Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nerungivaa Nenjamey…
Nerungivaa Nenjamey…
Nerungivaa Nenjamey…
Ebook117 pages1 hour

Nerungivaa Nenjamey…

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580109201634
Nerungivaa Nenjamey…

Read more from Infaa Alocious

Related authors

Related to Nerungivaa Nenjamey…

Related ebooks

Reviews for Nerungivaa Nenjamey…

Rating: 3.8823529411764706 out of 5 stars
4/5

34 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nerungivaa Nenjamey… - Infaa Alocious

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நெருங்கிவா நெஞ்சமே...

    Nerungivaa Nenjamey…

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    தனிமை மிக அழகாய்...

    என் உலகம் பட்டாம்பூச்சி சிறகாய்

    வண்ணமயமாய் ஆனது...

    நெருங்கிவா என் நெஞ்சமே...

    க்கூ..., க்கூ..., க்கூ... ஏதோ ஒரு கிளையில் தன் முகவரியை மறைத்து, முகவுரையை அறிவித்துக் கொண்டிருந்தது குயில்... அதன் இசையில் மயங்கிய நளன்..., தன் கையில் இருந்த ஜெர்மன் கேமராவின் வழியாக, குரல் வந்த திசைக்கு அதை ஸூம் செய்தான்...

    அவன் உழைப்பிற்கு பலனிருக்க, குயில் தன் முகத்தை அவனுக்கு அறிமுகப்படுத்தியது... அந்த தருணத்தை தவிக்கவிடாமல், கச்சிதமாக அதனை தன் கேமராவுக்குள் நிழற் படமாக பதிவு செய்தான்...

    குட்..., நைஸ் போஸ்... குயிலுக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவன், தான் நடக்கும் ஓசை வெளியே கேட்காத அளவுக்கு காலை மெதுவாக வைத்தவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றான்...

    அந்த அடர்ந்த காட்டின் தனிமை அவனை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை... மாறாக, அவனை ஒரு உயிர்ப்போடு உலாவச் செய்தது... நடந்தவாறே தான் எடுத்த புகைப்படத்தை ஆராய்ந்தான்... அவன் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று தவழ்ந்தது...

    ‘நளா..., நீ நல்லாத்தாண்டா போட்டோ எடுக்குற...’ தன்னைத்தானே பாராட்டிக் கொண்டவன், ஓடையின் சலசலப்பில் கவனம் கலைந்தான்...

    அட..., மான் கூட்டம்... நின்ற இடத்திலேயே இருந்தவன், கேமராவின் கண் வழியாக ஓடையைப் பார்த்தான்... கலைமான் கூட்டம் ஒன்று ஓடையில் நீர் அருந்த, அவற்றையும் நகல்களாக பதித்தவன், அங்கிருந்து நகரவே இல்லை...

    சிறு சலசலப்பு கேட்டாலும்..., மான் கூட்டம் கலைந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும்... எனவே..., இன்னும் ஸூம் போட்டவன்..., மான் கூட்டம் முழுமையையும் கேமரா வழியாகவே துழாவினான்... அவற்றின் அழகை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்...

    கண்களால் துழாவியவாறே வந்தவன்..., ஒரு இடத்தை கடந்து சென்றவன்..., அங்கே மான் கூட்டம் ஏதோ ஒன்றை ஆராய முற்படுவதைப் பார்த்தவன், சரியாக அந்த இடத்துக்கு கேமராவைத் திருப்பினான்... லென்ஸ் முழுமைக்கும் ஸூம் போட்டு, அது என்ன என கூர்த்து பார்த்தான்...

    ‘ஓ மை காட்...’ அவன் வாய் சன்னமாக முணுமுணுக்க, கால்களோ வேகமாக அந்த இடத்துக்கு விரைந்தது...

    அதற்குக் காரணம்..., அங்கே முகம் குப்பற விழுந்திருந்தது ஒரு மனித உடல் என்று அவன் மூளை உரைத்ததுதான் காரணம்... அந்த இடத்தை நெருங்கிச் செல்லவே..., அது ஒரு பெண் என்பது அவனுக்கு புலப்பட்டது...

    நடையை விரைவுபடுத்தியவன் அவளை நெருங்க, மான் கூட்டமோ பதறி, சிதறி ஓடியது... அதைக் கண்டுகொள்ளாமல், கேமராவைத் தலை வழியாக மாட்டிக் கொண்டவன், அவள் அருகில் மண்டியிட்டான்...

    ‘ஓ..., ஷிட்...’ அவள் இருந்த கோலத்தைப் பார்த்தவன், வேகமாக தன் சட்டையைக் கழட்டி அவள் உடலை மறைத்துவிட்டு, மெதுவாக அவளைத் திருப்பினான்...

    அவளைத் திருப்பிய வேளை, அவளது முகம் வேதனையைப் பிரதிபலிக்க, அதை கவனிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை...

    ‘உயிர் இருக்கா...?’ பதட்டமானவன், அவள் நாடியை பரிசோதித்துவிட்டு, அவள் மூக்கின் கீழே விரலை வைத்து, அவள் சாதாரணமாக மூச்சு விடுவதை உணர்ந்த பிறகுதான்..., சற்று தெளிந்தான்...

    ‘இவ எப்படி இங்கே...? அதுவும் காட்டுக்குள்..., இவ்வளவு தூரம்...?’, புருவம் சுருக்கி யோசித்தவன், அப்பொழுதுதான் அந்த ஆற்றில் வெள்ளம் வழக்கத்துக்கு மாறாக அதிகம் ஓடுவதைப் பார்த்தான்...

    ‘ஓ..., ஆத்தில் அடிச்சுட்டு வந்துட்டா போல... சரி இவ ட்ரெஸ் எல்லாம்இப்படி கிழியிற அளவுக்கு ஆயிருக்குன்னா...?யாராவது இவளை...’, யோசனையை சட்டென அந்த இடத்தில் நிறுத்தியவன், வேகமாக அவள் முகத்தை ஆராய்ந்தான்...

    அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை ஒதுக்கியவன், அவள் முகத்தைப் பார்த்தான்... நிர்மலமான முகம், இயற்கையான அழகை சுமந்து ஒப்பனைகள் எதுவுமின்றி, சிப்பி விழிகள் மூடியிருக்க, மிதமான வேகத்தில் நெஞ்சு ஏறி இறங்கியது...

    ‘ஹப்பா..., நான் பயப்பட்ட மாதிரி எதுவும் இல்லை... முகம் குழந்தைத்தனமா தான் இருக்கு... எந்தவித அசம்பாவிதம் நடந்த சாத்தியக்கூறும் இல்லை...’, ஆசுவாசமாக மூச்சு விட்டான்...

    ஒரு நிமிடம் தன்னை மீறி அவளை ரசித்தவன்..., அவளது புருவம் சற்று சுருங்கி வேதனையாக முகத்தை சுளிக்கவே, ‘எங்கேயாவது அடி பட்டிருக்கா...’ அவன் பார்வை, அவள் முகத்தை விட்டு கீழிறங்க, அப்பொழுதுதான், அவன் போர்த்தியிருந்த சட்டைக்கு அடியில்..., ஒரு குச்சி அவள் உடம்பில் குத்தியிருப்பதைப் பார்த்தான்...

    சற்று சட்டையை விலக்கிப் பார்க்க, சரியாக அவளது வயிற்றின் மேலாக அழுத்தமாக குத்திக் கிழித்தவாறு, சற்று ஆழமாகப் பதிந்திருந்தது அந்த குச்சி...

    ‘இது வேறையா...?’ சற்று அலுப்பாகவே சொல்லிக் கொண்டான்...

    அதை உருவி எறியப் போனவன்..., ம்ஹும்..., இப்போவே உருவினால் ப்ளட் வந்தால் அதை கட்டுப்படுத்த, இங்கே காட்டன் இல்லை... இவளை டென்ட்டுக்கே தூக்கிட்டு போய்டலாம்... எண்ணியவன், சட்டையை ஒழுங்காக அவளுக்குப் போர்த்தியவன், அவள் கழுத்தின் அடியில் ஒரு கையும், தொடையின் அடியில் ஒரு கையும் கொடுத்து, அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்...

    ‘ஹப்பா..., ஆள் பாக்கத்தான் ஒல்லியா இருக்கா... ஆனா செம கனம்...’, தன் கேமரா பத்திரமாக இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு, தன் டென்ட் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்...

    டென்ட் என்றால் அது ஒன்றும் கேம்ப் டென்ட் இல்லை... சின்ன குழந்தைகளுக்கு கொசு வலை வைப்பதுபோல், குடை போல் விரித்து வைத்துக் கொள்ளக் கூடிய சிறிய டென்ட்... ஒரு ஆள் மட்டுமே உள்ளே இருக்க முடியும்...

    அதையும் அப்பொழுது மடித்து, தன் பொருட்கள் அனைத்தையும் மரத்தில் இறுக கட்டி வைத்திருந்தான்... ‘எவ்வளவு வேலைதான் செய்யிறது ஆண்டவா...?’, புலம்பியவன், கைகளில் இருந்த அவளை கீழே சருகில் படுக்க வைத்தவன், டென்ட்டை செட் செய்துவிட்டு, சற்று சிரமப்பட்டு அவளோடு அதற்குள் நுழைந்தான்...

    தன் பொருட்களில் முதலுதவிப் பெட்டியை

    Enjoying the preview?
    Page 1 of 1