Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vennilave… Vennilave!
Vennilave… Vennilave!
Vennilave… Vennilave!
Ebook321 pages2 hours

Vennilave… Vennilave!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாந்திரீக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு நாவல், 'வெண்ணிலவே… வெண்ணிலவே!’ கடந்த நூற்றாண்டில் தொண்ணுாறுகளின் ஆரம் பத்தில் 'செம்பகம்’ மலையாள வார இதழில் வெளியான ‘பாஞ்ஜஜன்யம்’ நாவலின் மொழி பெயர்ப்பு.

நாவலின் ஊடாக, தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவும், எளிமையாகவும், புரிந்து கொள்ளச் சிக்கல் இல்லாமலும், அதேசமயம் நாவல் கட்டமைப்பில் நிறையச் சிக்கல்களை உள்ளடக்கியும் வடிவமைப்பவர் கோட்டயம் புஷ்பநாத். இதிலும் அவருடைய அந்த வழக்கமான பாணியை நீங்கள் தரிசிக்கலாம்.

முற்றிலும் பொழுதுபோக்கு என்பதே அவரது நாவல்களின் அடிநாதம். அதில் பிரமிப்பு ஊட்டும் காட்சிகள் மற்றும் வார்த்தை அமைப்புகள் நாவல் வாசிப்பவரை 'வாசிப்பு உலகுக்குள்’ முற்றிலுமாக ஆழ்த்திவிடும் அவரது பாணி.

ஆண்-பெண் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பு வாசகர்களும் இவரது நாவல்களை விரும்பி வாசிக்கின்றனர்.

கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக அவரது நாவல்கள் மூலமாக என் மொழிபெயர்ப்புக்குத் தமிழக வாசகப் பெருமக்கள் அளித்துள்ள உற்சாகமும் வரவேற்பும் மறக்க முடியாத ஒன்று. அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகின்றன.

சிவன்

Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580103801740
Vennilave… Vennilave!

Read more from Kottayam Pushpanath

Related to Vennilave… Vennilave!

Related ebooks

Related categories

Reviews for Vennilave… Vennilave!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vennilave… Vennilave! - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    வெண்ணிலவே... வெண்ணிலவே!

    Vennilave... Vennilave!

    Author :

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    Translated by:

    சிவன்

    Sivan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    வெண்ணிலவே...
    வெண்ணிலவே!

    என்னுரை

    மாந்திரீக நாவல்களில் மிகவும் புகழ்பெற்ற கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றுமொரு நாவல், 'வெண்ணிலவே... வெண்ணிலவே!' கடந்த நூற்றாண்டில் தொண்ணுாறுகளின் ஆரம் பத்தில் 'செம்பகம்' மலையாள வார இதழில் வெளியான 'பாஞ்ஜஜன்யம்' நாவலின் மொழி பெயர்ப்பு.

    நாவலின் ஊடாக, தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவும், எளிமையாகவும், புரிந்து கொள்ளச் சிக்கல் இல்லாமலும், அதேசமயம் நாவல் கட்டமைப்பில் நிறையச் சிக்கல்களை உள்ளடக்கியும் வடிவமைப்பவர் கோட்டயம் புஷ்பநாத். இதிலும் அவருடைய அந்த வழக்கமான பாணியை நீங்கள் தரிசிக்கலாம்.

    முற்றிலும் பொழுதுபோக்கு என்பதே அவரது நாவல்களின் அடிநாதம். அதில் பிரமிப்பு ஊட்டும் காட்சிகள் மற்றும் வார்த்தை அமைப்புகள் நாவல் வாசிப்பவரை 'வாசிப்பு உலகுக்குள்' முற்றிலுமாக ஆழ்த்திவிடும் அவரது பாணி.

    கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் அவரது முப்பது நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. பதினெட்டுத் தொடர்கள் தமிழ் மொழியின் பல்வேறு பத்திரிகைகளில் வெளி யாகியுள்ளன. இந்த அளவுக்கு வரவேற்பு பெற்ற மலையாள எழுத்தாளர் எனக்குத் தெரிந்து வேறெவரும் இல்லை.

    ஆண்-பெண் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பு வாசகர்களும் இவரது நாவல்களை விரும்பி வாசிக்கின்றனர்.

    கடந்த பதினைந்து ஆண்டுகாலமாக அவரது நாவல்கள் மூலமாக என் மொழிபெயர்ப்புக்குத் தமிழக வாசகப் பெருமக்கள் அளித்துள்ள உற்சாகமும் வரவேற்பும் மறக்க முடியாத ஒன்று. அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகின்றன.

    நான் ஒரு மொழிபெயர்ப்பாளனாக அறிமுகமான போது, வெளியான முதல் மொழி பெயர்ப்பு நாவலை வெளியிட்டதும், இதே திருமகள் நிலையம் தான். தொடர்ந்து தங்கள் பதிப்பகத்தில் எனக்கு வாய்ப்பு அளித்துவரும் அன்புக்குரிய திரு. திருப்பதி, நூலாசிரியர் கோட்டயம் புஷ்பநாத், வாங்கி ஆதரிக்கும் வாசகப் பெருமக்கள் ஆகியோருக்கு மீண்டும் நன்றி.

    தோழமையுடன்

    சிவன்

    1

    எல்லோரின் பார்வையும் தெருவாசற்படியின் மீதே பதிந்திருந்தன. முழு அலங்காரத்துடன் வரும் புதுமணப் பெண்ணை ஒரு தடவை பார்க்க, கல்யாண வீட்டுக்குப் போக முடியாத பெண்கள் ஆவலும் பரபரப்பும் கொண்டவர்களாகக் காத்திருந்தனர்.

    அதோ வருகிறாள் மணப்பெண்!

    அவளுக்கு முன்பாக நடந்துவரும் கேசவன்குட்டியை யாரும் அவ்வளவாகக் கவனித்த மாதிரித் தெரியவில்லை.

    கேசவனுக்குப் பின்னால், நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் ஆகாயத்தின் கருநீல நிறத்தில் புடவை உடுத்தி, தலை நிறையச் சூடியிருந்த மல்லிகைப்பூ, நெற்றியில் சாந்துப் பொட்டு, மையெழுதிய கண்களைப் பாதித் திறந்தபடி ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்துவைத்து, அன்னப்பறவை ஒன்று மெதுவாக நடந்து வருவது மாதிரி சிவந்து, மெலிந்த பெண் ஒருத்தி கண்ணில் தட்டுப்பட்ட விநாடிக்குள் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்தாள்.

    முற்றத்தில் துளசி மாடத்தையொட்டி இருவரும் நின்றனர்.

    கேசவன்குட்டி - ரோகிணி தம்பதி!

    வலது காலை எடுத்து வெச்சு வாம்மா! நாராயணியம்மா கூறினாள்.

    ரோகிணி இளந்திண்ணையின் மீது வலது காலை வைத்த அதே நேரம் அந்த வீட்டின் பின்புறம் ஏதோ பயங்கரமான ஒரு சத்தம் கேட்டது!

    அங்கிருந்த மொத்தப் பேரும் ஒருகணம் நடுங்கித் துடித்தனர்.

    நாராயணியம்மாவின் கையிலிருந்த விளக்கு, அதிர்ச்சியில் கீழே விழுந்தது.

    கடவுளே என்ன இது?-கூட்டத்திலிருந்த யாரோ ஒரு பெண்மணி திகைப்புடன் குரல் எழுப்பினார். ஆனால், ரோகிணி இவை எதையும் கேட்ட மாதிரிக் காட்டிக் கொள்ளாமல் வராந்தாவை அடைந்து, அங்கிருந்து வீட்டுக்குள் போனாள்.

    அதற்குள் சத்தம் கேட்ட பகுதியை நோக்கிச் சிலர் ஓடினர்.

    பெண்களின் முகத்தில் சுளிவுகள் உயர்ந்தன. தங்கள் மூக்கின் மீது சுட்டுவிரலைப் பதித்தபடி பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர்.

    வீட்டின் பின்புறம் வந்தவர்கள் கண்ட காட்சி பயங்கரமானதாக இருந்தது.

    நன்கு முதிர்ந்த பனைமரம் ஒன்று, வேர்ப்பகுதியில் உடைந்து விழுந்து கிடந்தது. அரையடி தள்ளி விழுந்திருந் தால், அந்தப் பழைய வீடு மொத்தமாகவே தகர்ந்து போயிருக்கும். நல்லவேளையாக வீடு தப்பித்தது!

    பார்த்தீர்களா, ராமன் நாயரே... இந்த மரம் விழுந்திருக்க வேண்டியது நேரா வீட்டு மேலதான்! -சங்கரவார்யர் கண்களை அகல விரித்தபடி வியப்புடன் பேசினார்.

    அவர் சொன்னது உண்மைதான்.

    அந்தப் பனைமரத்தின் அடிப்பகுதி ஏற்கெனவே சிதைந்து, இற்றுப் போயிருந்தது.

    அப்படி இற்றுப்போன பகுதியும் வீட்டின் பின்புறத்தை நோக்கித்தான் இருந்தது.

    இதற்கெல்லாம் புதுமணப்பெண் வீட்டுக்குள் கால் எடுத்து வைத்ததுதான் காரணமென்று நினைத்த பெண்களின் மனம் இயல்பாகவே சஞ்சலப்படத் தொடங்கியது.

    அன்று மாலை நேரத்தில் நெருங்கிய நண்பர்கள் சிலருடன் கேசவன்குட்டியின் அப்பா பரமேஸ்வரன் நாயர், வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    "சேகரா, அந்த மரத்தை வெட்டிடணும்னு நானும் எத்தனையோ பேர்கிட்டச் சொல்லியிருந்தேன். மரத்துமேல கால் வெச்சா, சரிஞ்சிடும்னு சொல்லி ஒவ்வொருத்தரா நழு விட்டிங்க. ம். என்ன பண்றது? அவர் பெருமூச்சு விட்டபடி பேசினார்.

    இவ்வளவு நாளும் அந்த மரம் எப்படித்தான் நின்னுட்டிருந்ததுன்னு தெரியலையே! -சேகரன் நாயர்தான் விழுந்த பனை மரத்தை முதலில் பார்த்தவர். அப்போதும் அவர் இதயத்துடிப் பின் வேகம் சீராகியிருக்கவில்லை.

    செம்பகசேரி தறவாடு (பரம்பரை, குடும்பம்) அந்த ஊரிலேயே மிகவும் பழைமையானது. ஒரு காலத்தில் 'ஓகோ' என்று செழிப்பாக இருந்த குடும்பமும்கூட. குடும்பத்தினருக்குப் பங்குவைத்தும், விற்றும் இன்று அந்தக் குடும்பத்துக்கு வீடு இருக்கும் முப்பது சென்ட் நிலம் மற்றும் இரண்டோ மூன்றோ குழி வயற்காடும்தான் மொத்தச் சொத்து.

    பரமேஸ்வரன் நாயருக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேலை எதுவும் இல்லை. கேசவன்குட்டியின் சம்பளம் மட்டும்தான் இப்போது அந்தக் குடும்பத்துக்கு ஆதாரம்.

    கேசவன்குட்டிக்குக் கீழே ஐந்து பெண் குழந்தைகள்.

    எல்லாத் தங்கைகளும் கல்யாணம் முடித்துப் போன பிறகு, தான் கல்யாணம் செய்து கொள்வதாக கேசவன் பிடிவாதமாக இருந்தான்.

    சற்றுத் தொலைவான பகுதியில், பள்ளிக்கூடம் ஒன்றில் வேலை செய்யும் கேசவன் ஒட்டலில் சாப்பிட்டு, அங்கேயே தங்கியிருப்பதால் குறைவான தொகையையே குடும்பத்துக்கு அனுப்பி வைக்க முடிந்தது.

    கேசவன்குட்டியின் கல்யாணம் நடந்தால், அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெண்ணையாவது கல்யாணம்செய்து அனுப்பலாமே என்பது பரமேஸ்வரன் நாயரின் திட்டம். அதன்படி மூத்த பெண் அஸ்வினிக்குட்டிக்கு அடுத்த வாரம் கல்யாணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

    ரோகிணிக்குப் போட்டிருக்கும் தங்க நகைகளில் அத்தியா வசியமான ஒன்றிரண்டை அஸ்வினிக்குக் கொடுக்கலாம் என்றும் பரமேஸ்வரன் நாயர் மனத்துள் திட்டம் போட்டிருக்கிறார். கேசவன்குட்டி அதற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

    ரோகிணியின் வீடு, பக்கத்துக் கிராமத்தில் இருக்கிறது. அப்பா இல்லை. அம்மாவும் ஒரு சகோதரனும் மட்டும்தான் அவளுக்கு.

    அவளது குடும்பம் தொடர்பான ஒரு செய்தி ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கிறது.

    ரோகிணியின் அம்மா- மகேஸ்வரியம்மா இளமையில் நல்ல அழகியாக இருந்தாள்.

    அவளது வீடு கிராமத்தின் கோயிலையொட்டி இருந்தது. அவள் அப்பா ஒரு நம்பூதிரி.

    மகேஸ்வரி பிறந்த பிறகு அந்த நம்பூதிரி அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை. அம்மாவின் அரவணைப்பில், மகேஸ்வரி கஷ்டப்பட்டுதான் வளர்ந்தாள்.

    வளரவளர நாளுக்குநாள் மகேஸ்வரியின் அழகு கூடிக் கொண்டே வந்தது.

    பதினாறு வயதை நெருங்கும்போதே, மகேஸ்வரி இளைஞர்கள் மற்றும் நடுவயது ஆண்களின் கனவுகளில் இடம்பெற்றாள். காலையிலும் மாலையிலும் தவறாமல் கோயிலுக்குப் போவது அவளது வழக்கம்.

    அந்தச் சந்தர்ப்பத்தில் கோயிலுக்குப் புதிதாக ஒரு திருமேனி பூசாரியாக வந்து சேர்ந்தார். பெயர் விஷ்ணு நம்பூதிரி.

    பழகுவதற்கு இனியவர். அச்சில் வார்த்தெடுத்தது போன்ற கட்டான உடலமைப்பு விரைவிலேயே இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர்.

    வெண்ணெயில் தலைமுடியைப் போட்டு இழுப்பதுபோல் மகேஸ்வரி, விஷ்ணு நம்பூதிரியின் பார்வையில் விழுந்தே போனாள்!

    இந்த நெருக்கம் விஷ்ணு நம்பூதிரியை, மகேஸ்வரியின் வீட்டில் இரவு உறக்கம் மேற்கொள்ளச் செய்தது.

    மகேஸ்வரி கர்ப்பிணியானாள்.

    விவரம் அறிந்த விஷ்ணு நம்பூதிரி வேலையைவிட்டு எங்கேயோ தலைமறைவானார்.

    எவரும் அவரைப் பற்றி விசாரிக்கவும் இல்லை. புகார் செய்யவும் இல்லை. கோயிலுக்கு மற்றொரு நடுத்தர வயது பூசாரி வந்து சேர்ந்தார்.

    விஷ்ணு நம்பூதிரியை ஊரார் மறந்தனர்.

    ஆனால், மகேஸ்வரி மட்டும் மறக்கவில்லை. அவளால் அது மட்டும் முடியவில்லை.

    ரோகிணி நட்சத்திரத்தில் ரோகிணி பிறந்தாள்.

    அழகு விஷயத்தில் ரோகிணி, அம்மாவையும் மிஞ்சி விட்டாள். பருவ வயதில் அவள், கோயில் சுவர்களில் செதுக்கி வைக்கப்பட்ட சிற்பம் போல் அழகானவளாக ஒளிர்ந்தாள்.

    ரோகிணியின் சகோதரன் சங்கரன்குட்டி படிப்பு விஷயத்தில் அவ்வளவு சூட்டிகையாக இல்லை. பத்தாவது வகுப்பு வந்ததும் பணமில்லாததால் மேற்கொண்டு படிக்க முடியாமல் பக்கத்து நகரிலுள்ள கடையொன்றில் கணக்கு எழுதும் வேலை செய்தான்.

    இந்த வேலையால் குடும்பம் ஓரளவு வறுமையில்லாமல் நாட்களைத் தள்ளியது. ரோகிணி படிக்கவேண்டிய பள்ளிக் கூடம் சற்றுத் தொலைவில் இருந்ததால், அவளது படிப்பும் அத்துடன் நின்றுபோனது.

    அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. வயதுக்கு மீறிய வாலிபமும் வனப்பும் அவளுக்கு இருந்தது. அதனாலேயே அவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவும் தயங்கினர். ரோகிணி கோயிலுக்குப் போவதில் ஆர்வமுள்ளவள். கோயில் பூசாரி மிகவும் வயதானவராக இருந்ததால், தனக்கு நேர்ந்த விபத்து, தன் மகளுக்கு நேராது என்று மகேஸ்வரி ஆறுதலடைந்தாள்.

    இந்தக் காலகட்டத்தில்தான் ரோகிணி தங்கள் வீட்டுப் பசு மாட்டுக்கு புல்லறுப்பதற்காக கோயில் பகுதிக்கு வந்தாள். அங்கு முன்பின் தெரியாத இளைஞன் ஒருவனை அவள் சந்திக்க நேர்ந்தது. அந்த இளைஞனும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அந்தப் பார்வை எப்படிப்பட்டவரையும் கவரக் கூடியதாக இருந்தது.

    ரோகிணி! அந்த இளைஞன் ஒரு தடவை அழைத்தான்.

    தன் பெயரைத் தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞனை, அவள் வியப்புடன் பார்த்தாள்.

    அந்த ஊரிலேயே அவனை, அவள் அப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.

    நான் உன்னைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ரோகிணி! - அவன், அவள் கண்களைப் பார்த்தபடி பேசினான்.

    நல்ல உயரம். அழகான உடல். நான்கு முழ வேட்டி அணிந் திருந்தான். சட்டைகூடப் போடாத உடம்பு. சுருட்டையான தலைமுடி, தோள்களில் புரண்டு விளையாடின.

    மார்புத் தசைகள் வலிமையானதாகத் தோற்றமளித்தன.

    வயிற்றுப் பகுதியில் வரிவரியாகப் படிந்த திடமான தசைப் பகுதிகள்.

    நீண்டு வளைந்த மூக்கு.

    மீசை இல்லை.

    அந்தக் கண்களில் அசாதாரணமான ஒரு பளபளப்புத் தென்பட்டது.

    ரோகிணி சுற்றுமுற்றும் பார்த்தாள்.

    எவரும் பார்வைக்குத் தட்டுப்படவில்லை.

    அவள் உடல் முழுவதும் பயத்தால் நிறைந்தது போலிருந்தது. மொத்த உடலும் ஒரு கணத்துக்குள் ஒடுங்குவது போல் தோன்றியது.

    அதுவரை அறுத்து வைத்திருந்த புல்லைக்கூடக் கட்டி யெடுக்காமல் அவசர அவசரமாக வீட்டை நோக்கி ஓடினாள். புல் எங்கே? என்று அம்மா கேட்டபோது நடந்ததை விவரித்தாள்.

    அவ்வளவுதானே... சங்கரன் குட்டி வரட்டும்... பேசிக் கொள்ளலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1