Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nadana Nila
Nadana Nila
Nadana Nila
Ebook161 pages1 hour

Nadana Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீங்கள் கையிலே வைத்திருக்கிற இந்த நாவல் திருமதி. ஹம்ஸா அவர்களின் கனமான நாவல்களிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு இளமை - இனிமை நிறைந்த காதல் நவீனம். படித்து முடிக்கிறபோது, ஒரு ஜனரஞ்சக திரைப்படத்தை பார்த்த சுகம் பிறக்கிறது. திரைப்பட தயாரிப்பாளருக்கு நல்ல வெற்றியை ஈட்டித் தர இதோ ஒரு கதை இங்கே மலர்ந்திருக்கிறது. இயக்குநர்களுக்கு அதிக சிரமம் வைக்காமல் ஒவ்வொரு நிகழ்வும் “ஷாட்" பிரித்து எழுதப்பட்டது போல் இயல்பாக பொருந்தியுள்ளது. பயன்படுத்திக் கொள்ளப் போகிற அதிர்ஷ்டக்காரருக்கு எங்களது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580114201878
Nadana Nila

Read more from Hamsa Dhanagopal

Related to Nadana Nila

Related ebooks

Reviews for Nadana Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nadana Nila - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    நடன நிலா

    Nadana Nila

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கனவுப் பூக்கள்

    2. நெருப்பில்லாமல் புகையாது!

    3. காலம் வரட்டும் சொல்கிறேன்

    4. மறக்க முடியாத பரிசு

    5. சொந்த மண்ணின் பாசப் பிணைப்புகள்

    6. இன்று உன் பிறந்த நாள்

    7. விதி வகுத்திருந்த வழி

    8. பாலுக்குக் காவல் பூனையா?

    9. செக் டு த கிங்!

    10. நீயா நானா பார்க்கிறேன்!

    11. ஒட்டக சவாரி

    12. சுகன்யா நீயே என் மது

    13. வலை விரிக்கப்பட்டது!

    14. கிருஷ்ணா என்னைக் கொல்லாதே

    15. என் அம்மா சுமங்கலி

    நடன நிலா

    இனிமை ததும்பும்

    ஒரு இளமை காவல்

    நாவல் அல்ல,

    நவரச காவியம்!

    சமீப கால நாவல் உலகில் தனக்கென ஒரு தடத்தை ஏற்படுத்தி, யாரிவர் நன்றாக எழுதி வருகிறாரே என்று பலரது புருவத் தூக்கல்களுக்கு காரணமாயிருந்து வரும் திருமதி. ஹம்ஸா தனகோபால் அவர்களின் பதிநான்காவது நூல் இது. திருமதி ஹம்ஸா அவர்கள் மராட்டிய மொழிக்கு சொந்தக்காரர்-தமிழகம் அவர்களது புகுந்த வீடு-புகுந்த இடத்தில் (தமிழ்) மாமியார் மெச்சும் விதத்தில் எழுத்துச் சாதனைகளை புரிந்து வருகிறார்-என்ற செய்தி பலரையும் வியப்புற வைக்கும்.

    நீங்கள் கையிலே வைத்திருக்கிற இந்த நாவல் திருமதி. ஹம்ஸா அவர்களின் கனமான நாவல்களிலிருந்து சற்றே மாறுபட்ட ஒரு இளமை - இனிமை நிறைந்த காதல் நவீனம். படித்து முடிக்கிறபோது, ஒரு ஜனரஞ்சக திரைப்படத்தை பார்த்த சுகம் பிறக்கிறது. திரைப்பட தயாரிப்பாளருக்கு நல்ல வெற்றியை ஈட்டித் தர இதோ ஒரு கதை இங்கே மலர்ந்திருக்கிறது. இயக்குநர்களுக்கு அதிக சிரமம் வைக்காமல் ஒவ்வொரு நிகழ்வும் ஷாட் பிரித்து எழுதப்பட்டது போல் இயல்பாக பொருந்தியுள்ளது. பயன்படுத்திக் கொள்ளப் போகிற அதிர்ஷ்டக்காரருக்கு எங்களது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    ரசிகர்கள் நெஞ்சங்களில் உலா வரப்போகும் இந்த நாடன நிலாவை பிரசுரிக்க பெரிதும் துணை நின்ற திரு. தனகோபால் அவர்களுக்கு எங்களது நன்றி.

    1. கனவுப் பூக்கள்

    இன்னிக்கு வெளியான ‘ஜெய் கிருஷ்ணா’வின் புக் இந்தாங்க ரங்கசாமி பவ்வியமாக புத்தகத்தை பார்வதி அம்மையாரிடம் நீட்டினார்.

    உம்... நீங்க பார்த்தீங்களா? என்றார் பார்வதி புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே.

    சில இடங்களே படிச்சேன். கட்டுப்பாடற்ற கவிதைகளாம். உம்… என்ன எழுதறார். ஏதாவது திட்டி எழுத வேண்டியதுதான். சரியான வக்கிரம்.

    நல்லதும் எழுதறான். கெட்டதும் எழுதறான். இருக்கிறதைதானே எழுதறான். நமக்கு வேண்டியதை நாம எடுத்துக்கணும்.

    இந்த மாதிரி எழுத்தாளர்களாலேதான் இளைஞர்களும் பெண்களும் கெட்டுடறாங்க

    ஒருத்தர் எழுத்தைப் படிச்சு கெட முடியுமா. அது சரி. நீங்க இன்னும் திருவல்லிக்கேணி வீடுகளிலேவிருந்து வாடகை வசூலிக்கப் போகலியா. தேதி பதினைஞ்சு ஆச்சு. அப்புறம் அடுத்த மாசம் அந்த வாடகையையும் சேர்த்துக் கொடுக்க கஷ்டப்பட மாட்டாங்களா.

    இதோ போரென்மா. காரை எடுத்துட்டுப் போகட்டுமா? நீங்க எங்காவது போகணுமா?

    இல்லே. நீங்க போங்க.

    துண்டை உதறி தோளில் போட்டவண்ணம் பட்டை விபூதி பூசின நெற்றியுடன் நடுத்தர வயதான ரங்கசாமி வெளியேறினார்.

    காற்றில் பறந்த மயிரைச் சரிபடுத்தியவண்ணம் ‘கனவுப் பூக்கள்' என்கிற அந்த நூலைப் புரட்டினார் பார்வதி.

    முதல் கவிதையே அவரைக் கவர்ந்தது.

    "தாயுமில்லை அம்மா என்றழைக்க

    தந்தையுமில்லை அப்பா என்றழைக்க

    "அவளுமில்லை அன்பே என்றழைக்க

    அவனுமில்லை மகனே என்றழைக்க

    பிறக்கவில்லை இங்கே நானும்

    பந்தங்கள் என்னை விலங்கிட!"

    இரண்டு மூன்று முறைகள் படித்து, கனவுப் பூக்களை நெஞ்சில் அணைத்து விழிமூடி கண்ணிர் சிந்திக் கொண்டிருந்தார் பார்வதி, அந்த பெரிய பங்களாவின் தனிமையில்.

    அமெரிக்காவிலிருக்கும் அவன் மகன் டாக்டர். கருணாகரனிடமிருந்து அன்று காலை வந்த கடிதம் மேசையில் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது.

    ஜெய், நீங்க கட்டாயம் வரணும். உங்கள நம்பி தான் பட்டி மன்றமே நாங்க ஏற்பாடு செய்திருக்கோம். என்றாள் ரத்ன கலா, லுங்கி ஷர்ட், தோள்வரை சரிந்த பூவான பொன்னிற மயிர்.

    ஸார், உங்க புரோக்கிராமை அடுத்த நாளுக்கு மாத்திக்குங்க. எங்க காலேஜுக்கு அவசியம் நீங்க வந்தே ஆகணும் என்றாள் விநோதினி இரட்டைப் பின்னல்கள் ஆட.

    நீங்க இவ்வளவு வற்புறுத்தறப்போ நான் எப்படி மறுக்கமுடியும். ஜெய் கிருஷணா பிடரி வரை இறங்கிய சுருண்ட மயிர்க்கற்றைகளை அழுத்தி விட்டபடி பேசினான். முறுக்கிவிடப்பட்ட அடர்த்தி மீசை. கன்னங்களில் ஆழ்ந்திறங்கிய கெல்லி. பரந்த நெற்றி. கூர்மையான அறிவொளி வீசும் கண்கள். பேசும்போது பளிச்சிடும் பற்கள். மாநிறம் நல்ல உயரம். உயரத்துக்கேற்ற பருமன்.

    ஜெய் ஸார், அந்த கனவுப் பூக்கள் கவிதையிலே தாலி கட்டி கல்யாணம் செய்றதைக் கேலி செய்றிங்களே ஏன். அப்போ தாலி கட்டறதை அசட்டுத்தனம் என்கிறீங்களா என்றாள் வித்யா.

    அந்த காலத்திலே புலி வேட்டையாடி வீரத்தின் அடையாளமா பல்லைக் கட்டினாங்க. இந்த காலத்திலே வீரம் என்றது என்னன்னே மறந்துடுச்சி. அப்புறம் தாலி மட்டும் எதற்காம். வெறும் மாலை மாற்றிக்கிட்டா கல்யாணம் ஆயிட்டதா ஆகாதோ.

    தாலி கழுத்தில் இருந்தா அவளைப் பார்க்கிறவனுக்குக் கெட்ட எண்ணம் தோணாது. அந்த பெண்ணும் ஒழுங்கா நடப்பான்னுதான். என்றாள் மாலதி.

    உம்… ஒருவனுக்கோ ஒருத்திக்கோ ஏற்படற எண்ணங்களை ஒரு சின்ன கயிறு மாத்திடுமுன்னா இந்த உலகத்திலே தப்பே நடக்காது. கல்யாணம் ஆணவங்க தப்பு செய்யறப் போ...

    ரத்ன கலா ‘கனவுப் பூக்களை'ப் பிரித்து அக் கவிதையை வாய்விட்டு படித்தாள்.

    "நீதி மன்றங்களில் நியாயங்கள் பொதுவாம்

    மண மேடையில் ஆணுக்கு மாலையாம்

    பெண்ணுக்குத் தாலி வேலியாம்

    பொன்னுக்கு ஏணிந்த வீண் வேலை."

    அப்போ தங்க நகைங்க போட்டுக்கறதே தப்புன்னு சொல்றீங்களா?

    என் கருத்து அது. நான் யாரையும் என் கருத்தை ஏத்துக்குங்கன்னு சொல்லலே. தங்க நகையலே போடற பணத்தை சேமிப்பிலேயோ வியாபாரத்திலேயோ போடலாம். அதனால் எவ்வளவோ பயன் உண்டு.

    ஜெய் இதிலே ஒரு கையெழுத்து ரத்ன கலா ‘கனவுப் பூக்களை’ நீட்டினாள்.

    ‘Dream Flower Not Faded’ என எழுதி ‘ஜெய் கிருஷ்ணா’ என கையெழுத்திட்டான்.

    அப்போ நாங்க வர்றோம் ஸார். 24-ம் தேதி ஞாபகம் வெச்சுக்குங்க. கோரஸாக சொல்லிவிட்டு இளசுகள் துள்ளலுடன் வெளியேறின.

    கிருஷ்ணா டெலிவிஷன் ஸெட்டை ஆன் செய்ய கிரிக்கெட் மாட்ச்’ ஓடியது. டக்கென ஆஃப் செய்தான். ‘டைம் கில்லர்ஸ்' என அவன் உதடுகள் முணுமுணுத்தன.

    ரத்ன கலா திடீரென்று மீண்டும் உள்ளே அவனருகில் வந்து தலையைச் சாய்த்து, இந்த சண்டே என்னோட வரணும் நீங்க என்றாள் கொஞ்சலாக.

    எங்கே அவளை ரசித்துக்கொண்டே கேட்டான்.

    கோல்டன் பீச்.

    நான் மட்டுமா?

    இல்லே உங்க பாட்டனையும் கூட்டிட்டு வாங்க. முறைத்தாள் ரத்ன கலா.

    பாட்டன் பாட்டி இல்லாமல் வரமாட்டாரே. கிருஷ்ணா அவள் கன்னத்தில் தட்டி மூக்கைப் பிடித்து கிள்ளி, ரசித்து...

    உம்... ஜெய், கார்லே நான் வரேன். அவசியம் நீங்க...

    ஓ, கே.

    தேங்க்யூ ஜெய்: தாவி அவன் கன்னத்தில் சாயம் பூசிய தன் இதழ்களால் முத்திரை பதிந்து வெளியே ஓடினாள் ரத்ன கலா.

    கிருஷ்ணா சிரித்துக்கொண்டே தன் கன்ன சாயத்தை அழித்தான்.

    பங்களாவின் வெளியே மாணவிகளின் கார் புறப்படவும் மற்றொரு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    கிருஷ்ணா வெளியே சென்றான், காரிலிருந்து இருவர் இறங்கினர். ஒருவர் தலையில் தலைப்பாகையும் கீழ் பாய்ச்சு வேஷ்டியும், மற்றொருவர் ஸ்டைலாக பெல்பாட்டம் ஷர்ட்.

    வாங்க வாங்க ஏது இவ்வளவு தூரம் என்னைத் தேடிட்டு... கிருஷ்ணா வந்தவர்களை சோபாலில் உட்கார உபசரித்தான்.

    போன்லே கூப்பிட்டா உங்க அம்பி இல்லேன்னு சொல்லிடறான். என்றார் தலைப் பாகை மனிதர் ராம் பிரசாத்.

    பதில் பேசாது சிரித்தான் கிருஷ்ணா, சிகரெட் பாக்கெட்டை எடுத்து இருவரிடமும் கொடுத்துவிட்டு தானும் புகைக்கலானான்.

    படத்துக்கு எப்ப பூஜை போடப் போறிங்க மைக் ரோபோலோவை ஊதிவிட்டு கேட்டான் கிருஷ்ணா,

    எல்லாம் ரெடி, ஹீரோயின் செலக்ஷன் தான் முடிஞ்ச பாடில்லே. சலித்துக்கொண்டார் தயாரிப்பாளர் ராம்பிரசாத்.

    எத்தனையோ பேரை ஸ்கீரின் டெஸ்ட் செய்து பார்த்துட்டோம். உங்க கதையிலே வர ஹீரோயின் தகுதி யாருக்கும் இல்லே. பெருமூச்செறிந்தான் பட டைரக்டர் விநோத் குமார்.

    உம்... அப்புறம் என்ன செய்யப்போநீங்க கிருஷ்ணா.

    ஜெய் ஸார், உங்களாலே ஹீரோயினைப் புக் செய்ய முடியும் என்கிறார் டைரக்டர், என்றார் ராம் பிரசாத்.

    என்னாலேயா… என்ன சொல்றீங்க கிருஷ்ணா.

    "எஸ் மிஸ்டர் ஜெய் ஸார்.

    Enjoying the preview?
    Page 1 of 1