Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirikka Pazhagu
Sirikka Pazhagu
Sirikka Pazhagu
Ebook198 pages1 hour

Sirikka Pazhagu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகத்தில் எந்த இலக்கியத்துக்கும் இல்லாத வரவேற்பு நகைச்சுவை இலக்கியத்துக்கு உண்டு.

எவ்வளவுதான் தீவிர இலக்கிய வாதியாக இருக்கட்டுமே. அவருக்கு முன்பாக உலகத்தின் தலைசிறந்த இலக்கியப் புத்தகங்களையும் அவற்றோடு ஒரு நகைச்சுவைப் புத்தகத்தையும் சேர்த்து பரப்பி வைத்தால் இலக்கியவாதி முதலில் கையில் எடுக்கும் புத்தகம் எது? உங்களுக்கே தெரியும்.

'எனக்கு மட்டும் சிரிக்கத் தெரியாது இருந்தால் நான் என்றைக்கோ செத்துப் போயிருப்பேன்’ என்ற இந்த மிக உண்மையான தங்க வாக்கியத்தை யாராவது ஒர் அறிஞர், ஏதாவது ஒரு காலகட்டத்தில், எங்காவது ஒரிடத்தில் நிச்சயம் சொல்லியிருக்கக் கூடும்.

ஒரு விலங்கு சிரிக்கப் பழகிக் கொண்டு விட்டால் அது மனிதனாகி விடுகிறது. ஒரு மனிதன் சிரிப்பதை மறந்து விட்டால் அவன் மிருகமாகி விடுகிறான்.

வீட்டை விட்டு வெளியே சென்றால் திரும்பி வரும் வரையுள்ள பிரச்னைகள், வீடு திரும்பிய பின் வீட்டுக்குள் உள்ள குடும்பப் பிரச்னைகள் என அங்கிங்கெனாது எங்கும் நிறை பிரச்னைகள் இன்றைய அதிதுரித வாழ்க்கையில் பெருகிப் போனதில் நாம் சிரிப்பதை மறந்து இருபத்து நான்கு பெருக்கல் ஏழு மூல வியாதிக்காரர்களைப் போல முகத்தை வைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டோம்.

பொதுவாக மற்றவர்கள் வாழைப்பழத் தோல் வழுக்கி விழுவதைப் பார்த்தாலோ, வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி அவஸ்தைப்படுவதைப் பார்த்தாலோதான் சிரிப்பது உலக வழக்கம்.

அனுராதா ரமணன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சங்கடமான சம்பவங்களையே மிகவும் நகைச்சுவையுடன் சொல்லி இடுக்கண் வருங்கால் நகுதலுக்கு வழி காட்டுகிறார். தத்தம் பிரச்னைகளைக் கண்டே சிரித்துப் பழகக் கற்றுத் தருகிறார். பழகலாம், வாங்க.

வாய்விட்டுச் சிரிப்பது உடலுக்கு ஆரோக்கியம் என்பது மட்டுமல்லாது, சிரித்த முகத்துடன் இருக்கும் மனிதனின் உறவும், தொழிலும், வாழ்வும் சிறக்கும்.

உங்கள் வாழ்வும் சிறக்க வேண்டும். அதுதான் அனுபவத் திலகம் அனுராதா ரமணன் மற்றும் எங்களுடைய ஆசையும் கூட!

With Love,

சுபா

Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580110001738
Sirikka Pazhagu

Read more from Anuradha Ramanan

Related to Sirikka Pazhagu

Related ebooks

Reviews for Sirikka Pazhagu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirikka Pazhagu - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    சிரிக்கப் பழகு

    Sirikka Pazhagu

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    சிரிக்கப் பழகு

    வணக்கம்

    உலகத்தில் எந்த இலக்கியத்துக்கும் இல்லாத வரவேற்பு நகைச்சுவை இலக்கியத்துக்கு உண்டு.

    எவ்வளவுதான் தீவிர இலக்கிய வாதியாக இருக்கட்டுமே. அவருக்கு முன்பாக உலகத்தின் தலைசிறந்த இலக்கியப் புத்தகங்களையும் அவற்றோடு ஒரு நகைச்சுவைப் புத்தகத்தையும் சேர்த்து பரப்பி வைத்தால் இலக்கியவாதி முதலில் கையில் எடுக்கும் புத்தகம் எது? உங்களுக்கே தெரியும்.

    'எனக்கு மட்டும் சிரிக்கத் தெரியாது இருந்தால் நான் என்றைக்கோ செத்துப் போயிருப்பேன்' என்ற இந்த மிக உண்மையான தங்க வாக்கியத்தை யாராவது ஒர் அறிஞர், ஏதாவது ஒரு காலகட்டத்தில், எங்காவது ஒரிடத்தில் நிச்சயம் சொல்லியிருக்கக் கூடும்.

    எஸ்.வி.வி. யின் 'பால் கணக்கை'யும், தேவனின் 'துப்பறியும் சாம்பு'வையும், பாக்கியம் ராமசாமியின் 'மாணவர் தலைவர் அப்புசாமி'யையும், சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'களையும், அகஸ்தியனின் 'கமலா கல்யாணமே வைபோகமே'வையும் படிக்காதவர்கள் அபாக்கியவான்கள். அது மட்டுமல் லாமல், பி.ஜி.உட்ஹவுஸின் பாணியில் சொல்வதானால் அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

    ஒரு விலங்கு சிரிக்கப் பழகிக் கொண்டு விட்டால் அது மனிதனாகி விடுகிறது. ஒரு மனிதன் சிரிப்பதை மறந்து விட்டால் அவன் மிருகமாகி விடுகிறான்.

    வீட்டை விட்டு வெளியே சென்றால் திரும்பி வரும் வரையுள்ள பிரச்னைகள், வீடு திரும்பிய பின் வீட்டுக்குள் உள்ள குடும்பப் பிரச்னைகள் என அங்கிங்கெனாது எங்கும் நிறை பிரச்னைகள் இன்றைய அதிதுரித வாழ்க்கையில் பெருகிப் போனதில் நாம் சிரிப்பதை மறந்து இருபத்து நான்கு பெருக்கல் ஏழு மூல வியாதிக்காரர்களைப் போல முகத்தை வைத்துக் கொள்ளத் தொடங்கி விட்டோம்.

    பொதுவாக மற்றவர்கள் வாழைப்பழத் தோல் வழுக்கி விழுவதைப் பார்த்தாலோ, வேறு ஏதாவது பிரச்னையில் சிக்கி அவஸ்தைப்படுவதைப் பார்த்தாலோதான் சிரிப்பது உலக வழக்கம்.

    அனுராதா ரமணன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சங்கடமான சம்பவங்களையே மிகவும் நகைச்சுவையுடன் சொல்லி இடுக்கண் வருங்கால் நகுதலுக்கு வழி காட்டுகிறார். தத்தம் பிரச்னைகளைக் கண்டே சிரித்துப் பழகக் கற்றுத் தருகிறார். பழகலாம், வாங்க.

    வாய்விட்டுச் சிரிப்பது உடலுக்கு ஆரோக்கியம் என்பது மட்டுமல்லாது, சிரித்த முகத்துடன் இருக்கும் மனிதனின் உறவும், தொழிலும், வாழ்வும் சிறக்கும்.

    உங்கள் வாழ்வும் சிறக்க வேண்டும். அதுதான் அனுபவத் திலகம் அனுராதா ரமணன் மற்றும் எங்களுடைய ஆசையும் கூட!

    With Love,

    சுபா

    முன்னுரை

    அன்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்.

    நலம். நலம் தானே...

    வாழ்க்கையில் சிரிக்கப் பழகியிருந்தால் நலத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. பல சமயங்களில் நமக்கு வரும் சோதனைகளைக் கூட சிரிக்கத் தெரிந்திருந்தால் சுலபமாகக் கடக்க முடியும்.

    நிறைய பணக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டார்கள். எங்கே சிரித்துத் தொலைத்தால் ஐந்து, பத்து செலவாகி விடுமோ என்று முகத்தை 'உர்ர்'ரென்று வைத்திருப்பார்கள்...

    இன்னும் சில டாக்டர்கள்... சிடுசிடுவென எரிந்து விழுவார்கள் பாருங்கள்... அவர்களுக்கே அந்த நேரத்தில் பிளட் பிரஷர் எகிறியிருக்கும்.

    அந்த டாக்டரா... மனுஷன் போக முடியுமா... எப்பவும் மூல வியாதிக்காரன் மாதிரி கத்துவானே...

    இப்படி பெயர் பெற்ற டாக்டர்களையும் பார்த்திருக்கிறேன்.

    என் தாத்தாவின் அக்கா புருஷர் இப்படித்தான்… விடிந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரையில் முகத்தை மூஞ்சூறு மாதிரி வைத்துக் கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டிருப்பார்.

    என்ன... கடைஞ்ச மோரும், முறுக்கும், வெல்லச் சீடையும் வச்சிருக்கேன்... உம்... இதைச் சொல்லணுமா... வச்சிட்டுப் போ...

    அத்தையைப் பார்த்து ஓர் உறுமல்.

    பாகற்கா பிட்ளை உங்களுக்குப் பிடிக்குமே... இன்னொரு தரம் சாதம் போட்டு பிட்ளை... உம்... போட்டுத் தொலை…

    நான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.

    இவர் ஏன் சிரிக்கவே மாட்டேங்கறார் அத்தை?

    நான் அத்தைப் பாட்டியின் காதை ஒரு நாள் கடித்தேன். அவள், அளவற்ற பாசத்தோடு என்னைப் பார்த்தாள்.

    கிழவர் சிரிச்சு நீ பார்க்கணுமா?

    "உம்...''

    அவள் தன் புடவைத் தலைப்பில் முடிந்து வைத்திருந்த ஒற்றை ரூபாய் நாணயத்தை எடுத்து என் உள்ளங் கையில் பதித்தாள்.

    அந்தத் தாத்தா கிட்டப் போய் இதைக் கொடு. ஏதுன்னு கேட்டா, தெருவுல கிடந்ததுன்னு சொல்லு. நான் கொடுத்தேன்னு சொல்லாதே. சிரிப்பார் பாரு…

    அவள் சொன்னபடியே செய்தேன். அவர் நான் கொடுத்த நாணயத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

    ஏதுடீ இது?

    தெருவுல கிடந்தது தாத்தா...

    அந்த முகத்தின் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு மலர்ந்தது.

    இதை நீ எடுத்ததை யாராச்சும் பார்த்தாங்களா?

    ஊம்ஹூம்... இல்லே…

    சரி. சமர்த்து. உள்ளே போய் அத்தைப் பாட்டி கிட்ட சொல்லி, நான் தரச் சொன்னேன்னு கேட்டு அச்சு வெல்லம் வாங்கிச் சாப்பிடு. இந்த ரூபா என் கிட்டயே இருக்கட்டும். சின்னப் பசங்க கிட்ட எல்லாம் இவ்வளவு காசு இருக்கக் கூடாது. போலீசு பிடிச்சிட்டுப் போயிடும்…

    இதைச் சொல்லி புன்சிரிப்புடன் என் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

    எதற்கு இதைச் சொல்லுகிறேன் என்றால் காசுக்குத் தருகிற மரியாதை கூட மனிதர்களுக்கு இல்லை. கடைசி வரையில் சிரிக்காமலேயே வாழ்ந்து விட்டுப் போவது என்ன வாழ்க்கையோ தெரியவில்லை.

    நான் கொஞ்சம் வித்தியாசமானவள். 'இடுக்கண் வருங்கால் நகுக' எனத் திருவள்ளுவர் சொன்னாலும் சொன்னார்; என்னிடம் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை!

    பள்ளிக் கூடத்தில் கூட என் வகுப்பில் இரண்டு அனுராதா, ஒருத்தி எண்பத்தியெட்டு மார்க் வாங்கியும், மீதி பனிரெண்டு மார்க் வரவில்லையே என அழுது கொண்டிருப்பாள்.

    இன்னொரு அனுராதாவாகிய நான் வெறும் பனிரெண்டு மார்க்கை வாங்கி விட்டு, எதிரில் அழுது அழுது மூக்கை குடமிளகாய் மாதிரி வீங்க வைத்துக் கொண்டிருப்பவளை- அவள்தான் 88% அனு - அவளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

    பன்னெண்டு மார்க் தானே... விடு, இதுக்காக அழாதே. மூக்கு பார்க்கச் சகிக்கலே… - இது நான்.

    நீ சொல்லுவியே… பன்னெண்டு மார்க் வாங்கி இருந்தா நான்தான் ஃபர்ஸ்ட் தெரியுமா? உனக்கு அழுகை வரலையின்னா நீ அசடு, மக்கு, மண்டு. நான் அப்படியில்லையே… எங்க வீட்டுலயே புத்திசாலி நான்தான்...- இது அவள்.

    ஒ… புத்திசாலிங்கன்னா இப்படித்தான் போல… அசடுகளுக்குத் தான் ஒரு ரோஷமும் கிடையாது போல...

    இப்படி நினைத்து கொஞ்சம் வருத்தப்படுவேன். கொஞ்சம்தான். அதற்குள் என்னைச் சிரிக்க வைக்க ஏதாவது வந்து விடும்.

    இன்றைக்கும் அந்த அனு அழுது கொண்டுதான் இருக்கிறாள். படிப்பில் அதிக மதிப்பெண் வாங்கியவளால், புகுந்த வீட்டினரோடு அனுசரித்துப் போக முடியவில்லை. வேலை செய்த அலுவலகத்தில் பிரச்னை. இப்படி…

    நான்…

    உங்களோடு சேர்ந்து சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நடுவில் எனக்கும் எத்தனையோ சிக்கல்கள் வந்ததுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அத்தனையையம் முடித்து விட்டு, ஆற அமரச் சிரிப்பதென்றால்… வாழ்க்கை ஒடிவிடும் இல்லையா?

    அதனால் உடம்பில் தெம்புள்ள போதே சிரிக்கப் பழகிவிட வேண்டும். அப்புறம் ஒவ்வொரு மூட்டும் அக்கு அக்காய் வலிக்கும் போது சிரிக்கச் சொன்னால் நீங்கள் என்னை அடிக்க வருவீர்கள். இன்றுவரை நான் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன், தெம்புடன். நீங்களும் சிரியுங்களேன்... உடம்பில் புது தெம்பு தானாக வரும்.

    குமுதம் சிநேகிதியில் இதைத் தொடராக வெளியிட்ட திருமதி லோகநாயகிக்கும், இப்பொழுது அச்சிட்டு வெளியிடும் சுரேஷ்-பாலா (சுபா) அவர்களுக்கும், தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக இதனை கோட்டோவியங்களுடன் சிறப்பித்த ஒவியர் திரு.செந்தமிழ் அவர்களுக்கும், அழகுற வடிவமைத்த திரு.கணேஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    இப்படிக்கு,

    சிரிப்புடன்...

    அனுராதா ரமணன்.

    1

    'ஸீரியஸ்'ஸாத்தான் சொல்றேங்க... நாம் எல்லாருக்குமே சிரித்துப் பேச, பழக வேண்டியிருக்கிறது. யாராவது இதற்காக டியூஷன் எடுத்தால் கூடப் போய் சேரலாம் போலிருக்கிறது.

    என்ன காரணம்?

    நம்மைச் சுற்றி வாய் விட்டுச் சிரிப்பதற்கோ அல்லது புன்னகைப்பதற்கோ எதுவுமே இல்லையா என்ன…

    எத்தனை நடக்கிறது! வீட்டிலும், வெளியிலும், அலுவலகங்களிலும், சினிமாக்களிலும், பத்திரிகைகளிலும்...

    இன்னும் பார்க்கப் போனால் அக்கரைச் சிரிப்பு, 'நெட்' சிரிப்பு என்று வலைவீசித் தேடித் தேடிச் சிரித்தவர்கள்தான்.

    ஆனால் இப்பொழுது நமக்கு சமைக்க நேரமில்லை; சமைத்ததைச் சாப்பிட நேரமில்லை; சாப்பிடும் போது பேச நேரமில்லை; பேசும்போது சிரிப்பு... ஊம்ஹூம்… அதுக்கெல்லாம் நேரமே இல்லீங்க. ராத்திரி அவரு வீடு வந்து சேர்ந்தவுடனே இந்த 'ஜோக்'கைச் சொல்லணும்னு இருந்தேன். ஆனா நான் இதை ஞாபகப்படுத்தி சொல்றதுக்குள்ளே அவரு தூங்கிட்டாரு... இப்படி அங்கலாய்க்கும் வனிதாமணிகள்தான் அதிகம்.

    இல்லாவிட்டால்

    போதுமே... நானே கிடந்து சிரிப்பாச் சிரிச்சு, சீலைப் பேன் குத்திட்டிருக்கேன். இதுல தனியா வேற சிரிக்கணுமாக்கும்...

    இப்படிச் சொல்லி 'த்சு' கொட்டும் மங்கையர் திலகங்களும் உண்டு.

    எனக்குத் தெரிந்து ராஜேஸ்வரி அம்மாள் என்று ஒரு பெண்மணி… சுமார் இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் வீட்டுக்கு யார் வந்தாலும் வெள்ளந்தியாகச் சிரித்து வரவேற்பார்.

    இப்பொழுது...

    முன்பை விடவும் செல்வாக்கு அதிகம்; வீட்டில் இட்ட வேலையைச் செய்ய ஆட்களும் நிறைய. பட்டும், நகையும், கணவரின் அன்பும் எதிலும் குறைச்சலில்லை. பிள்ளைகள், மருமகள்கள் அத்தனைப் பேரும் இந்த அம்மாளின் மனம் கோணும்படியாக எதையுமே செய்வதில்லை.

    ஆனாலும், இப்பொழுதெல்லாம் இவர் சிரிப்பதே இல்லை. சிரித்தாலும் என்னவோ பேருக்கு, கொஞ்சமே கொஞ்சம் 'எல்லாம் இது போதும்' என்பது போலச் சிரித்து வைப்பார்.

    என்ன ஆச்சு ராஜேஸ்வரிக்கு…

    நல்லாத்தானே இருக்கா...

    இது அவரது கணவர்.

    இல்லே... முன்னாலே இன்னும் களையா, கலகலப்பா இருப்பாங்களே…

    தெரியலே. அவளையே கேட்க வேண்டியதுதானே?

    கேட்டேன். ஒரு மாதிரி கோணலாய்ச் சிரித்தார்.

    நல்லாத்தானே இருக்கேன்...

    நல்லாத்தான் இருக்கீங்க. அந்தச் சிரிப்பு மிஸ்ஸிங். என்ன ஆச்சு?

    ஒண்ணுமே ஆகல்லே. சமையற்காரங்க சமைக்கறாங்க. அதனால கிச்சன்லே வேலை எதுவுமேயில்லே. மருமகளுங்க வீட்டை நல்லாப் பாத்துக்கறாங்க. வெளில போகணும்னா வீட்டுக்காரரோ, பசங்களோ காரைக் கொடுத்தனுப்பறாங்க. நான் பாட்டுக்கு டி.வி.யில சீரியல் பார்த்துட்டு... நல்லாத்தானே இருக்கேன்...

    ராஜேஸ்வரியின் பதிலிலேயே

    Enjoying the preview?
    Page 1 of 1