Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Plus One
Plus One
Plus One
Ebook85 pages1 hour

Plus One

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தப் புத்தகத்தின் தலைப்பு, '+1'

'ப்ளஸ் ஒன்' என்றவுடன், பதினொன்றாம் வகுப்பை நினைத்துக்கொள்ளாதீர்கள். நவீன யுகத்தில் அதற்கு அர்த்தமே வேறு. இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறோம், வேறோர் உயர்ந்த நிலைக்குச் செல்ல ஆசைப்படுகிறோம், ஆனால் அங்கே போவதற்கு நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டியிருக்குமே என்று யோசித்துத் தயங்குகிறோம்.

அதற்குதான், '+1' ஃபார்முலா உங்களுக்கு உதவும். புதுப்புது விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்வதுதான் '+1', இதன்மூலம் ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று என்று படிப்படியாக முன்னேறி நூறையும் ஆயிரத்தையும் லட்சத்தையும் கோடியையும் தொடுவது சாத்தியமே!

Languageதமிழ்
Release dateMay 9, 2023
ISBN6580105001846
Plus One

Read more from N. Chokkan

Related to Plus One

Related ebooks

Reviews for Plus One

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Plus One - N. Chokkan

    http://www.pustaka.co.in

    ப்ளஸ் ஒன்

    Plus 1

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    +1

    அறிமுகம்

    இந்தப் புத்தகத்தின் தலைப்பு, '+1'

    'ப்ளஸ் ஒன்' என்றவுடன், பதினொன்றாம் வகுப்பை நினைத்துக்கொள்ளாதீர்கள். நவீன யுகத்தில் அதற்கு அர்த்தமே வேறு.

    இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறோம், வேறோர் உயர்ந்த நிலைக்குச் செல்ல ஆசைப்படுகிறோம், ஆனால் அங்கே போவதற்கு நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டியிருக்குமே என்று யோசித்துத் தயங்குகிறோம்.

    அதற்குதான், '+1' ஃபார்முலா உங்களுக்கு உதவும். புதுப்புது விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு நம்மை மேம்படுத்திக்கொள்வதுதான் '+1', இதன்மூலம் ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து மூன்று என்று படிப்படியாக முன்னேறி நூறையும் ஆயிரத்தையும் லட்சத்தையும் கோடியையும் தொடுவது சாத்தியமே!

    மேலாண்மைத் துறை நிபுணர்கள் இதனை '1% முன்னேற்றம்' என்கிறார்கள். அதாவது போன மாதம் நாம் எப்படி இருந்தோமோ அதில் இருந்து குறைந்த பட்சம் 1%ஆவது இந்த மாதம் முன்னேறவேண்டும், இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மெருகேற்றிக்கொண்டால் தொடர்ச்சியான வளர்ச்சியும் வெற்றிகளும் நிச்சயம் என்கிறார்கள். இந்த '+1' புத்தகம் அதற்கான வழிகளை உங்களுக்குக் காட்டும்

    1

    நீங்கள் சின்னப் பாப்பாவாக இருந்தபோது, உங்களிடம் யாராவது இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள், 'நீ பெரிசானதும் என்ன செய்வே?'

    இந்தக் கேள்விக்குக் குழந்தைகள் பட்டென்று பதில் சொல்லிவிடும். 'டாக்டராவேன்', 'எஞ்சினியராவேன்', 'அப்பாமாதிரி ஆபீஸுக்குப் போவேன்', 'அண்ணன்மாதிரி டென்னிஸ் விளையாடுவேன்', 'மிஸ் யுனிவர்ஸ் ஆவேன்'... இப்படி அந்த வயசு மனத்தில் வெவ்வேறுவிதமான கனவுகள்.

    இப்போது, அதே கேள்வியை இரண்டு கல்லூரி மாணவர்களிடம் கேட்கிறோம், 'உங்களோட லட்சியம் என்ன?'

    முதல் மாணவர் சொல்கிறார், 'வேறென்ன? ஒழுங்காப் படிச்சு முடிச்சாப் போதும்!'

    இரண்டாவது மாணவர் சொல்கிறார், 'ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல டிகிரி வாங்கணும், அப்பவே என் கையில ஒரு வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் இருக்கணும்!'

    இவர்கள் இருவருடைய 'லட்சிய'ங்களுக்கு இடையில் சில நுணுக்கமான வித்தியாசங்கள் உள்ளன. கவனித்துப் பாருங்கள்.

    முதல் நபருக்கு வயதாகிவிட்டாலும், இன்னும் 'குழந்தை'ப் பருவத்தில்தான் இருக்கிறார், 'படிச்சு முடிக்கணும்' என்கிற பொதுவான கனவுடன் நின்றுவிடுகிறார்.

    ஆனால் இரண்டாவது நபர் அப்படியில்லை. அவர் தன்னுடைய இலக்கை மிகத் தெளிவாகப் பார்க்கிறார். ஆகவே அதனை எட்டுவதற்குத் தேவையான உழைப்பையும் அவரால் சரியானமுறையில் வழங்கமுடியும், நடுவில் ஏதாவது பிரச்னை என்றால் கவனித்து ஒழுங்குபடுத்திக்கொள்ளமுடியும்.

    'இது ஒரு பெரிய விஷயமா?' என்று அலட்சியமாக நினைத்துவிடவேண்டாம். இன்றைய உலகத்தில் மிகவும் முக்கியமான, வெற்றிக்கு அவசியமான ஆளுமைப்பண்பு இது, இலக்கு நிர்ணயித்தல்!

    ஆங்கிலத்தில் 'இலக்கு' என்றால் Goal, கால்பந்துப் போட்டியில் பந்தை எங்கே தள்ளினால் கோல் அடிக்கலாம், வெற்றி பெறலாம் என்று எல்லா வீரர்களுக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, அந்தத் திசையில் உதைத்து விளையாடுகிறார்கள்.

    அப்படியில்லாமல், கோல் கம்பம் எந்தப் பக்கம் உள்ளது என்பதையே யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தால்? ஆளாளுக்குப் பந்தை வெவ்வேறு திசையில் உதைப்பார்கள், எப்போதாவது கோல் கிடைக்கும், ஆனால் அது எப்படிக் கிடைத்தது, ஏன் கிடைத்தது என்று யாருக்கும் தெரியாது, வெற்றி பெற்றவருக்கு 'ஏன் ஜெயித்தோம்?' என்பதுகூடப் புரியாது. ஆட்டத்தின் சுவாரஸ்யமே போய்விடும்.

    நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான். தெளிவான இலக்குகள் இருந்தால்தான் முன்னேற்றம் விரைவாகும்.

    சில சமயங்களில், நம்முடைய இலக்குகள் எவை என்பதை மற்றவர்கள் தீர்மானிப்பார்கள். உதாரணமாக, 'இந்த வருஷம் நீ கணக்குல நூத்துக்கு நூறு மார்க் வாங்கணும்' என்று ஒரு பையனிடம் அவனுடைய தாய் சொல்கிறார், 'இந்த வருஷக் கடைசிக்குள்ள நீங்க நாலஞ்சு பேரைக் கண்காணிக்கிற சூபர்வைஸரா ஆகணும்' என்று அலுவலக ஊழியர்

    Enjoying the preview?
    Page 1 of 1