Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravu Pathu
Iravu Pathu
Iravu Pathu
Ebook131 pages1 hour

Iravu Pathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580100901739
Iravu Pathu

Read more from Pattukottai Prabakar

Related to Iravu Pathu

Related ebooks

Reviews for Iravu Pathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravu Pathu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    இரவு பத்து

    Iravu Pathu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    இரவு பத்து

    - பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    எழும்பரில் வந்து நின்று அப்பாடா என்றது, என்ஜின்.

    சன்னல் வழியாய் தலையை நீட்டி, பிளாட்பாரத்தில் தோளில் வில்லை கட்டின சிவப்புச் சட்டைக்காரனைத் தேடினாள், புவனா.

    இரண்டு பெரிய சூட்கேசுகள், ஒரு பை, குழந்தைக்கான சாமான்கள் அடங்கிய அமுல் டின் எட்டிப் பார்க்கிற வலைக் கூடை.

    அழைத்து, எடுக்கச் சொன்னாள்.

    ஸ்வெட்டர் மாட்டிக் கொண்டு, வாயில் விரல் போட்டுக் கொண்டு உறங்கின ரமேஷைத் தூக்கிக் கொண்டாள்.

    கீழே இறங்கினாள்.

    ஸ்டேஷனுக்கு வெளில டாக்சில கொண்டாந்து வச்சிடனும். எவ்வளவுப்பா கேக்கறே?

    இருபது ரூபா கொடுங்க.

    ஒரு நாள் சம்பாத்தியத்தையும் என்கிட்டேயே சம்பாதிச்சுடலாம்னு பாக்கறியா? நாலு சாமான் இருக்கு. ஐந்து ரூபா தர்றேன். என்ன சொல்றே?

    வண்டியிலேர்ந்து எறக்கி கீழே வச்சதுக்கே அஞ்சு ரூபா சரியாப் போச்சும்மா.

    புவனாக்கு சென்னையில் கால் வைத்த உடனேயே சந்திக்கிற விவகாரமான வாதம் எரிச்சலைத் தந்தது.

    பத்து ரூபாய் தரட்டுமா? என்றாள்.

    சரி, வாம்மா... நட... என்று இரண்டு சூட்கேஸ்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கொண்டு தலையின் தூக்கி வைத்து, ஒரு கையில் பையும், மற்றொன்றில் கூடையும் எடுத்துக் கொண்டு கேட்டை நோக்கி நடந்தான், அவன்.

    அந்த வேகத்திற்கு, தோளில் குழந்தையை வேறு தூக்கிக் கொண்டு நடப்பதில் புவனாக்கு சிரமமாய் இருந்தது. சேலை வேறு தடுக்கியது.

    இருப்பா. கொஞ்சம் மெதுவா போ.

    போர்ட்டர் பழக்கமான டாக்சியை நோக்கிப் போனார். டிரைவர் பீடியை சுண்டிவிட்டு சவாரிக்குத் தயாரானார்.

    எங்கே போகணும்?

    அடையாறு போகணும்.

    அடையாறுல எங்கே?

    காந்தி நகர்ல செகண்ட் மெயின் ரோடு போகணும்.

    ஏறி உட்காருங்க. மீட்டருக்கு மேல ரூபா கொடுங்க.

    ஏன் அப்படி?

    ஊர் கடைசிக்கு காலைல எவனம்மா சவாரி வருவான்? அங்கேர்ந்து எனக்குத் திரும்ப சவாரி கிடைக்காது.

    புவனாக்கு ஆத்திரமாய் வந்தது. ஆனால், வேறு வழியில்லை.

    ஏறிக்கொண்டு... போர்ட்டருக்குப் பணத்தைத் தந்து விட்டு, கதவைச் சற்று சத்தமாகக் கொண்டு... மடியில் ரமேஷை வசதியாகக் கிடத்திக் கொண்டு போங்க என்றாள்.

    ரமேஷ் கண்களைத் திறந்து அவளைப் பார்த்துச் சிரித்தான்.

    குனிந்து முத்தமிட்டாள்.

    கதவின் கண்ணாடியை இறக்கி விட்டு வெளியே பார்த்தாள்.

    ஓர் அவசர தினத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது சென்னை. ஏழு மணிக்கே மனிதர்களுக்கு தொள்ளாயிரம் வேலைகள் இருந்தன. சுத்தமாய் ஆகாயம், வீரியம் ஏறிக் கொண்டிருக்கும் சூரியன்.

    கண்களைச் சுருக்கிக் கொண்டாள் புவனா.

    இங்கேதான்... இங்கேதான் இருக்க வேண்டும், அவன்.

    கெட்டும் பட்டணம் போகச் சொல்லியிருக்கிறார்கள். மூதாதையரின் வார்த்தையே தலைமேல் தாங்கி வந்திருப்பான். வசதியான நகரம் இலட்சம் தலைகளில் சுலபமாகத் தொலைந்து போய் விடலாம்.

    இங்கே இருந்தாலும் சரி...

    எங்கே இருந்தாலும் சரி...

    என் வாழ்க்கையில் அந்த சந்திப்பு நிச்சயம் ஒரு நாள் நிகழத்தான் போகிறது, பிரசன்னா. அன்றைக்கு என் விழிகளில் பிறக்கிற நெருப்பில் நீ பொசுங்கிப் போய் விடுவது நிச்சயம்.

    இதான் செகண்ட் மெயின் ரோடு... எங்கே நிப்பாட்டனும்மா?

    இருப்பா... தசரதன் காலனின்னு மூணு மாடி கட்டடம் இருக்குமாம். விசாரிக்கலாம் என்றாள்.

    எதிரே வந்த சைக்கிள்காரனை சந்திக்கிற வகையில் டாக்சியை வேகம் குறைத்துக் கேட்டான். தசரதன் காலனி எங்கேப்பா இருக்கு?

    அவன் ஒரு காலை ஊன்றிக் கொண்டு புவனாவை ஒரு முறை பார்த்துக் கொண்டு, அதோ வரிசையா வேப்பமரம் நிக்குதே... அதான் என்று சொல்லிவிட்டு, புவனா சொன்ன நன்றிக்கு அதிகமாய் பற்களைக் காட்டி சிரித்துவிட்டு, நகர்ந்து ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு மிதித்தான்.

    காலனி வாசலில் இறங்கிக் கொண்டாள்.

    ஒவ்வொரு மாடியிலும் ஆறு வீடுகள் இருந்தன. மொத்தம் பதினெட்டு வீடுகள் இந்த பக்கம் ஒன்பது நடுவில் வளைந்து செல்லும் மாடிப் படிகள் பெரும்பாலான வீடுகளில் டி.வி. இருப்பது தெரிந்தது. வேப்பமரங்களின் நிழலில் டெலிபோன் பூத் அளவில் ஒரு பெட்டி கடை.

    டிரைவர் அவளது பொருள்களை மரத்தின் நிழலில் வைத்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போனதும் குழந்தையோடு சற்று நேரம் நின்றாள்.

    பின்னர் அந்தப் பெட்டிக் கடைக்கு நடந்தாள்.

    தீக்குச்சியை கொளுத்தி தீ அணையாமல் பிடித்து ஊதுபத்தியைக் கொளுத்திக் கொண்டிருந்த ஆள், கதவு இடுக்கில் செருகி விட்டுத் திரும்பி, என்னங்க வேணும்?

    இந்த காலனிக்கு புதுசா வர்றேன் நான். பதினாறாம் நம்பர் வீடு எதுங்க?

    மூணாவது மாடியில படியேறித் திரும்பினதும் லெஃப்ட்ல முதல் வீடுங்க. அதிலே சதாசிவம் சார் குடியிருந்தாரே...

    அவரும் நானும் தான் மாறுதல் வாங்கிக்கிட்டோம். அவர் தஞ்சாவூர் போயிட்டார். நான் இங்கே மெயின் ஆபீஸ் வந்துட்டேன். எனக்கு ஓர் உதவி செய்யணும் நீங்கள்.

    சொல்லுங்க. என்ன செய்யணும்?

    பெட்டிகளைப் பார்த்துக்கறிங்களா. கொஞ்சம்? நான் திரும்ப வந்து எடுத்துட்டுப் போறேன்.

    சரிங்க. இந்த காலனில திருட்டு பயமே கிடையாதுங்க.

    புவனா ரமேஷின் வலைக் கூடையையும், துணிப் பையையும் மட்டும் எடுத்துக் கொண்டு நடந்து படிகளில் ஏற... கீழே போர்ஷன்களில் சில பேர் பார்த்தார்கள்.

    மூன்றாவது மாடி வந்து, 16 நம்பர் வீட்டுக்கு வந்தாள். பையைக் கீழே வைத்து விட்டுப் பூட்டைத் திறந்தாள்.

    மூன்றாவது போர்ஷன் வாசலில் காலை வெயிலில் தலையைக் காயப்போட்டுக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள்.

    புவனா உள்ளே நுழைந்தாள். சற்று இருட்டாய் இருந்தது. எல்லா சன்னங்களும் சாத்தியிருந்தன. புதிதாக அடிக்கப்பட்ட சுண்ணாம்பின் மணம் காற்றில் இருந்தது.

    சன்னல் கதவுகளைத் திறந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1