Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhali, Meendum Kaadhali
Kaadhali, Meendum Kaadhali
Kaadhali, Meendum Kaadhali
Ebook105 pages40 minutes

Kaadhali, Meendum Kaadhali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்களின் பல்வேறு நிலையினைப் பல்வேறு நாவல்களில் படம்பிடித்து காட்டியுள்ளார். பிரதானமாய் சேலம் மாவட்ட கிராமங்களில் நடைபெறும் "பெண் சிசு கொலையினைப்" பின்னணியாய் கொண்டு பல்வேறு நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் புனைந்துள்ளார்.

இவர் கணவர் மின்வாாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த காரணத்தால் இவருக்கு அந்த அனுபவங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது, மனம் நெருட காலவோட்டத்தில் அதை நாவலாக்கினார்.

இவரது பல நாவல்கள் கல்லூரிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பல மாணவ மாணவிகள் இவரின் நாவல்களை "எம்ஃபில்" படிப்பில் ஆய்வு செய்கின்றனர்.

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580114201886
Kaadhali, Meendum Kaadhali

Read more from Hamsa Dhanagopal

Related to Kaadhali, Meendum Kaadhali

Related ebooks

Reviews for Kaadhali, Meendum Kaadhali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhali, Meendum Kaadhali - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    காதலி, மீண்டும் காதலி

    Kaadhali, Meendum Kaadhali

    Author:

    ஹம்ஸா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    காதலி, மீண்டும் காதலி

    ஹம்ஸா தனகோபால்

    1

    செளகார்பேட்டையில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்கப்படும் காசி தெரு. சந்தின் நெரிசலில் கடைசியாய் இருந்த கடையில் ஜட்டி முதல் பேப்பர் வெயிட் வரை எல்லாமே வெளிநாட்டுச் சரக்கு. வெளிநாட்டு மோகத்தில் ஏழெட்டு பேர்கள் நின்று வாங்கிக் கொண்டிருந்தனர்.

    ராஜஸ்தானி கடைக்காரருக்கு ஒர் உதவியாளன் இருப்பினும் வருபவர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிக்க முடியவில்லை. அதில் வடநாட்டுப் பெண்மணிகள் வயிறும் முதுகும் பளீரிடச் சாயம் அப்பின உதடுகளால் ஹிந்தியில் பேசி வாங்குவதும். . .

    கடைச் சொந்தக்காரரின் பார்வைக்காகக் கடையின் மூலையில் இதற்கு மேல் ஒதுங்க முடியாது என்ற நிலையில் ஸ்வர்ண ரேகா வெண்ணிற மிடியில் கழுத்துவரை புரளும் கண்டிஷனர் கண்ட கூந்தல் இழைகள் காற்றில் அல்லாட பியூட்டி பார்லரின் உதவியால் தேவதை போன்ற பேரழகிற்குச் சொந்தக்காரி. நேச்சுரல் லிப்ஸ்டிக் கண்டிருந்த அவள் இதழ்கள் பற்களில் அநியாயமாய்க் கடிபட்டன. ஆத்திரம் உள்ளுக்குள் பொங்கிற்று.

    கடந்த அரை மணியில் இவளைக் கவனித்தும் கவனியாதவனாய் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான் கடைச் சொந்தக்காரன். ஹேண்ட் பேகில் உறங்கும் செண்ட் பாட்டிலை எடுத்து இங்கே வீசி எறிந்து போய் விடுவோமா என அவள் நினைக்கையில்… கூட்டம் காணாமற் போக,

    கடைக்காரன் சின்ன தலையசைப்புடன் கேட்டான்.

    என்ன வேணும் மிஸ்?

    இந்த செண்ட் வாசனை எனக்குப் பிடிக்கல. மாத்திக் குடுங்க. நேத்து காட்டினீங்களே, அது குடுங்க.

    உதவியாளன் வேடிக்கைப் பார்க்க, கடைக்காரருக்குக் கோபம். அவரைப் பற்றிக் கவலைப்படாமல் ஹேண்ட் பேகிலிருந்து காகிதத்தில் சுற்றின பெரிய செண்ட் பாட்டிலை எடுத்து மேசையில் வைத்தான்.

    இப்படி சேஞ்ச் செய்யறது செகண்ட் டைம் மேடம். இப்படி யூஸ் பண்ணிட்டு இது வேணாம், வேற குடுங்கன்னா நான் எப்படிக் கடை வச்சு நடத்த முடியும் கஸ்டம்ஸ் கெடுபிடி எங்களுக்கில்ல தெரியும்.

    நான் யூஸ் பண்ணவே இல்லை. ஒரு தரம் ஸ்ப்ரே செய்தேன். வாசனை பிடிக்கலை. நேத்து காட்டினிங்களே, அது குடுங்க.

    மேடம், யூ ஸீ... நெத்து எழுநூத்து சில்லறைக்குத் தானே வாங்கினீங்க பணத்தைக் குடுத்துடறேன், வாங்கிட்டுப் போங்க.

    ப்ளிஸ்… நான் பணத்தையா கேட்டேன். வேறு செண்ட் தானே…

    அதுசரி, இதையும் யூஸ் செய்துட்டு பிடிக்கலேன்னு கொண்டு வந்தா, என் பிஸினஸ் என்னாறது? டேய் பையா, அதை மாத்திக் குடு. இனி எடுத்து வராதீங்க மேடம்.

    சொந்தக்காரர் கடைக்கு வந்த புதிய நபர்களுடன் வியாபாரம் பேசத் தயார் ஆகிவிட…

    உதவியாளன் கொஞ்சம் சலிப்புக் காட்டியவனாய்ப் பாட்டில் மாற்றிக் கொடுத்தான்.

    தேங்க் யூ ஸார்.

    சொந்தக்காரர் அவள் சிரிப்பின் வசீகரத்தில் ஒரு விநாடி தடுமாறி, வெல்கம், சொன்னார்.

    அவள் ‘சன்னி’ நிறுத்தின இடத்தில் ஏழெட்டு வண்டிகள் நின்று வழி மறித்தன. அவள் தன் வண்டியைத் தள்ள முயல்கையில் அந்த இளைஞன் இதற்காகவே காத்திருப்பவனாய் எங்கிருந்தோ இவள் உதவிக்கு வந்தான்.

    ஃபங்க் கிராப், அடர்ந்த புருவங்கள். அதுவும் டிரிம் செய்யப்பட்டு முட்டை வடிவ முகம். நேச்சுரல் லிப்ஸ்டிக் போட்டது போன்ற மெல்லிய இதழ்கள். மாநிறத்துக்கு மேலான நிறம். இவளைவிட இரண்டு அங்குலம் கூடுதலாக இருந்தால் அதுவே மிகை. இளம் தாடி அவனுக்குக் கவர்ச்சி சொல்லிற்று. ஜீன்ஸ் டைப் பனியன்.

    இன்று காலையிலிருந்து அவனை ஏழாவது முறையாகப் பார்க்கிறாள். கல்லூரி போகும்போது, கல்லூரித் தோழிகளுடன் பேசிச் சிரிக்கையில், வெளியே சாலையில்... அவன் நின்றிருந்தான்.

    அத்தியாயம்இவள் எச்சில் துப்பிவிட்டு முறைத்தாள். அதே வாடாதஅத்தியாயம்அத்தியாயம் அத்தியாயம்அத்தியாயம்சிரிப்பு அவன் முகத்தில்.அத்தியாயம்

    கல்லூரி விட்டு இவள் சன்னியில் பயணிக்கையில்-

    அவன் பின்தொடர்ந்தான்.-

    இந்த வழக்கம் ஆறு மாதமா ஒரு வருடமா என கணிக்க முடியாமல் இவள் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டாளே அவன் தொடர்வது தவிர்க்க முடியாததாகி...

    இவள் வண்டிக்குப் பெட்ரோல் போடப் போனால் அவனும் தன் வண்டிக்குப் பெட்ரோல் போட வந்து நின்று இளம் தாடியை வருடியபடி வாடாத சிரிப்புடன் இவளை நோக்க…-

    அவனைப் பார்க்கும்போதே இவளுள் எரிச்சலும் கோபமும் வெடிக்கும்.

    இவள் திட்டிப் பார்த்தாள். அதற்கும் அதே சிரிப்புதான்.

    இதன் நடுவே அவன் பெரிய அரசியல் பெரும் புள்ளியின் மகன் என்றும் நல்ல வசதி என்றும் கேள்விப்பட்டாள். தோழிகள் தான் இந்தச் செய்தி அறிவிப்பைச் செய்தார்கள்.

    பெண்கள் பின்னால் அதுவும் அழகான பெண்கள் பின்னால் சுற்றுவதுதான் அவன் வேலை என்றார்கள். இவள் அதைக் கேட்டுக் கொள்ளவே இல்லை.

    அவனை மீண்டும் இங்கே காசித் தெருவில் அதுவும் இவளுக்கு வண்டி தள்ளி உதவி செய்ய வந்தபோது...

    எரிச்சல் கூடிற்று.

    மைண்ட் யுவர் பிஸினஸ்.

    தேங்க் யூ. திஸ் இஸ் மை பிஸினஸ்.

    இவள் உதடு சுழித்துவிட்டு, மேற்கொண்டு பேசாமல் நெரிசலில் தன் சன்னியில் புறப்பட்டுவிட்டாள். அவன் பின்

    Enjoying the preview?
    Page 1 of 1