Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhikkul Vizhundha Macham
Vizhikkul Vizhundha Macham
Vizhikkul Vizhundha Macham
Ebook102 pages39 minutes

Vizhikkul Vizhundha Macham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580114201879
Vizhikkul Vizhundha Macham

Read more from Hamsa Dhanagopal

Related to Vizhikkul Vizhundha Macham

Related ebooks

Reviews for Vizhikkul Vizhundha Macham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhikkul Vizhundha Macham - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    விழிக்குள் விழுந்த மச்சம்

    Vizhikkul Vizhundha Macham

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    மண் சாலையில் எல்லா வீடுகளும் கொஞ்சம் பெரியவைதான். அதில் தெற்குப் பார்த்திருந்த ‘இலக்குமி இல்லம் -1940' என்கிற எழுத்துக்கள் மாடிச் சுவரில் எழுதப்பட்டிருக்க பிரம்மாண்டமாய் இருந்தது. நெகு நெகு திண்ணைகளும் மாடியைத் தாங்கும் பெருந் தூண்களும்... ஜமீன் வீடு போன்ற பிரமை கொடுத்தது.

    விடியலிலிருந்து மணி பன்னிரண்டு வரை திண்ணையில் அமர்ந்து தங்கள் பிரசினைகளுக்குத் தீர்வு காணப் 'பெரியவர்' தரிசனத்துக்காகக் காத்திருந்த கூட்டம்.

    வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தெருவை முன்னும் பின்னும் பார்த்தபடி அப்போது முண்டாசும் இடுப்பில் மங்கின வெள்ளை வேட்டியுமாய் அந்த மனிதன் தளர்ந்த நடையில் வந்து கொண்டிருந்தான். பல வீடுகள் கடந்ததும் தெருவின் சத்தமின்மை அவனுக்குச் சஞ்சலம் கொடுத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு கதவிலக்கம் பார்த்தபடி அவன் நடக்க, ஏதோ ஒரு குழந்தை வீறிட மெளனம் நொறுங்கிப் போயிற்று.

    அறுபத்து மூன்று இலக்கமிட்ட ‘இலக்குமி இல்லம்' முன் நின்று தன் கையிலிருந்த கசங்கிய பேப்பர் ஒன்றை நான்கைந்து முறை எழுத்துக் கூட்டிப் படித்தான். தனக்குத்தானே சரியென்பது போல தலையாட்டி, முண்டாசு கழற்றி உதறினான். தோளில் போட்டு அதன் சுருக்கம் நீவினான். வேட்டியை இடுப்பி லிருந்து இறக்கித் தரை பார்க்க விட்டான். தோள் துண்டைக் கைகளில் எடுத்தவன், கதவை மெல்லத் தட்டினான்.

    உள்ளிருந்து சத்தம் எதுவும் வரவில்லை. மீண்டும் தட்டினான். காத்திருந்தான். மெல்லிய காலடி ஓசை கேட்டது.

    இவன் பசிக் களைப்பு முகத்தில் தேங்கக் கம்பிக் கதவுகள் வழியே பார்த்தான். நன்கு வேலைப்பாடு கொண்ட தேக்குக் கதவு திறந்து அந்தப் பெண் வந்து நின்று 'யார்’ என்பது போலப் பார்த்தாள். எண்ணெய் தடவி நன்கு வாரி முடிந்த பெரிய கூந்தல்; பின்னங்கொசுவம், வெற்றுக் கழுத்து, கைகள் மெலிந்து அழகாய் அமைப்பாய்ச் சிலை போல வடிந்திருந்தது. சோளி போடாத மார்பகம் இவனைப் படுத்திற்று.

    மாநிறத்தில் திரும்பத் திரும்பப் பார்க்கும் ஆசை தூண்டினாள். இவன் கம்பிக் கதவுகளிடையே பார்த்தபடி, ஐயாவைப் பார்க்கணும், என்றான் பவ்வியமாய்.

    அவள் பேசவில்லை. வந்து கம்பிக் கதவு திறந்தாள். திண்ணையைக் காட்டிவிட்டு, வந்தது போலவே உள்ளே போனாள். கதவு அடைக்கப்பட்டது.

    உள்ளே பவ்வியமாய் நுழைந்தவன், உட்காருவது கெளரவக் குறைச்சல் என நினைத்தவன் போல நின்றான். நேரம் அரைமணி... ஒரு மணி... அதற்கும் மேலே எனக் கடந்து கொண்டிருந்தது. வந்து கதவு திறந்தவள் சொல்லியிருப்பாளோ, அப்படிச் சொல்லியும் வராமல் இருப்பாரோ... இன்று பார்க்க இயலாவிட்டால் திரும்ப அனுப்பி இருக்கலாமே எனப் பல்வேறு சிந்தனைகளுடன் துணைப் போய்க் கொண்டிருந்தான். திண்ணை விளக்கு மாடத்துக்கு மேலே மாட்டப்பட்டிருந்த 'இலக்குமி இல் லம்’ என்கிற பித்தளைப் பெயர் பலகை கருத்திருந்தது.

    திண்ணையில் ஏறி அதனைத் தன் தோள் துண்டால் அழுத்தித் துடைக்கலானான். பசி வயிற்றை அழுத்திப் பிசைய, முகத்தில் களைப்பும் தாகச் சாயலும் கொட்டிக் கிடக்க, துண்டால் அழுத்தித் துடைக்கலானான். எழுத்துக்கள் பளீரென மின்னலாயின. அப்போது கதவு திறக்க மெல்லிய காலடி ஒசையும் சின்ன ஏப்பமுமாய் 'பெரியவர்' வெளிப்பட்டார்.

    பின்னந்தலை வழுக்கைக்குச் சளைக்காமல் முன்புற வழுக்கையும் நரையும் கருமையும் கைகோத்துக் கொள்ள, மீசை மட்டுமே கருமை சொல்லிற்று. சற்றே பூசினாற் போன்ற சரீரம். கோதுமை நிறம். கைத்தறி வேட்டி தோளில் பட்டு அங்கவஸ்திரம். மார்பில் ரோமம் அடர்ந்திருக்க அதில் சில நரை நட்சத்திரங்கள். புலி நகம் கோத்த கனத்த தங்கச் சங்கிலி,

    இந்த மனிதனின் செயல் அவர் முகத்தில் பரவசத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுக்க, பெரியவர் முகம் மேலும் விரிந்தது.

    "யாருப்பா நீ? உன்னை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லையே?’’

    பெயர்ப் பலகை துடைத்திருந்தவன் பக்கத்தில் கேட்ட குரலில் திடுக்கிட்டு, திண்ணையிலிருந்து குதித்தான். ஏதோ பெரியவருக்குண்டான அரியாசனத்தில் தான் அமர்ந்து அபசாரம் செய்தவன் போல நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துச் சேவித்தான்.

    ஐயா, கும்பிடறேனுங்க. திண்ணையில் ஏறி நின்னுட்டேனுங்க. மன்னாப்பு வேணுமுங்க.

    ‘'நீ யாரு... என்ன? அதைச் சொல்லு. எழுந்து நில்லுப்பா. உன் பெயர் என்ன? யாரைப் பார்க்க வந்தே?"

    இடது பக்கம் சிமெண்ட்டில் திண்டு போலக் கட்டப்பட்டிருந்த திண்ணையில் சாய்ந்து அமர்ந்தார். அப்போது சற்றுமுன் வந்த பெண் வந்து கை மட்டும் வெளியே நீட்டினாள். அதை அவசரமாய் வாங்கின அந்த மனிதன் திண்ணையில் விரித்து அவரை அமரும்படி கண்ணால் கெஞ்சினான். அவர் மறுதிண்ணையில் பாயில் அமர்ந்து திண்டில் சாய்ந்தார். துண்டை எடுத்துக் கையில் வைத்தபடி மெல்லிய குரலில் பேசினான் அவன்.

    "என் பேரு பழனிவேலுங்க. சேர்மன் ஐயாவைப் பார்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1