Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Moha Thee Moottu
Moha Thee Moottu
Moha Thee Moottu
Ebook95 pages1 hour

Moha Thee Moottu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580111001884
Moha Thee Moottu

Read more from Arnika Nasser

Related to Moha Thee Moottu

Related ebooks

Related categories

Reviews for Moha Thee Moottu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Moha Thee Moottu - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    மோகத் தீ மூட்டு

    Moha Thee Moottu

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    மோகத் தீ மூட்டு

    ஆர்னிகா நாசர்

    1

    டியாரா ராஜ்குமார் இணையதளத்தில் மேய்ந்து சேகரித்த தகவல் குறிப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான்.

    எதிரில் இரட்டை காலடி அரவம் கேட்டு நிமிர்ந்தான்.

    தேஜி, ஸிஜா!

    அமர்ந்தனர். எந்தக்கதைக்கான தகவல் குறிப்புகள் கைல?

    ஒரு புதிய விஞ்ஞானக்கதைக்கான தகவல் குறிப்புகள் இவை. கதைக்கு இன்னும் தலைப்பு தீர்மானிக்கல!

    உள்இணைப்பு தொலைபேசி சிணுங்கியது. ஒலிவாங்கியை கையில் எடுத்தான்.

    வரவேற்பாளினி, உங்களை பாக்க ஒரு பொண்ணு வந்திருக்கு!

    என்னவாம்?

    அந்தப் பொண்ணுக்கு ஏதோ பிரச்சனையாம். பிரச்சனை என்னன்னு உங்ககிட்டதான் சொல்லுமாம்!

    சரி, உள்ள அனுப்பு!

    நீலநிற கடிதார் அணிந்த 27 வயது பெண் வணங்கியபடி உட்பட்டாள். கனத்த மார்பகங்கள். சீமாத்தனமான உதடுகள். அளவில் பெரிய கண்கள். ரம்பா முக்கு.

    வணக்கம் டியாரா!

    உக்காருங்க. உங்க பெயர்?

    என் பெயர் கஜலட்சுமி. பில்லியனர் ஆவுடையப்பனின் ஒரே மகள் நான். ஷேர் மார்க்கெட் கன்ஸ்ல்டன்ட் ஆக இருக்கிறேன்!

    தொழிலதிபர் ஆவுடையப்பனின் மகளா நீங்க? வெரிகுட். என்ன விஷயமா என்னை பாக்க வந்திருக்கீங்க?

    கஜலட்சுமி விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

    ப்ளீஸ்…... அழாதிங்க….. மொதல்ல உங்க ப்ராப்ளத்தை சொல்லுங்க!

    ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் அம்மா கர்ப்பப்பை புற்றுநோய் தாக்கி இறந்துட்டாங்க!

    இம்...

    இறக்கும்போது உங்கம்மாவுக்கு என்ன வயசு?

    அறுபதிருக்கும்! -

    நீங்க உங்க பெற்றோருக்கு லேட்டா பிறந்தீங்களாக்கும்!

    ஆமா சார்!

    இப்ப உங்கப்பாவுக்கு என்ன வயசாகுது?

    அறுபத்தியேழாகுது சார்!

    அப்பாவால உங்களுக்கு பிரச்சனையா?

    ஏறக்குறைய அப்படித்தான் சார். எங்கப்பா இந்த வயசுல போய் ஒரு லேடியை லவ் பண்ணிட்ருக்கார்!

    அவர் லவ் பண்ற லேடி விதவைப் பெண்ணா?

    இல்ல!

    வறுமையின் காரணமாக திருமணமே ஆகாமல் போன முதிர்கன்னியா?

    இல்ல!

    எங்கப்பா லவ் பண்ற பொண்ணுக்கு வயசு 28 ஆகும். ஆனா பாக்க இந்தி நடிகை பிபாஷா மாதிரி இருக்கா. சும்மா கும்முனு. திமுதிமுன்னு.

    ஓவரா வர்ணிக்கவேண்டாம் கஜம். அந்த பொண்ணு பேரு என்ன?

    அந்தப்பொண்ணு பேரு ஸ்வஸ்திகா!

    ஸ்வஸ்திகா- வித்தியாசமான பெயர். அந்த ஸ்வஸ்திகா என்ன வேலை பாக்ரா?- உங்கப்பாவுக்கும் அவளுக்கும் எப்டி தொடர்பு ஏற்பட்டுச்சு?

    அவள் லீ ராயல் மெரிடியன் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுத்தரும் பிஸியோதெரபிஸ்ட். அப்பா கொஞ்ச நாளா நீச்சல் கத்துக்கப் போய்ட்டு இருக்கார். நீச்சல் கற்றுத்தர்ற சாக்குல அவ அப்பாவை வளைச்சுப் போட்டுட்டா டியாரா!

    உங்க வாக்கிய அமைப்பு தப்பு. நீச்சல் கத்துக்கிற சாக்குல உங்கப்பா அந்தப் பொண்ணை வளைச்சுப் போட்ருக்கார்!

    எங்கப்பா ரொம்ப நல்லவர்!

    பொதுவாகவே அறுபது வயது தாண்டிய கிழங்கள் ஆபத்தானவை. எவ்வித மென்ட்டல் ஸ்ட்ரஸ்ஸும் இல்லாமல் விடலைப் பெண்களை விழுங்கும் ஒரே நோக்கத்துடன் அலைவார்கள் இவ்வகை கிழவர்கள். விடலைப் பெண்களை தேடி பிடித்து வீழ்த்தும் இவ்வகை கிழவர்களுக்கு LOLITA SYNDROME எனும் மனநோய் பாதிப்பு இருக்கும்!

    என் அப்பாவை ‘கிழம்’ என்று இழிவாய் கூப்பிடாதீர்கள்!

    அப்பாபாசம் அப்பாபாசம்! இருக்கவேண்டியதுதான்! ஒரு அறுபதுவயது கோடீஸ்வர வயோதிகர் ஒரு நீச்சல் சொல்லித்தரும் யுவதியைக் காதலிக்கிறார்! இக்காதல் ‘பொருந்தாகாமம்’ கேட்டகரில வரும். ஆனா இக்காதலை சட்டப்படி தருக்கமுடியாதே!

    என் அப்பா அந்தப்பொண்ணை திருமணம் செஞ்சிக்கப் போறேன்னு அடம் பிடிக்கிறார்!

    உங்களுக்கு திருமணம் செஞ்சுவச்சு சொத்துல உரிய பங்கை குடுத்துட்டு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க?

    "வர்ற திங்கட்கிழமை

    Enjoying the preview?
    Page 1 of 1