Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam
Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam
Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam
Ebook119 pages1 hour

Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூமியின் மையத்தை நோக்கி மூவர் மேற்கொள்ளும் பயணத்தையும் விவரிக்கும் நாவல். ஒரு சராசரி வாசகனைக் கவரக் கூடிய எல்லா அம்சங்களும் கொண்ட ஒரு புத்தகம் இது.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580103701706
Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam

Read more from Sivan

Related to Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam

Related ebooks

Reviews for Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam - Sivan

    http://www.pustaka.co.in

    பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

    Bhoomiyin Maiyathai Nokki Oru Payanam

    Author: Jules Verne

    ஜூல்ஸ் வெர்னே

    Translated by: Sivan

    சிவன்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்

    1

    ஓ! சம்பவங்கள் நிறைந்த அந்த நாளுக்குப் பிறகு என் வாழ்க்கையில் நிகழ்ந்ததை யெல்லாம் இப்போது மறுபடி நினைத்தால், நம்ப முடியாததாகத் தோன்றுகின்றன. என்னுடைய சாகசப் பயணம் உண்மையானதுதானா என்று நான் இப்போதும் சந்தேகப்படுகிறேன். அவை, அந்த அளவுக்கு ஆச்சரியமானவை. இன்றும் அவற்றைக் குறித்து யோசிக்கும்போது நான் அசைவற்றுப் போவதுண்டு.

    மாமாவுடன் தங்கியிருந்தேன் நான். ஜெர்மானியரான அவர் ஒரு புரபசர். ரசாயனம், தத்துவம், பூமியியல், உலோகவியல். அவ்வளவு ஏன் மற்றும் ஏராளமான விஞ்ஞானப் பிரிவுகளில் மாமா மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

    புரபசர் ஹார்டுவிக். அதுதான் மாமாவின் பெயர். அவர் குறிப்பாகக் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் நான் அவரது வழிகாட்டுதலில் என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். பூமியைக் குறித்து எத்தனை முறை வாசித்தாலும் எனக்கு அலுக்காது. முடிந்தவரை பூமியைக் குறித்தும், பூமியின் உள்ளுக்குள் உள்ள விஷயங்களைக் குறித்தும் வாசிப்பதில் எனக்கு அளவற்ற ஆர்வமிருந்தது.

    என் புரபசர் மாமாவைப் பற்றிக் குறிப்பிட்டேனே… அவர் உண்மையிலேயே சிறந்த அறிவாளி. விஞ்ஞான உலகின் மகத்தான மனிதர்களிடம், உலகின் ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பேசும் வல்லமை அவருக்கு இருந்தது. அறுநூறுக்கு மேற்பட்ட பூமியின் மண், கல் போன்றவற்றைத் தரம் பிரிக்கவும், அவற்றின் எடை, அடர்த்தி, ஒலி, சுவை, வாசனை போன்றவற்றை அடையாளம் தெரிந்து கொள்ளவும் மாமாவுக்கு முடியும். ஆனால், அவர் அந்த விஷயத்தில் அவ்வளவாக ஆர்வம் கொள்ளவில்லை.

    அவருக்கு இப்போது ஐம்பது வயது ஆகியிருக்கிறது. மெலிந்த, உயரம் குறைந்த உடல் வாகு கொண்டவர். இருப்பினும், அவர் உடல் எஃகு இரும்பினால் வடிவமைக்கப் பட்டதுபோல் திடகாத்திரமாக இருந்தது. பெரிய கண்ணாடி வில்லைகள், பெரிதான, உருண்டையான அவர் கண்களை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்திருந்தன. அரம் போன்ற கூர்மையான மூக்கு. அது பெரும்பாலான நேரத்தில் மூக்குக் பொடியை உள்வாங்கிக் கொண்டிருந்தது. நடக்கும்போது அவர் கால்களை நீளமாக எட்டி வைப்பார். கைகளைச் சுருட்டிக் கொண்டு யாரையோ தாக்கப் போவது போலிருக்கும் அவரது நடை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நண்பர்களிடமிருந்து விடுபட்டுத் தனிமையில் இருப்பது அவர் வழக்கம்.

    புரபசர் ஹார்டுவிக் எப்படிப் பார்த்தாலும், எந்த வகையிலும் மோசமான ஒரு மனிதர் அல்ல. அவருடன் வாழ்வது என்றால், முற்றிலுமாக அவரைப் பின்பற்றுவது என்று பொருள்.

    ஒரு முறை வீட்டுக்கு வந்த அவர் உரத்த குரலில் அழைத்தார்: ஹாரி… ஹாரி... ஏய் ஹாரி!

    அப்போது நான் இரவுச் சாப்பாடு சமைப்பதில் உதவிக் கொண்டிருந்தேன். இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு வேகமாக ஓடிவந்து மாமாவின் முன்னால் நின்றேன்.

    மாமா அப்போது ஆராய்ச்சிக்கூட அறையில் இருந்தார். மாமாவின் ஆராய்ச்சி சாலை என்பது உண்மையில் ஓர் அருங்காட்சியகம்தான். எல்லா விதமான தாதுப் பொருள்கள் மற்றும் மாதிரிகளால் அந்த அறை நிறைந்திருந்தது.

    அந்த அறைக்குள் நான் நுழைந்தபோது, அவர் மிகுந்த கவனத்தோடு புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அதனால், அந்த அறைக்குள் நான் நுழைந்ததை மாமா உணரவில்லை.

    அதிசயம்! ஆச்சரியம்! புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தாமல் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் கூறினார்.

    ஒரு பழைய புத்தகத்தை அப்போது அவர் வாசித்துக் கொண்டிருந்தார். அது எவ்வளவு பழங்காலத்தைச் சேர்ந்த புத்தகம் என்று நிதானிக்க முடியவில்லை. அது முழுக்கப் பழுப்பு நிறமாயிருந்தது. புரபசர் மாமாவுக்குப் பிடித்ததே இப்படிப்பட்ட பழைய புத்தகங்கள்தானே!

    மாமா… எதற்காக என்னைக் கூப்பிட்டீர்கள்? நான் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டேன்.

    ஸ்னோரா டால்ஸன் எழுதிய 'ஹெய்ம்ஸ் கிரிங்க்ளா’ என்ற புத்தகம் இது. மாமா உற்சாகத்துடன் தொடர்ந்தார்: இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஐஸ்லாந்துக்காரர்தான் இந்தப் புத்தகத்தை எழுதிய டால்ஸன், ஐஸ் லாந்தை ஆட்சிபுரிந்த நார்வீஜியன் இளவரசர்களின் உண்மைக் கதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

    புத்தகம் எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது?

    ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் நானும் வாசிக்க முடியுமே என்ற எதிர்பார்ப்புடன் கேட்டேன். மாமா மொழிபெயர்ப்புகளை வாசிப்பதில்லை.

    இது ரூனிக் மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி. ஐஸ்லாந்து நாட்டு மக்களின் தாய்மொழி என் அறியாமை மீது கோபம் கொண்ட மாமா கூறினார்.

    அந்த மொழியின் அசாதாரணமான எழுத்துகளை மாமா எனக்குக் காட்டினார். அப்போது அந்த புத்தகத்திலிருந்து மஞ்சள் நிறமான துண்டுக் காகிதம் ஒன்று தரையில் விழுந்தது. பசியோடு இருக்கும் மனிதன், ரொட்டித் துண்டைப் பிடுங்குவது போல் மாமா அந்தக் காகிதத் துண்டை கைப்பற்றினார்.

    மூன்று அங்குல அகலமும், ஐந்து அங்குல நீளமும் கொண்ட புராதனக் காலத்தைச் சேர்ந்த தோல் காகிதமாக இருந்தது அது. அதில் எனக்குத் தெரியாத கோடுகளும் புள்ளிகளும் எழுத்துகளும் இருந்தன.

    இதுவும் ரூனிக் மொழிதான். நடுங்கும் குரலில் மாமா விளக்கினார். அப்போது அவர் கைவிரல்களும் கிடுகிடுவென்று நடுங்கிக் கொண்டிருந்தன.

    ரூனிக் எழுத்துகளை நான் ஊன்றிக் கவனித்தேன். அந்தச் சிறிய தோல் காகிதம், மனிதன் தெரிந்து கொண்டவற்றிலேயே மிகவும் சாகசிகமான ஒரு பயணத்துக்கு எங்களை வழிநடத்திச் செல்லும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை!

    மாமாவுக்கு ரூனிக் மொழி எழுத்துகளை வாசிக்க முடியும். இருப்பினும் அந்தக் காகிதத்திலுள்ள வார்த்தைகளின் பொருள் அவருக்கு விளங்கவில்லை.

    சமையற்காரர் இரவுச் சாப்பாடு தயார் என்று அந்த நேரம் பார்த்துக் குரல் கொடுத்தார்.

    சாப்பிட உட்கார்ந்தேன். சாப்பிட்டு முடிப்பதற்கு முன்பே மாமாவின் அலறல் மறுபடியும் கேட்டது. உடனே வருமாறு என்னை உரத்த குரலில் அழைத்தார். உரத்த குரல் மட்டுமல்ல, அதில் கோபமும் இருந்தது. எனவே, நான் அவரது ஆராய்ச்சி அறைக்கு விரைந்தேன்.

    மாமா நாற்காலி ஒன்றில் அமர்ந்து, அந்தச் சிறிய தோல்காகிதத் துண்டை வெறித்துப் பார்த்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1