Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nallathor Veenai Seithe…
Nallathor Veenai Seithe…
Nallathor Veenai Seithe…
Ebook381 pages2 hours

Nallathor Veenai Seithe…

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

நான் தமிழகத்தின் குறிப்பாய் சேலம் மாவட்ட கிராமங்களில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவே இப்புதினம் ஜனிக்க காரணமாயிற்று.

இப்புதினத்தில் பல கதை மாந்தர்கள் உலாப் போகிறார்கள். நம் நெஞ்சோடு பேசி உறவாடுகிறார்கள். மின்வாரிய பொறியாளர் சரவணன், ஆரம்ப சுகாதார டாக்டர் அருள்தாஸ், பாதகமே தொழிலாய் கொண்ட அர்த்தனாரிக் கவுண்டர், அவருக்குத் துணைப் போகும் மயிலம்மாள், அவர்கள் வேலைக்காரி வேலாயி, அவர்கள் வீட்டு மருமகளான வாய் செத்த பூச்சியாய் வலம் வரும் புவனேஸ்வரி அவளின் சித்த சுவாதீனமற்ற கணவன் இளங்கோ, சினிமாப் பைத்தியமாய் வரும் பிராமணப் பெண் இளம் விதவை கிருத்திகா, ஆசாரக் குலத்தில் பிறந்து ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து எதிராளியின் பசி போக்குவதையே தன் நித்திய நியமமாய் கொள்ளும் முன்னேற்ற கருத்துக்கள் செறிந்தருக்கு மாமி, இளம் வயதில் அவளைக் தவிக்கவிட்டு தன் உணர்வுகளுக்காக வெளியே ஓடும் சத்தியமூர்த்தி ஐயர், அவர் உணர்வுகளின் வடிகாலான ஒரு மாதவியாய் வாழும் கனகலசுஷ்மி, டாக்டரின் வேலைக்காரன் சின்னு, அவன் மனைவி சின்னக்கிளி. ஒவ்வொருவரும் இந்த உலகத்தின் இயக்கத்தைத் தொடர்கிறார்கள்.

கிராம மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாமியார் அவரின் சீடர்கள். எப்படி அப்பாவி மக்களைச் சுரண்டிப் பிழைக்கிறார்கள், புவனேஸ்வரியின் வாழ்விற்குத் துணைப் போகாத மனப்பாதிப்பு கொண்ட எலக்ட்ரானிக் பொறியாளன் இளங்கோ, சரவணனிடம் பேராசை கொண்டு எப்படியும் வாழ்ந்து வளமை அடையலாம் என்கிற ஆவல் கொண்ட துணைவி மல்லிகா அவள் மாமனாய் வலம் வரும் சூதும் வாதுமாய் உலாவரும் அரசியல்வாதி. எனப் புதினம் இச்சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

குடும்பம், சமூகம், அரசியல், திரைப்படத் துறை என எல்லாவற்றையும் தொட்டு போகிறது. இப்புதினம்.

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580114201830
Nallathor Veenai Seithe…

Read more from Hamsa Dhanagopal

Related to Nallathor Veenai Seithe…

Related ebooks

Reviews for Nallathor Veenai Seithe…

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nallathor Veenai Seithe… - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    நல்லதோர் வீணை செய்தே…

    Nallathor Veenai Seithe…

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    நல்லதோர் வீணை செய்தே…

    நாவல்

    ஹம்ஸா தனகோபால்

    என்னுரை

    பதிப்பக வாயிலாய் வரும் என் புதினங்கள் அனைத்தும் சென்ற நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் நிகழ்ந்ததாய் எழுதியுள்ளேன். அதற்கு இந்நாவலும் விதிவிலக்கல்ல.

    இப்புதினத்தில் மற்ற என் புதினங்களுக்கு அணிந்துரை அளித்த ஆன்றோர்களின் கருத்துக்கள் சிலவற்றை எடுத்து தொகுத்து எழுதியுள்ளேன். அன்னார்க்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.

    நான் தமிழகத்தின் குறிப்பாய் சேலம் மாவட்ட கிராமங்களில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுவே இப்புதினம் ஜனிக்க காரணமாயிற்று. அப்போது என் நினைவுகளில் பதிந்த பதிவுகளையே இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளுக்கும் எழுபதுகளுக்கும் எடுத்துச் சென்று எழுதியுள்ளேன். இதில் சில சாதிகள் குறிக்கப்பட்டிருக்கலாம். அது கிராமங்களின் நிகழ்விற்காகவும் உண்மை போன்ற தோற்றம் காட்டவே எழுதப்பட்டதாகும். யாரையும் குறிப்பிடுவன அல்ல.

    எல்லா சாதிகளிலும் குற்றமும் குற்றமின்மையும் மலிந்தே கிடக்கின்றன. தவறுகள் என சுட்டிக் காட்டப்படுபவை ஒரு சாராரிடத்தில் மட்டுமே காணப்படுபவை எனில் அது தவறான கருத்தாகும். சிரிப்பும் அழுகையும் பூமிப் பந்தின் மாந்தர் அனைவர்க்கும் எப்படி பொதுவானதோ அப்படியே இதுவும் பொதுவானதாகும்.

    இப்புதினத்தில் பல கதை மாந்தர்கள் உலாப் போகிறார்கள். நம் நெஞ்சோடு பேசி உறவாடுகிறார்கள். மின்வாரிய பொறியாளர் சரவணன், ஆரம்ப சுகாதார டாக்டர் அருள்தாஸ், பாதகமே தொழிலாய் கொண்ட அர்த்தனாரிக் கவுண்டர், அவருக்குத் துணைப் போகும் மயிலம்மாள், அவர்கள் வேலைக்காரி வேலாயி, அவர்கள் வீட்டு மருமகளான வாய் செத்த பூச்சியாய் வலம் வரும் புவனேஸ்வரி அவளின் சித்த சுவாதீனமற்ற கணவன் இளங்கோ, சினிமாப் பைத்தியமாய் வரும் பிராமணப் பெண் இளம் விதவை கிருத்திகா, ஆசாரக் குலத்தில் பிறந்து ஆச்சார அனுஷ்டானங்கள் அனைத்தையும் கடைப்பிடித்து எதிராளியின் பசி போக்குவதையே தன் நித்திய நியமமாய் கொள்ளும் முன்னேற்ற கருத்துக்கள் செறிந்தருக்கு மாமி, இளம் வயதில் அவளைக் தவிக்கவிட்டு தன் உணர்வுகளுக்காக வெளியே ஓடும் சத்தியமூர்த்தி ஐயர், அவர் உணர்வுகளின் வடிகாலான ஒரு மாதவியாய் வாழும் கனகலசுஷ்மி, டாக்டரின் வேலைக்காரன் சின்னு, அவன் மனைவி சின்னக்கிளி. ஒவ்வொருவரும் இந்த உலகத்தின் இயக்கத்தைத் தொடர்கிறார்கள்.

    இதில் வரும் நெய்யூர் கிராமம் என் கற்பனையில் உருவானதாகும். கற்பனையில் இக்கிராமத்தில் சுழித்தோடும். காவிரி. சிக்கல்களைத் தவிர்க்க இப்படி எழுதிப் போகிறேன்.

    நம் இந்திய இளைஞர்கள் என்றால் ஏதோ, புகை மது மாது, திரைப்படம், அரசியல் என ஒடுபவர்களாகவே நாம் நினைக்க வேண்டி உள்ளது. இதில் சிக்கிக் கொள்ளாத இளைஞர்கள் குறைவு சுயம் புரிந்தவர்கள். சமூகம் புரிந்தவர்கள். சமூக சீரழிவுகளுக்காக வேதனைப்படுபவர்கள். அதற்காக பாடுபடுபவர்கள். இதில் இரு இளைஞர்களாய் வரும் சரவணனும் அருள்தாஸும் சமூகத்திற்கு உதாரணப் புருஷர்களாய் இருக்க வேண்டும் என்று படைத்துள்ளேன். இப்படியும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    கிராம மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சாமியார் அவரின் சீடர்கள். எப்படி அப்பாவி மக்களைச் சுரண்டிப் பிழைக்கிறார்கள், புவனேஸ்வரியின் வாழ்விற்குத் துணைப் போகாத மனப்பாதிப்பு கொண்ட எலக்ட்ரானிக் பொறியாளன் இளங்கோ, சரவணனிடம் பேராசை கொண்டு எப்படியும் வாழ்ந்து வளமை அடையலாம் என்கிற ஆவல் கொண்ட துணைவி மல்லிகா அவள் மாமனாய் வலம் வரும் சூதும் வாதுமாய் உலாவரும் அரசியல்வாதி. எனப் புதினம் இச்சமூகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    குடும்பம், சமூகம், அரசியல், திரைப்படத் துறை என எல்லாவற்றையும் தொட்டு போகிறது. இப்புதினம்.

    இதில் நான் எத்தனை தூரம் வெற்றி கண்டுள்ளேன் என்பதை தமிழ் கூறும் நல்லுலக வாசக அன்பர்கள்தான் என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    ‘நல்லதோர் வீணை செய்தே.' என்கிற இப்புதினம் எழுதப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போதுதான் இது அச்சு வடிவம் காண்கிறது.

    இப்புதினத்தை வெளியிடும் - என் ஆரம்பக்கால எழுத்திலிருந்து இதுநாள்வரை உதவிவரும் - ஐந்திணைப் பதிப்பக உரிமையாளர் மழலை இலக்கியப் ‘பேரொளி கவிஞர்' திரு. குழ.கதிரேசன் அவர்களுக்கும், சீர்மிக்க தரமான நூல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடும் பூங்குழல் பதிப்பகத்தார் அவர்களுக்கும், இப்புதினம் அச்சு வடிவம் காண உழைத்திட்ட அத்தனை அற்புத உழைப்புக் கரங்களுக்கும் அட்டைப் படத்தை அலங்கரிக்கும் ஓவியருக்கும் மற்றும் எல்லார்க்கும் என் இதயம் கனிந்த நன்றியும் வணக்கமும்,

    என் படைப்பிலக்கியம் அத்தனைக்கும் நல்லாதரவு அளித்து வரும் வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றியும் வணக்கமும்,

    நம்மிடையே நிகழும் இந்த விடை பெறல் தற்காலிகம். மீண்டும் சந்திக்க விழையும்.

    என்றும் அன்புடன்,

    ஹம்ஸா தனகோபால்

    1

    உச்சி வெயிலில் ரயில் நிலையத்திலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் நடந்திருந்தான் சரவணன். ஊரின் எல்லை பார்வைக்குத் தட்டுப்படவே இல்லை, ரயிலைவிட்டு இறங்கியதும் பெட்டி படுக்கை சகிதம் டிக்கெட் கலெக்டரிடம் டிக்கெட் கொடுக்கும் போதே பார்த்தான்.

    நெய்யூர் ஸ்டேஷனில் இவனையும், டிக்கெட் கலெக்டரையும் தவிர யாருமில்லை. வண்டியிலிருந்து அவன் இறங்கியிராவிட்டால் பயணிகள் இல்லாமலே நின்று போயிருக்கும் வண்டி, பொட்டலாய் கிடந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்தின் குடிநீர் குழாயடியில் சொறிநாய் ஒன்று சுருண்டு படுத்திருந்தது. சரவணன் நெய்யூருக்குப் போகும் வழியில் ஏதேனும் வாகனம் கிடைக்குமா என டிக்கெட் கலெக்டரைக் கேட்கத்தான் செய்தான்.

    டிக்கெட் கலெக்டர் விநோதமாய் இவனைப் பார்த்துவிட்டு யாருக்கோ சொல்பவர் போல சொன்னார். இதுவும் என்ன நகரமா. ஆட்டோவும் டாக்ஸியும் ஸ்டேஷன் வாசல்ல நிக்க. அப்படியே தார் ரோட்ல கிழக்குப்புறமா நடங்க. அரைமணியில் ஊர் வந்துரும்.

    இவன் அதற்கு மேல் ஏதேனும் கேட்டுவிடுவானோ அதற்கு நாம் அவசியமில்லாமல் பதில் சொல்ல வேண்டியிக்குமோ என நினைத்தவர் போல ஸ்டேஷன் மாஸ்டர் தன் அறை நோக்கி நடந்துவிட்டார்.

    அதற்குமேல் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்று இவன் ஸ்டேஷன் விட்டு வெளி வந்தான். வெயில் உறைத்தது. மாட்டு வண்டி கூட கண்ணில் படவில்லை. ஸ்டேஷன் வாசலில் அவை நின்ற தடம் கூட தெரியவில்லை. நடக்கலானான் சரவணன்.

    இந்த நேரத்தில் இந்த ஊருக்கு வந்திருக்கக்கூடாதோ, இந்த ரயிலை விட்டால் இந்த ஊருக்கு ரயிலே இல்லை. பஸ்ஸில் தான் வரவேண்டியிருக்கும். பஸ் பயணம் இவனுக்கு விருப்பமானது அல்ல. குறைந்த பட்சம் தான் வருவதை அறிவித்திருந்தால் வாகன உதவி கிடைத்திருக்கலாம். கிடைக்காமலும் போயிருக்கலாம்.

    சரவணன் குட்கேஸ் ஒரு கையிலும், மறுகையில் படுக்கையுமாய் நடக்க நடக்க சுமைகளின் கணம் கூடுதலாகத் தென்பட்டது. வாழ்க்கையும் இப்படித்தானோ. வாழ்க்கைப் பயனங்கள் கூடுதலாக மனச் சுமையும் கூடுமோ

    நிழல் அவன் காலுக்கடியில் சுருண்டுவிட, நெற்றியிலும் முதுகிலும் வியர்வை ஆறு பெருக்கெடுத்தது. தார்ச்சாலையில் மரங்களைக் காணமுடியவில்லை. சாலையை விட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றங்கரை தெரிந்தது. கரையில் செடிகொடிகள் கருகித் தெரிந்தன. நின்றிருந்த ஒன்றிரண்டு புளியமரங்களும் வேப்ப மரங்களும் மொட்டையாக நின்றதில் ஆற்றில் நீரில்லை என ஊகித்தான்.

    சாலையில் ஏதேனும் வாகனம் போனால் உதவி கிடைக்குமோ என்கிற நப்பாசை இவன் மட்டும் கருப்புச்சேலையாய் நீண்டிருந்த சாலையில் தனியாய் நடக்க வேண்டியவனானான்.நாக்கு வரண்டது. தாகத்திற்கு அல்லாடியது.

    சிறிது தூரத்தில் புளிய மரம் பெரும் குடையாய் விரிந்து இன்னும் இலை உதிர்க்காமல் நின்றது. அங்கு போய் சற்று நிதானிக்க நினைத்தான். பெட்டி படுக்கையை வைத்துவிட்டு ஆற்றங்கரைக்கு ஒடிப் போய் நீர் இருக்கிறதா எனப் பார்க்கவேண்டும். நம்பிக்கை முளைத்ததும் அவன் நடை வேகப்பட்டது.

    புளியமரத்தடியை அடைந்ததும் சூட்கேஸையும் படுக்கையையும் மண்தரையில் போட்டான். புளியமரத்தடியில் போய் உட்கார நினைத்து திரும்பியவன் அப்படியே நின்றுவிட்டான் பத்தொன்பது இருபது வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய இளம் பெண் குடத்தில் நீருடன் அங்கிருந்தாள்.

    மண்ணுக்கு வெளியே முந்திரிக்கொட்டையாய் நீண்டிருந்த பெரிய வேரில், நிலவொளியில் உட்கார்ந்திருப்பவள் போல அந்த கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் இவனை நிச்சலனமாய் பார்த்தாள். யாருமில்லை என்கிற சுதந்திரத்தில் இவன் பெட்டி படுக்கை வீசிவிட்டு ஓடிப்போய் உட்கார முயற்சித்தற்காக ஒருவிநாடி இவனுள் வெட்க உணர்வு தோன்றியது. மறுவிநாடி அந்த பெண்ணின் பெரிய விழிகளின் சலனத்தில் இவன் யாசகனாய் அவள் முன் நின்றான்.

    தாகமா இருக்கு. குடிக்க தண்ணி குடுப்பீங்களா.

    எழுந்து நின்றவள் இவன் சொற்களைப் புரிந்து கொள்ளாதவள் போல இவனைப் பார்த்தாள்.

    ரொம்ப தாகமா இருக்குங்க. ப்ளிஸ் குடிக்கத் தண்ணி குடுங்க. பரவாயில்லை நீங்க அப்படியே ஊத்துங்க. நான் கையாலேயே குடிச்சுக்கறேன். இப்போதுதான் மொழி புரிந்தவள் போல அந்த குடத்தை எடுத்து இடுப்பில் வைத்து மெல்ல நீர் வார்க்கலானாள். ஒரே சீராய் விழும் நீரில் குனிந்து கை கழுவி, அப்படியே இரு உள்ளங்கை குவித்து நீர் குடிக்கலானான் சரவணன் வயிறு நிறைய இதமாய் இருந்தது. நன்றியுடன் அவளைப் பார்த்தான்.

    ரொம்ப நன்றிங்க. அடடே என்னால் குடத்து தண்ணி குறைஞ்சிருச்சே திரும்பப்போய் குடத்தை நிரப்பிக்கணுமா நீங்க.

    அவள் பேசவில்லை, திரும்ப அதே வேரில் அமர்ந்து அவன் இருப்பதையே அறியாதவள் போல உட்கார்ந்து கொண்டாள்.

    ஏங்க இங்கேருந்து ஊர் ரொம்ப தூரமா.

    அவள் இல்லையென்று தலை அசைத்தாள். தாழம்பு மடல்கள் எடுத்து செய்யப்பட்ட சிலையாய் அவள் மேனியின் வளைவும் நெளிவும் யாவருக்கும் கைவரக்கூடிய அழகல்ல. காது ஜிமிக்கிகள் ஆடின. மையிடாமலே மையிட்டது போல கருத்த விழிகளும் பட்டாம்பூச்சி இறக்கைகளாய் படபடக்கும் இமைகளும் கனத்த புருவங்களும். நெற்றிக் குங்குமம் வியர்வையில் கரைந்து புருவம் பார்த்தது.

    சரவணன் வேண்டுமென்றே கேட்டான். அவள் ஊமையோ என்கிற சந்தேகம் எழுந்தது.

    ஊருக்கு எப்படிங்க போகணும்.

    அவன் போகவேண்டிய திசையில் வலக்கரத்தால் சுட்டினாள். திரும்ப குனிந்தபடி மண்ணில் சிறு குச்சியால் ஏதோ கீறினாள். இவள் பேச மாட்டாள். வீணாக இங்கே நின்று யார் கண்ணிலாவது பட்டால் நன்றாய் இராது என்கிற முடிவில் மீண்டும் பெட்டி படுக்கை சுமந்து நடக்க முற்பட்டான். திரும்பி அவளைப் பார்த்தான்.

    அவள் குனிந்தபடி ஒடும் கறுப்பு கட்டை எறும்பைச் சுற்றி சுற்றி குச்சியில் வட்டம் வட்டமாய் தரையில் கிறுக்கிக் கொண்டிருந்தாள். இவள் சிறைப்படுத்துவதால் எறும்பு தடுமாறி சுதந்திரத்திற்காக திசை தேடியது.

    நன்றிங்க வரேங்க.

    இவன் குரல் அவளிடம் எந்த மாறுதலையும் செய்யவில்லை. இவன் நடக்கலானான். நீண்ட தூரம் வந்ததும் திரும்பி பார்க்கவேண்டும் என்கிற உந்துதல் எற்பட, பார்த்தான்.

    அவள் குனிந்து சிலையாய் உட்கார்ந்திருந்தாள். ஒருவேளை இன்னமும் அந்த எறும்புக்குச் சிறை விதித்துக் கொண்டிருக்கிறாளோ என்னமோ.

    இவன் மீண்டும் நடந்த போது வேகமாய் ஒரு பஸ் இவனைக் கடந்து ஸ்டேஷன் பக்கமாய் ஓடியது. காற்றில் புழுதி கிளம்பி இவன் மூக்கையும் கண்ணையும் நிறைத்தது. சாலை முடிந்து வலதுபுறம் திரும்ப இவன் மீண்டும் அவளைப் பார்த்தான்.

    அவள் சிறு பொம்மையாய் தெரிந்தாள். குடத்து நீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொள்வது தெரிந்தது, வெயில் பொறுக்க முடியவில்லை போலும். நம்மாலேயே பொறுக்க முடியவில்லை. இளம்பென் இந்த வெயிலை எப்படி. அது சரி இந்த வெயிலில் நீர் எடுக்க எதற்காக வரவேண்டும்.

    பார்த்தால் வசதியான வீட்டுப்பெண் போல தெரிந்தது. குடத்து நீரைச் சரிக்கும் போது இரண்டு கைகளிலும் வரிசையாய் தங்க வளையல்கள். கழுத்தில் கொத்தாய் சங்கிலிகள். வெள்ளைக்கல் அட்டிகை. இந்த பொட்டல் வெளியில் இத்தனை நகைகளுடன் ஒரு இளம் பெண்.

    தன் வேலையைப் பார்த்துப் போகாமல் வந்ததும் வராததுமாய் எதற்காக மற்றவர் பற்றி நினைக்க வேண்டும். தார்ச்சாலையில் கிளையாய் ஒரு மண் சாலை பிரிந்து ஓடியது. பெரிய சிமென்ட் பலகை நெய்யூர் பஞ்சாயத்து உங்களை வரவேற்கிறது என வாழ்த்திற்று.

    ஊர் மெல்ல உயிர்த்துக் கொண்டிருந்தது புரிந்தது. மண் சாலையில் அதுதான் ஊரில் கடைத்தெருவாய் இருக்கவேண்டும். பால் கோஆபரேடிவ் ஸொஸைடி ஒன்று இருந்தது. வெளியே நின்ற மனிதர் பல் குத்தியபடி இவனையே உற்றுப் பார்த்தார்.

    ஸார், இங்கே எலக்டிரிக் ஆபிஸ் எங்கே இருக்குங்க.

    அப்படின்னா...

    கரண்ட் ஆபிஸ்ங்க.

    அப்படி சொன்னாதானே புரியும். நடந்துட்டே இருங்க வரும்.

    இவன் நன்றி சொல்லி நகர்ந்தான். இவன் நன்றியை மதிக்காத அந்த மனிதர் மீண்டும் பல் குத்தலானார்.

    இவன் நடந்து கொண்டிருக்கையில் மோட்டர் சைக்கிள் ஒன்று வேகமாய் இவனைக் கடந்தது. அதில் நடுத்தர வயதும் கட்டுமஸ்தான உடம்பும் கொண்ட மனிதர் இவனையே வெறித்துப் பார்த்தபடி போனார். இவன் ஒருவழியாய் அந்த மின்சார மேற்பார்வையாளர் அலுவலகம் அடைந்தான்.

    சாதாரண வீடு கம்பிகள் போடப்பட்டு கவுண்ட்டர் வைத்து பில் இங்கே கட்டவும் எப்பொழுது மின்வெட்டு என்கிற போர்டும் ஆள் அரவமற்ற அலுவலகமும் இவனை வரவேற்றன. அலுவலகம் முன்பு தென்னங்கீற்று பந்தலாய் போடப்பட்டு வெயிலுக்கு இதமாய் இருந்தது.

    ஆபிஸ் என்றழைக்கப்பட்ட அந்த வீட்டில் யாருமில்லை. அலுவலகத்தைப் பார்த்தபடி அங்கிருக்கும் நீள பெஞ்சில் உட்கார்ந்தான் சரவணன் கேஷியர் உட்காரும் இடத்திற்கும் செக்ஷன் ஆபிஸர் உட்காரும் நாற்காலிக்கும் இடையே லாக்கர் சுவரில் பதிக்கப்பட்டு கனமான பூட்டு பூட்டப்பட்டிருந்தது. தேதி பார்த்தான். பதினெட்டு. பணம் சுமாராய்தான் உள்ளே இருக்கும். ஆனாலும் இப்படியா எது நுழைந்தாலும் கேட்க ஆள் இல்லாமல்.

    இவன் வியர்வையில் நனைந்த தன் வாட்சைக் கழற்றி துடைத்துக்கொண்டிருக்கையில் பந்தல் அருகே நிழலாடி பேச்சுக்குரல் கேட்டது. காக்கி அரை சட்டை அரை டவுஸர் போட்ட கனத்த மனிதரும் பேண்ட் ஸ்லாக் போட்ட நபரும் பேசியபடி உள்நுழைந்தனர்.

    யாருப்பா என்ன வேணும்.? ஆபிஸ் தொறந்திருந்தா உள்ளே வந்து உட்கார்ந்துடறதா. இங்கேபாரு பில் கட்ட இப்ப முடியாது. பில் கலெக்டர் போயிட்டாரு. நாளைக்கு வந்து பாரு.

    காக்கி உடுப்பு மீசை முறுக்கி அதிகாரம் பேசிற்று.

    பழனி கொஞ்சம் சும்மா இரு. ஸார் இப்ப பில் கட்ட...

    பேசாம இருங்க போர்மேன் ஸார் வெள்ளை உடுப்போட இருப்பானுங்க. வுட்டா லாக்கர் உடைச்சு பணத்தை அபேஸ் செய்துடுவாங்க எழுந்து வெளியே போப்பா.

    வயர்மேன் பழனி உக்கிரமாக முறைக்க, சரவணன் எழுந்து கொண்டான்.

    ஸாரிஸார் நான் பெட்டி படுக்கையோட நேரா ஜாயின் பண்ண வந்திருக்கக் கூடாதுதான்.

    ஸார் யாரு நான் போர்மேன் ஏகாம்பரம்.

    இங்கே ஜாயின் பண்ண வந்திருக்கற செக்ஷன் ஆபிஸர் சரவணன்.

    போர்மேன் கைகால்நடுங்க நாற்காலி எடுத்துப் போட்டார். வயர்மேன் பாதியாய் மடிந்து வாய் பொத்தி நின்றான். அதிலும் ஒரு செயற்கைத்தனம் போலி மரியாதை தெரிந்தது.

    ஏ.ஈ. எங்கே போர்மேன்.

    அவர் மனைவிக்கு உடம்பு சுகமில்லன்னு நேத்து நைட் போனாருங்க ஸார். நான் போன்ல தகவல் சொல்றேன். உடனே வந்துருவாரு ஸார். வரதா ஒரு தபால் போட்டிருந்தா நாங்க ரெடியா ஸ்டேஷனுக்கு வந்திருப்போம்.

    பரவாயில்லை. இங்கே தங்கிக்க வீடு கிடைக்குமா. ஏ.ஈ. ஏதோ எழுதி இருந்தாரே அங்கே போகலாமா.

    வாங்க ஸார். பழனி அந்த சூட்கேஸ் எடுத்துட்டு வாப்பா.

    வேணாம், நானே எடுத்துட்டு வரேன்.

    என் வண்டியில் உங்களை அழைச்சிட்டு போறேன். அதை எப்படி எடுத்து வர முடியும். பரவாயில்லை ஸார். பழனி எடுத்து வருவார். 

    ஆமாங்க ஸார்.

    போர்மேன் ஏகாம்பரம் பழனியின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.

    பழனி தன் சைக்கிள் கேரியரில் சூட்கேஸ், ஹோல்டால் வைத்து கயிற்றால் பிணைத்தான். மறுவிநாடி காற்றாய் சைக்கிள் காற்றாய் பறந்த்து.

    ஏகாம்பரத்தின் டி வி எஸ்50-யின் பின்புறம் சரவணன் ஏறிக்கொண்டான்.

    கிராமத்து மண் சாலையில் அதன் குண்டும் குழியிலும் குஷாலாய் பயணம் செய்தது டி வி எஸ் 50 இரண்டு தெருக்கள் பயணத்தில் வீடுகள் வெயிலைக் கொண்டாட வெறிச்சோடிக் கிடந்தன.

    ஒரு தெருவில் திருப்பத்தில் இவனுக்கு நீர் கொடுத்த பெண் வெற்றுக் குடத்தை ஒரு கையில் பிடித்தபடி நடந்து போய் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் பார்க்காதவள் போல நடந்தாள்.

    என்னங்க ஏகாம்பரம், உங்க ஊர்ல பட்டப் பகல்லதான் தண்ணி எடுப்பிங்களா.

    ஒ. அந்த பெண்ணைப் பார்த்துட்டு கேக்கறிங்களா. அது...அது நம்ம பெரிய பண்ணையோட மருமக... அது...

    அவங்க எதுக்கு தண்ணி...

    அது வந்துங்க ஒரு மாதிரி.

    அப்படின்னா...

    புத்தி பிசகினது போலன்னு வச்சுக்குங்க.

    அது வீட்டுக்காரரு என்ன செய்யறாரு.

    ஊம். வீடு வந்தாச்சு. இதாங்க. நம்ம பழைய ஏ ஈ ஐயா இருந்த வூடு அதுல இருக்கிற சாமான் செட்டோட உங்களுக்குக் குடுத்துட சொன்னார். நீங்க என்ன குடுத்தாலும் போறும்னு சொன்னார்.

    பந்தலிடப்பட்டு திண்ணையுடன் கூடிய சின்ன ஒட்டு வீடு சுற்றிலும் வீடுகள் இல்லை. வீட்டின் எதிர் புறம் பெரிய மச்சு வீடு இரண்டு மாடிகள் இரண்டாவது மாடியில் தென்னங்கீற்று வேயப்பட்டிருந்தது. அந்த பெரிய வீட்டின் முன்புறம் பெரிய பந்தல். பச்சை கம்பிகள் போட்ட கதவு உயரமாய் இருந்தது. உள்ளே இருபுறமும் பெரிய திண்ணைகள். அதற்கும் கம்பி அடைப்புகள்.

    இவர்கள் உள்ளே நுழைகையில் அந்த பெண் வந்து தானே உள்ளே விரல் விட்டு கதவு திறந்து உள்ளே போனாள். ஏதோ கூக்குரல் கேட்டது. ஆனால் ஒலி புரியவில்லை.

    வாங்க ஸார்.

    ஒருவிநாடி எதிர்வீட்டை பார்த்து நின்ற சரவணன் உள் நுழைந்தான். இரண்டே அறைகள், சின்னஞ்சிறிய வீடு. ஒரு டிரான்ஸிஸ்டர், டேபிள் சேர் கட்டில் என கிடந்தன. எதிலும் - ஒழுங்கில்லை.

    ஸார் ரெஸ்ட் எடுங்க. ஏ ஈ வந்துருவாரு அப்புறம் ஆபிஸ் வரலாம். 

    சரிங்க ஏகாம்பரம் போன சிறிது நேரத்தில் சரவணன் வீட்டின்பின்புறம் இருந்த கிணற்றடிக்குப் போனான். சேந்து கயிறும் வாளியும் கிணற்றில் இருந்தன. நாலைந்து வாழைகள் நீரின்றிகருகத் துவங்கியிருந்தன.

    நீர் இறைத்து தலையில் ஊற்றிக்கொண்டான். ஐந்தாறு பக்கெட்டுக்கள் ஊற்றினதும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் நீங்கி இருந்தது. அவன் உடல் துவட்டி லுங்கி உடுத்துகையில் வயர்மேன் பழனி ஒரு பெரிய அலுமினிய கேரியரில் வாழையிலை செருகி சாப்பாடு கொணர்ந்தான்.

    என்னப்பா பழனி இது.

    சாப்பாடுங்க, போர்மேன் ஐயா குடுக்கச் சொன்னார்.

    இங்கே தினமும் சாப்பிட இடம் இருக்கா.

    ஒரு ஐயர் வூடு இருக்குது ஸார் சொல்லி வச்சா கிடைக்கும்.

    உம்..

    ஏன் ஸார் உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா.

    ஒருவிநாடி மெளனித்தான் சரவணன்.

    ஊம்... கேள்விக்குறியாய் நிறுத்தினான்.

    ஸாருக்குக் கல்யாணம் ஆகிருச்சான்னு கேட்டேனுங்க. அம்மா வந்தா சாப்பாட்டுப் பிரச்னை இருக்காது பாருங்க.

    இல்ல...

    அப்ப நான் வரட்டுங்களா ஸார்.

    ஊம்

    பழனியுடன் கதவு வரை வந்தான் சரவணன்.

    எதிர்வீட்டு திண்ணைத் திண்டில் ஒரு வாலிபன் சாய்ந்தபடி விரல் சூப்பிக்கொண்டிருந்தான் விநோதமாய் இருந்தது. தாடி மீசை மழிக்கப்பட்டிருந்தது. வயது இருபத்தைந்து இருக்கலாம்.

    பழனி, அங்கே உட்கார்ந்திருக்காரே அவர் யாரு எதுக்குச் சின்னப்பிள்ளையாட்டம் விரல் சூப்பிட்டு இருக்காரு.

    அது வந்துங்க, பெரிய பண்ணையோட ஒரே மகனுங்க. அவர் இப்படித்தானுங்க. நான் வரேங்க பொழுதுசாய வந்து ஐயர் வூட்டுக்கு காபி டிபனுக்கு அழைச்சிட்டு போறேனுங்க.

    சரி பழனி.

    பழனி இக்கேள்விக்குப் பயந்து ஒடுவதைப் போலிருந்தது.

    கதவைத் தாளிட்டுத் திரும்பினான். காரியருடன் பிணைத்திருந்த வாழையிலையை விரித்து நீர் தெளித்து சுத்தம் செய்தான் பொரியல், சாம்பார், மோர் என எல்லாம் இருந்தது. ஆவலுடன் எடுத்து போட்டுக்கொண்டான்.

    சாப்பாடு மிகவும் ருசியாய் இருந்தது. நகரத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் கிடைப்பதைவிட சுத்தமாய் ருசியாய் இருந்தது. பசிக்கு இரண்டுபிடி எடுத்து சாப்பிட்டான்.

    பண்ணையாருக்கு ஒரே மகன் என்கிறான் பழனி. அந்தப்பெண் பண்ணையாரின் மருமகள் என்கிறார் போர்மேன் அப்போது அங்கே உடல் வளர்ந்தும் மனம் வளராமல் நிற்கும் அந்த வாலிபக் குழந்தையின் மனைவியா அந்த அழகு நிலா.

    எங்கோ எதுவோஇடித்தது.

    சரவணனால் பசிக்குச் சாப்பிட முடியவில்லை.

    2

    மயிலம்மாள் அந்த பெரிய வீட்டின் ஒவ்வொரு அறையாகத் தேடினாள் மாடியிலும் தேடினாள், சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருந்த வேலாயி மீது அனலாய் விழுந்தாள்.

    எங்கிட்டுடி அவ போனா, ஒன்னைத்தானே பாத்துக்கச் சொன்னேன். நாத்து எடுத்துக்குடுக்கச் சொல்லி அம்புட்டு நகையும் போட்டிருந்தேனேடி , அதோட போயிட்டாளே. எங்காச்சும் ஊரைவிட்டு...

    அதற்கு மேல் வார்த்தைகளுக்கு முழுவடிவம் கொடுக்க பயந்து நிறுத்தினாள் மயிலம்மாள். மாநிறமான அவள் நெற்றியில் ரூபாய் அளவு வாடாமல்லி குங்குமம். பின்னங் கொசுவமிடப்பட்ட கோடம்பாக்கச் சேலை, எண்ணெய் தடவி வழவழப்பாய் வாரிமுடிந்த பெரிய கூந்தல் முடிச்சு. கழுத்து நிறைய பொன் சங்கிலிகள். பெரிய கல்தோடு கைநிறைய தங்க வளையல்கள். நெற்றியோரம் இருபுறம் நரை கண்டிருந்தது, காலவோட்டத்தைச் சொல்லின, இருப்பினும் பண்ணைக்காரம்மாளின் இளமைக்கு இன்ன்மும் உயிர்இருந்தது.

    என்னடி நான் கேட்டுட்டே நிக்கறேன். நீ பாட்டுக்கு என்னியே கண் எடுக்காம பாக்கற. இவ எடுத்துக்குடுத்தா விளைச்சல் அமோகமாஇருக்கு. ஊர்மக்கமார் நடுவே மருமவ வரட்டுமேன்னு கவுண்டர் சொன்னார். இப்ப இப்படி அம்போன்னுவுட்டு போயிட்டாளேடி: நான் கவுண்டருக்கு என்னடி சொல்வேன்.

    அரிவாள்மனையை நகர்த்திவிட்டு தவிப்புடன் எழுந்தாள் வேலாயி பதினெட்டு பத்தொன்பது வயதுக்கு மேலிருக்காது. இளமையும் பெண்மையும் வஞ்சனையில்லாமல் உடலில் செழித்திருந்தன. கருப்பில் வார்தெடுத்த கர்ப்பக்கிருக சிலையாய்... கரிய முகத்தில் பெரிய வெள்ளை விழிப்படலங்களில் வட்டக் கருவிழிகள் அலைந்தன. கவர்ச்சி அங்கே கொட்டிக் கிடந்தது.

    வூட் ல சாக்கிரதையா பாக்கறதவுட்டுப்புட்டு இப்ப எங்கிட்டுன்னு போய் தேடறது. ஒரு வேளை ரயிலேறி எங்காச்சும் ஒடியிருப்பாளே.

    "ஐயோ சொல்லாதீங்கம்மா. சின்னம்மா அப்படியெல்லாம் செய்யாது. நான் எதுக்கும் கடைவீதி

    Enjoying the preview?
    Page 1 of 1