிருந்த இவனை, மகா கட்டாயப் படுத்தி இவனின் 'லேட்டஸ்ட்' தொடர்கதையான 'சூரியப்பூவே'யை படமாக்க சம்மதம் வாங்கியிருந்தனர் ஆர். வி. எஸ்., புரடக்ஷன்காரர்கள்.

    அடுத்த அரைமணி நேரத்தில் ஷுட்டிங் ஆரம்பித்தது. சஞ்சய்காந்த் சம்பந்தப்பட்ட சில 'ஷாட்'களை எடுத்து முடித்தார் இதயச்சந்தர்.

    பின் பிரதிஷாவிடம் வந்தார்.

    இத பார்மா. நீ உன் காதலனாலே, கர்ப்பமா இருக்க. இப்ப வந்துருவான், நாளைக்கு வந்திடுவான்னு காத்துகிட்டு இருக்க, நீ தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்கு போற வழில மலைக்கோயில் வாசல்ல நிக்கற. உன் இனப் பெண்கள் சிலர் உன்னை கேலி செய்றாங்க. நீ அதக் கேட்டு கண் கலங்குற. நீ கண்கலங்குற சீனை தனி டைட்குளோசப் ஷாட் எடுத்துர்லாம் புரியுதா?

    தலையாட்டினாள் பிரதிஷா.

    சீனை ஒருதடவை நான் நடிச்சுக் காட்றேன். நான் நடக்கறது, நிக்கறது எக்ஸாக்ட் இடம்-கண்கலங்கறப்ப கேமிராவை மிகச்சரியா பாக்ற விதம் எல்லாம் நகல் பண்ணுபோதும்…

    சரிங்க சார்!

    இதயச்சந்தர், ஸ்டார்ட் காமிரா! ஆக்ஷன்!

    'கிளாப்' அடிப்பவன் சீன் எண்ணைக் கூறி கிளாப் அடித்தான்.

    பிரதிஷா-கதைநயாகி 'அமரத்வனி' ஆனாள்.

    அமரத்வனி தளர்வாய் முகத்தில் ஆயிரம் விசனங்களை வைக்துக் கொண்டு நடந்தாள். 

    கோயில் வாசலில் நின்றிருந்த மூன்று பெண்கள் நக்கலாய் பேச ஆரம்பித்தனர்.

    பாத்தியாடி! எப்படி காலிப்ளவரா மலர்ந்திருந்தவ இப்படி போய்ட்டா பாத்தியா?

    எல்லாம் இவ காதலன் 'ஆதித்தன்' என்ற அயோக்கியனாலதான், அவன் வருவான் வருவான்னு எதிர்பார்த்து ஏமாந்து போறா. அவன் வரமாட்டாள்.

    அப்ப இவ எதிர்காலம்?

    அதோகதிதான்!

    நாளைக்கு இவ குழந்தை கதி!

    அனாதைதான். தகப்பன் பேரு தெரியாம வளரப் போவுது!

    டயலாக் முடிவில் நிமிர்ந்தாள் அமரத்வனி. கண்கள் இறுகி ஒரு புள்ளியில் நிலைத்தன. கண்களுக்குள் வெண்மை ஏறியது. மூக்கு விடைத்தது. கண்ணீர் ஊற்றெடுத்து கண்கள் நிறைந்து ததும்பி இருவெள்ளிக் கம்பிகளாய் வழிந்து தாடை இறக்கத்தில் 140 செ மீ. உயரத் தரைக்கு பாய்ந்தது.

    டைரக்டர் இதயச்சந்தர் கூவினார். கட்! கட்! கேமிராமேனிடம் திரும்பி ஷாட் ஒகே! ஷாட்டை லேப்புக்கு அனுப்ப மார்க் பண்ணுங்க! "அமரத்வனி' கேரக்டரில் கூடுவிட்டு கூடுபர்ய்ந்திருந்த பிரதிஷா வலுகட்டாயமாய் யதார்த்தத்துக்கு இழுபட்டாள். கண்ணிரை துடைத்துக் கொண்டாள். யூனிட் முழுமையும் கைதட்டி பிரதிஷா நடிப்பைப் பாராட்டியது பிரதிஷாவின் கைகளை குலுக்கினான் ஹீரோ நடிகர் சஞ்சய்காந்த்.

    ஸ்டாப் இட்! கூவியபடி நடந்து வந்தான் சூர்ய குமாரன். டைரக்டர்- ஹீரோ ஹீரோயின் இடையே வந்து நின்றான்.

    என்ன சூர்யா ப்ராப்ளம்? இதயச் சந்தர்.

    இந்த காட்சி எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.

    ஏன் சூர்யா?'

    யாரு இவ... ஆங்... பி-ர-திஷா! ம். இந்த புதுமுக நடிகை பிரதிஷாவுக்கு சரியாக நடிக்கத் தெரியல…

    நோ நோ. அவளது நடிப்பு நன்றாகவே இருந்தது.

    இதைக் கேட்ட பிரதிஷா உக்கிரமானாள்.

    நீங்க யாரு இடையில் வந்து என் நடிப்பை விமர்சிக்க? டைரக்டருக்கும், யூனிட்டுக்கும் பிடிச்சு போன பிறகு உங்களுக்கென்ன வேலை இங்க?

    நானா? நீ தடிக்கிறியே இந்த படத்தின் கதைக்கு சொந்தக்காரன்!

    எழுத்தாளன்னா நீங்க பெரிய கொம்பனா? கதைய குடுத்து, கை நிறைய சுாசு வாங்கிட்டீங்களே… அப்புறம் எதுக்கு அதிகப்பிரசங்கித்தனமாய் 'ஷுட்டிங்'ல மூக்கை நீட்டறீங்க!

    டைரக்டர் சார்! இந்த கத்துக்குட்டி நடிகைக்கு நம்ம ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்துங்க. கண்டிஷன் 'நம்பர் ஒன்' திரைக்கதையில் எந்தவொரு சிறு திருத்தமும், என்னுடைய ஒப்புதலின் பேரில்தான் செய்யப்பட வேண்டும். கண்டிசன் 'நம்பர் டூ' - 'ஷுட்டிங்'கில் கலந்து கொள்ள, திருத்தம் சொல்ல, தேவைப்பட்டால் என் விருப்பப்படி சீன்களையே மாற்றி அமைக்க அதிகாரம் உண்டு எனக்கு. கண்டிஷன் நம்பர் த்ரீ படத்தின் நாயகி என் கற்பனை கதாநாயகி தரத்துக்கு நடிக்கா விட்டால் படத்தை விட்டு நீக்க எனக்கு தயாரிப்பாளர் உரிமை கொடுத்துள்ளார்! இதெல்லாம் இந்த கோ - ஆப்டெக்ஸ்' மாடல் நடிகைக்கு சொல்லுங்க டைரக்டர் சார்!

    மாடலா இருந்தேன் தான். ஆனா என்ன கேவலம்?

    உன் நடிப்பு கோடம்பாக்கம் லெவலையே தாண்டல. என கதாநாயகி அழுகுணில்ல, கோழையுமில்ல. யாரோ மூணுபேர் 'கமெண்ட்' அடிக்கறதுக்கு இவ, தாரை தாரையாய் அழறதுக்கு கேலி பண்றவங்களை சீற்றமா ஒரு பார்வை பாக்கணும். யாரும் அறியாத அளவுக்கு லேசாக கண் கலங்க வேண்டும். ஒரு 'பிராக்ஷன் ஆப் செகன்ட்'தான் முகபாவம். அலட்சியமா மாறி தொடர்ந்து நடக்கணும். நடையில், கர்ப்பஸ்திரீயின் பலவீனம் தெரியக்கூடாது. கம்பீரம் தெரியணும்.

    டைரக்டர் இதயச்சந்தர் சீறினார். "நீங்க சொல்றதை ஜீரணிக்க முடியலை மிஸ்டர் சூர்யா! எனக்கு நீங்கள் டைரக்ஷன் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. நீங்க சொல்ற மாதிரி படமெடுத்தா படம் ஊத்திக்கும்.

    Enjoying the preview?
    Page 1 of 1