Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannukku Theriyatha Manithan
Kannukku Theriyatha Manithan
Kannukku Theriyatha Manithan
Ebook232 pages1 hour

Kannukku Theriyatha Manithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறுவது என்பது மனித குலத்தின் உயர்ந்தபட்சக் கற்பனை. மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறினால், எவ்வளவோ விஷயங்களை சாதிக்க முடியும். ஆனால், அந்த விஷயத்தையும் வெல்ஸ் கையாண்டிருப்பது வேறொரு வகையாக. கண்ணுக்குத் தெரியாத மனிதனாக மாறும் ஒருவன், சந்திக்க நேரும் பிரச்சினைகளும், அவை அவனை எது வரை இழுத்துச் செல்கிறது என்பதையும்தான். விஞ்ஞான வாய்ப்புகளை தவறாகப் பயன்படுத்தாமல், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையே இதன் மூலம் வெல்ஸ் நமக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி தன்னை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் அறிவு, தவறான வழிகளில் பயணம் செய்வதால் முற்றிலுமாக அழிந்து போகிறது என்பதை உணர்த்துகிறது இந்த நாவல்.

இந்த ஒரே ஒரு நாவலின் மூலமே ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துத் திறமையை நாம் உணர முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவர் எழுதி வெளியானது இந்த நாவல். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக அது விஞ்ஞான அறிவு குறைவான ஒரு காலகட்டமே என்பதை உணர முடியும். கண்ணுக்குத் தெரியாத மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இதில் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் வெல்ஸ். இதை நாவலின் முதல் பாராவிலேயே நாம் உணரலாம். விறுவிறுப்பு, சுவாரஸ்யம், திருப்பம் ஆகியவற்றை இந்த 21- ஆம் நூற்றாண்டில் வாசிக்கும்போதும் நம்மால் உணர முடிவது வெல்ஸின் வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதும் கூட, இதை சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்கு இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார் அவர். அதற்கும் மேலாக, மனிதன் பெற முடியாத அற்புதமான சக்தி ஒன்றை பெற்றால், அதை எப்படி பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateDec 23, 2016
ISBN6580103701762
Kannukku Theriyatha Manithan

Read more from Sivan

Related to Kannukku Theriyatha Manithan

Related ebooks

Reviews for Kannukku Theriyatha Manithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannukku Theriyatha Manithan - Sivan

    http://www.pustaka.co.in

    கண்ணுக்குத் தெரியாத மனிதன்

    Kannukku Theriyatha Manithan

    Author: Herbert George Wells

    ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்

    Translated by: Sivan

    சிவன்
    For more books
    http://www.pustaka.co.in/home/author/sivan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    கண்ணுக்குத் தெரியாத மனிதன்

    ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்

    தமிழில்:சிவன்

    ஓர் அறிமுகம்

    ஹெச். ஜி. வெல்ஸ் என்ற பெயரில் சுருக்கமாக அறியப்படும் 'ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்' 1866- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21- ஆம் தேதி இங்கிலாந்தின் கென்ட் நகரில் பிறந்தவர். குடும்பத்தின் மூன்று பிள்ளைகளில், கடைக்குட்டி வெல்ஸ். குடும்பத்தினர் இவரை ‘பெர்ட்டி’ என்று செல்லமாக அழைத்தனர். வீட்டு வேலை செய்த வெல்ஸின் தாயார், வெல்ஸின் மூன்றாவது வயதிலேயே அவருக்குப் புத்தகங்களை வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். அந்த வாசிப்பு வழக்கம், அவரது வாழ்நாளின் இறுதி வரை தொடர்ந்தது. அவரது மற்றொரு சிறப்பு, கையில் கிடைக்கும் எதையும் வாசிப்பது. ‘கண்டதையும் படித்தால் பண்டிதனாவான்’ என்ற தமிழ்ப் பழமொழி இங்கு நினைவு கூரத் தக்கது.

    பெர்ட்டியின் ஏழாவது வயதில் விபத்து ஒன்றில் சிக்கி, அவரது கால் எலும்பு உடைந்தது. அதனால் மாதக் கணக்கில் படுக்கையில் கிடந்து சிகிச்சை பெறவும், ஓய்வு எடுக்கவும் நேர்ந்தது. அப்போது வெல்ஸின் அப்பா விண்வெளி இயல், உயிரியல், தாவரவியல் தொடர்பான புத்தகங்களை மகனுக்கு அறிமுகப்படுத்தி, வாசிக்கக் கொடுத்தார். இப்படித்தான் பெர்ட்டி என்ற வெல்ஸிடம் விஞ்ஞான ஆர்வம் தோன்றி, வளர்ந்தது. இதன் மூலம் அவர் அது வரை கேள்விப்பட்டிராத, கண்டிராத புதிய உலகங்களைப் புத்தகங்களின் ஊடாகக் கண்டறிந்தார். இதனால், ‘விபத்தில் என் கால் உடைந்ததுதான் எனது வாழ்க்கையின் அதிர்ஷ்டமான தருணம்!" என்று அவர் பின்னாளில் நினைவு கூர்ந்தார்.

    அப்பாவும் அம்மாவும் வேலை செய்தும்கூட குடும்பத்தை நிர்வகிப்பது மிகவும் சிரமமாக இருந்ததால், வெல்ஸினால் உயர்கல்வி பெற முடியவில்லை. அதனால் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் தனது 14- ஆவது வயதிலேயே வேலைக்குச் செல்லத் தொடங்கினார் அவர். வேலையுடன் சுயமாகவே தீவிரமாகப் படித்து, தனது 18- ஆவது வயதில் லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பும் இளங்கலை பட்டமும் பெற்றார். இவ்வாறு வெல்ஸ் விஞ்ஞானம் கற்பிக்கும் ஓர் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் முதன் முதலாக எழுதியது உயிரியல் பாடப்புத்தகம் ஒன்றை!

    ஆங்கில இலக்கியத்தில் விஞ்ஞானக் கதைகள் அதற்குள் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தன. விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்ட வெல்ஸ், அந்தப் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். விரைவிலேயே கவனத்துக்கு உரியவரான வெல்ஸின் 'தி டைம் மெஷின்’, ‘தி இன்விசிபிள் மேன்’, ‘வார் ஆஃப் த வேர்ல்டு’ ஆகிய குறிப்பிடத்தக்க படைப்புகள் வெளியாகின.

    ஒரு மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறுவது என்பது மனித குலத்தின் உயர்ந்தபட்சக் கற்பனை. மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறினால், எவ்வளவோ விஷயங்களை சாதிக்க முடியும். ஆனால், அந்த விஷயத்தையும் வெல்ஸ் கையாண்டிருப்பது வேறொரு வகையாக. கண்ணுக்குத் தெரியாத மனிதனாக மாறும் ஒருவன், சந்திக்க நேரும் பிரச்சினைகளும், அவை அவனை எது வரை இழுத்துச் செல்கிறது என்பதையும்தான். விஞ்ஞான வாய்ப்புகளை தவறாகப் பயன்படுத்தாமல், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையே இதன் மூலம் வெல்ஸ் நமக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி தன்னை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் அறிவு, தவறான வழிகளில் பயணம் செய்வதால் முற்றிலுமாக அழிந்து போகிறது என்பதை உணர்த்துகிறது இந்த நாவல்.

    இந்த ஒரே ஒரு நாவலின் மூலமே ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துத் திறமையை நாம் உணர முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவர் எழுதி வெளியானது இந்த நாவல். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக அது விஞ்ஞான அறிவு குறைவான ஒரு காலகட்டமே என்பதை உணர முடியும். கண்ணுக்குத் தெரியாத மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இதில் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் வெல்ஸ். இதை நாவலின் முதல் பாராவிலேயே நாம் உணரலாம். விறுவிறுப்பு, சுவாரஸ்யம், திருப்பம் ஆகியவற்றை இந்த 21- ஆம் நூற்றாண்டில் வாசிக்கும்போதும் நம்மால் உணர முடிவது வெல்ஸின் வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதும் கூட, இதை சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்கு இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார் அவர். அதற்கும் மேலாக, மனிதன் பெற முடியாத அற்புதமான சக்தி ஒன்றை பெற்றால், அதை எப்படி பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.

    அடுத்த கதையான, 'உலகங்களின் போராட்டம் (வார் ஆஃப் த வேர்ல்டு)’ மற்றொரு வகையான கற்பனை. செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் விநோத உயிர்கள் எதிர்பாராத ஒரு தருணத்தில் பூமியை அடைந்து எப்படிப்பட்ட அழிவுகளை, ஏற்படுத்துகின்றன... அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகிறது. மனிதர்கள் மற்றும் மனித சக்திகளால் நெருங்க முடியாத அவை, எவ்வாறு பூமியில் செயலற்றுப் போகிறது என்பதை வெல்ஸ் விளக்குவது அவருடைய விஞ்ஞான அறிவின் மேதைமைத் திறத்தால், அதுவும் பூமியின் இயல்பான நுண்கிருமிகளின் துணையுடன்.

    இந்த இரண்டு நாவல்களும் இணைந்த இந்தத் தொகுதி. நிச்சயம் உங்களையும் கவரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. நான் வழக்கமாகச் செய்வது போல், இதையும் கதை நடைபெறும் அதே சூழலில் அதே பெயர்களுடன் அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன். இதில் எதையும் எமது சூழல் மற்றும் பண்பாட்டுத் தன்மைக்கு ஏற்ப மாற்ற நான் முற்படவில்லை. சுருங்கச் சொன்னால் பிற மொழிக் கதைகளை அப்படியே நீங்கள் தமிழில் வாசிக்க என்னால் முடிந்த அளவுக்கு உதவியிருக்கிறேன்.

    இந்நூலை வாங்கி ஆதரிக்கும் வாசகர்கள். புத்தகத்தை நல்ல முறையில் வெளியிடும் சேது அலமி பிரசுரம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகிறது.

    தோழமையுடன்

    சிவன்

    கண்ணுக்குத் தெரியாத மனிதன்.

    1

    பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில்தான் அவர் வந்து சேர்ந்தார். சீறியடிக்கும் குளிர்காற்றும், கனமான பனிப்பொழிவும் கொண்ட ஒரு நாள். கெட்டியான கையுறை அணிந்து, கறுப்பு நிற தோல் பை ஒன்றைக் கையில் பிடித்து, ‘பிராம்பிள் ஹேஸ்ட்’ ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நடந்துதான் அவர் வந்தார். கழுத்து முதல் பாதம் வரை மறைக்கும் நீண்ட கோட்டு. உயர்த்திவிட்ட அதன் கழுத்துப் பகுதிகள். மூக்கின் நுனி, தவிர, முகம் முழு வதையும் மறைக்கும் பெரிய தொப்பி. அவரது ஓவர்கோட்டின் பல பகுதிகளிலும் பனித் துகள்கள் ஒட்டிப் பிடித்திருந்தன. நெஞ்சு மற்றும் தோள் பகுதிகளில் படிந்திருந்த பனிக்கட்டிகள், அவருக்கு மற்றுமொரு பாரமாக இருந்திருக்கும். அன்று வரை ஐப்பிங்கில் வசிக்கும் எவரும் பார்த்திராத அந்தப் புதிய மனிதர், நேராக வந்து நுழைந்தது ‘கோச் அண்டு ஹார்சஸ்’ சத்திரத்துக்குள்தான்!

    தங்குவதற்கு கணப்பு அடுப்புடன் கூடிய அறை ஒன்று தேவை என்று அவர் கேட்டபோது, சத்திர உரிமையாளரான மிசஸ் ஹால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். தரித்திரம் பிடித்த இப்படிப்பட்ட பனிக் காலத்தில், அதுவும் வாடகையைக் குறித்து எந்த விதமான விவாதமும் செய்யாமல் வாடகைக்கு அறை எடுக்க ஒருவர் கிடைப்பது சுலபமான விஷயம் அல்ல. அவள் உடனே அந்த மனிதருக்கு அறை ஒன்றை ஒதுக்கினாள்!

    சற்று நேரத்துக்குப் பிறகு தட்டு, கிளாஸ், படுக்கை விரிப்பு ஆகியவற்றுடன் மிசஸ் ஹால் அந்த அறைக்கு வந்தபோதும் புதிய மனிதர் ஒருவர் கோட்டையோ, தொப்பியையோ, கையுறையையோ அவிழ்த்து வைக்கவில்லை. ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்த அந்த மனிதர், மிச்ஸ் ஹால் அந்த அறைக்குள் வந்ததைக் கூட கவனிக்கவில்லை.

    சார், நான் இந்த ஓவர்கோட்டு மற்றும் பொருள்களை உலர வைத்துத் தரட்டுமா?

    வேண்டாம்... நான் இவற்றையெல்லாம் அவிழ்க்க விரும்பவில்லை! - முகத்தைத் திருப்பாமலே பதிலளித்தார் அந்தப் புதியவர்.

    தன் விருந்தாளி, அதிகம் பேச விரும்பாதவர் என்று மிசஸ் ஹாலுக்குத் தோன்றியது. அவள், அந்த மனிதரின் முகத்தை ஓரக் கண்ணால் பார்த்தாள். முகம் தெளிவாகத் தெரியவில்லை. நீல நிறமான பெரிய குளிர்கண்ணாடி அணிந்திருந்தார். முகம், ஏறத்தாழ முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருக்கிறது.

    சரி சார்! -என்றவாறு மிசஸ் ஹால் அங்கிருந்து வெளியேறினாள். தனது உபசாரங்களை வந்திருப்பவர் அவ்வளவாக விரும்பவில்லை என்று அவளுக்குத் தோன்றியது. சற்று நேரம் கழித்து உணவுப் பொருள்களுடன் மிசஸ் ஹால் மீண்டும் வந்த போதும் ஒரு கருங்கல் சிலை மாதிரி அவர் பழைய நிலையிலேயே தான் நின்றிருந்தார். பனித்துளிகள் உதிர்ந்து விழும் தொப்பி அணிந்து, கோட்டின் காலர் பகுதிகளை உயர்த்தி விட்டபடி... வாசல் பகுதிக்கு முதுகு காட்டிக் கொண்டு நின்றிருந்தார் அவர்.

    சார், சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்! - அவள் உரத்த குரலில் கூறினாள்.

    நன்றி! - திரும்பிப் பார்க்காமலேயே புதிய மனிதர் பேசினார். மிசஸ் ஹால் அங்கிருந்து வெளியேறி, அந்த அறைக் கதவை மூடுவது வரை புதியவர் அங்கிருந்து அசையவே இல்லை.

    சமையற்கட்டுக்கு வந்த மிசஸ் ஹால், ஆம்லெட் மற்றும் சாஸை தயார் செய்தாள். அதற்கிடையே சோம்பேறியான வேலைக்காரி மில்லியை திட்டவும் செய்தாள். பிறகு அழகான டிரே ஒன்றில் அவற்றை எடுத்து வைத்துக் கொண்டு விருந்தாளியின் உணவு மேஜைக்கு வந்தாள்.

    கதவைத் தட்டிவிட்டு, அறைக்குள் நுழைந்த திருமதி ஹால் திகைப்பு அடைந்தாள்.

    விருந்தாளி, தனது தொப்பியையும், ஓவர்கோட்டையும் கழற்றியிருந்தார். ஈரமான பூட்ஸுகளைக் கழற்றித் தரையில் விட்டிருந்தார்.

    அவர் முகத்தின் கீழ்ப் பகுதி, மேற்பகுதி மற்றும் இரு காதுகளையும் துணித் துண்டுகளால் சுற்றி மறைந்திருந்தார். அந்த முகத்தில் கண்ணுக்குத் தெரிந்த ஒரே பகுதி, நீண்ட… கூர்மையான அவரின் மூக்கு மட்டுமே. இளஞ்சிவப்பு நிற மூக்கு. கருமையான முடியிழைகள், துணித் துண்டுகளுக்கு நடுவே கண்டபடி கலைந்து கிடந்தது.

    பயங்கரமான ஒரு காட்சியாக இருந்தது அது. மிசஸ் ஹால் அதைப் பார்த்ததும் ஒரு சில விநாடிகள் அப்படியே அசைவற்று நின்று விட்டாள். பிறகு திக்கித் திணறி ஒருவாறாகக் கேட்டாள். சார், தொப்பி மற்றும் கோட்டை எடுத்துக் கொண்டு போய்… உலர வைத்துத் தரட்டுமா?

    துணியால் பொதிந்திருந்த வாய்ப் பகுதியின் இடைவெளி வழியாக விருந்தாளி சொன்னார். வேண்டாம்!

    சரி சார்!

    பெரிய கண்ணாடி வில்லைகளின் மூலமாக அவரது பார்வை தன்னைப் பின்தொடர்வதை மிசஸ் ஹாலால் உணர முடிந்தது. பயத்துடன்தான் அவள் அந்த அறையிலிருந்து வெளியேறினாள். ‘இதற்கு என்ன பொருள்?’

    மிசஸ் ஹால் போய் விட்டாள் என்பது உறுதியானதும் அவர் கதவை இழுத்துச் சாத்திவிட்டு, ஜன்னலின் ஷட்டர்களை இறக்கினார். பிறகு நிம்மதியாக உட்கார்ந்து, மிகுந்த ஆவலுடன் சாப்பிடத் தொடங்கினார்.

    ‘பாவம்… அவருக்கு என்னவோ விபத்து நேர்ந்திருக்கிறது. அந்த முகத்தில் எவ்வளவு பேண்டேஜ் துணிகள்! அந்த அளவுக்குக் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், நான் உண்மையில் மிகவும் பயந்து போய்விட்டேன். வாய்ப் பகுதி கூட அடிபட்டிருக்க வேண்டும். அதனால்தான் துணிகளின் இடைவெளி வழியாகப் பேசுகிறார்!’

    சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் விருந்தாளியின் அறைக்கு மிசஸ் ஹால் வந்தபோது, ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. ‘அவர் மிகவும் மோசமான ஏதோ ஒரு விபத்தில் சிக்கிவிட்டார். அதனால்தான், அவர் சிகரெட் புகைக்கும் போது கூட வாய்ப்பகுதியில் இருந்த துணித் துண்டுகளை அகற்றவில்லை.’

    முன்பு பேசியதைவிட, அவரது பேச்சு இப்போது சற்று மரியாதையுடன் அமைந்திருந்தது.

    எனது பெட்டிகள் மற்றும் சில பொருள்கள் பிராம்பிள் ஹேஸ்ட் ரயில்வே ஸ்டேஷனில் உள்ளன. அவற்றை இங்கு எடுத்து வருவதற்கு என்ன வழி? - விருந்தாளி கேட்டார்.

    நாளைக்கு எடுத்து வர ஏற்பாடு செய்கிறேன்! - மிசஸ் ஹால் பதில் அளித்தாள்.

    இன்றைக்குக் கொண்டு வர முடியாதா? - விருந்தாளி கேட்டார்.

    இது செங்குத்தான ரோடு சார். போதாக்குறைக்கு பனிப் பொழிவும் அதிகம். கடந்த வருடம் இந்தப் பாதையில் நிகழ்ந்த விபத்து ஒன்றில், ஒருவர் மரணம் அடைந்தார்! - அவர் முகத்தை ஊன்றிப் பார்த்தபடி, எதிர்பார்ப்பு நிறைந்தவளாக மிசஸ் ஹால் கேட்டாள். "விபத்துகள் இப்போது மிகவும் அதிகம்... இல்லையா சார்?’’

    அந்தக் கேள்வியின் ஊடாக அவரைப் பேச வைப்பது மிசஸ் ஹாலின் நோக்கம். ஆனால், விருந்தாளி அதற்குத் தயாராக இல்லை.

    ஆமாம்! - என்று மட்டும் சொல்லிவிட்டு, அவர் அமைதியானார்.

    "உங்களுக்குத் தெரியுமா சார்... என் அக்காள் பையன் டாமுக்கு, கதிர் அறுக்கும்போது, அரிவாளால் ஒரு காயம் ஏற்பட்டது. சுமார் மூன்று மாத காலம் படுத்த படுக்கையாகக் கிடந்தான். ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்குமோ என்று கூட பயந்தோம். அந்த அளவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1