Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Thirudiya Malargal
Manam Thirudiya Malargal
Manam Thirudiya Malargal
Ebook462 pages4 hours

Manam Thirudiya Malargal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நான் வத்சலா ராகவன். நான் ஒரு ஆசிரியை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் கணக்கு டீச்சர். அதற்கு மேல் ஒரு ரசிகை. இனிமையான, மென்மையான விஷயங்களுக்கு ஒரு பெரிய ரசிகை. இந்த உலகில் அன்பினால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன் நான். சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய எனது எழுத்து பயணத்தில் சிறுகதைகள் நாவல்கள் என சில அடிகள் நடந்திருக்கிறேன்.

இந்த பயணத்தில் இப்போது புஸ்தகாவுடன் இணைவதில், புத்தகமாக வெளிவந்திருக்கும் என் நாவல்கள் இப்போது மின்நூல்கள் வடிவில் வெளி வரப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580113301758
Manam Thirudiya Malargal

Read more from Vathsala Raghavan

Related to Manam Thirudiya Malargal

Related ebooks

Reviews for Manam Thirudiya Malargal

Rating: 4 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Thirudiya Malargal - Vathsala Raghavan

    http://www.pustaka.co.in

    மனம் திருடிய மலர்கள்

    Manam Thirudiya Malargal

    Author:

    வத்சலா ராகவன்

    Vathsala Raghavan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vathsala-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    மனம் திருடிய மலர்கள்

    - வத்சலா ராகவன்.

    இக்கதையும், இதில் வரும் கதாபாத்திரங்களும், காட்சிகளும் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல......

    1

    நட்சத்திரங்கள்!!!

    இங்குமங்கும் சிதறிக்கிடக்கும் வைரங்களாக வானமெங்கும் மின்னிகொண்டிருந்தன நட்சத்திரங்கள்!!!!!

    முதுகில் மாட்டப்பட்டிருந்த பையுடன், தன்னை சுமந்து வந்த விமானத்தை விட்டு இறங்கி, நடந்தவன் கண்கள் தனிச்சையாக மேலே நிமிர்ந்தன.

    கண் சிமிட்டும் அந்த விண்மீன் கூட்டத்துடன், வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு பந்தம் அவனுக்கு எப்போதும் உண்டு . அவற்றை பார்க்கும் போது எப்போதுமே சின்னதான புன்னகை கீற்று அவன் இதழோரத்தில் மலரும்.

    சிரித்து, ஜொலித்து, கண்சிமிட்டி, மற்றவர்கள் மனம் ஈர்த்து விளையாடும் அந்த வைரங்களின் ஒளி மட்டுமே எல்லார் கண்களிலும் படுகிறது. அதனுள்ளே எப்போதுமே தகித்துக்கொண்டிருக்கும் வெப்பத்தை உணர்ந்தவர்கள் யாராம்?

    இதை  உணராதவர்கள் பலர்.!!! உணர்ந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் சிலர்!!!!! அந்த வெப்பத்தில் குளிர் காய நினைப்பவர்கள் இன்னும் சிலர்!!!! ஒரு தீர்கமான சுவாசம் அவனிடத்தில்

    நீல நிறத்தில், மிக அதிகமாக ஒளி வீசும் நட்சத்திரம்தான் உள்ளுக்குள்ளே அதிகமாக கொதிக்குமாமே? எங்கோ படித்த ஞாபகம்!!!

    நடந்தவனின் பார்வை வடக்கு பக்க வானத்தை அடைய, கண்கள் ஒரு நொடி அந்த நட்சத்திரத்தில் நிலைத்து திரும்பியது. அவன் இரவில் எப்போது வானத்தை பார்த்தாலும் அந்த நட்சத்திரத்தை பார்க்காமல் திரும்பியதில்லை அவனது பார்வை.

    ஏதேதோ நினைவலைகள், உள்ளம் வருடிப்போயின சில. மனம் கீறிப்போயின சில.

    பார்வையை தாழ்த்திக்கொண்டு யோசனையுடன் நடந்தான் அவன். அவனது நடையில் அப்படி ஒரு கம்பீரம். எதையோ சாதித்து விட்ட கம்பீரம். அந்த கம்பீரத்துடன் கலந்த ஒரு நிதானம்.

    நடந்தான் அவன். அவன் ரிஷி.

    கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து, இந்திய மண்ணில் கால் பதிக்கிறான் ரிஷி என்ற அந்த ரிஷிகேஷ் கண்ணன்.

    'வேண்டாம்டா ரிஷி. அங்கே எதுக்கு மறுபடியும்? எனக்கு பயமா இருக்குடா. அங்கே உன்னை யாராவது ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்குடா.' அவன் இந்தியா கிளம்புகிறேன் என்று சொன்ன போது அம்மா சொன்ன வார்த்தைகள் இவை. 

    'பயம்' இந்த வார்த்தை அம்மாவிடமிருந்து வந்து இவன் இது வரை கேட்டதில்லை. இது தான் முதல் முறை.

    ஒண்ணும் ஆகாதும்மா. நீ தைரியமா இரு. அவன் போகணும். போயிட்டு வரட்டும். சந்தோஷமா திரும்பி வருவான் அவன். --- இது அப்பா.

    அப்பாவுக்கு எல்லாம் தெரியும். பார்வையிலேயே மனம் படித்துவிடும் கலையில் ஞானி அவர். மகனின் உள்ளம் அவருக்கு புரிந்திருப்பதில் என்ன பெரிய ஆச்சரியம்.?

    மனம் ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது இந்தியா வந்து சென்றாலும், அவன் இங்கே வருவதற்கான அவசியம் இருப்பதாக ஐந்து, ஆறு நாட்களுக்கு முன்னால் வரை தோன்றவில்லை அவனுக்கு. காலம் எல்லாருக்கும், எல்லாவற்றையும் மறக்க செய்து விடும், என்று தான் நம்பி இருந்தான் அவன்.

    ஆனால் ஐந்தாறு நாட்களுக்கு முன் ட்விட்டரில் வந்த அந்த பதிவு. அந்த ஒற்றை பதிவு, அவனை சுழற்றிப்போட்டது. இதோ!!! அவனை கட்டி இழுத்துக்கொண்டு வந்து இந்தியாவில் தள்ளி இருக்கிறது அது. !!!!

    தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் அவன். எவ்வளவு சக்தி அந்த வார்த்தைகளுக்கும், அதற்கு சொந்தமான அந்த இதயத்துக்கும்.???

    'உன்னை பார்க்கணும்ன்னு எப்பவாவது தோணினா நான் உன்னை கூப்பிடுவேன். நீ வரணும்' அவன் இந்தியா விட்டு கிளம்பும் போது அவள் சொன்ன வார்த்தைகள். 

    'மாட்டேன். மாட்டவே மாட்டேன். பை...' அன்று உறுதியாக சொல்லிவிட்டுதான் வந்தான். ஆனால் இன்று அந்த உறுதி கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறதே???

    பெங்களூரு விமான நிலையத்தில் நடந்துக்கொண்டிருந்தான் அவன். நேரம் இரவு பன்னிரெண்டை தொட்டிருந்தது. காலை ஐந்து மணிக்கு சென்னைக்கு விமானம்.

    தான் வருவதாக இங்கே யாரிடமும், தனது உற்ற நண்பர்களிடம் கூட சொல்லவில்லை அவன். சென்னைக்கு போய் இறங்கி அங்கே ஈ.சி.ஆரில் இருக்கும் தனது கெஸ்ட் ஹவுசுக்கு போவதாக திட்டம். சரி அதன் பிறகு என்ன செய்வது? சத்தியமாக புரியவில்லை அவனுக்கு.

    ஒரு சில பார்வைகள் அவன் முகத்தை ஊடுருவிப்போக தனது சட்டை பையில் இருந்த ரே- பேனை  எடுத்து அணிந்துக்கொண்ட படியே நடந்தான் ரிஷி.

    பக்கத்து மாநிலம் என்ற போதும் அவனை சுற்றி நடந்த பலரின் கண்களுக்கு மிகவும் பரிச்சயமானவன்தான் ரிஷி. அவன் தமிழ் நாட்டை சேர்ந்த மிகப்பிரபலமான இளம் நடிகன்.

    கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவன். அவன் வந்து நின்றால் போதும் படம் வெற்றி பெற்று விடும் என்ற நிலைதான் இருந்தது. அது எல்லாவற்றையும் விட்டு விட்டு  கடந்த ஒன்றரை ஆண்டுகளாக லண்டன் வாசம்.

    நடந்தான் அவன்!!! நான்கு ஐந்து நாள் தாடியும், அவன் அணிந்திருந்த தொப்பியும் அவன் முகச்சாயலை கொஞ்சம் மாற்றி இருந்தன.

    கஸ்டம்ஸ் செக். அவனது பாஸ்போர்ட்டை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரிந்துக்கொண்டார் அந்த அதிகாரி. 'ரிஷி சார். நீங்களா? நான் உங்க பெரிய ஃபேன் ஸார்.'

    'சந்தோஷம்'. என்றான் மெலிதான குரலில்.

    'உங்க படம் ஒண்ணு கூட நான் மிஸ் பண்ணதே இல்லை. '

    'தேங்க்ஸ்.....' என்றான் அடிக்குரலில். அவன் பின்னால் வரிசையில் நின்றவர்களிடம் சலசலப்பு

    'இஸ் எவ்ரிதிங் ஓகே? நான் போகலாமா? அந்த அதிகாரியிடம் கேட்டான் ரிஷி.

    அதற்குள் அவனுக்கு பின்னால் நின்றவர் முன்னால் வந்து அவனிடம் கை நீட்ட கை குலுக்கினான் அவன்.

    'உங்களை சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம் ஸார். அந்த டிசம்பர் முப்பத்தி ஒண்ணாம் தேதியை, அன்னைக்கு நீங்க பேசினதை எதையுமே என்னாலே  மறக்கவே முடியாது ஸார். நீங்க செஞ்சது ரொம்ப சரி'.

    அதற்குள் அவர்கள் அருகில் மூன்று நான்கு பேர் வந்து விட்டிருந்தனர்.

    ஏன் ஸார்,? எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சிட்டு ஏன் ஸார் நாட்டை விட்டு போயிட்டீங்க? அவரிடமிருந்து அடுத்த கேள்வி. அவனுக்குள்ளே லேசாக எரிச்சல் மண்டியது.

    'ஒரு வேளை பயந்து ஓடிட்டாரோ?' பின்னாலிருந்து ஒரு குரல். அங்கே சிரிப்பலை.

    உள்ளுக்குள்ளே சுள்ளென கொதிப்பெரியது .ஆனால்  தெரியும் அவனுக்கு. அவனது ஒவ்வொரு வார்தைகளும், ஏன் அசைவுகளுமே கூட மீடியாவுக்கு உணவாகிப்போகும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி புன்னகைக்கும் வித்தை அவனுக்கொன்றும் புதியதல்ல.

    புன்னைகையையே எல்லாவற்றுக்கும் பதிலாக்கி விட்டு, அந்த அதிகாரி நீட்டிய பாஸ்போர்ட்டை கிட்டதட்ட பிடுங்கிக்கொண்டு, தனது கைக்கு வந்திருந்த பெட்டியையும் இழுத்துக்கொண்டு எல்லாரையும் விலக்கிக்கொண்டு விறுவிறுவென நடந்தான்.

    எப்படி வந்தான் என்று அவனே அறியாமல், அடுத்த அரை நிமிடத்தில் வி.ஐ.பி லாஞ்சுக்குள் வந்து விட்டிருந்தான் ரிஷி. உள்ளே நுழைந்தவனிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு. அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் சற்று ஆயாசமாக அமர்ந்தான்.

    சில நொடிகள் கழித்து பார்வையை அந்த அறையை சுற்றி சுழல விட்டான். ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தனர் அந்த அறையில். மெல்ல திரும்பியவனின் பார்வையில் பட்டான் அவன்!!! கையிலிருந்த தினசரியில் பார்வையை பதித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்!!!

    ஒரு கணம் வியப்பில் விழுந்து மீண்டான் ரிஷி. இவன் எப்படி சரியாக நான் வரும் வேளையில்  இங்கே வந்து அமர்ந்திருக்கிறான்.?

    சொல்லி வைத்தார்ப்போல் தினசரியை மூடியபடியே இவன் பக்கமாக திரும்பினான். ஒரு நொடியில் ரிஷியை அடையாளம் கண்டுக்கொண்டான் அவன். ரிஷியை உரசி திரும்பியது அவனது அலட்சிய பார்வை.

    அவன் சஞ்ஜீவ்!!!! சஞ்ஜீவ் கிஷோர்!!!! தமிழ் நாட்டின் இன்னொரு பிரபலமான நடிகன். ரிஷிக்கு திரைத்துறையில் நேரடிப்போட்டி என்றால் அது சஞ்ஜீவ் மட்டுமே. இவன் ஆர்.கே என்றால் அவன் எஸ்.கே.!!!!

    சினிமாவை பொறுத்த வரை, ரிஷியை விட இரண்டு வருடங்கள் சீனியர் சஞ்ஜீவ். சொல்லபோனால், ரிஷி வந்த புதிதில், அவன் திரைப்படங்களினால் சஞ்ஜீவின் படங்கள் சரிய துவங்கியது உண்மை.

    சோஃபாவிலிருந்து எழுந்தான் சஞ்ஜீவ். தினசரியை சோஃபாவின் மீது போட்டு  விட்டு மெல்ல நடந்து ரிஷியின் அருகில் வந்து அவன் நிற்க இறுக்கையிலிருந்து எழுந்தான் ரிஷி.

    'என்ன ஆர்.கே மறுபடியும் இவ்வளவு தூரம்?' கண்களில் கோபம் மின்ன தனது இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ரிஷியை ஏற இறங்க பார்த்தபடியே கேட்டான் சஞ்ஜீவ்.

    பதில் சொல்லவில்லை ரிஷி. மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு, முகத்தில் எந்த பாவமும் இல்லாமல்  சஞ்ஜீவையே  பார்த்தபடி  நின்றிருந்தான் அவன்,

    'என்னடா?' சஞ்ஜீவின் குரல் ஒருமைக்கு மாறியது. 'என் முன்னாலே வந்து நிக்குற அளவுக்கு தைரியம் வந்திடுச்சா உனக்கு.?'

    இப்போதும் பதிலில்லை ரிஷியிடமிருந்து. வேறு யார் பார்வையாவது தங்களை உரசுகிறதா என்று தெரிந்துக்கொள்ள ஒரு முறை சுற்றி திரும்பியது ரிஷியின் பார்வை,

    எதை பற்றியும் கவலைப்படாதவனாக பேசிக்கொண்டிருந்தான் எஸ்.கே. 'எதுக்குடா வந்தே இப்போ.? பதில் பேசுடா. எங்களுக்கெல்லாம் பயந்து தானே நாட்டை விட்டு ஓடிப்போனே. இப்போ எதுக்குடா திரும்ப வந்தே?

    ரிஷியின் கண்கள் கோபத்துடன் விரிந்தன.

    'பதில் சொல்லுடா வெங்காயம்' என்றான் சஞ்ஜீவ்.

    சட்டென சஞ்ஜீவின் சட்டையை கொத்தாக பிடிக்கத்தான் முயன்றான் ரிஷி. ஆனாலும் இயலவில்லை அவனால். தன்னையும் மீறி மலர்ந்து சிரித்தே விட்டிருந்தான் அவன்.

    'டேய்! வெங்காயம்.!!! பெரிய ஆக்டர்ன்னு பேரு என் முன்னாலே ரெண்டு நிமிஷம் நடிக்க முடியலை உன்னாலே' என்று அவன் சிரிப்பில் இணைந்துக்கொண்டபடியே தனது உயிர் நண்பனை தன்னோடு சேர்த்து அணைதுக்கொண்டான் சஞ்ஜீவ்.

    'எப்படி டா இருக்கே?'

    'நல்லா இருக்கேன்டா' என்றான்  ரிஷி.

    அவனை விட்டு விலகி நிமிர்ந்த சஞ்ஜீவ், தனது நண்பனை கண்களால் அளக்க துவங்கினான். இன்னும் பத்து நாட்களில் சஞ்ஜீவின் தங்கைக்கு திருமணம். சென்ற மாதத்திலிருந்தே ரிஷியை இந்தியா வரும்படி அழைத்துக்கொண்டுதான் இருக்கிறான் சஞ்ஜீவ்.

    அவன் வருவதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. 'கல்யாணதுக்கு காலையிலே வந்திட்டு நைட் கிளம்பிடுறேன்  சஞ்ஜா.' சொல்லிக்கொண்டுதான் இருந்தான் ரிஷி. ஆனால் இன்று???

    அவனை எது இங்கே கொண்டு வந்து இறக்கி இருக்கிறது என்பதை சட்டென ஊகித்து  விட்டிருந்தான் சஞ்ஜீவ். அந்த பதிவை அவனும் பார்க்க தானே செய்தான்.!!!! கொஞ்சம் வியப்பாககூட இருந்தது அவனுக்கு. தான் செய்ய முயன்று தோற்றதை அந்த ஒற்றை பதிவு செய்து விட்டதே!!!!

    'ஆமாம். நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லலியே? என்னடா இவ்வளவு தூரம்? என்ன விஷேஷம்?' சின்ன புன்னகை இதழ்களில் ஓட ஊடுருவும் பார்வையுடன் கேட்டான் எஸ்.கே

    அ... அது... நீ.. நீ... தான் உங்க அக்காவுக்கு கல்யாணம் அப்படின்னு சொன்னியே. அதுக்குதான் வந்தேன்.

    'அடப்பாவி.....' சிரித்தான் சஞ்ஜீவ். கல்யாணம் என் தங்கைக்குடா. அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு இருக்கா. என்றவன் 'பொய் சொல்லாதேடா. எல்லாம் அந்த ட்வீட் பண்ற வேலை'. சொல்லிவிட்டிருந்தான்  சட்டென.

    ட்வீட்டா...? எந்த ட்வீட்? கொஞ்சம்  திடுக்கிட்டுப்போய் அவசரமாக கேட்டான் ரிஷி.

    ம்? என்று நிமிர்ந்தான் சஞ்ஜீவ். அவன் முகத்தை படித்தப்படியே 'அதுவா? நான் வெங்காய வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வாரம் ட்வீட் பண்ணி இருந்தேனே நீ பார்க்கலை? என்றான் நக்கலாக...

    சஞ்ஜீவின்  பார்வை ஊடுருவலை தவிற்பதற்காகவே பேச்சை மாற்றி

    'என்னை பார்க்க தான் வந்தியா சஞ்ஜா? கேட்டான் ரிஷி.

    பின்னே எனக்கு இங்கே வேற என்ன வேலை?

    நான் வர்றேன்னு உனக்கு எப்படி டா தெரியும்?

    'மகனே! நீ டிக்கெட் புக் பண்ணவுடனேயே எனக்கு தெரியும்டா. எப்படின்னு கேட்காதே அதெல்லாம் தொழில் ரகசியம்....வா போகலாம்' சிரித்தபடியே ரிஷியின் பெட்டியை இழுத்துக்கொண்டு நடக்க துவங்கினான் சஞ்ஜீவ்.

    'டேய்! எங்கேடா போறே? எனக்கு அஞ்சு மணிக்கு சென்னைக்கு ஃப்ளைட்.'

    'வா வா நானும் அதே சென்னைக்குதான் போறேன். நீ மறுபடியும் ஊருக்கு போற வரைக்கும் என் கூடதான் இருக்கப்போறே ' நடந்தான் சஞ்சீவ்.

    சஞ்சா ...... வேண்டாம்டா.! என்னாலே தேவை இல்லாம உனக்கு பிரச்சனை வரலாம்.

    நின்று திரும்பி விழி நிமிர்த்தினான் எஸ்.கே. மனம் முழுவதும் ரிஷியின் மீது நிரம்பிக்கிடந்த பாசத்தின் பிரதிபலிப்பாய் அவன் கண்களில் கோபக்கோடுகள்

    எத்தனை நாளாடா இந்த பழக்கம்.? நீ, நான்னு பிரிச்சு பாக்குற பழக்கம்? '

    அப்படியெல்லாம் இல்லைடா.....  சின்ன தயக்கதுடன் ரிஷி ஏதோ சொல்ல துவங்க..

    'நீ பேசுறதை எதையும் நான் கேக்குறதா இல்லை' இடைமறித்தான் சஞ்ஜீவ் 'உனக்கு ஒரு பிரச்சனைன்னா அது எனக்கும்தான். நட.'

    அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேச முடியும் என்று தோன்றவில்லை ரிஷிக்கு. நண்பனுடன் நடந்தான் அவன்.

    மிக அழகான நட்பு இவர்களுடயது. திரை உலகில் ஒருவருக்கு ஒருவர்  போட்டியாக இருக்கும் போது, இப்படி ஒரு நட்பு எப்படி சாத்தியமாகிறது என்று வியந்து போவார்கள்  பலர்.

    விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தனர் இருவரும். அங்கே அவர்களுக்காக காத்திருந்தது சஞ்சீவின் கார். அதன் அருகில் நின்றிருந்தார் அவர். பரந்தாமன். அவர் முன்பு ரிஷியின் மானேஜராக இருந்தவர். அவரை பார்த்தவுடன் ரிஷியின் முகத்தில் பலவித மாற்றங்கள். மெல்ல விழி நிமிர்த்தி அவரை எறிட்டான் ரிஷி.

    நல்லா இருக்கீங்களா ஸார்? மெல்லக்கேட்டார் அவர்.

    சின்ன புன்னைகையுடனான தலையசைப்புடன் அவன் காரில் ஏற எத்தனிக்க, 'அப்பா எப்படி ஸார் இருக்கார்? அம்மா? தழைந்த குரலில் வெளிவந்தது கேள்வி.

    மெல்ல திரும்பிய ரிஷியின் இதழ்களில் புன்னகை ஒட்டம். ஒரு பெருமூச்சுடன் புன்னகை மாறாமல் தலை அசைத்தான். அவர் மனதில் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தை அவர் முகம் உணர்த்தியது. அருகில் நின்றிருந்த சஞ்சீவின் கண்களும் அதையே ஆமோதித்தன. ரிஷியின் உள்ளத்தில் கொஞ்சமாய் நிறைவு.

    அந்த ஆடியின் பின் சீட்டில் அமர்ந்தான் ரிஷி. சஞ்ஜீவ் முன்னால் ஏறிக்கொள்ள, டிரைவர் சீட்டில் அமர்ந்தார் பரந்தாமன். இன்னமும் அவர் மனம் ஆறவில்லை போலும்.

    மெல்ல திரும்பியவர் சட்டென சொல்லிவிட்டிருந்தார் 'என்னை மன்னிச்சிடுங்க ஆர்.கே ஸார்'

    'அய்யோ! என்ன ஸார் நீங்க? என்றான் ரிஷி. என்ன இருந்தாலும் நீங்க என்னோட வயசிலே பெரியவங்க. நீங்க போய் என்கிட்டே.... சொல்லப்போனா நான் கூட அன்னைக்கு உங்ககிட்டே கோபமா நடந்துக்கிட்டேன்.....'

    'அப்படி இல்லை ஸார். நான் செஞ்சது தப்பு. அதை நீங்க சுட்டி காட்டினீங்க. அப்போ அதை என்னாலே ஏத்துக்க முடியலை. உங்க மேலே அப்படி ஒரு கோபம். ஆனால் அந்த  டிசம்பர் 31 என்னை மொத்தமா மாத்திருச்சு ஸார்.'

    'இப்போ எஸ். கே சார்கிட்டே வந்திட்டேன். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஸார்.

    வீட்டிலே எல்லாரும் நல்லா இருக்காங்களா ?கேட்டான் ரிஷி

    எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க ஸார்.எனக்கு ஒரு பொண்ணு பிறந்திருக்கா' என்றார் நிறைவான குரலில்.

    பொண்ணா?.... ரிஷியின் குரல் சந்தோஷத்துடன் ஒலித்தது. 'ரொம்ப சந்தோஷம். நல்லா படிக்க வைங்க' என்றான் புன்னகையுடன்.

    கார் நகர துவங்க, மெல்ல திரும்பி ரிஷியின் முகத்தை புன்னகையுடன் அளந்தான் சஞ்சீவ். பின்னர் வாஞ்சையுடன் சொன்னான் 'ரொம்ப டயர்டா இருக்கேடா நீ. கொஞ்ச நேரம் அப்படியே தூங்கு. சென்னைக்கு போனதும் எழுப்பறேன்'

    'ஆமாம் கண்டிப்பா தூங்கணும்' என்றபடி சீட்டில் சாய்ந்தவனின் கண்கள் சாலையில் பதிந்தன. அவனது நினைவுகளும் அவனுடனே பயணித்துக்கொண்டிருந்தன.

    கார் முழுவதும் பரவிக்கிடந்த ஏ.ஸி காற்றின் தாலாட்டில், நினைவுகளில் நீந்தியபடியே, அவனையும் அறியாமல் சீட்டில் புதைந்து அப்படியே உறங்கிப்போனான் ரிஷி.

    எத்தனை மணி நேரங்கள் கடந்திருக்கும் என்று தெரியவில்லை. மூடிக்கிடந்த அவனது இமைகளுக்குள் திடீரென விரிந்தது அந்த காட்சி.

    அது ஒரு மலைப்பிரதேசம். புகைக்காற்றாக பனி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. உள்ளம் வருடிசெல்லும் மெலிதான மழைச்சாரல். அங்கே சட்டென விரிகிறது ஒரு அழகான குடை. குடை விரிந்து எழ, அதே நேரத்தில் அழகாய் விரிந்து எழுகின்றன அவள் இமை குடைகள். அவனுக்கும் சேர்த்து அவள் குடை பிடிக்க அந்த குடைக்குள் வருகிறான் ரிஷி. அவள் கண்களை சந்திக்காமல் இருக்க முயன்று தோற்று அவள் கண்களையே மறுபடியும் சரணடைகின்றன அவனது கண்கள். இமைக்க மறந்து நிற்கிறாள் அவள்.

    2

    ஸ்டார்ட் கேமிரா.... ஆக்ஷன்..... இயக்குனரின் குரல் ஒலிக்க ஓடத்துவங்குகிறது கேமரா! பாடலின் பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    அவனுக்கு மிக நெருக்கமாக அவள். 'ரோஜா....ப்பூ.... ஏதாவது.... பேசுடா...' கிசுகிசுப்பாய் ஒலிக்கிறது அவன் குரல்.

    அவள் வெட்கத்துடன் சிரிக்க, அவன் சிரித்தபடியே அவள் கையிலிருந்து குடையை பிடுங்கி தூக்கி எறிகிறான். பறக்கிறது குடை. மழை இருவரையும் நனைக்க, அவள் சிணுங்கி விலக, அவளை இழுத்து தன்னோடு சேர்த்து, ஒற்றை புருவம் உயர்த்தி கண் சிமிட்டுகிறான் சிமிட்டுகிறான் ரிஷி.

    .துவங்குகிறது பாடல்......

    மழை தேடி காத்திருந்தேன்...... காத்திருந்தேன்.......

    மனம் தேடும் மழையானாய்...... மழையானாய்.....

    அவனை கொஞ்சமாய் தள்ளி விட்டு அவள் விலக எத்தனித்து,  அவன் கைப்பிடியில் சுழன்று திரும்பி, அவனிடம் தஞ்சமாகி, அவன் கைகள் இடை வளைக்க, வெட்க குளிரில் அவள் நடுங்குவதை உணர்கிறான் அவன்.

    கேமரா அவர்களை விழுங்கிக்கொண்டிருக்க.... பாடல் தொடர்கிறது...

    அவள் கண்களில் சந்தோஷ சாரல். அவளது விழி ஈர்ப்பில் விழுந்துவிடாமல் இருக்க முயன்று முயன்று தோற்றுவிட்டிருந்தான் அவன்.

    கரைந்தேனடி கண்களில்....

    விழுந்தேனடி வெள்ளத்தில்....

    மேகத்தில் நடப்பதை போன்றதொரு உணர்வில் இருவரும். அவன் கைகளுக்குள் அவள். பாடலுக்கு ஏற்றபடியான உதட்டசைவுடன், அவள் நெற்றி முட்டுகிறான் ரிஷி.

    கரைசேர்ப்....

    திடுக்கென்று விழித்துக்கொண்டான் ரிஷி. காரினுள் ஒலித்துக்கொண்டிருந்தது அந்த பாடல். இரண்டரை, மூன்று வருடங்களுக்கு முன்னால் அவன் நடித்த ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது.

    அந்த பாடலும், பாடலென்ன???? அந்த படமே அவனது பொக்கிஷம்.!!!

    அந்த பாடலின் ஒவ்வொரு அசைவையும் சிந்தாமல், சிதறாமல் மனதிற்குள் பொத்தி வைத்திருக்கிறான் அவன். இதோ கண் மூடிய நொடியில், கனவாக அதுவே மலர்கிறது.

    மெலிதான ஒரு பெருமூச்சு அவனிடம். மெல்ல கண்மூடிக்கொள்கிறான். மறுபடி அந்த கனவுக்குள் நுழைந்து விட முடியுமா என்றொரு பேராசை. கிட்டவில்லை அந்த கனவு.  பாடல் காருக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த பாடலில் அவனுடன் கரைந்தவளின் முகம் அவன் கண்களுக்குள்.

    'ரோஜாப்பூ... கொஞ்சம் கண்ணை திறந்துதான் பாரேன்....' பாடலின் இடையே ஒலிக்கிறது அவன் குரல். அந்த பாடலின் இடை இடையே ஒலிக்கும் அவனது குரலே, அந்த பாடலின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது.

    'ரோஜாப்பூ...' அந்த படம் முழுவதும் அவளை அப்படிதான் அழைப்பான் அவன்.

    ரோஜாப்பூதான் அவள்.!!! நிஜமாகவே ஒரு முள்ளில்லா ரோஜாதான் அவள்.!!! அவள் அவனுடைய முதல் கதாநாயகி.!!!

    நடிக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லாத போதிலும், அவனுடன் மட்டும் சில படங்களில் நடித்தவள். அவனுக்காகவே அவனுக்கு மட்டுமே கதாநாயகியாக நடித்தவள் அவள்.

    அவள் இயக்குனர் இந்திரஜித்தின் மகள்!!! இயக்குனர் இந்திரஜித் இவனது கலையுலக குரு!!! அவர் இல்லையென்றால் இவன் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது.!! அருமையான மனிதர் அவர்.!!!!

    முன் சீட்டிலிருந்து திரும்பி பார்த்தான் சஞ்சீவ். 'என்னடா எழுந்துட்டியா அதுக்குள்ளே?' இன்னும் கொஞ்ச நேரம் கனவிலே டூயட் பாடுவேன்னு நினைச்சேன். அதுக்குத்தான் உன் பட பாட்டெல்லாம் போட சொன்னேன்'

    ஜன்னலுக்கு வெளியில் பார்வையை திருப்பியபடியே ஏதோ அந்த பாடலில் நாட்டமே இல்லாதது போன்ற ஒரு முக பாவத்துடன் ''ரொம்ப முக்கியம்.!!!' தூக்கம் கெட்டுப்போச்சுடா டேய்.....' என்றான் ரிஷி.

    இப்போதெல்லாம் பொய் எப்படி இவ்வளவு சுலபமாக வருகிறதோ? அவனுக்கே புரியவில்லை.!!!

    நடிகனான பிறகு நடிப்பதை நிறுத்தவே முடியவில்லையோ அவனால்.???? எல்லாரிடமும், எப்போதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடிக்க வேண்டியதாகவே இருக்கிறது.

    இதோ நடித்துக்கொண்டே இருக்கிறான்.!!!!! அவள் தனது மனதில் இல்லவே இல்லை என இந்த நிமிடம் அவள் உட்பட எல்லாரிடமும் நடித்துக்கொண்டே இருக்கிறான்.!!!! கையை திருப்பி நேரம் பார்த்தான். மணி அதிகாலை மூன்றரை.

    சூடா ஒரு காபி குடிக்கறியாடா? என்றபடியே பிளாஸ்க்கிலிருந்து சுடச்சுட காபியை ஒரு கோப்பையில் ஊற்றி ரிஷியை நோக்கி நீட்டினான் சஞ்சீவ்.

    காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார் பரந்தாமன். சஞ்சீவ் இறங்க அவன் பின்னாலேயே இறங்கினான் ரிஷி.

    அதிகமான வாகன போக்குவரத்து இல்லாமல் தேசிய நெடுஞ்சாலை கொஞ்சம் அமைதியாகவே இருந்தது. சாலையின் இரு புறத்திலும் மரங்கள்.

    அப்படியே கொஞ்ச தூரம் நடந்திட்டு திரும்பலாமாடா? ரோட்டிலே நடந்து ரொம்ப நாள் ஆச்சு.

    'எவனாவது பார்க்க போறான்டா' என்றான் ரிஷி.

    'அதெல்லாம் எவனும் பார்க்க மாட்டான் நீ வா'

    சில்லென்று வருடிய அதிகாலை நேர காற்றை அழாமாக ஸ்வாசித்தபடியே, கையில் இருந்த காபியை ருசித்துக்கொண்டு  நடந்தனர் இருவரும். சஞ்சீவின் கண்கள் மட்டும் ஒரு பாதுகாப்பு உணர்வுடன் அவ்வப்போது இங்குமங்கும் சுழன்று சுழன்று திரும்பிக்கொண்டிருந்தது.

    சில அடிகள் தாண்டி ஒரு மரத்தின் பின்னாலிருந்து இவர்கள் வருவதை பார்த்தபடியே நின்றிருந்தனர் அந்த இரண்டு அடியாட்கள்.

    நடந்தனர் இருவரும். 'சஞ்சா...' என்றான் ரிஷி மெல்ல. 'நான் என் கெஸ்ட் ஹவுசுக்கே போறேண்டா. உங்க வீட்டிலே கல்யாண வேலைகள் இருக்கும். நடுவிலே நான் இருந்தா சரியா வராது. தேவை இல்லாம யாராவது....'

    'பச்... உன்னை ஈ.சி.ஆர். லே தனியா விட்டுட்டு என்னாலே இங்கே நிம்மதியா இருக்க முடியாது. ரிஷி. புரிஞ்சுக்கோடா. இந்த ஊரை விட்டு நீ திரும்ப போற வரைக்கும் என் கூடத்தான் இருக்கணும்.' அந்த மரத்திற்கு கொஞ்சம் அருகில் வந்துவிட்டிருந்தனர் இருவரும்.

    'சரி. ஒண்ணு பண்ணலாம்.' என்றான் சஞ்சீவ். 'என்னோட திருவான்மியூர் கெஸ்ட் ஹவுஸ்லே இரு. அங்கே நீ ப்ரீயா இருக்கலாம். நான் நைட்லே உன் கூட வந்து இருக்கேன் சரியா?

    ரிஷி பதில் சொல்வதற்குள் அந்த மரத்தின் பின்னாலிருந்து சட்டென வெளிப்பட்டு இவர்களை வழி மறித்தனர் அந்த அடியாட்கள். திடுக்கிட்டு பின்வாங்கினர் இருவரும். ஒரு முறை இருவரின் கண்களும் சந்தித்து திரும்பின.

    டேய்... நம்ம எஸ். கே சார்டா என்றான் ஒருவன். சார் நான் உங்க பரம விசிறி சார்'

    டேய்.... இது ஆர்.கே டா. இவன் எதுக்குடா இங்கே வந்தான்? ---- இது மற்றொருவன்.

    சஞ்சீவ் ரிஷியின் கையை பற்றி மெல்ல அழுத்த, சூழ்நிலையை உணர்ந்து திரும்பி காரை நோக்கி நடக்க துவங்கினர் இருவரும்.

    அவர்களுடனே பக்கத்துக்கு ஒருவனாய் நடந்தனர் அந்த இரண்டு ரௌடிகளும். ரிஷியின் கையை பிடித்தபடி நடையில் வேகம் கூட்டினான் சஞ்சீவ்.

    'அதுதான் பயந்து ஓடி போனே இல்லே. எதுக்குடா இங்கே திரும்பி வந்தே? என்ன தைரியம் உனக்கு?'

    பதில் பேசவில்லை இருவரும். கிட்டத்தட்ட காரை நெருங்கி விட்ட நிலையில்......

    'எங்கேடா அந்த ராங்கிக்காரி? அவளும் இருக்காளா உன்கூட? என்றான் ஒருவன். அவன் யாரை குறிப்பிடுகிறான் என்று புரிய ரிஷியினுள்ளே எரிமலை.

    அவன் உதிர்த்த அடுத்த சில வார்த்தைகளில் கொதித்து போய் தன்னை மறந்தவனாய், கையிலிருந்த காபி கோப்பையை கீழே போட்டுவிட்டு, அவன் கோபம் அறிந்து அவனை தடுக்கும் விதமாக அவனை அழுத்தமாக பற்றியிருந்த சஞ்சீவின் கையை உதறி விட்டு. அவன் மீது பாய்ந்திருந்தான் ரிஷி.

    அடுத்த நான்கு நொடிக்குள், ஒருவன் ரிஷியை அருகிலிருந்த மரத்தின் மீது சாய்த்து அழுத்தி பிடித்திருக்க, மற்றொருவன் கையில் பளபளக்கும் கத்தியை ஏந்தி இருந்தான்.

    ரிஷி சுதாரித்து திமிறி எழ, அதற்குள் சஞ்சீவின் காருக்குள் இருந்த கைத்துப்பாக்கி அவன் கைக்கு வர, அடுத்த நொடி கத்தியை ஏந்தியவனின் நெற்றிப்பொட்டில் இருந்தது அது. 'கத்தியை கீழே போடு தம்பி........'

    இவற்றையெல்லாம் அதிர்ச்சியுடன் பார்த்தபடியே காரை விட்டு இறங்கினார் பரந்தாமன்

    கத்தி கீழே போடப்பட ரிஷி மீதிருந்த மற்றொருவனின் பிடி தளர்ந்தது.

    'ரிஷி காரிலே ஏறுடா' என்ற சஞ்சீவ். அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்தியபடியே கேட்டான் 'உங்களை அனுப்பினது யாருடா?'

    'அஸ்வத் சார்' பதில் வந்தது ஒருவனிடமிருந்து.

    அஸ்வத்தா????... காரில் ஏறப்போனவன் சட்டென திரும்பினான்.

    'நினைச்சேன்' என்றான் சஞ்சீவ். 'காரிலே ஏறுங்கடா ரெண்டு பெரும். மிச்சத்தை போலீஸ் கமிஷனர் கிட்டே நான் பேசிக்கறேன்'. 

    'வேண்டாம் சஞ்சா' என்றான் ரிஷி. அவங்களை விட்டுடு.

    ஏன்டா? திகைப்புடன் கேட்டான் எஸ்.கே.

    அவனுக்கு பதில் சொல்லாமல் அந்த ரௌடிகளை பார்த்தவன் மெல்ல சொன்னான் 'நான் கொஞ்ச நாள் எஸ்.கே வோட திருவான்மியூர் கெஸ்ட் ஹவுஸ்லே தான் இருப்பேன். வேணும்னா உங்க அஸ்வத்தை நேரிலேயே வந்து கணக்கை தீர்த்துக்க சொல்லு. அப்போவாவது அவன் மனசு ஆறும்னா எனக்கு அது சந்தோஷம்தான்.

    'சஞ்சா காரிலே ஏறுடா' என்றபடி சஞ்சீவை இழுத்துக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தான் ரிஷி. கார் புறப்பட்டது. காரிலிருந்த தண்ணீர் பாட்டிலை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டான் சஞ்சீவ்.

    கார் கொஞ்சம் நகர்ந்தபிறகு கேட்டார் பரந்தாமன் 'நிஜமாவே அஸ்வத்தோட ஆளுங்கதானா சார் இவங்க. இல்லை பொய் சொல்றானுங்களா? ஆர்.கே சார் வர்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தானே தெரியும். அப்போ எப்படி இங்கே கரெக்டா வந்தானுங்க.? எனக்கு ஒண்ணுமே புரியலை. இவனுங்களை ஏன் சார் அப்படியே விட்டீங்க.? போலீஸ்லே ஒப்படைச்சு இருந்தா நிறைய உண்மைகள் தெரிஞ்சிருக்கும்.'

    ரிஷி ஏதோ சொல்ல வாயெடுக்க, அவனை கண்களால் அடக்கினான் அருகில் இருந்த சஞ்சீவ். பரந்தாமன் எதிரில் எதையும் பேச விருப்பமில்லை அவனுக்கு.

    'பார்க்கலாம் பரந்தாமன். எங்கே போயிடுவாங்க.? திரும்ப நம்ம கிட்டே தான் வரணும். ஒரு கை பார்த்திடலாம் விடுங்க. எல்லா உண்மையும் ஒரு நாள் வெளியே வரும்' பொதுப்படையாக சொன்னான் சஞ்சீவ்.

    ஆனாலும் அவனுக்குள்ளும் அந்த கேள்வி உறுத்தியது. இவர்கள் வருவது  அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

    அடுத்த சில மணி நேரங்களில் கெஸ்ட் ஹவுசை அடைந்திருந்தனர். அந்த பிரம்மாண்ட பங்களாவினுள் நுழைந்தது கார். கடற்கரையை ஒட்டிய பங்களா அது.

    அங்கே இருந்த வேலையாட்களிடம் உத்தரவுகளை பிறப்பித்து விட்டு அவர்களை. ரிஷிக்கு அறிமுக படுத்திவிட்டு, அவனை மாடி அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான் சஞ்சீவ்.

    அடுத்த நொடி அங்கே இருந்த கட்டிலில் அப்படியே கண்மூடி சாய்ந்தான் ரிஷி. மனம்  பல்வேறு உணர்வுகளின் தாக்கத்தில் அலைப்பாய்ந்துக்கொண்டிருந்தது.

    அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பட்டென வெடித்தான் அவனருகில் நின்றிருந்த சஞ்சீவ் 'பைத்தியக்காரன்டா நீ. இமோஷனல் ஃபூல். அவனுங்களை போலீஸ்லே ஒப்படைச்சு இருந்திருக்கலாம். நாளைக்கு காலையிலே எல்லா விஷயமும் பேப்பர்லே, இன்டர்நெட்லேன்னு பறந்திருக்கும். எல்லாருக்கும் ஒரு பயமும் வந்திருக்கும்.'

    கண் திறக்காமல் இடம் வலமாக தலை அசைத்தான் ரிஷி. ' 'அதனாலே தான் வேண்டாம்னு சொன்னேன்' போதும்டா எல்லாம் போதும். நான் யார் கூடவும் மோத விரும்பலை. இதுக்குதான் இங்கே வரவே வேண்டாம்னு நினைச்சேன்......' ஒரு நொடி மௌனம் அவனிடம் .

    'என்னை பிடிச்சு இழுத்திட்டாடா அவ. பிடிச்சு இழுத்திட்டா என்னை.' எதற்குள்ளோ நழுவிப்போனவன் போல் தன்னையும் மறந்து சொல்லிவிட்டிருந்தான் ரிஷி.

    'அப்படி சொல்லு' தனது ஒரு காலை தூக்கி கட்டிலின் மீது வைத்துக்கொண்டு சிரித்தான்  சஞ்சீவ். 'அவ என்னடா உன்னை பிடிச்சு இழுக்கறது.? நீ அவளை உன் பக்கம்

    Enjoying the preview?
    Page 1 of 1