Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Mathiriyana Kaalathil Vazhgirom
Enna Mathiriyana Kaalathil Vazhgirom
Enna Mathiriyana Kaalathil Vazhgirom
Ebook350 pages3 hours

Enna Mathiriyana Kaalathil Vazhgirom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Manushya Puthiran (born 1968) is a poet and also a DMK supporter in Tamil Nadu. He was born as S.Abdul Hameed in Tiruchirappalli District district Thuvarankurichi. He began his literary career in early 80's and at a very young age of 16, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as a young writer.

Over the past two decades, several of his poems got published in popular Tamil Magazines like Ananda Vikatan, Kumudam, Kalki and Kalachuvadu. His political and topical columns are regular in Tamil periodicals such as Kungumam, Nakeeran and Tamil popular daily Dinamalar.

He is known for his progressive views on various socio-political issues like capital punishment abolition, caste system annihilation, women liberation etc.

Now he lives in Chennai He is running Uyirmmai publication and Uyirmmai magazine. On Aug 19th 2015, he joined leading political party Dravida Munnetra Kazhagam of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114001940
Enna Mathiriyana Kaalathil Vazhgirom

Read more from Manushya Puthiran

Related to Enna Mathiriyana Kaalathil Vazhgirom

Related ebooks

Reviews for Enna Mathiriyana Kaalathil Vazhgirom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Mathiriyana Kaalathil Vazhgirom - Manushya Puthiran

    http://www.pustaka.co.in

    என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்

    Enna Mathiriyana Kaalathil Vazhgirom

    Author:

    மனுஷ்ய புத்திரன்

    Manushya Puthiran

    For other books

    http://www.pustaka.co.in/home/author/manushya-puthiran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.தமிழில் இன்னொரு பத்திரிகை

    2. பலியும் பண்பாடும்

    3. ஒரு போலி விவாதம்

    4. பிளவுபடாத நீதி

    5. கண்காணிப்பின் காலம்

    6. தாமரை பூத்த தடாகத்தில்

    7. தண்ணிர்

    8. பெண் எழுத்து

    9. தேவன் வருகை

    10. ராஜமாதாவும் நல்ல பெண்மணியும்

    11. இந்தியப் பண்பாடென்னும் ஆபாசம்

    12. பலி

    13. நீதி உறங்குமிடம் எது?

    14. ஏட்டு முதல் எஸ்.ஐ.வரை

    15. திராவிட இயக்கத்தின் கடைசி நட்சத்திரம்

    16. ஒரு மாயாவியின் மறைவு

    17. ஜெயேந்திரரும் விஜயகுமாரும்

    18. ஊழி

    19. திறக்க முடியாத நீதியின் கண்கள்

    20. தமிழைப் பாதுகாக்க இதுவா வழி?

    21. சுதந்திரம் பிளவுபடாதது

    22. ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

    23. ரத்தம் தோய்ந்த கேலிச் சித்திரங்கள்

    24. விஜயகாந்த் வருகிறார்

    25. கல்வியெனும் நோய்மை

    26. அச்சுறுத்தும் மதசார்பின்மை

    27. சிகரெட்டா அணுகுண்டா?

    28. காவல் தெய்வங்கள்

    29. சல்மான்கானும் கசூலாயுதமும்

    30. லண்டன் குண்டு வெழப்புகள்

    31. இரண்டு கொலைகாரர்கள்

    32. நீதிமன்றங்களை மூடுவது தொடர்பாக

    33. குடிக்கும் பெண்கள்

    34. கொஞ்ச நேரம் கலாச்சாரத்தைக் காப்பாற்றாமல்தான் இருங்களேன்!

    35. தெற்காசிய பூகம்பப் பேரழிவு

    36. நீரும் வாழ்வும்

    37. காட்சியின்பம்

    38. எதிர்ப்பின் ரகசியங்கள், வழிமுறைகள், பொய்கள்

    39. கருத்துச் சுதந்திரமும் அரசியலும்

    40. ஜெயலலிதாவின் ல்லெண்ண நடவமக்கைகள்

    41. வை. கோ அடைந்ததும் இழந்ததும்

    42. ஜெசிகா லாலை கொலை செய்தது யார்?

    43. பொய்கள். . . பொய்கள். . . பொய்கள். . .

    44. தமிழகத் தேர்தல் முழவுகள்

    45. தடையும் தன்னம்பிக்கையும்

    46. மும்பைத் தாக்குதல்கள்

    47. துன்பத்தில் சாதல் கண்டும் . . .

    48. நஞ்சென்றும் அமுதென்றும்

    49. அரசியல் ஆபாசத்தின் எல்லைகள்

    50. தமிழின் விலை

    51. மதுரை புத்தகக் கண்காட்சி

    52. அரசியல் சரித்திரத்தின் அபத்த நாடகங்கள்

    53. மீண்டும் தூக்குத்தண்டனை குறித்த கேள்விகள்

    54. நீரும் நெருப்பும்

    55. தொடரும் துயரங்கள்

    56. குடும்ப வன்முறைத் தடைச் சட்டம்

    57. என்கவுண்டர் கொலைகள்

    58. ஈழத்திலிருந்து இரு மரணங்கள்

    59. சதாமிற்கு அளிக்கப்பட்ட மரணம்

    60. நொய்டா படுகொலைகள்

    61. நல்ல முடிவு

    62. ரிலையன்சிற்கு எதிரான போராட்டம்

    63. இந்தியக் கிரிக்கெட்டின் இருண்ட காலம்

    64. புலிகளின் வான்படைத் தாக்குதல்கள்

    65. தி.மு.கவைத் தொடரும் சாப நிழல்

    66. தேசியப் பெருமையும் பெண்ணின் பெருமையும்

    67. இரண்டு சவால்கள்

    68. நீங்கள் செய்வது என்ன?

    69. மோனிகா பேழயின் மீதான வன்முறை

    70. ஹைதராபாத் தொடர் குண்டு வெழப்புகள்

    71. உயிர்மை 50

    72. ட்வென்டி-20 உலகக் கோப்பை

    73. கடக்க முழயாத பாலம்

    74. கல்யாண மன்னன்

    75. தடி எடுத்தவர்கள்

    76. கொடுங் கனவுகளின் காலம்

    77. வெற்றி நாயகனின் ரத்தத் திலகம்

    78. பெனாசிரின் படுகொலை

    79. சென்னை புத்தகக் காட்சி

    80. தமிழ் இனி வாழ . . .

    81. டாடாவின் நானோ கார்

    82. பாசிச அரசிற்கு ஆதரவா?

    83. ஸ்டெல்லா புரூஸ்

    84. புனிதத் துயரங்கள் . . . அடையாளமற்ற துயரங்கள்

    85. சாராயச் சாவுகள்

    86. பா.ம.கவின் அரசியல்

    87. அதிகாரத்தின் விலை

    88. வெற்றிகள் காட்டும் திசைகள்

    89. நளினிக்கு வேண்டியது கருணையல்ல; நீதி

    90. இனவெறி ராணுவத்திற்கு உதவி

    91. பெரியாரின் படைப்புகள்

    92. ஈழத் தமிழர்களின் எதிரிகள் யார்?

    93. கொலை வெறிபிடித்த கண்ணினாய் வா.வா.வா.

    94. யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?

    95. ஈழத் தமிழர்களுக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன?

    96. ஹிந்து தாலிபான்கள்

    97. இதுதான் சட்டத்தின் ஆட்சி

    98. அ.மார்க்சின் நூல்கள் நாட்டுமையாக்கம்

    99. இருண்ட காலத்தின் காட்சிகள்

    100. மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள்?

    101. ஒரு நாடற்ற இனத்தின் பேரவலம்

    102. ஸ்டாலின்

    103. தேர்தல் பயிற்சி

    104. பன்றிக் காய்ச்சல் : காத்திருப்பது என்ன?

    105. சமச்சீர் கல்வி விவாதங்களும் சவால்களும்

    106. என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?

    107. மரண சர்டிபிகேட்

    என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்

    மனுஷ்ய புத்திரன்

    மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல்ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 1968இல் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதி வரும் இவருக்கு 2002இல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ் கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2010, 2011 ஆகிய இரு ஆண்டு களிலும் இந்தியா டுடே இவரை தமிழகத்தின் 10 செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. 2011இல் கனடாவின் தமிழ்த் தோட்ட விருது அதீதத்தின் ருசி தொகுப்பிற்காக வழங்கப் பட்டது. அதே ஆண்டில் ஆனந்த விகடனால் அதீதத்தின் ருசி சிறந்த கவிதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    தற்போது சென்னையில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், உயிர்மை மாத இதழ், உயிரோசை இணைய வார இதழ் ஆகிய இதழ்களை நடத்தி வருகிறார். 2011இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா விற்காக இவர் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்று கொண்டுவந்த டைம்ஸ் இன்று சிறப்பிதழ் பெரிதும் கவனம் பெற்றது. ஊடகங்களில் முன்னணி விமர்சகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

    இவரது கவிதைத் தொகுப்புகள்:

    மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983), என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் (1993), இடமும் இருப்பும் (1998), நீராலானது (2002), மணலின் கதை (2004), கடவுளுடன் பிரார்த்தித்தல் (2006), அதீதத்தின் ருசி (2009), இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் (2010), பசித்த பொழுது (2011), அருந்தப்படாத கோப்பை (2012)

    கட்டுரைத் தொகுப்புகள்: காத்திருந்த வேளையில் (2003), எப்போதும் வாழும் கோடை (2003), என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் (2009), டினோசர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றன (2012), தோன்ற மறுத்த தெய்வம் (2012)

    மெளனத்திற்கும்

    மறதிக்கும் இடையே

    உயிர்மை துவங்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை வாசகர்கள் அதிகமாக எதிர்வினையாற்றிய பகுதி உயிர்மையின் தலையங்கங்களே. அது ஒரு தனிநபரின் அபிப்ராயங்கள் அல்ல. ஒரு பத்திரிகையின் முகம். அதன் மையமான உணர்ச்சி. ஒரு காலகட்டத்தின் சமூக அரசியல் சூழலைப்பற்றிய ஓர் உரையாடல். இதன் பெரும்பாலான தலையங்கங்கள் அறிவுணர்ச்சியும் நீதியுணர்ச்சியும் கொண்ட வாசகர்களின் தரப்பிலிருந்தே எழுதப்பட்டவை. அவை மிகவும் கொண்டாடப்பட்ட தருணங்களும் உண்டு. கடுமையாக மறுக்கப்பட்ட தருணங்களும் உண்டு. ஆனால் நாம் எதைப் பற்றியும் மெளனமாக இருக்கவில்லை என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு சாட்சியம். மெளனம் என்பது ஒரு சாதுர்யம். நாம் யார் என்பதை மறைத்துக் கொள்வதற்கான முகமூடி, மெளனமாக இருப்பவர்கள் எதற்காகவும் எந்த விலையும் செலுத்த வேண்டியதில்லை. யாருக்கும் விளக்கமளிக்க வேண்டிய தில்லை. அபிப்ராயங்கள் இல்லாமல் இருப்பது அல்லது அபிப்ராயங்களுடன் மெளனமாக இருப்பது என்பது ஒரு செளகர்யமான ஏற்பாடு. இந்த செளகர்யம் நம்மை அழிப்பவர்களைப் பாதுகாக்கிறது. நம்மையும் கொஞ்சம் பாதுகாக்கிறது.

    மெளனத்தைப் போலவே மறதியும் நம் காலத்தின் முக்கியமான கபாவங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒருவிதத்தில் மெளனத்தைவிடவும் அது ஆபத்தானது. மெளனமாக இருப்பவர்கள் எப்போதாவது பேசுவார்கள் என்ற நம்பிக்கையாவது இருக்கிறது. ஆனால் மறதி இந்த சமூகத்தின்மீது கொள்ளைநோயைப் போல பரவிக்கொண்டிருக்கிறது. ஊடகங்களின் கேளிக்கைகளுக்கும் நுகர்பொருட்களின் மீதான வேட்கைகளுக்கும் அப்பால் நினைப்பதற்கு ஏதுமற்ற ஒரு மக்கள் திரள் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது. இந்த தலையங்கங்களை மொத்தமாகத் திரும்பிப் பார்க்கும்போது எத்தனை முக்கியமான, தீவிரமான பிரச்சினைகள் எவ்வளவு சுலபமாகக் கடந்து செல்லப்பட்டு விட்டன என்று மெல்லிய மன அதிர்ச்சி உருவாகிறது. பேரழிவுகளின் சாம்பல்கள் எதுவும் நாம் சுவாசிக்கும் காற்றில் இல்லை. ரத்தக் கறைகள் எதுவும் நம் ஆடைகளில் படிவதே இல்லை. இந்த மறதிதான் எல்லா மட்டங்களிலும் மாபெரும் குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் கதவு திறந்துவிடுகிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மறதியின் பிரம்மாண்டமான வாசல்கள் வழியே வெளியேறிச் செல்லலாம் என்கிற நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் தருகிறது. அருவருப்பான தன்னலத்தையும், மனசாட்சியற்ற கோழைத்தனத்தையும் நாம் எந்தக் குற்ற உணர்வும் இன்றி ஏற்பதற்கும் மறதிதான் உதவுகிறது. மறதி என்பது ஒரு பழக்கம் அல்ல, அது நம் வாழ்க்கை முறையாகிவிட்டது. இந்தத் தொகுப்பின் வழியே நம்மை அமைதி இழக்க வைக்கும் நமது சமகால சமூக வாழ்வின் சில கணங்களை நினைவூட்டிக்கொள்ள முடிந்தால் அதுவே இந்த நூல் வெளிவருவதற்கான சிறிய நியாயத்தை வழங்கும்.

    இந்தத் தலையங்கங்கள் பரந்துபட்ட சமூக அரசியல் அறிவின் தீர்க்கமான முடிவுகளையோ ஆய்வுகளையோ ஆதாரமாகக் கொண்டதல்ல. எளிய அவதானங்களும் உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகளும் நிரம்பியவை இந்தக் குறிப்புகள். ஒரு பத்திரிகையாளனுக்கு, ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு வாசகனுக்கு இன்று உடனடியாக தேவைப் படுவதெல்லாம் அநீதிக்கும், அவலத்திற்கும், அபத்தத்திற்கும் எதிரே உணர்ச்சிவசப்படும் ஒரு எளிய மனநிலையே. நாம் நிரந்தரமாக இழந்து வரும் ஆனால் இழக்கக்கூடாத குணம் அது.

    மனுஷ்ய புத்திரன்

    உனது வேலை கவிதைகள் எழுதுவது

    பத்திரிகை நடத்துவதல்ல

    என்று எப்போதும் எச்சரித்த

    சுஜாதா அவர்களின்

    ஈரம் காயாத நினைவுகளுக்கு

    1.தமிழில் இன்னொரு பத்திரிகை

    தமிழில் புதுமைகள் செய்யவிழையும் ஒரு கலைஞனுக்கு, எழுத்தாளனுக்கு ஊடகமும் வெளிப்பாட்டுக் களனும் எப்போதும் ஒரு தேவையாகவும் நெருக்கடியாகவும் இருந்து வருகின்றன. பாரதி தன்னுடைய நூல்களைப் பதிப்பிப்பதற்காக அடைந்த கஷ்டங்கள் இப்போது அவனைச்சுற்றிப் படர்ந்திருக்கும் ஒளி வெள்ளத்தில் நம்பமுடியாததாகத் தோற்றம் கொள்கின்றன. இன்றளவும் இது வெவ்வேறு ரூபங்களில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

    இங்கு படைப்பாளிகளே தமக்கும் தனது சகபயணிகளுக்குமான வெளிப்பாட்டுக்களன்களை உருவாக்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழகத்தை கடந்த ஐம்பதாண்டுகளில் ஆண்ட அரசுகளும் பல்கலைக்கழகங்களும் வெகுசன ஊடகங்களும் இன்னபிற பண்பாட்டு நிறுவனங்களும் நமது கலையையும் மொழியையும் நிர்மூலமாக்கிவந்த ஒரு வரலாற்றிற்குள், தமிழை நவீனப் படுத்துவதற்கான முயற்சிகளை தனிப்பட்ட படைப்பாளிகளும் ஆர்வலர்களுமே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர். உலக நவீன இலக்கியப் பரப்பில் சிறியதெனினும் மறுக்கமுடியாத ஒரு இடத்தை இவர்களே தமிழுக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

    படைப்பியக்கம் எண்ணற்ற குறுக்கீடுகளுக்கும் தளமாற்றங்களுக்கும் உடைவுகளுக்கும் ஆளாகி வரும் மிகமுக்கியமான ஒரு காலகட்டத்தில் தமிழ் எழுத்தை எழுதிப் பார்ப்பதற்காக இன்னொரு காகிதமாக உயிர்மை இப்போது வெளிவருகிறது. நவீனத் தமிழுக்கு உயிரும் உரமும் ஊட்டுவதற்காகத் தம் இருப்பையும் இதயத்தையும் நல்கிய எல்லா முன்னோடிகளையும் பற்றிய நினைவுகளுடன் இந்த இதழைத் தொடங்குகிறோம்.

    நவீனத் தமிழ் இலக்கியத்தை இன்று குரோதமும் அதிகார வேட்கையும் அறவுணர்வற்ற சூழ்ச்சிகளும் சீரழிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் நமது படைப்பிலக்கிய மொழியில் நிகழ்ந்த பல்வேறு புதுமைகளையும் பாய்ச்சல்களையும் தனிநபர்களின் அகங்காரங்கள் தமதாக்கிக் கொள்ள முற்படுகின்றன. இணைந்த செயல்பாடுகளுக்குப் பதில் குழுக்களையும் உள்வட்டங்களையும் உருவாக்கிக்கொள்வதற்கான வேட்கையே எங்கும் பரவியிருக்கிறது. நவீனப் படைப்பிலக்கியத்தின் பசுமையை ஒட்டுண்ணிகள் உண்டுவாழ முற்படுகின்றன.

    இன்று வெகுசன ஊடகங்களில் தீவிர எழுத்திற்கான ஓர் இடம் உருவாகியிருப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வெகுசன ஊடகங்களுக்கு இலக்கியத்தைவிட பெயர்களும் ஆளுமைகளுமே தேவையாக இருக்கின்றன. சிறுபத்திரிகைச் சூழலிலிருந்து உருவாகி முக்கியத்துவம் பெறும் படைப்பாளிகளை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பயன்படுத்திக்கொள்வதற்கு அப்பால் இந்த ஊடகங்களுக்குத் தீவிர எழுத்தியக்கத்தின்மேல் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை, அவை தொடர்ந்து நவீனப் படைப்பாளிகளைப்பற்றி எழுப்பிவரும் கேலிச் சித்திரங்களிலிருந்தே புரிந்துகொள்ளலாம். மேலும் இந்த ஊடகங்களில் பங்கெடுக்கும் எல்லா தீவிர படைப்பாளிகளும் அதன் வரையறைகள் பற்றி நன்கு அறிவார்கள். அங்கே தீவிர மான பார்வைகளுக்கோ பரிசீலனைகளுக்கோ இடமில்லை. அதற்கான ஊடகங்களை நவீன எழுத்தின்மேல் உண்மையான நம்பிக்கைகொண்ட படைப்பாளிகளே உருவாக்க வேண்டியிருக்கிறது. உயிர்மை இத்தகைய ஒர் ஊடகமாகத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள விரும்புகிறது.

    நாங்கள் உயிர்மை இதழைத் தொடங்குவதற்கான முனைப்புடன் படைப்பாளிகளையும் கலைஞர்களையும் தொடர்பு கொண்டபோது அவர்கள் காட்டிய ஆர்வமும் ஆதரவும் எங்களைப் பெரிதும் வலிமைப் படுத்திக்கொண்டிருக்கிறது. இவர்கள் ஏதேனும் ஒரு பொதுக்களம் சார்ந்தவர்கள் அல்ல. கருத்து நிலையிலும் உறவுநிலையிலும் வெவ்வேறு புள்ளிகளில் சஞ்சரிப்பவர்கள். எனினும் அவர்கள் உயிர்மையை ஆதரிக்கிறார்கள். உயிர்மைக்கு ரத்தமும் வெளிச்சமும் அளிக்கிறார்கள். இவர்களின் உடனடியான பங்களிப்புகள் இல்லையென்றால் குறுகிய காலத்தில் இந்த முதல் இதழை உருவாக்கியிருக்கவியலாது.

    உற்சாகமான பரந்துபட்ட பங்கேற்புள்ள இந்தச்சூழலை உயிர்மை தனது ஆதாரபலமாகக் கொள்கிறது.

    உயிர்மை படைப்பிலக்கியத்திற்கு முதன்மையான இடமளிக்கும். நவீனத் தமிழில் அக்கறையும் படைப்பூக்கமும் கொண்ட படைப்பாளிகள், விமர்சகர்கள், கலைஞர்கள் மனத்தடையற்று உமயிர்மையில் எழுத வேண்டும் என்பதே எங்கள் ஆவல்

    2. பலியும் பண்பாடும்

    கோயில்களில் உயிர்ப்பலியைத் தடைசெய்யும் தமிழக அரசின் சட்டம் குறித்துப் பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழக முதல்வரின் கருணையின்மையை மட்டுமே எழுதிவந்த பத்திரிகைகளுக்கு முதன்முதலாக அவரது கருணையைப் பற்றி எழுத ஒரு வாய்ப்பு எதிர்க்கட்சிக் காரர்கள், தனது முன்னால் கூட்டாளிகள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என யாரிடமும் அவர் காட்டத் தயாராக இல்லாத கருணையின் சிறு திவலையை ஆடு, மாடு, கோழிகளிடம் செலுத்தத் தொடங்கியிருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் மாற்றமே. இதுபோன்ற ஆட்சியாளர்களுக்குக்குக் கீழ் பாதுகாப்பாக வாழ வேண்டுமெனில் யாராகப் பிறக்கவேண்டும் என்பதையே இவை உணர்த்துகின்றன.

    மக்கள் கூட்டத்தையோ கலாச்சாரத்தையோ நாகரிகம், அநாகரிகம் என்று பிரிப்பவர்கள் நாகரிக உலகின் குரூரங்களையும் குற்றங்களையும் மறைப்பவர்கள். அவர்கள் நாகரிக உலகின் அறங்களென முன்னிறுத்தும் மதிப்பீடுகள் வரலாற்றுரீதியாக மேலாதிக்கம்பெற்ற சமூகப்பிரிவுகளின் - பாசாங்கில்லாமல் சொல்வதானால் சாதிகளின் - நம்பிக் கையையே பிரதிபலிக்கின்றன. "காட்டு மிராண்டித் தனமான' பண்பாட்டைப் பேணும் மக்களை ‘மேம்படுத்துவது' அல்லது சட்டத்தின் மூலமாக ‘வழிக்குக்கொண்டுவருவது’ பற்றிய திட்டங்களை முன் வைப்பவர்கள் கொண்டிருக்கும் சுய கலாச்சார அகங்காரம் மூடத்தனமானது சிறுபண்பாடுகள், வழிபாட்டுமுறை மைகளின் குறியீட்டுரீதியான செயல்பாடுகளையும் கொண்டாட்டங்களையும் மறுக்கும் கலாச்சார அரசியலை இன்று தீவிரத்துடன் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

    கோயில் திருவிழாவில் சேவல்களைப் பலியிடுவதைத் தடை செய்யலாம் என்றால் ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி பட்டாசுகள் செய்து, சுற்றுச்சூழல் கெட அவற்றை வெடிக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தை முதலில் தடை செய்ய வேண்டும். ஒரு கோயிலில் நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும் ‘பயங்கரத்தை’விட வினாயக சதுர்த்தி ஊர்வலங்கள் அதிக பயங்கரத்தை உருவாக்குகின்றன. மனிதர்களைத் தயக்கமின்றிக் கொன்று குவிப்பவர்கள்தான் ‘பசுக்களைக் கொல்லாதே' என்று குரல் கொடுக்கிறார்கள்.

    ‘கீழ்மட்ட கலாச்சாரத்தை’ விமர்சிக்கும் சமீபத்திய இன்னொரு உதாரணமாக, ஒரு பெண்ணைக் குரூரமான முறையில் மன்னிப்புக் கேட்கவைத்த ஒரு கிராமப் பஞ்சாயத்தைப் பற்றி பத்திரிகைகள் ஆவேசமாக எழுதிவருகின்றன. மனித விரோத இந்திய சமூக அமைப்பில் இத்தகைய கொடுமைகளுக்குப் பஞ்சமேதுமில்லை. ஆனால் ஒரு கிராமத்துப் பஞ்சாயத்தின் இழிவான தீர்ப்பைப் பற்றி நம்மால் பேசமுடியும். அதேசமயத்தில் மாபெரும் சட்டமேதைகள் உருவாக்கிய நீதியமைப்பில் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ‘நீதி'யின் அபத்தம் பற்றியும் நமது மாண்புமிகு நீதியரசர்களின் நடத்தைகள் பற்றியும் நாம் பேசமுடியாது. அப்படிப் பேசினால் அது நீதியை அவமதித்ததாக மாறிவிடும். இந்த மகத்தான நீதி அமைப்பில் எவ்வளவுபேர் ஒவ்வொரு நாளும் அநீதியிழைக்கப்படுகிறார்கள் - தவறான மரண தண்டனைகள் உட்பட - என்பதைப் பற்றிய பிரக்ஞையுடன்தான் ‘காட்டுமிராண்டித் தனமான’ மக்களின் நீதியமைப்புகள் பற்றி நாம் விமர்சிக்கவேண்டும்.

    இன்று பல்வேறு உள்ளடுக்குகள் கொண்ட பண்பாடுகளை திருத்தியமைக்கும் வேலை எல்லா முனைகளிலும் நடந்துவருகிறது. பி.ஜே.பி. அரசுகூடச் செய்யத் தயங்கும் பல காரியங்களை ஜெயலலிதா அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 'சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான’ பல கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இது ஒரு தனிநபரின் விசித்திரமான விருப்பங்கள் அல்ல. அதிகாரத்தினால் சமூகத்தின்மீது எதைவேண்டுமானாலும் திணிக்கலாம் என்பதையும் அந்தத் திணிப்புகளுக்கு இந்தச் சமூகம் பெரிய எதிர்வினை எதையும் ஆற்றாது என்பதையும் இந்த அரசு செயல்பாட்டு ரீதியில் நிரூபித்துவருகிறது.

    3. ஒரு போலி விவாதம்

    ஒற்றை வரி அபிப்ராயங்கள் விவாதப்பொருளாவதும் தனிநபர்களைச் சார்ந்த அபிமானங்களும் பிம்பக்கட்டுமானங்களும் இலக்கியச் சர்ச்சைகளாக மாறுவதும் சுவாரசியமான பொழுதுபோக்குகளாகி விட்டன. அடையாளங்களும், ஸ்தானங்களுமே இந்தச் சர்ச்சைகளின் மையமாக இருக்கின்றன.

    சமீபத்தில் கலைஞர் தலைமையிலான இளைய பாரதியின் நூல் வெளியீட்டு விழாவில் முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் சிலர் கலைஞரிடம் காட்டிய அபிமானம் குறித்து ஜெயமோகன் எழுப்பிய விமர்சனமும் அவர் கலைஞரின் படைப்பு களை அங்கீகரிக்கவில்லை என்று கூறியதும் தமிழ் பத்திரிகைளில் கடந்த சிலவாரங்களாக பலரும் ‘கருத்து’ கூறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. சபையில் பெரியோரை வணங்குவது என்பது தமிழ் மரபு அதிலும் அதிகாரத்தோடும் செல்வாக் கோடும் சம்பந்தப்பட்ட பெரியோர்களை வணங்கும் போது அது எங்கே தொடங்கி எங்கே முடிய வேண்டும் என்பதில் சில சமயம் குழப்பங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோடு நவீன இலக்கியவாதிகள் பொது அரங்குகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒரு சம நிலையைப் பேணுவதற்கு இன்னும் சிறிதுகாலம் ஆகலாம். இதில் சமரசம், வீழ்ச்சி எனப்பேச ஒன்றுமில்லை. ஏனெனில் ஒவ்வொரு எழுத்தாளருக்குப் பின்னும் இருக்கும் சமரசங்களின் கதை மிகவும் சங்கடமானது. ஒரு புத்தக மதிப்புரை, முன்னுரை எழுதுவதிலிருந்து இந்தச் சீரழிவு ஆரம்பித்து விடுகிறது. மதிப்பீடுகளைப் பற்றி நிற்கும் இலட்சியவாதங்கள் எங்கோ இறந்த காலத்தில் ஒடி ஒளிந்துவிட்டன. இப்போது எல்லோருக்கும் தேவை வெற்றியும் நம்பிக்கையூட்டும் 'தொடர்புகளும்’ மட்டுமே. இதில் சமரசங்களுக்கோ வீழ்ச்சிகளுக்கோ பொருள் ஏதுமில்லை.

    இந்தப் பிரச்சினையில் கலைஞரின் எதிர்வினை மிகவும் சுவாரசியமானது. அநேகமாக ஒரு நவீன எழுத்தாளரின் குரலுக்கு அவர் இப்போதுதான் பதில் சொல்கிறார். இது ஒரு உரையாடலாகத் தொடங்கியிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். ஆனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினையாற்றியிருக்கிறார். ஜெயமோகன் அவரை ஏற்கவில்லை என்பது அவ்வளவு வருத்தம் தரும் விஷயமென்றால் தமிழினத்தின் தலைவராக உலகெங்கும் அறியப்படும் ஒருவர் அவரது வயதிற்கு இணையான சரித்திரம் கொண்ட

    Enjoying the preview?
    Page 1 of 1