Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Mandhiram
Kaadhal Mandhiram
Kaadhal Mandhiram
Ebook457 pages3 hours

Kaadhal Mandhiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateDec 23, 2016
ISBN6580103801765
Kaadhal Mandhiram

Read more from Kottayam Pushpanath

Related to Kaadhal Mandhiram

Related ebooks

Related categories

Reviews for Kaadhal Mandhiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Mandhiram - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    காதல் மந்திரம்

    Kaadhal Mandhiram

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    Translated by:

    சிவன்

    Sivan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    காதல் மந்திரம்

    உங்களுடன் கொஞ்சம்.

    சாவி வார இதழில் அடுத்தடுத்து வெளியான (இரண்டு வருடத்துக்குள் மூன்று) தொடர்களில் மூன்றாவது தொடர்கதை காதல் மந்திரம்.

    7.7.1993 தேதியிட்ட சாவி இதழில் தொடங்கி 8.6.1994 இதழில் 49 அத்தியாயங்களாக வெளிவந்த மாந்திரீக நாவல். இப்படியொரு வாய்ப்பு அளித்த முதுபெரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு. சாவி அவர்கள் என்றென்றும் என் நன்றிக்கு உரியவர். அவரது ஆத்மா சாந்தியடைய இந்தத் தருணத்தில் மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

    மொழிபெயர்ப்புக் கதைகளுக்கு ஒரு மவுஸ் ஏற்படுத்தியவர் சாவி. இதை எவரும் மறுக்க முடியாது. ஒரு மொழிபெயர்ப்பு நாவலை, மொழிபெயர்ப்பாளருக்கு உரிய கெளரவத்துடன் வெளியிட்டவரும் அவர்தான். மொழிப்பெயர்ப்பாளரை, ஓர் எழுத்தாளராகவே மதிக்கும் பெருந்தன்மை அவரிடம் இருந்தது.

    சமீப காலமாக மொழிபெயர்ப்புகள் குறித்துப் பல்வேறு வகையான விமரிசனங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவற்றில் பெரும்பாலானவை உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தின. அளவில் மிகவும் குறைவான விமரிசனங்களே என்னைக் காயப்படுத்தின. காயப்படுத்துவதற்காகவே செய்யப்பட்ட விமரிசனங்கள் அவை என்பதுதான் காரணம். அப்படிப்பட்ட விமரிசனங்களில் தீவிரமான தாக்குதலுடன் அவர்களின் அறியாமையும் அதிகமாக இருந்தது, என் வலியை அதிகப்படுத்திவிட்டது. ஒப்புக்கொள்கிறேன்.

    விமரிசனம் செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தபோது, தமிழ் எழுத்தாளர்கள் யார் யார் மீதெல்லாமோ விமரிசகருக்கு ஏற்பட்ட கோபத்தை இதன் மூலமாக இறக்கி வைத்து விட்டார். தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்கள் தமிழ்மொழியின் தரத்தை உயர்த்துவதாக இருக்கவேண்டும். மாறாக ஏற்கெனவே இங்கிருக்கும் குப்பைகளுக்கு நடுவே மற்றொரு குப்பையாகி விடக்கூடாது! இது நேரடியான வார்த்தைகள் அல்ல, அதன் தொனி.

    தம்மை ஒரு மாபெரும் இலக்கியவாதியாக, கவிஞனாக, இலக்கியத்தைச் சுத்தம் செய்யும் தோட்டியாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த விமரிசகர், ஜனரஞ்சகக் கதைகளை வெளியிடும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கடந்த பல வருடங்களாகக் குப்பை கொட்டிக் கொண்டிருப்பவர்தான். நாகரிகம் கருதியே இங்கு அவரது பெயரை தவிர்த்திருக்கிறேன். மற்றபடி பயமெதுவும் கிடையாது. தமிழ் எழுத்தாளர்களிடம் நேரடியாக இதைச் சொன்னால், அவர் சார்ந்த பத்திரிகையிலிருந்து அவர் கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்படுவார். அதைத் தவிர்ப்பதற்காகவும் தன் மனஅவசத்தைத் தீர்ப்பதற்காகவும் இப்படி என் முதுகைக் கூர்மையான நகங்களால் பிறாண்டியிருக்கிறார். அந்த அற்ப சந்தோஷமாவது அவருக்குக் கிடைத்ததே என்று மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்படிப் பொன்மொழி ஒன்றை உதிர்த்துவிட்டு, ‘ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக, தமிழில் அதிகமாக விற்பனையாகும் ஜனரஞ்சகப் பத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்புத் தொடர் ஒன்றைத் தொடங்கி, தொடங்கிய மூன்றாவது வாரத்திலேயே மொழிபெயர்ப்பு சரியில்லை என்று மூல ஆசிரியரால் புறக்கணிக்கப்பட்டு, மூக்கு உடைபட்டு, அசிங்கமடைந்து, நீதிமன்றம், வழக்கு, அபராதம் என்று அலைந்ததை கலாகௌமுதி உட்பட ஏராளமான மலையாளப் பத்திரிகைகள் விலாநோகச் சிரித்து விமரிசனம் செய்தன.

    இலக்கியரீதியாக மனநலம் பாதிக்கப்பட்ட அவரைத் திருத்துவதோ, பாடம் புகட்டுவதோ என் நோக்கமல்ல; அதற்கெல்லாம் எனக்கு நேரமும் கிடையாது. அவரை நான் பொருட்படுத்துவதும் இல்லை. இருப்பினும். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக என் புத்தகங்களை விரும்பிவாசிக்க மிகச் சிறிய அளவிலாவது வாசகர் கூட்டம் ஒன்று உருவாகியிருக்கிறது. அப்படிப்பட்ட வாசகர்களிடம் மேற்குறிப்பிட்ட விமரிசனம் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் அதைத் தீர்த்து வைப்பது என்னுடைய கடமை. அதையே இங்கு செய்திருக்கிறேன்.

    தமிழ்மொழியில் வெளிவந்துள்ள புத்தகங்களையே படிக்க நேரம் இல்லாத வாசகர்கள் வேற்றுமொழிப் புத்தகங்களைப் படித்து மூலத்தை எப்படி அடையாளம் காண முடியும்? எனவே நம்மவர்கள் அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து, மூலத்தின் அடையாளங்களைச் சிதைப்பதற்காக ஆங்காங்கே குப்பன், சுப்பன், வள்ளி, காயத்ரி என்று ஒட்டுப்போட்டுத் தங்களது சொந்தப் படைப்புகளாக வெளியிட்டுக் கொள்ள முடிகிறது. ஒருசில பத்திரிகைகள் இப்படியொரு பொய்யைச் சொல்லும்படி அவர்களை வற்புறுத்தவும் செய்கிறது. அது ஒரு நடைமுறையாகவும் மாறிவிட்டிருக்கிறது. நம்மவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், புகழ்பெற்ற தமிழ் நாவல்களை அப்படியே நடைபெயர்த்து தொடராகவோ, புத்தகமாகவோ வெளியிடுவதும் நடக்கிறது. இதற்கெல்லாம் பின்புலமும் ஒரு காரணம். ஆனால், மனசாட்சிக்கு விரோதமாக நான் அப்படியெல்லாம் செய்வதில்லை. அதனாலேயே மூல ஆசிரியரின் பெயரைத் தைரியமாகப் பயன்படுத்தும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக என்னால் நடந்துகொள்ள முடிகிறது.

    மேற்குறிப்பிட்ட விமரிசக நண்பரின் பிரகடனம், உண்மையாகவே தூய்மையான மனத்துடன் சொல்லப்பட்டதாக இருந்தால், ஒரு மொழிபெயர்ப்பாளனான எனக்கும், மொழிபெயர்ப்பைத் தொழிலாகக் கொண்டு அதை வெளிப்படுத்தத் தயங்குபவர்களுக்கும் ஆரோக்கியமான அறிவுரைதான். பூனையின் கழுத்தில் மணி கட்டுவது யார்? என்று யோசித்து கடைசியில் அவர் அதை என் கழுத்தில் கட்டிவிட்டார். அதனாலேயே நான் இப்போது ‘மணிகண்டன்’ ஆகியிருக்கிறேன்.

    இறுதியாக ஒரு வார்த்தை. நான் மொழிபெயர்க்கும் புத்தகத்தின் தரம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்தே செய்கிறேன். 'தெரிந்தே செய்வதால் தவறாகாதோ?’ என்று நீங்கள் கேட்கலாம். இல்லை. கல்வித்தரமும், புத்தக வாசிப்பும் குறைந்துவிட்ட இன்றைய சூழலில் முதலில் வாசகரை வாசிக்கவைப்போம். வாசிப்பில் அவர் தேறிய பிறகு கையைப்பிடித்து இன்னும் மேலே கொண்டு செல்வோம். அதுதான் சாத்தியம். அப்படிச் செய்வது மொழியின் மீது இலக்கியத்தின் மீது, சமூகத்தின் மீது கொண்டுள்ள நமது அக்கறையின் அடையாளமாக இருக்கும்.

    உலகின் மிகச் சிறந்த இலக்கியங்கள் நம்மிடம் உள்ளன. உண்மைதான். பிறகு எதற்குப் புதிய எழுத்துகளும், மொழிபெயர்ப்பும் என்று கேட்பது அறிவு சார்ந்த ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. உண்மையைச் சொன்னால், நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளங்கள் அவை. மிகச் சிறந்த படைப்புகளை மட்டுமே மொழிபெயர்ப்பது என்ற விரதத்தை நான் கைக்கொள்ளவில்லையெனினும், அப்படியும் சிலவற்றைச் செய்ய முடிந்ததே என்கிற திருப்தி எனக்கு உண்டு - இது 96-ம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தின் முன்னுரையில் நான் குறிப்பிட்டிருக்கிற வாசகம்.

    பத்திரிகை ஆசிரியர்களிடமோ, பதிப்பாளர்களிடமோ இது போன்ற கதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இது ஒரு விட்டலாச்சார்யா கதை' என்று குறிப்பிடுவது வழக்கம். மகத்தான இலக்கியம் என்றெல்லாம் கொடி பிடித்தது இல்லை. இது என் பணியில் எனக்குள்ள நேர்மையின் அடையாளம். பொதுவாக எல்லோரையும், எல்லா சந்தர்ப்பங்களிலும் திருப்திப்படுத்துவது எவருக்குமே சாத்தியமான ஒன்றல்ல; அது என்னுடைய நோக்கமும் அல்ல.

    காதல் மந்திரம் என்கிற இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கவும், வெளியிடவும் அனுமதி அளித்த திரு. கோட்டயம் புஷ்பநாத், அழகாக அச்சிடும் கலா நிலையம் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், இதன் கட்டுமானத்தில் துணையாக இருந்த அனைவருடன், வாங்கி ஆதரிக்கும் வாசகப் பெருமக்களுக்கும் மனமார்ந்த என் நன்றி உரித்தாகிறது.

    சென்னை - 600 078                                           தோழமையுடன் தொலைபேசி : 2483 7681                                            சிவன்

    காதல் மந்திரம்

    1

    அதோ தெரிகிறதே… அதுதான் உதயநல்லூர் கிராமம்!

    ரகசியங்களின் சேமிப்புக் கிடங்கு உதயநல்லூர். அதையொட்டிபடி ஒடிக்கொண்டிருப்பதுதான் இருவழிஞ்சி ஆறு. மழைக்காலத்தில் வெள்ளம் பாய்ந்து வழியும் ஆறு. காட்டு மரங்களை வேரோடு பறித்து, சீறிப்பாய்ந்து கிராமத்தையே நடுநடுங்க வைத்தபடி மேற்குப்புறமாகப் பாய்ந்துவரும் ஆறு. கிழக்குப்பகுதியில் பாண்டவமலை. பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் பாஞ்சாலியுடன் கொஞ்ச காலம் வசித்திருந்த மலை. அவர்கள் உபயோகித்த பொருட்களும், வசித்த அந்த இடமும் இன்றும் மலையுச்சியில் உள்ளதாம். அந்த மலையிலிருந்துதான் இந்த ஆறும் உற்பத்தியாகிறது.

    ஆற்றைக் கடந்து கிராமத்தை அடைந்தால் மையத்தை நோக்கி நீளும் கிராமப்புறச்சாலை. நாகரிகத்தின் ஆரம்ப காலப் பாடங்களையே அறியாத கிராமத்தினர்தான் அங்கு வசித்திருந்தனர்.

    ஒருவிதத்தில் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதானால், மேலக்காவு மனையைச் சேர்ந்த பிரம்மதத்தன் நம்பூதிரியின் அடிமைகள் என்றே கூறலாம். அவரது மந்திரதந்திர வித்தைகளில் மதிமயங்கி, கோழைகளாக வாழ்க்கை நடத்திய சாமானிய மக்கள்.

    பழங்காலத்தில் இந்த நாடு உதயவர்மன் என்கிற ஒரு சிற்றரசனின் ஆட்சியில் இருந்தது. அதனால்தான் அந்தக் கிராமத்திற்கு இந்தப் பெயரே ஏற்பட்டது. பழங்காலத்தில் ஊருக்கு ஊர், இனத்திற்கு இனம் அடிக்கடி போர் நிகழ்ந்த காலங்களில் - நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டங்களில் மேலக்காவு நம்பூதிரிகள் போர்க் காலங்களில் மன்னர்களுக்கு உதவியாக இருந்தனர். இந்த உதவி என்பது உடல் பலத்தினாலோ, ஆயுத பலத்தினாலோ அல்ல; மந்திர வித்தைகளால்! இவ்வாறு கோயில் சார்ந்த பகுதிகளை நிர்வகித்து வந்த நம்பூதிரிகள், பிற்காலத்தில் ராஜகுடும்பத்தினரை அடக்கி அவர்களை ஆளவும், மன்னர்களைத் தங்களது சொற்படி நடக்க வைக்கவும் செய்தனர்.

    அரண்மனைகளின் அந்தப்புரங்களில் வசித்த பருவமடைந்த பெண்கள், இந்த நம்பூதிரிகளின் படுக்கையறையை அலங்கரித்தனர். அவர்களது முன்னிலையில் பெண்மை தன்னைப் பலியிட்டுக் கொண்டது. மந்திர வித்தைகள் தெரிந்த இந்த நம்பூதிரிகளுக்கு இன்பம் வழங்காதபோது நாட்டையும், அதிகாரப் பதவியையும் இழக்க நேரிடும் என்று மன்னர்கள் உறுதியாக நம்பினர். இந்தப் பழக்கம் தலைமுறைகள் தாண்டியும் அப்படியே தொடர்ந்தது. பின்னர் மன்னர்கள் நாடாண்ட பதவியை இழந்து, அதிகாரம் குன்றினர். அந்தச் சந்தர்ப்பத்தில் மேலக்காவு நம்பூதிரிகள் மன்னர்களாகவே மாறினர். கண்களுக்கு அழகான பெண்கள் ஒவ்வொருவரும் நம்பூதிரிகளுக்குப் படுக்கை விரிக்க வேண்டியிருந்தது. இவ்வழக்கம் பிரம்மத்தன் நம்பூதிரிவரை அறுபடாமல் தொடர்ந்தும் வருகிறது.

    பிரம்மதத்தன் பயங்கரமான பேர்வழி உயரம் ஆறடி மூன்று அங்குலம். அதற்கேற்ற ஆஜானுபாகுத் தோற்றம். நீட்டினால் முழங்காலைத் தொடும் கைகள். உடம்பின் சதைப் பகுதியில் காட்டுக் கொடிகள் படர்ந்து இருப்பதுபோல் தெரியும் நீலநரம்புகள். கரடித்தோலை ஒட்ட வைத்தது போன்ற மார்புப் பகுதி ரோமங்கள். வெளவால்களை ஒட்ட வைத்திருப்பது போன்ற புருவங்கள். கோவைப் பழம் போன்ற சிவந்த கண்கள். கழுகின் அலகு போன்ற வளைந்த மூக்கு. கழுத்தில் செதுக்கியெடுக்காத பாக்குகள் போன்ற உருத்திராட்சங்கள் கோத்த மாலை. பெருவிரல் கனத்தில் தோளிலிருந்து தொப்பூழ் வரை சரிந்து கிடக்கும் பூணுரல். அதில் வெள்ளியாலான மூன்று சாவிகள். சதை உருண்டு, உயர்ந்து நிற்கும் உறுதியான தொப்பை விழுந்த வயிறு.

    பிரம்மதத்தனின் பெயரைக் கேட்டாலே பெண்கள் நடுங்கத் தொடங்கினர் - குறிப்பாகப் பதினைந்து வயதைக் கடந்த பெண்கள். மோசமான காரியங்களுக்காக மந்திரத்தைப் பயன்படுத்துபவரான பிரம்மதத்தனை எதிர்த்து நிற்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை. ஊரில் எந்தப் பெண் வயதுக்கு வந்தாலும் பிரம்மதத்தனுக்குத் தெரிந்துவிடும். இந்த விஷயத்தை அவருக்குத் தெரிவிப்பதற்காகவென்றே பெண் ஒற்றர்கள் சிலரும் இருந்தனர். பிறகு நேரடியாக அவர்களில் ஒருத்தி அந்த வீட்டிற்கு வருவாள். அதற்கடுத்த ஐந்தாம் நாள் பிரம்மதத்தன் அந்த வீட்டில்தான் இரவில் தங்குவார்!

    தன்னுடைய சொந்தச் சகோதரியை ஐம்பத்தைந்து வயதைக் கடந்த எமன் போன்ற ஒருவன் பலாத்காரம் செய்வதைக் காணச் சகிக்காத, ஒரு சில துணிச்சலான இளைஞர்கள் அவருடன் போராட முயன்றனர்.

    பிரம்மதத்தன் புறப்பட்டு வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர் வரும் வழியையே பார்த்தபடி ஒருவன் காத்திருந்தான். வெகு தூரத்தில் லாந்தர் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. யாரும் துணைக்கு இல்லை. தனியாக வந்தார். ‘இன்றுடன் நான் இந்த ஊரின் சாபத்தை அழிக்கப் போகிறேன்! என்றபடி தீட்டி வைத்திருந்த அரிவாளின் கூர்மையை நகத்தால் உரசிப் பார்த்து அந்த இளைஞன் திருப்தியடைந்தபொழுது எங்கிருந்துதான் வந்ததென்று தெரியாமல் பலமாக ஓர் அடி விழுந்தது அவனுக்கு, பிறகு எதுவுமே நடக்காததுபோல் பிரம்மதத்தன் அவனைக் கடந்து போனார். மறுநாள் காலையில் தலை தகர்ந்துபோய், மூளை சிதறியபடி அங்கு அந்த இளைஞனின் பிணம் கிடந்தது.

    மேலக்காவுமனை இல்லத்தில் பிரம்மதத்தன் நம்பூதிரி தவிர மேலும் இரண்டு பேர் இருந்தனர். ஒருத்தி அவரது சகோதரி நாராயணி அந்தர்ஜனம். நாற்பத்தைந்து வயதைக் கடந்தவள். மற்றவள், அவளது மகள் ஊர்மிளா. பதினேழு வயதைக் கடந்த ஊர்மிளா ஒரு தேவதை மாதிரி இருந்தாள். அவளது அப்பா வடகேரளத்தில் எங்கேயோ வசித்த ஒரு நம்பூதிரி.

    ஒரு தடவை அவர் பிரம்மதத்தன் நம்பூதிரியுடன் மேலக்காவு மனைக்கு வந்தார். அவர்கள் மட்டுமே கலந்துகொண்ட சடங்கில் அவர் நாராயணியின் கழுத்தில் தாலி கட்டினார். திருமணம் முடிந்த நாற்பத்தோராவது நாள் காலையில் அவரது பிணம் ஆற்றங்கரையில் கிடந்ததை ஊரார் பார்த்தனர். மரணம் எதனால் ஏற்பட்டது என்பது எவருக்குமே விளங்காத புதிராக இருந்தது. பத்து மாதம் முடிவதற்குள் நாராயணி, ஊர்மிளாவைப் பெற்றெடுத்தாள். விதவையாகிப் போன நாராயணி அதற்குப் பிறகு புருஷவாசனை அறியாமலே வாழத் தொடங்கினாள். ஊர்மிளாவை அவள் தரையில் விடாமலேயே வளர்த்தாள்.

    கோயில்களில் வடித்து வைக்கப்பட்டிருந்த சிலைகளின் கட்டழகு, ஊர்மிளாவுக்கு இருந்தது. கையில் அகல்விளக்கு ஏந்தி நிற்கும் கற்சிலை போல் அவளது உடல்வளம் கச்சிதமாக அமைந்திருந்தது. அழகு அவளில் நிறைந்து வழிந்தது. உலகிலுள்ள எல்லா அழகான பொருட்களுக்கும் அவளே ஆதாரமான அழகாக இருந்தாள்!

    இந்திர வில் போன்ற புருவங்கள். சரஸ்வதி தேவியின் கண்கள். மாலை நேரத்தின் நிறம் பூண்ட கன்னக்கதுப்புகள். காமனின் மலர்க்கணையேற்ற மார்பகங்கள். கோயிலிலுள்ள நடனமாடும் சிலையின் நூலிடை போன்ற இடை அமைப்பு. ஆனால், ஆண்களின் முகத்தைக் காணாமலே அவள் வளர்ந்தாள். அவளது கற்பனையில் எந்த ஒர் ஆணுமே இடம் பெறவில்லை!

    இந்தக் காலகட்டத்தில்தான் உதயநல்லூர் கிராமத்தில் குறிப்பிட்ட சில இடைவெளிகளில் பத்தொன்பது வயதைத் தாண்டாத ஆனால், பதினைந்து வயது கடந்த பெண்கள் தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டிருந்தனர்! அவர்களில் இரண்டு பேருடைய உடம்புகள் தலையில்லாமல் ஆற்றில் கிடந்தன. நிர்வாணமாக நீரில் மிதந்தன. யாருக்கும், எதுவும் விளங்கவில்லை!

    அந்த ஊர் இளைஞர்களில் கொஞ்சம் தைரியம் வாய்ந்தவன் கேசவன்குட்டி. அவன் நெடுநாளாகப் பட்டணத்தில் படித்ததால், அந்த ஊர்க்காரர்களில் அதிகம் பேருக்கு அவனைத் தெரியாது. அவனது தாய்மாமன் வித்தை கற்றுக் கொடுக்கும் வாத்தியாராக இருந்ததால், அவரிடம் அவன் பாதுகாப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டான். அவனது அப்பா கடத்தநாட்டு வீரர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர். எனவே, கடந்தநாட்டுக்கே உரித்தான சிறப்பான வித்தைகளை (சண்டை முறைகள்) அவரிடம் அவன் கற்றிருந்தான்.

    எந்தவிதமான தழ்ச்சியும் இல்லையென்றால், முன்னும் பின்னுமாக இருபத்து நான்கு வீரர்களுடன் ஒற்றையாகப் போரிட்டுச் சமாளிக்கும் ஆற்றல் வாய்ந்த கேசவன்குட்டிக்கு, ஊரில் ஏற்படும் விவரம் தெரியாத மரணங்கள் ஒரு சவாலாகவே இருந்தன. எப்படியும் இதைக் கண்டுபிடித்தே தீருவது என்று அவன் உறுதி பூண்டான்.

    ஒரு தடவை அவனது மாமா, அவனிடம், கேசவா, விஷயம் நீ நினைப்பது போல் அவ்வளவு சுலபமானது அல்ல. மனிதர்கள்தான் இதைச் செய்தனர் என்றால் கண்டுபிடிக்கலாம். ஆனால், இதெல்லாம் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அல்ல என்றார்.

    எதனால் மாமா இப்படிச் சொல்கிறீர்கள்?

    நேற்று ஜோதிடம் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் பயமாக உள்ளது! அவர் சொன்னதும் சரிதான். காரணம், சண்டை கற்றுக்கொடுக்கும் வாத்தியாரான அவருக்கும் ஒரு மகள் இருந்தாள். பதினைந்தைத் தாண்டியவள். பெயர் ஸ்ரீகலா. பெண் குழந்தைகள் காணாமல் போவதும், பின்பு தலையற்று வெளிப்படுவதும் அவர் மனத்தை மிகவும் கலக்கிவிட்டிருந்தது.

    சொல்லுங்கள் மாமா! நான் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கேசவன் தடுக்குப்பாயை இழுத்துப் போட்டு மாமாவை நெருங்கி உட்கார்ந்தபடி கேட்டான்.

    ராகவக் குறுாப் சாய்வு நாற்காலியில், கால்களைக் கைப்பிடிக் கட்டைகள் மீது போட்டுச் சாய்ந்திருந்தார்.

    ஜோதிடத்தில் தென்பட்ட விஷயம் பயங்கரமானது. இந்தக் கிராமத்தில் எங்கோ நரபலி நடைபெறுகிறது.

    நரபலியா? இந்த ஊரிலா?

    ஆமாம்… ஏதோ ஒரு கோரப்பிசாசுக்காக இளம் பெண்களின் கன்னித்தன்மையை அழித்துவிட்டு யாரோ அவர்களை பலியிடுகிறார்கள்.

    நீங்கள் சொல்வது உண்மையா, மாமா? யார் இப்படியெல்லாம் செய்வது?

    வேறு யார்? எல்லாம் அந்தத் துரோகியின் வேலைதான். பிசாசாகப் பிறப்பெடுத்துள்ள அந்த மனிதகுல விரோதிதான். அவன் ஒரு மோசமான பூதமும்கூட அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க யாராலும் முடியவில்லை!

    அதற்கு எந்த வழியும் இல்லையா, மாமா?

    ஒரே ஒரு வழிதான் உள்ளது!

    அது என்ன?

    பாண்டவ மலையின் உட்பகுதியில் எங்கோ ஒரு கோயில் உள்ளதாம்!

    அது என்ன கோயில்?

    துர்க்காதேவி கோயில்!

    2

    துர்க்காதேவி கோயிலைக் குறித்து ஓர் ஐதீகமுண்டு. நூறு வருடங்களுக்கு மேல் பழமையேறிய அந்தக் கதை கிட்டு ஆசானுக்கு மட்டுமே தெரியும். அவர் ஒரு ஜோதிடரும்கூட. இதுவரை அவரது ஜோதிடக் கணிப்பில் எந்தத் தவறுமே ஏற்பட்டதில்லை என்று ஊரார் கூறுகின்றனர்.

    பாண்டவ மலையில் எங்கோ ஒளிந்திருக்கிற துர்க்காதேவி கோயிலின் இருப்பிடத்தைப் பற்றி, கிட்டு ஆசானைத் தவிர வேறு யாருக்கும் விவரம் தெரியாது என்று ராகவக் குறுாப் தன்னுடைய மருமகன் கேசவனிடம் கூறினார்.

    கிராம எல்லையில், ஆற்றங்கரையோரமாகப் பரவிக் கிடந்த பாறைகளில் ஒன்றின்மீது அமர்ந்தபடி கிட்டு ஆசான் மாலை நேரத்தைக் கழிப்பதுண்டு. அது அவரது வழக்கம். கொஞ்சம் ‘தைரியம்’ உள்ளே போனால் அவருக்குச் சந்தோஷத்துடன் எல்லாமே ஞாபகத்திற்கு வரும் என்றும், அதிலிருந்து தேவையானவற்றைப் பிரித்தெடுத்து அவர் ஒவ்வொன்றாகக் கூறுவார் என்றும் தெரிந்து கொண்டிருந்த கேசவன், ஒரு நாள் அதைச் செய்து பார்த்தான். ஒரு பாட்டில் நாட்டுச்சரக்கையும், கூடவே கொறிப்பதற்கு ஏற்றாற் போல் கொஞ்சம் வேர்க்கடலையும் வாங்கினான். மாலையில் அவர் காற்று வாங்கும் இடத்தைக் கண்டறிந்து அவரை அணுகினான்.

    அந்தப் பாறைக்கு அருகில் படர்ந்து பந்தல் போட்டது போல் ஒரு புன்னைமரம் இருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் நல்ல நிழலாக இருக்கும். அதைத் தாண்டி சற்றுத் தொலைவில்தான் ஊருக்குள் போகும் பாதை செல்கிறது.

    என்ன கேசவா, என்ன விசேஷம்? கையில் பை சகிதமாக எங்கே கிளம்பி விட்டாய்? - அவரை நோக்கி வந்த கேசவனிடம், அவர் கேட்டார்.

    உங்களைத் தேடித்தான் வந்தேன்? - கொண்டு வந்திருந்த பையை பாறைமேல் வைத்தபடி கூறினான்.

    இதென்ன பை?

    வேறு ஒன்றுமில்லை; ஒரு பாட்டிலும், கிளாஸ்சம் உள்ளன! -பையை அவரிடம் நகர்த்தி வைத்தான்.

    கிட்டு ஆசானின் கண்கள் மலர்ந்தன. கேசவன் விரைவாக பாட்டிலை வெளியே எடுத்து, கிளாஸில் கொஞ்சம் ஊற்றினான். பிறகு வேர்க்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து வைத்தான்.

    "என்னைப் பார்க்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டமாகவே புறப்பட்டு வந்திருக்கிறாயே, என்ன விஷயம்?

    சொல்கிறேன். முதலில் இதைச் சாப்பிடுங்கள். - கிளாஸில் ஊற்றியதை அவரிடம் நீட்டினான். தண்ணிர் கலக்காத அந்தத் திரவத்தை அவர் அப்படியே தொண்டையில் இறக்கினார்.

    இன்னும் கொஞ்சம் ஊற்றட்டுமா?

    அதெல்லாம் அப்புறம். முதலில் நீ என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ, அதைத் தெரிந்துகொள். என்னுடையது மிகவும் பழைய மனம். சிலபோது சிலவற்றை மறந்துவிடலாம்!

    சொல்லியபடியே அவர் வேர்க்கடலைத் தோலை ஊதி ஒதுக்கிவிட்டு வாய்க்குள் போட்டார்.

    அப்படியானால் கேட்க ஆரம்பிக்கிறேன். என்றபடி தன்னுடைய பையிலிருந்து ஒரு கட்டு பீடியை எடுத்து அதிலிருந்து ஒன்றை மட்டும் உருவிக்கொண்டு மீதியை அப்படியே அவரிடம் கொடுத்தான்.

    உங்களைப் பார்த்துவிட்டு வந்தால் நல்லதென்று மாமா கூறினார்

    பெரியவர் அப்படிச் சொல்லியிருந்தாரானால், அதற்கு வலுவான காரணம் ஏதாவது இருக்கும். சரி... வேறு என்ன சொன்னார்?

    பாண்டவ மலையின் ஏதோ ஒரு பகுதியில் துர்க்காதேவி கோயில் ஒன்று உள்ளதாம். எங்கோ பாறைகளுக்கு நடுவில் மறைந்துள்ளதாக அவர் கோடி காட்டினார். நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? கேசவன் கேட்டான்.

    கேசவா, உண்மையைச் சொல்லி விடுகிறேன். நானும் இதுவரையில் அதைப் பார்த்ததே இல்லை! ஆனால், கேள்விப் பட்டிருக்கிறேன். எப்படிப் பார்ப்பது? அது பாண்டவ மலையின் உள்ளே அல்லவா இருக்கிறது -ஆசான் நெற்றியைச் சுளித்தபடி பேசினார்.

    அந்தக் கோயில் எங்கே இருக்கிறது என்று தெரியவேண்டும்; எப்படியாவது அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு என்ன வழி ஆசானே?

    முதலில் அந்தக் கோயிலைப் பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். அதற்குப் பிறகு இரண்டு பேருமே அதைப் பற்றி யோசிப்போம்.

    "அதுவும் சரிதான். அந்தக் கோயில் எப்படித் தோன்றியது?

    அணைந்து போகவிருந்த பீடியை ஒருமுறை வலுவாக உள்ளுக்கு இழுத்துவிட்டு ஆசான் கூறத் தொடங்கினார்:

    மிகப் பழைய காலத்தில் இந்த நாட்டை ஒரு ராஜா ஆட்சி செய்தார். அவரது அரண்மனைக்குக் கிழக்குக் கோட்டை என்று பெயர். அந்த அரண்மனை இன்னும் இந்த மலையடிவாரத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நான் பார்த்ததில்லை. அந்த அரண்மனையில் பழங்காலத்தில் பாஸ்கர ரவிவர்மா என்கிற ஒரு ராஜா இருந்தார். அவர் தீவிர சிவபக்தர். ஒருதடவை அவர் பூஜையை முடித்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பியபோது, அவரைப் பார்ப்பதற்காக ஒரு சன்னியாசி வந்திருப்பதை அறிந்தார். அவர் ஒரு முனிவரும்கூட!

    கேசவன் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவரோ நினைவுகளிலிருந்து பழைய விவரங்களைப் பிரித்தெடுக்கத் தீவிரமாக முயன்று கொண்டிருந்தார்.

    பாண்டவ மலையின் அடிவாரத்தில் துர்க்காதேவியின் பாதங்கள் பதிந்துள்ளன. பாரிகனைக் கொன்ற துர்க்காதேவி தன்னுடைய இயல்பான வடிவிலேயே இந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். அதனால், இந்த மலையடிவாரத்தில் ஒரு துர்க்கா கோயிலைக் கட்டினால் அதனால் நாட்டிற்கே சுபிட்சம் ஏற்படும் என்றார் அந்த முனிவர்.

    அதைக் கேட்ட மன்னன் உடனே கோயில் கட்டத் தேவையான பொருட்களுடன், சிற்பி களையும் அழைத்துக் கொண்டு முனிவர் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான். அங்கே ஒரு குகை இருந்தது. ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் நுழைந்து செல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்த அகலமான குகை. அதற்குள் சென்று பார்த்தபோது ஒரு கோயில் இருப்பதைக் கண்டனர். எங்கிருந்தோ ஒரு வெளிச்சக்கிற்று அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த தேவியின் உருவச்சிலை தென்பட்டது. பாரிகனின் உடலை மிதித்துக் கொண்டு - கொய்தெடுத்த தலையைக் கையில் பிடித்தபடி நிற்கும் சாட்சாத் துர்க்காதேவியின் உருவம்! அவளது கழுத்தில் பாம்பு ஒன்று நெளிந்தது. பயந்து நடுங்கிய மன்னர் அதையே பார்த்தபடி நின்றார்..."

    அந்தக் கோயிலை தன் கண் முன்பு காண்பதுபோல் கிட்டு ஆசான் சற்று நேரம் வெட்ட வெளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். வயதான அவரது கண்களுக்கு முன்னால் அந்தத் திவ்யமான வடிவம் தெரிவதாகவே கேசவனுக்கும் தோன்றியது. வளர்ந்து கொண்டிருந்த எதிர்பார்ப்புகளுடன் அவன் அவரையே வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தான்.

    சூரியன் மேற்குப் புறமாக மறைந்தான். மேற்கத்திய மேகங்கள் சிவப்புச் சாயம் பூசிக்கொண்டவை போல் தெரிந்தன. கிழக்குப் புறமிருந்த மலைமுகட்டில் அங்கங்கே தனிமைப்பட்ட கால்நடைகள் தட்டுப்பட்டன.

    "பிறகு...? கேசவன் கேட்டான்.

    ஆசான் திடுக்கிட்டு விழித்ததுபோல் நிமிர்ந்தார்.

    "தேவி சிலையின் பாதப் பகுதியைப் பார்த்தபோது அங்கே பூஜைக்குத் தேவையான பொருட்கள் இருந்தன. முன்புறப் பலிக்கல்லில் ரத்தம் தெரிந்தது. மன்னனின் மனம் வெம்பியது.

    பலிபீடத்தில் இருந்தது மனித ரத்தமா? மனிதனையா பலி கொடுத்திருக்கிறார்கள்?

    மறுபடியும் தேவியின் பாதப்பகுதியைப் பார்த்தபோது ஒரு செப்புத் தகட்டில் எழுதிய எழுத்துகள் தெரிந்தன. அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் வந்த வழியே திரும்பினார். குகைக்கு வெளியே வந்த பிறகு, கோயில் வேலையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகக் கூறி வேலைக்காரர்களைத் திருப்பி அனுப்பினார்."

    அந்த ஒலையில் என்ன எழுதியிருந்தது ஆசானே? - கேசவன் குறுக்கிட்டான்.

    அவசரப்படாதே! சொல்கிறேன். சாப்பிட்ட சரக்கின் வலு குறைந்து போய்விட்டது. இன்னும் கொஞ்சத்தை கிளாஸில் ஊற்று - சொல்லியபடி அவனை நோக்கி கிளாஸை நகர்த்தினார்.

    அவன் ஊற்றினான். முகத்தைச் சுளித்தபடி ஒரே இழுப்பில் தொண்டைக்குள் அதை இறக்கிவிட்டு, உதட்டைத் துடைத்தபடி ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார். பிறகு கதையைத் தொடர்ந்தார்:

    "அதற்குப் பிறகு மன்னன் மிகவும் ரகசியமாக அங்கு அடிக்கடி சென்று

    Enjoying the preview?
    Page 1 of 1